Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம் இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கையின் வாகனச்சந்தை நீங்கள் கூறியது போலவே மிக வினோதமானது. உது பச்சை உருட்டு, உந்த தேர்தல் நெருங்கும்போது போது மன்னார் கடற்படுக்கை எரிவாயு மற்றும் நீல இலங்கை வெளிநாட்டுக்கடனை அடைக்கக்கூடிய மாணிக்கக்கற்கள் வெளியே வருவது போல. https://srilanka.factcrescendo.com/english/misleading-images-about-the-volkswagen-factory-in-kuliyapitiya/ இலங்கையில் தற்போது Bajaj மற்றும் TVS கம்பெனிகள் இந்தியாவில் இருந்து முக்கிய பாகங்களை தருவித்து மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் பண்ணுகிறார்கள். டயர் மற்றும் இருப்பினாலான உதிரிப்பகங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன. அப்படி அசெம்பிள் செய்யும் மோட்டார்சைக்கிள்களையே இலங்கையில் 7 லட்சத்திற்கு குறைய விற்கமுடியவில்லை. Micro வினால் அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களை தற்போதைய நிலவரப்படி 1.5 கோடிக்கு குறைய விற்கவே முடியாது. Micro assembled வாகனங்கள் ஏற்கனவே இலங்கையில் தலையிடிக்கு புகழ் பெற்றவை. BYD மிகவிரைவில் இலங்கைக்குள் பாயத்தயாராக இருக்கிறார்கள் போல இம்முறை ஊர் போயிருந்தபோது விற்பனை சேவை நிலையங்களுக்கு கேள்வி கோரிய விளம்பரம் கண்ணில்பட்டது. முழுவெடுப்புடன் இறங்கினால் ஒரு கலக்கு கலக்கலாம், இவர்களுடைய BYD ATTO 3 சிங்கையில் சக்கை போடு போடுகிறது. 0% down payment இல் தருகிறார்கள்
  2. கூத்தாடிகளின் விக்கெட்கள் ஒவ்வொன்றாக விழுகின்றன. ஆழ்ந்த இரங்கல்கள்
  3. சார்வாள் முன்னை போல யாழில் எழுதிய திரிகள் எல்லாம் காணாமல் போயிட்டதால் பொங்கிறீங்க போல இல்லாவிட்டால் நீங்கள் எழுதிய கருத்திற்கும் ஜீவன் சிவா அண்ணை போட்ட பின்னூட்டத்திற்கும் நான் எழுதிய பதிவை தேடிப் பிடித்து இணைத்திருப்பேன். இதே புதிய உன்னத மட்டு மக்கள் தான் பிள்ளையானுக்கும் பொன்சிக்கும் தேசியம் உரத்து இரத்தம் சொட்ட சொட்ட குத்தினவை. இதே பழைய உன்னத யாழ் மக்கள் தான் கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு இம்முறை நன்னா செருப்பை P யில் முக்கி அடித்திருக்கினம். உங்களுடைய கூத்தாடிகளுடன் சேர்ந்து கூத்தடித்தால் போதுமே உன்னதம் சும்மா ஜிவ்வென்று பத்திக்கிட்டு ஏறும் போல. தேசிக்காய்களின் காமடிகளுக்கு எல்லையே இல்லை. பாவம் முழுசாக சந்திரமுகியாக மாறிய கங்கா போல உங்களையும் கேலிக் கூத்தமைப்பு என்று உங்கள் வாயலேயே சொல்ல வைத்தது தான் இலங்கை தமிழ் தேசிக்காய்களின் சாதனை. நான் ஒரு போதும் பிள்ளையானை ஆதரித்ததுமில்லை அவனுக்கு சார்பாக காவடி தூக்கியதுமில்லை. கருணாவை ஆதரித்தற்கான முழுக்காரணத்தையும் ஏற்கனவே எழுதியாகிவிட்டது.
