Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by tulpen

  1. நிழலி, பின்னால் ஓடியவர்களிடம் Start Point ல் பெயர், விலாசம், தொலைபேசி எண் கேட்க போய் தான் இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது இணையவனுக்கு.😀 அதற்கும் முன்னே ஓடும் மயிலிடம் கேட்க போனால் சுற்றி வளைத்து கும்மிவிடுவார்களே. 🤣
  2. வாழ்த்துக்கள் இணையவன்.
  3. அதில போன் நம்பபர் இருக்கு. வீட்டுக்கு தெரியாமல் போன் போட்டு கேட்க வேண்டியது தானே. 😂
  4. இன்று முகநூலில் வந்த விளம்பரம். 25 வீத கழிவு விலை.
  5. இன்று பிறந்த நாள் கொண்டாடும் விசுகுவுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள். என்றும் நலமுடன் மகிழ்வாக வாழ எனது வாழ்த்துகள்.
  6. முதல்வன், உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கூறியது அந்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சம்களை பற்றியதல்ல. அவர்கள் சரியானவர்கள் என்று கூட நான் கூறவில்லை. ஆனால் அவர்களை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசின் பரப்புரைக்கு உதவி செய்ததாகவே அமைந்தது என்பதையையே குறிப்பிட்டேன். ஒரு நாட்டை ஸதாபிப்பதானால் உலக நாடுகளின் அங்கீகாரத்துடனேயே அதை செய்ய முடியும். எவரைப்பற்றியும் எமக்கு கவலை இல்லை எமக்கு சிறிதறவு ஒத்துவராவிட்டால் அல்லது முரண்பட்டால் அவரை கொலை செய்வேன் என்ற நிலைப்பாடு ஒரு நாட்டை ஸதாபிக்க உதவாது. அப்படி என்றால் ஏதாவதொரு பலமான நாட்டில் ஆதரவாவது இருந்திருக்க வேண்டும். அல்லது உலக நாடுகளை எதிர்த்து வெல்லக்கூடிய super power எமக்கு இருந்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் புலிகள் எப்போதும் பிரச்சனைகளை தீர்க்க பின்இ விளைவுகளை சிந்திக்காது இலகுவான தெரிவுகளாக கொலைகளையே நாடினார்கள். எவ்வளவு வீரத்துடன் போராடிய போதும் அவர்களின் பெரிய மைனஸ் பொயின்ற் அது தான். யாழ் முஸ்லீம் மக்கள் வேளியேற்றமும் அந்த வகையானதே.
  7. தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன? தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள் தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும் உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே. யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு மணிக்கணக்கில் பேசுவார்கள்.
  8. நான் கூறவந்த விடயத்தை உங்கள் மேம்பட்ட எழுத்து நடையால் முழுமையாக்கதற்கு நன்றி கோஷான். உங்கள் கருத்தின் பிரகாரம், இந்த பதிவை விவாதக் களமாக்காமல், ரஞ்சித்தின் பக்க பார்வையிலான தகவல்களை பதியும் களம் என்பதை உணர்ந்து ஒதுங்கி கொள்ளவே நானும் விரும்புகிறேன். அதனாலேயே இதில் கருத்திடுவதை தவிர்த்து வந்தேன்.
  9. வரலாற்றை துறை ரீதியாக ஆய்வு செய்ய விரும்பும் எமது எதிர்கால தலைமுறை மாணவர்கள் ஒரு போதும் ஸ்ரீலங்கா அரசின் தகவல்களில் மட்டுமோ அல்லது தமிழ் தரப்பின் தகவல்களில் மட்டுமோ தங்கி இருக்கப்போவதில்லை. எல்லா தரப்பின் தகவல்களையும் ஆய்வு செய்து எது உண்மை என்று கண்டறிய கூடிய அளவுக்கு தகவல்கள் இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் இணையங்களில் குவிந்து கிடக்கின்றன. துறைசார் வரலாற்று மாணவர்களிடன் இவ்வாறாக ஒருபக்க பார்வையான தகவல்களை சரிபார்த்து உண்மைகளை கண்டறியும் திறமையும் இருக்கும். ஐரோப்பாவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பல மாணவர்களிடன் நான் நேரில் பார்த்த நல்ல விடயம் எந்த விடயத்தையும் அப்படியே நம்பாமல் அதை உறுதிபடுத்த பல்வேறு கோணங்களில் கேள்வி கேட்பது. அந்த ரீதியில் ரஞ்சித் பல்வேறு இணையங்களில் இருந்து பெற்று இங்கு இணைக்கும் தகவல்களும் நீங்கள் கூறிய எதிர்கால துறைசார் வரலாற்று மாணவர்களுக்கு ஆய்வுகள் செய்யவதற்கான தகவல் துளிகள் பெற நிச்ய்யமாக உதவியாக இருக்கும். தகவல்களை திரட்டி இங்கு யாழ்கள வாசகர்களுக்கு பகிரும் ரஞ்சித்தின் உழைப்பு பாராட்டத்தக்கது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
  10. அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம் தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.