Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. எனக்கு இருக்கும் ஒரேயொரு பிரச்சினை பத்திரிகையின் தலைப்பு. "சுமந்திரம்" என்பதை மாற்றிவிட்டு "கருமாந்திரம்" என்று வைத்தால் சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும். அடுத்ததாக சுமந்திரம் தனது தெரிவை மக்களிடம் விற்கும் தரகுவேலையை புறத்தே வைத்துக்கொண்டு மக்களை அவர்கள் தெரிவை அவர்களே தெரிவுசெய்துகொள்ள ஜனநாயகப்படி அனுமதிக்கவேண்டும். அவரது சட்டாம்பித்தனத்தை நீதிமன்றத்திற்குள் வைத்துக்கொள்ளலாம் நோ....நோ ....மிஸ்டர் சுமந்திரம் கோ.ப.சே அப்படியெல்லாம் எல்லோரையும் ஒரே பட்டியலில் அடக்கப்படாது கண்டியளோ. ஏன்டா கல்லெறியுறீங்கள் எண்டு என்னிடம் கேட்டால் வண்டி வண்டியாக கொட்டுவேன் என்பது உங்களுக்கும் தெரியும். பதில் சொல்லமுடியாமல் கப்பு சிப்பு ஆனவர் தான் நீங்களும்
  2. சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் https://fb.watch/uENLbbpuac/
  3. பெரிய ஆள் தான் அண்ணை நீங்க அஞ்சு வருசத்திற்கே என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது கண் காணா தேசத்திற்கு ஓடி விடுவோமா என்று இருக்கு.
  4. இருப்பினும் சுமந்திரன் வெல்லவைக்கப்படுவார்...ஈழ தமிழர்கள் ஒற்றை வாக்கைத்தான் செலுத்தாவிட்டாலும் கூட சுமந்திரன் வெல்லவைக்கப்படுவார்
  5. எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....? அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள் ...? ஏக்கிய ராஜ்ய அதனுடைய மீனிங் எனக்குமட்டுமே தெரியும் என்னிடம் மட்டும் ரணில் சொல்லியிருக்கிறார் போன்ற உதார்களையும், கிழக்கு மாகாணத்தை முற்றாக விட்டுக்கொடுத்துவிட்டு நஸீரின் மாட்டு புரியாணியை கிண்டியதையும், கல்முனை பிரதேசபை பிரிப்பு போராட்டத்திற்கு வந்து செருப்பு விளக்குமாறு கதிரையால் வெழுவை வாங்கியதை தவிர ...?
  6. இது உங்கடையாளுக்கும் (சும்முக்கும்) பொருந்துமா சார்வாள்...? இல்ல படித்த elite தலைக்கட்டு என்பதால் exemption ஆ ....?
  7. இப்ப விளங்குது தலைவர் ஏன் சிலதை மண்டையில் போட்டு அடித்து உட்காரவைத்தவர் என்று படித்தவனாக இருந்தால் சுமந்திரன் போல இருந்திருப்பான், படிக்காதவனாக இருந்தால் இந்த காவலிகள் போல இருந்திருப்பான் என்பது தலைவருக்கு முன்னமே தெரியும். இதில எத்தினை காவலிகள் யாழ்ப்பாணத்தில் தமனாவை காவாலாக்கிய கூட்டத்திற்கு அறிவுரை சொன்னார்களோ ...?. ஆனால் ஒன்றுமட்டும் தெரியுது இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அரபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது. இந்தக்கூட்டம் சிங்கையில் இருந்திருக்கவேணும், புட்டம் வீங்க செமையா கொடுத்து இலங்கைக்கு திரும்ப அனுப்பியிருப்பினம்.