  4. கல்வித்திமிரும் கூட யாராவது எடக்கு மடக்காக கேள்வி கேட்டு மடக்கினால் உடனே M.B.B.S டிகிரிக்கு தாவி மட்டம் தட்டும் பைத்தியன்
  5. சார்வாள்...... ஒருகாலத்தில் நீங்க கொண்டுவந்து இங்கே ஒட்டிய ஈழத்து தமிழ்த்தேசிய கூத்தமைப்பு ரீலாலே கூட ஒருஹைகோர்ட்டும் புடுங்க முடியவில்லை. துடைத்து தூரப்போட்டா விட்டீர்கள் அண்ணன் சீமானுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத ராஜபக்ஷே 'A ' டீம் வெத்துவாய் வாய்ச்சவடால் சாணக்கியனிடம் கொடுத்தாவது ஒக்சிசன் ஏத்தலாமா என்று அரண்டு கொண்டு திரியலை ...? தமிழ்த்தேசியம் ஈழத்தில் சிதைந்து அதன் கூடாரமே காலி. இந்தியாவில் காப்பாற்ற கிளம்பிவிட்டீர்கள் போல கவலைப்படாதீங்கள் தமிழ்நாட்டுகாரர்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் போல முட்டை போண்டாக்கள் இல்லை. ஒன்று சீமானின் ஆதரவாளர்களை விட சீமானின் எதிர்ப்பாளர்கள் தான் சீமானிடம் ரொம்பவும் எதிர்பார்க்கினம். வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
  6. அது வடக்கு வாள்வெட்டு கோஷ்ட்டிகளுக்கு மட்டும்தான் தற்போது கிழக்கிலங்கையில் களவு ,கொள்ளை சகட்டுமேனிக்கு அதிகரித்துள்ளது. மலையக இளைஞர்கள் மூவர் போனகிழமை பட்டாவுடன் கொள்ளையடிக்க இறங்கி கையும் மெய்யுமாக மாட்டியுள்ளனர். ஆளரவமற்ற வீடுகளுக்குள் லொடுக்கு பாண்டி போல நுழைந்து ஓட்டுமொத்தமாக துடைத்து அள்ளிக்கொண்டு பட்டாவில் ஓடுவது இவர்களது modus operandi . ஊர்மக்கள் விழிப்புடன் இருந்ததால் மாட்டியவுடன் நையப்புடைக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
  7. ஒரு சின்ன டவுட் வடக்கு கிழக்கிற்கு போலீஸ் அதிகாரம் கொடுத்தால் இன்னொரு பஸ்தியாம்பிள்ளை உருவாகமாட்டாரா ...?
  8. இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான் போனது ஹைகோர்ட் என்று என்னிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் என் அடையாளத்தையும் வெளிப்படுத்தி எழுத ஆரம்பித்தேன் என்றால் திரி திரியாக திறந்து நீங்கள் ஒப்பாரி வைக்கும் நிலை வரும். வேண்டாமே
  9. இல்லையே அவரை கப்பென்று தூக்கும் அளவுக்கு துப்பு கொடுத்திருக்கிறேனே. ஐஸ்டின் அண்ணை கற்பூரம் மாதிரி கப்பென்று பிடித்துவிட்டார். உங்கள் புலநாய்வு அமைப்பு வீக்காக இருப்பதற்கு நான் என்ன செய்வது. உங்கள் புலநாய்வு அமைப்பால் ஆளை கொண்டு வந்து நான் முன்னே நிறுத்தினாலும் எதுவும் புடுங்க முடியாது என்பது தான் உண்மை. எமது போராட்டத்தின் தவறுகளை sweeping under the rug செய்வதாலும் எதுவும் புடுங்க முடியாது சிம்பிள் Output எப்படியிருக்கும் என்று சொல்லுங்கள் Input சிந்தாமல் சிதறாமல் வரும். இன்னும் ஒரு படிமேல் போய் நீங்கள் ஒருவர் மட்டும் புலிகளுக்காக குய்யோ முறையோ என்று இங்கே ஒப்பாரி வைப்பதால் நான் மசியவேண்டியதில்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்
  10. எமகாதக தமிழன் சார் பொதுமக்களை அறிவூட்டும் செயற் திட்டத்தை முன்னெடுத்தது நீங்கள் நானல்ல 👇 சொல்வதை அறிந்து உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள் அதன் பிறகு சொல்வது வெர்த்தா இல்லையா என்பதை நான் முடிவெடுக்கிறேன். இதை அறிவதால் உங்களுக்கு its just another case இல்லை இப்படியொன்று நடக்கவில்லை, புலிகள் தவறே செய்யாத உத்தமர்கள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் மட்டுமே. ஆனால் அவரை அடையாளம் காட்டுவதால் வரக்கூடிய நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியது நான் மட்டுமே.ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன் என் நிலையறிந்து நான் எப்போதும் பயர் விட்டதே கிடையாது என்று. பயர் மட்டும் விடமாட்டேனே தவிர உண்மையை பேசாமல் இருக்கமாட்டேன். இல்லையே அதிகபட்ச பனிஷ்மென்ட் வரை கொண்டுபோவோம். முன்னெடுக்க நீங்கள் தயாரா என்று தான் கேட்டேன். எங்களுக்கு இந்த புலம்பெயர்சை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தெரியும். பொருமிக்கொண்டு பொங்கியெழுப்பவர்கள் எல்லோரிடமும் பொறுப்பை கொடுத்து முன்னாள் விட்டால் எப்படி பம்மிக்கொண்டு படங்கினுள் பதுங்குவார்கள் என்று. சாராம்சம்: புலிகள் உமது பிராந்தியத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா....? ஆம் ஈடுபட்டார்கள் (கடத்தல் , போராட்டத்திற்கான பங்களிப்பென்ற பெயரில் கப்பம் பெற்றார்கள்) புலிகளினால் சேகரிக்கப்பட்ட பணம் தப்பாக உபயோகிக்கப்பட்டதா ...? ஆம் தப்பாக உபயோகிப்பட்டது , கண்முன்னே சாட்சியம் உண்டு அப்படியெனில் ஏன் நீங்கள் கையாடல் செய்த நபருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவில்லை ...? மன்னிக்கவும் அது என்னுடைய வேலை இல்லை. அது உங்கள் வேலை இல்லை எனும்போது ஏன் புலிகளை பற்றி தவறாக பேசுகிறீர்கள் ..? தண்டனை வாங்கிக்கொடுக்கும் ஒருவர் தான் தனது அனுபவத்தை வெளியே பேசவேண்டும் என்ற அவசியம் உள்ளதா...? இவர் தண்டிக்கப்படவேண்டும் என்று கருதும் ஒருவருடன் நீங்கள் ஒத்துழைப்பீர்களா...? நிச்சயமாக , ஆனால் அது தண்டனையின் கடுமையை பொறுத்தது யாழ் இணையத்தளத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வழங்கும் அதியுச்ச கொடுந்தண்டனையை அவருக்கு வழங்கவேண்டாமே என்று யோசிக்கிறேன். அதைவிடுத்து இலங்கை அரசு மூலம் அவருடைய வியாபார முதலீட்டிற்கான Source of income தொடர்பான புலனாய்வு முதல் புலிகளின் ஸ்டைலில் சாம தான பேத தண்ட முறையில் பணிய வைப்பதென்றாலும் சரி, இல்லை ஒரு படி மேல் போய் பொட்டு வைப்பதென்றாலும் சரி டிஸ்கி3: நம்ம எமகாதகன் தான் மூன்று பேரோட இறப்புக்கும் காரணம் என்றும் ஒரு உத்தியோகபூர்வமற்ற தகவல் அந்த நாட்களில் பரவியது. ஆதாவது சொல்லிவைத்தாற்போல் ஒன்றுசேர்க்கப்பட்ட மூட்டைகளை கைமாற்றும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மூவரையும் கொத்தாக ஒரே இடத்தில் அள்ள வைத்த அம்புஷ் தற்ச்செயலாக இருக்கும் என்று ஒருவரும் நம்பவில்லை
  11. ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார். அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை. அதாவது பூனைக்கு மணியை கட்டுவது உங்கள் பொறுப்பு மணியை எடுத்து தருவது எனது பொறுப்பு. அதைவிடுத்து சும்மா பொதுஅறிவுக்காக கேட்கிறேன் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக கேட்கிறேன் என்ற இந்த சடையல்களுக்கு எனக்கு நேரமில்லை. கோதாவில் இறங்கத்தயாரா ...? டிஸ்கி2: இறுதியுத்தத்தில் 53,58,59 ம் டிவிஷன் உட்பட முன்னரங்கில் போர்புரிந்த பல பட்டாலியன்களின் அதிகாரிகளாக இருந்த பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் தேவையான அனைத்துத்தகவல்களும் உங்கள் இல்லம் வந்து சேரும் but only if you agreed upon above condition . இல்லை ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது என்னுடைய வேலை அல்ல
  12. எனக்கென்னவோ முஸ்தபா அடுத்த WMD ஐ செட் பண்ணுவது போல் படுகிறது. இல்லையா பின்ன எவ்வளவு கஷ்ட்டப்பட்டு சனநாய்அகத்தை பாதுகாத்தவர்கள் மேற்கின் அவதார புருஷர்கள். பாதுகாத்த சனநாய் இப்போது கட்டவிழ்க்கப்பட்டு அம்பிட்டவர்களையெல்லாம் அந்தந்த நாட்டில் கடித்து குதறிக்கொண்டிருக்கிறது
  13. யாழ் கள உறவுகள் சில பேருக்கு நான் யாரென்று தெரியும். நான் 2012 இலிருந்து யாழ் கள உறுப்பினன் சிலர் என்னை நேரடியாக சந்தித்தும் இருக்கின்றனர். ஆகவே நான் தனிப்பட்ட ரீதியாக யாரும் அறியாதவன் அல்ல. அத்துடன் இலங்கை பிரசை எனவே டிஸ்கியை தவிர மேலதிக தகவல்களை தர முடியாது. டிஸ்கியை பார்த்து மோந்து கண்டுபிடிக்கக்கூடியவர்கள் கண்டுபிடிக்கட்டும்.
  14. புலிகளுக்கே தெரியாது அவர் புலிகளின் பணத்தை தான் ஏப்பம் விட்டு சுத்தலில் விடுகிறார் என்று அப்படியான எமகாதகன். அவர் ஒரே நாளில் முழுப்பணத்தையும் வெளியே விட்ட ஆளல்ல மெதுவாக ஒரு ஸ்டேஷனரி கடை திறந்து அதில் தான் சம்பாத்திப்பதாக ஊரிட்கு காட்டிக்கொண்டு படிப்படியாக விஸ்வரூப வளர்ச்சியெடுத்தவர். அவரையெல்லாம் புலிகளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை இருந்த ஆதாரம் STF உடன் போயிற்று. இதற்குள் அரசு வேற. இப்படியான வீக்கான கட்டமைப்புதான் கிழக்குமாகாணத்தின் பலபாகங்களில், ஒருகாலத்தில் புலியை மதிலால் எட்டிப்பார்த்தவன் கூட கிழக்குமாகாணத்தில் மேஜர் தர நிலை அதிகாரிதான். நானும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளன் தான் ஆனால் உண்மையை சொல்லாமல் இருக்கமுடியாதே. டிஸ்கி: இலங்கையில் எரிபொருள் சிக்கல் வந்ததருணம் சமூக வலைதளத்தில் ஒரு பெண் எரிபொருள் பௌசர் ஒன்றிலிருந்து நேரடியாக தனது வாகனத்திற்கு எரிபொருள் பெறுவதாக கொழும்பில் வைத்து பதிவு செய்த காணொளி சக்கைபோடு போட்டது. அந்த பெண் யாருமல்ல நம்முடைய எமகாதகனின் இரண்டாவது மகள்
  15. முக்கியமான விடயம் இங்கு நான் அசாத் ஆதரவாளனில்லை. மத்தியகிழக்கு முக்கியமாக எந்த முஸ்லீம் நாடும் நாடுகளுக்கிடையிலான போரினாலோ அல்லது சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலோ நான் அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. இதற்க்கு காரணம் அவர்களது 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட முரண்பாடுகளின் மூட்டையை பற்றியும் அந்த மூட்டையை அவிழ்த்து தினந்தோறும் நுகர்பவன் எப்படியாக சிந்திப்பான் என்றும் போதுமான அறிவிருப்பதாலே. இங்கு நான் குறிப்பிட்டது புலிகள் மட்டும் ஒன்றும் தவறு செய்யாத உத்தமர்கள் அல்ல என்பதனையே. அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால் புலிகளும் மனித உரிமை மீறல்களை படு சர்வசாதாரணமாக செய்துள்ளனர். கருணா புலிகளுடன் சேர்ந்து இயங்கிய காலம் முழுவதும் இழைத்த தவறுகளுக்கு தலைமைப்பீடம் மட்டுமே பொறுப்பு. நீங்கள் சொல்லவருவதைப்பார்த்தால் கிழக்கை கருணாவிடம் தூக்கிகொடுத்துவிட்டு தலைமைப்பீடம் அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விரல்சூப்பிக்கொண்டிருந்தது என்பது போல் இருக்கிறது. கருணா தலைமையின் கட்டளையை மீறி அனுமதிக்கப்படாத முறையில் நிதி வசூலித்திருந்தால் உடனடியாக தலைமை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் இது தலைமையின் பொறுப்பு. அளவுக்கதிகமான நம்பிக்கையை கருணாமீது வைத்து அவனை அவனது போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட அனுமத்திருந்தாலும் அதுவும் தலைமையின் பிழை. ஆம் நான் மேலே குறிப்பிட்ட STF இனால் கொல்லப்பட்ட போராளி வசூலித்த பணமூட்டைகளை ஒரு வீட்டில் பதுக்கி வைப்பது வழக்கம், குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் அவை மொத்தமாக அனுப்பிவைக்கப்படும் இந்த ரகசியம் அந்த போராளி உட்பட இன்னும் இருவருக்கும் மட்டுமே தெரியும். STF வைத்த கண்ணியில் மூவரும் மாட்டி கொல்லப்பட அந்த வீட்டு உரிமையாளர் அவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் செய்தவர் இன்று இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல வியாபார நிறுவனங்களுக்கு உரிமையாளர். பெரும் பணமுதலை. அதாகப்பட்டது மக்களிடம் அடித்து பிடுங்கி, எங்கேயோ இருந்த கள்ளச்சாராயக்காரனை கோடீஸ்வரனாக்கி விட்டிருக்கிறார்கள் புலிகள். என்ன செய்வது அவன் ஆடிய ஆட்டம் அப்படி. இவ்வளவிற்கும் இவன் புலிகளின் கப்டன் தர போராளி கூட இல்லை. கிழக்கில் புலிகளை விட புலிகளுடன் சேர்த்தியங்கிய இந்த On & Off வால்களால் மக்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவர்களது ஆட்டத்தை புலிகளும் அனுமதித்திருந்தார்கள் . இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன? 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? இல்லை 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...?
  16. புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், கப்பம் வசூலித்தலில் கூட ஈடுபட்டிருந்தார்கள். வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒரு நபரை கடத்திட்டு ஆதாரமாக அவரது அடையாள அட்டையுடன் ஒருவர் சைக்கிளில் வந்து குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு போவார். அங்கே போனால் அவர்கள் வசம் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலும், வந்திருக்கும் குடும்ப உறுப்பினரிடம் வசூலிக்க வேண்டிய கப்பத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இனி காலில் விழாத குறையாக அழுது புலம்பி அந்த தொகையை குறைக்க பகீரதப்பிரயத்தனம் பண்ணி குடும்ப உறுப்பினர்களை காப்பற்றிய, தாலிக்கொடியை கழற்றிக்கொடுத்து விட்டு வந்த கதைகள் என் குடும்பத்திலேயே உண்டு. இப்படி கப்பம் வசூலித்த மாவீரன் ஒருவனை STF உயிருடன் பிடித்து அவனது வயிற்றை இரும்புக்கம்பியால் துளைத்து அவர்களது ஜீப்பில் கட்டி குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்து சென்றதை பார்த்து ஊரே ஆரவாரித்து மகிழ்ந்து "ஜெயவெவா" போட்ட வரலாற்று பதிவுக்கு வாழும் கண்கண்ட சாட்சி நானே. உண்மைக்கு எப்போதும் இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று சுடும், மற்றையது என்றுமே உறங்காது
  17. Spot on.... எங்கிருந்து உங்களுக்கு இப்படி உண்மையான தகவல்கள் கிடைக்கிறது என்று தெரியவில்லை. எனக்கும் புள்ளையின் வால்மூலமாக ஒரு தூண்டில் போடப்பட்டது. எம்பி செட்டில்மென்ட் 1.5 கோடி, இடம் நாம் காட்ட வேண்டும். அனுமதி தரத்திற்கேற்ப இதர கட்டணம் (FL 3 இலிருந்து FL22 B வரை ) கலால் துறையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டி வரும். தொழில் துறையில் முதலீடு செய்வோம் என்று போனேன் கடைசியில் ஒரு வளவினை வாங்கி போட்டுவிட்டு வந்துவிட்டேன்
  18. அண்ணை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் எப்படி இந்த நேக்கு தெரிந்ததால் தான் எமக்காக போராடியவர்கள் அங்க அவயங்கள் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் போது நீங்களும் நானும் பவுன்சிலும் டாலரிலும் பேங் பேலன்சை ஏத்த முடிகிறது. நேக்கு நமக்கு முக்கியம் அண்ணை நானாவது ஒத்தைப் பேர்வழி, இங்க நிறைய புலம்பெயர்ஸ் நேக்கின் உதவியால் வெளிநாடுகளில் செட்டிலாகி பேரன் பேத்தி வேறு பாத்திட்டினம்.