  8. அந்த பயத்திலும் உண்மை உள்ளது. சிலவேளை இந்தமுறை வாக்களிக்காவிட்டால் அலிசாஹிர் மௌலானாவை வைத்து இந்த அம்மாவையே பிளவுபடுத்தி போடுவாரோ ரணில் என்று பயப்படுது
  9. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளுவதுமே. உண்மையில் இது மட்டுமே அவர்களால் செய்யக்கூடியதும். ஆனால் இந்த மண்குதிரைகளை எப்போது புலத்துத்தமிழர்கள் நம்பத்தலைப்பட்டார்கள் என்றால் அது புலிகளின் காலத்தில், உண்மையிலே ஒன்றுக்கும் உதவாத கூத்தாடி மண்குதிரைகள் புலிகளின் பக்கபலத்துடன் பெரும் விசையுடன் மக்களுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் புலிகளின் அரசியல் முகம் என்பதால் மக்களும் இவர்களை ஏற்றுக்கொள்ள இந்த கூத்தடிகளோ தங்களது உண்மையான விசை எது என்பதை அறியாமல் தங்களை பெரிய வீரர்களாகவும் மக்களோ இவர்களை ஏக அரசியல் பிரதிநிதிகளாகவும் வரித்துக்கொள்ள மண்குதிரைகளெல்லாம் பொன்குதிரைகளாயின. என்று விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கூத்தாடிகளின் மாயவிம்பம் கலையத்தொடங்கியது. கூத்தாடிகளுக்கு தலைவர்கள் தரப்பட்டார்கள். கூத்தாடிகளின் பொறுப்பு ஒரு விற்பனை பிரதிநிதியின்(சேல்ஸ் Rep) இன் வேலை, ஆயிரம் பொய்யை சொல்லியாவது தரப்பட்ட தலைவரை ஈழத்தமிழர்களின் தலையில் கட்டிவிடுவது. அதை அவர்களும் சரிவர செய்தார்கள். ஈழத்தமிழர்களும் கூத்தாடிகளை பற்றிக்கொண்டிருந்த மாயவிம்பத்தை கைவிடத்துணியவில்லை. விழைவு கூத்தாடி மண்குதிரைகளை நம்பி இனப்படுகொலை பங்கில் எந்தவிதத்திலும் சளைக்காத பொன்சேகாவிற்கு பெருவாரியாக வாக்களித்து மகிழ்ந்தனர். அதாவது சர்வதேசத்தின் இந்த சோதனை முயற்சியில் ஈழத்தமிழர் சர்வதேசத்திற்கு சொல்லிய செய்தி நாங்கள் ஒரு சிறப்பான எடுப்பார்க்கைப்பிள்ளைகள்என்பதே. இன்று மண்குதிரைகளை நினைத்து அங்கலாய்க்கும் நாம் அன்று இறுதிப்போரில் இந்தியாவில் குப்புறப்படுத்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்ததும் எமக்கு தீர்வு எடுத்து தருவதற்கு திரும்ப களத்திற்கு வந்த கூத்தாடி குதிரைகளை செருப்புத்தேய தேய கும்மியெடுத்திருந்தால் குறைந்தபட்சம் இந்த அரசியல் வெறுமையையாவது தடுத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் ஈழத்தமிழர்களே எடுத்திருந்தினர். அறிவிலிகள், மடையர்கள் தான் ஒருவனால் ஒன்று முடியாது என்று தெரிந்துகொண்டே அதனை அவனிடம் கொடுத்து விட்டு அவன் அதை சரிவர செய்வான் என்று தொடர்ந்து எதிர்பார்ப்பார்கள் என்பது எனது கருத்து. என்னைப்பொறுத்தவகையில் ஈழத்தமிழர்கள் இந்த இரண்டுபதங்களாலும் அழைக்கப்பட சகலவகையிலும் பொருத்தமானவர்கள்
  10. ஆமா....ஆமா உண்மையான ஒற்றுமை யாதெனில் நீதிமன்று படியேற்றி கட்சியை இரண்டாக உடைத்து விட்டு, மூடிய அறைக்குள் ஒவ்வொரு பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து டீல் பேசி பெட்டியை வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதே ஆகச்சிறந்த உண்மையான ஒற்றுமையாகும்.
  11. பின்னால அருண் சித்தார்த் வேற நிக்கிறான் போல இவன் தானே நல்லூரானை இடித்து கக்கூஸ் கட்டுவேன் என்று சொன்னவன் இப்ப எதுக்கு அங்க போனவன் ...?
  12. தல சயின்ஸ் எல்லாம் பேசுது ...? ரா உபாயத்தில் இந்திய ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்து கண்டுபிடித்திருப்பாரோ ...?
  13. அதே ஸ்கின் கலரில் பிறக்கவைத்து ஏழரையை கொடுத்திருக்கிறார் கடவுள். சிங்கையில் நானும் இந்தியன் தான். இந்தியன் என்பதை இனமாக்கி வைத்துள்ளனர். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கியும் பார்த்தேன். ம்ஹும் ... பாக்கி என்று கூப்பிடவில்லையே என்பது ஒருவகையில் சந்தோசம்
  14. நியாயம் உங்களுக்கு எரிவதில் தவறில்லை. தாத்தா கிழக்குமாகாணத்தையே விட்டுத்தந்து விட்டு நசீர் கொடுத்த மாட்டு புரியாணியை கிண்டும் அரசியல் தானே செய்தவர். உங்களுடைய ஆட்க்களுக்கு கடும் விசுவாசமான ஆள் எலுவா. எல்லோரும் தாத்தாவை இப்படி செருப்பால் அடித்தால் உங்களுக்கு வலிக்கத்தானே செய்யும்
  15. Johnny Sins இற்கு பிறகு இந்த ஆளாலை மட்டும்தான் நிதியிலிருந்து, வெளிவிவகாரம் வரை எல்லா அமைச்சர் பதவியையும் வகிக்கமுடியும்.
  16. அட நம்ம கும்பன் வாந்தி இவரு உலக மகா கள்ளன் எல்லோ
  17. பிணவாடை தாங்காமல் நீல சேர்ட் மூக்கை பொத்துறார்போல அதுதான் ஒருவரும் கிட்ட வரேல்லை. அட நம்ம சும்மும் ஒருகை போடவில்லை என்றால் பாருங்கோவன் இடம் கொள்ள ஏலாமலுக்கு தமிழ் தலைமகனை வழியனுப்ப சனம் நிரம்பி வழியுதுகள். பார்க்கவே ஆனந்தம் ஆனால் உட்கார்ந்திருக்கும் அனைத்துசனத்தையும் எனக்கும் தெரியும் என்பதுதான் மெடிக்கல் மிராக்கிள்
  18. இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா
  19. மற்றைய இரண்டுபேர்களுடனும் சொறிச்சேட்டை விட்டால் மறவன் புலவை மறந்த புலவாக்கும் அளவுக்கு கூடி கும்மியெடுத்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல சிங்கள கிறீஸ்தவ பறங்கிப்படையுடனும் ஐயா சொறியமாட்டார் . தமிழ் கிறீஸ்தவர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை அல்லவா. ஆனாலும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா வர வர மறவன்புலவு கூட நிக்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது. நல்ல சகுனமில்லை இது
  20. கருணா, பிள்ளையானுடன் ஒப்பிடேக்க ஆள் பரவாயில்லை தான். ஆனால் கருணா, பிள்ளையான் போன்ற கேடுகெட்ட போக்கிலிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமை என்று கதைத்து அரசியல் செய்யுமளவு வெற்றிடத்தை உருவாக்கி கொடுத்ததில் தாத்தாவுக்கு பெரிய பங்குண்டு. இப்போது கூட ஹரிஸ், ரவுப் ஹக்கிம் போன்ற முசுலிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுதாபங்களுடன் கொண்டாடி தீர்க்க முசுலிம் மக்கள் அழாத குறையாக வழியனுப்பி வைக்க தமிழ் மக்களோ பிணத்தை தோண்டி எடுத்து கிழிக்கும் அளவுக்கு வசவுகளை வாங்கும் அளவுக்கு தனது இனத்திற்கு செய்த கசபோக்கிலி அரசியல் மட்டுமே தாத்தாவின் ஆயுட்கால சாதனை