  19. நல்லவேளை இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது. கொழுப்பெடுத்து போய் பயர் விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல
  20. இந்த லிஸ்டில் கிழக்கின் தமிழ் தேசிக்காய் விடிவெள்ளி வெறும் வாய் பீரங்கி சாணக்கியனை விட்டுவிட்டிர்களே ...நீங்கள் சொல்வதை பார்த்தால் தேசிக்காய்கள் சும்மா புகுந்து விளையாடப்போறார்கள் போல கிடக்கு. போதாக்குறைக்கு யாழ்ப்பானீஸ் ஒரு பைத்தியனையும் அனுப்பி வைத்திருக்கினம். இனியென்ன நேராக தீர்வுதான்
  21. ஓகோ... கதவை தட்டினத்திற்கே பதுங்கிய வீர மறவர்கள் தான் புலிக்கொடியை போர்த்திக்கொண்டு முகநூலில் பயர் விடுகினமா. அங்க பதுங்கிக்கொண்டு தாயகத்தில் மக்கள் போராடவேண்டும் இவர்கள் சொல்வதில் தப்பேயில்லை. முதலில் ஈழ தமிழர்கள் மங்கோ மடையர்ஸ் மாதிரி சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். எமது போராட்டத்தை எவ்வளவு பெரிய விலை கொடுத்து சிங்களவன் ஒழித்தவன் என்பது எமக்கு தெரியுமல்லவா...? அப்படிப்பட்ட விலை கொடுத்தவன் கண்கொத்தி பாம்பாக தான் இருப்பான். அது யாழ்ப்பாண/கிழக்கு தமிழர்களின் ஆஸ்தான நாயகன் அனுர வந்தாலும் சரி தேசிக்காய்களின் ஆஸ்தான நாயகன் பொன்சி வந்தாலும் சரி. இந்த அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் உணர்ச்சிவேகத்தில் முகப்புத்தக லைக்குகளை அள்ள ஸ்டண்ட் அடித்தால் சிலவேளை மாமியார் வீட்டுக்களி அவர்களுக்கு இந்த பொதுஅறிவை கற்பிக்கும். நாங்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அரசியல் கிடைப்பதை எடுத்து உங்கள் புள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கள். எப்பவுமே கிடைக்காத மட்டன் பிரியாணிக்காக கிடைக்கும் குஸ்காவையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பட்டினி படுக்காதீர்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மட்டன் பிரியாணியை பெற்றுத்தர ஆண்டவனால் கூட முடியாது. இந்த புலம்பெயர்ஸ் எல்லாம் மட்டனும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேணாம் எண்டு இருப்பது முப்பது வருஷத்திற்கு முன் இடத்தை காலி பண்ணிய கோஷ்ட்டி அவர்கள் டோமஹாவ்க் ஸ்டேக்கை ஐரோப்பிய அமேரிக்க ஸ்டைலில் உள்ளவிட்டுக்கொண்டு நீங்கள் பட்டினி படுத்தால் தான் தீர்வு வரும் என்று கதையடிப்பார்கள். இவர்களுக்கு நீங்கள் ஆய்வுகூட எலிகள் மட்டுமே. உங்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு போச்சு ஒரு ஹைகோர்ட்
  22. அதுதான் நியூ அரைவலாக கோடீஸ் போயிருக்கிறாரே... நன்னா தூக்குவார்....நான் பைலை சொன்னேன்
  23. மாற்றுக்கருத்தில்லை நம்மை ஒடுக்குவதில் சிங்களவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பங்காற்றிய ஒருகூட்டத்திற்கு ஆதரவாக நிற்பதென்பது நம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்வதற்கு சமம். முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றுபாருங்கள் அப்போது தெரியும் எப்படி உங்களையும் சிங்களவனையும் கோர்த்துவிட்டு அவன் எஸ்கேப் ஆகுவான் என்று. அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் அவனுக்கு ஆதரவாக போனதற்காக மட்டும் திரும்ப சிங்களவனிடம் இருந்து வெழுவை விழும்
  24. வரிசையா ஓடிட்டானுகள் முதலாளியுடன் கூத்தடிக்க இதுதான் இவங்க சர்வதேசத்துக்கு சொல்லும் செய்தி. இது மட்டும்தான் இவர்களால் முடிந்ததும்
  25. இலங்கை தமிழ் இனம் அழியவேண்டிய இனம் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஸஹ்ரான் கூட குறிவைத்தது இலங்கை தமிழர்களை மட்டுமே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.