  21. ஆரம்பத்தில் முஸ்லிம்கள்மீது நடத்திய கலவரங்கள் போல் பொத்திக்கொண்டிருந்த தமிழர்கள்மீது கட்டற்ற அரச பயங்கரவாத இனக்கலவரங்களை நடத்தியே தமிழர்களை ஆயுதப்போராட்டத்தை நோக்கி தள்ளினார்கள். அதன் வருவிழைவே மிக நீண்ட சிவில் யுத்தத்திற்கு வித்திட்டது. முஸ்லிம்களையும் இப்படியே வதைத்து ஆயுதப்போராட்டத்தை நோக்கி தள்ளி பயங்கரவாதம் என்று இனவழிப்பு செய்வதுதான் சிங்களவர்களின் நோக்கம் ஆனால் முஸ்லிம்களின் நல்லநேரம் பொருளாதார சீரழிவில் இலங்கையின் அடிநாதமே காலியாகிவிட்டது. முசுலீம் தீவிரவாதிகளும் சும்மா லேசுப்பட்டவர்களில்லை பொத்திக்கொண்டிருந்த தமிழ் கிறீஸ்தவர்களை தான் உயிர்த்த ஞாயிறு அன்று பதம் பார்த்தார்கள். தமிழர்கள் காத்தான்குடியில் திருப்பியடித்தது போல் அடிக்கும் வல்லமையுடன் இருந்திருந்தால் முஸ்லிம் தீவிரவாதிகள் பொத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆக இங்கே கருப்பொருள் எவ்வளவு இழுத்து சுருட்டிக்கொண்டு பொத்திக்கொண்டிருந்தாலும் அடி(ழி)க்கவேண்டும் என்ற நோக்கத்திலிருப்பவன் அடித்தே தீருவான் என்பதே அது யுத்தமாக இருந்தாலும் சரி கலவரமாக இருந்தாலும் சரி
  22. அப்போது நான் பிறந்திருக்கவில்லை இது நான் நாட்டில் இருக்கும்போது என் கண்முன்னே நடந்தது
  23. அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று தானாக தேடி வந்தது அழிவு....?
  24. சமீபத்தில் நாட்டிற்க்கு போயிருந்தபோது என்னோடு படித்த ஒரு முஸ்லீம் நண்பன் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி. படிக்கும் காலத்தில் படு மொக்கு, சாதாரண தரம் கூட குதிரையோடி சித்தியடைந்து முஸ்லீம் மந்திரிகளின் கைகளில் கால்களில் விழுந்து நீதிமன்று இலிகிதராக உள்ளான். எதோ ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறதே என்று சும்மா வாகனத்தை ஒடித்து எதேச்சையாக நோட்டம் விட்டேன் பேச்சைக்கேட்டு ஒரு நிமிடம் விதிவிதிர்த்து போய்விட்டேன். தமிழே எழுதவராத பேசவராத ஒருவனிடம் எப்படி இந்த மொழி ஆளுமை என்று. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது எங்கே, எப்படி எப்போதெல்லாம் கோட்டைவிட்டோம் என்று. அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச சபை முன் வழமை போல தலையில் பட்டியை கட்டிக்கொண்டு "மாரித்தவக்கை" சான்ஸ், கூத்தமைப்பு உபயத்தில் கூட்டமாய் உட்கார்ந்துகொண்டு பதாகை பிடித்துக்கொண்டு இருக்கினம். பிரதேசபை தரமுயர்த்தபடுகுதோ இல்லையோ கனடாவில் அசைலம் அடிக்க எடுக்கும் படங்கள் உதவும் போல. அப்புறம் ஓட்டை விழுந்த கப்பலின் கேப்டன் தத்தா நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறார். அவரால் ஒன்றும் கிழித்திருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடலில் இறங்கி தள்ளுங்கள் அடுத்த பொங்கலுக்கு தீபாவளிக்கு கரைசேர்ப்பேன் என்று வாயால் வடை சுடாமலாவது இருந்திருக்கலாம். தாத்தாவின் இழப்பு ஒருவகையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும், தாத்தா குத்தி குத்தி உடைத்த மேசைகளை இழப்பீடு செய்யப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டி வந்தது. இனி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பயமில்லாமல் இலங்கை வந்து கூத்தமைப்பானுகளோடு கூத்தடிக்கலாம் மேசையில் குத்தி பயம் காட்ட தாத்தா இல்லை. போய் வாருங்கள் தாத்தா உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமளவுக்கு அப்பாடக்கர் இல்லை நீங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.