Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3322
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by colomban

  1. பாறுக் ஷிஹான்- நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும்இ முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது.இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது.இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை.உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள்.இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது .அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து வடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள். பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.importmirror.com/2024/11/blog-post_86.html
  2. (பாறுக் ஷிஹான்) யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் 01ம் மற்றும் 09ம் இலக்கங்களில் வேட்பாளர்களாக போட்டியிடும் அற்புதலிங்கம் விஷ்கரன் மற்றும் செல்வநாயம் ரசிகரன் ஆகியோரை ஆதரித்து காரைதீவு கிராமிய குழு மற்றும் கிராம பொது அமைப்புகளால் திங்கட்கிழமை (04) மாலை ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது கல்முனை குட்டி ஜிம் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வெற்றிக்கு கரம்கோர்த்து பணியாற்ற இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது இம்முறை பாராளுமன்றப் பொது தேர்தலில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோய்விடக்கூடாது என்பதனால் கடந்த காலங்களில் இங்கு போட்டியிடுவதிலிருந்து நாம் விலகியிருந்தோம். கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம். மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் நாம் ஆழ வேரூன்றி அகலக்கால் பதித்துள்ளோம். அங்கே நடந்துள்ள அபிவிருத்திப் பணிகளைப் போன்று அம்பாறை மக்களுக்காகவும் எதிர்காலத்தில் எம்மால் செய்ய முடியும். கடந்த தேர்தலில் தோல்வி கண்ட அந்த போலித் தமிழ் தேசியவாதிகள் அம்பாறை மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்தலில் அம்பாறையில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுக்கு இரண்டாக வந்து இங்கே வீடென்றும் சங்கென்றும் பிரித்து நின்று அம்பாறை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துணிந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் வெல்லப்போவதில்லை. கடந்த தேர்தல்ளில் ஒன்றாக நின்றபோதே அவர்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால் தற்போது எப்படியாவது ஆயிரம் இரண்டாயிரம் என்று சேகரித்த அவ்வாக்குகளால் தங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை பெற்றுக்கொள்வதே அவர்களது தந்திரமான நோக்கமாகும். யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள். ஆயுதப் போராட்டக்களத்தில் ஆகுதியானவர்களின் குடும்பங்களும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களும் அல்லலுறுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. முன்னாள் போராளிகள் வாழ்வாதாரங்களின்றி கைவிடப்பட்டுள்ளனர். கல்முனை காரைதீவு திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் நிர்வாக நெருக்கடிகளுக்கு உள்ளாகி அலைகின்றனர். கடலோர மீனவர்களுக்குரிய நவீன வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. ஏழை மக்கள் சமூக பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சம்மாந்துறை நாவிதன்வெளி மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் வாழும் எமது மக்கள் கவனிப்பாரற்றவர்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது. வீரமுனைக் கிராமத்து மக்களுக்கு ஒரு வரவேற்பு கோபுரம் அமைக்கும் உரிமை கூட நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தனைக்கும் வீரமுனைப் பிரதேசமானது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்புத் தமிழகத்துடன் கருக்கொண்ட வரலாற்றுப் புகழ் மிக்க இடமாகும். இறுதியாக எமது பிரசன்னமே அந்தப் பிரச்சினையை பகிரங்கப்படுத்தியது. பல கிராமங்களில் தரமான பாடசாலைகள் இல்லை. மின்சார வசதிகள் இல்லை. தரமான வீதிகள் இல்லை. பல இடங்களில் வைத்தியசாலை வசதிகளில்லை. இருக்கும் வைத்தியசாலைகள் எவ்வித வசதிகளும் இன்றி கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் இல்லை. இறந்து போகின்ற மனிதர்களுக்குரிய மயானங்கள் கூட உரிய வசதிகளின்றி காடுமண்டிக் கிடக்கின்றன. குறிப்பாக பொத்துவில் செங்காமம் கிராம மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல அவலங்களோடு வாழ்கின்றனர். இக் கிராமத்தில் ஒரு பாடசாலைகூட இல்லாமல் அடிப்படைக் கல்வியைக் கூட தொடர முடியாத நிலையே காணப்படுகின்றது. ஏன் சாகாமம் குடிநிலம் பகுதிகளைப் பாருங்கள் அங்கே உள்ள மீனவர்கள் வலைகள் கூட இன்றி வாடுகின்றனர். யானை வேலிகள் இல்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரவு நேரத்தினை கழிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அல்லலுறுகின்றனர். அக்கரைப்பற்று தமிழர்கள் அடிமைச்சந்தைகளைப்போல கூலி சந்தைகளை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வு என்பது இழப்பதற்கு உழைப்பைத் தவிர எதுமில்லை என்னும் கையறு நிலையில் வந்து நிற்கின்றது. இன்று கவனிப்பார் அற்றவர்களாக உறுதிமிக்க அரசியல் பிரதிநிதிகள் அற்றவர்களாக சுருங்கச் சொன்னால் அரசியல் குரலற்ற ஒரு அனாதை குழுவினராக சீரழிந்து கிடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவையனைத்தையும் நாம் மாற்றியாக வேண்டும். அம்பாறை தமிழர்களுக்கு மட்டுமல்ல கிழக்குத் தமிழர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கமாக தலைமை கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம். ஆகவே எமது கரங்களைப் பலப்படுத்த முன்வாருங்கள். கிழக்கு மக்களின் குரலான தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கீழ் ஓரணியாய் திரண்டு எமது பலத்தினை நிரூபிப்போம். 'கிழக்கு நமதே' என்று முழங்குவோம் என குறிப்பிட்டார் https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_454.html
  3. வடக்கு முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது நினைவு கூறல் கலாபூஷணம் பரீட் இக்பால் வட மாகாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் குறுகிய மணி இடைவெளியில் ஈன இரக்கமின்றி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை துடைத்தெறிந்து 34 ஆவது ஆண்டு நிறைவு ஒக்டோபர் 30ஆம் திகதி நினைவு கூறப்பட்டது. இதையொட்டி முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரும் பி. எஸ். எம். சரபுல் அனாம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் யாழ்.முஸ்லிம் ஒன்றியம் அல்துல் பரீட் ஆரிப் ஆகிய இருவரும் யாழ் முஸ்லிம்கள் சார்பாக 1990 ஆம் ஆண்டு தொடக்கும் இன்று வரை யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயரங்களை பத்திரிகையாளர் மகாநாட்டில் எடுத்துரைத்தார்கள். சரபுல் அனாம் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட விடயத்தை தெளிவாக எடுத்துரைத்தார். 34 வருடம் கடந்தும் மாறி மாறி வந்த அரசாங்கத்தினால் இதுவரை எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றம் எட்டாக் கனியாக இருப்பதாக கூறினார். வீட்டு திட்டங்களும் சரியான முறையில் எமது சமூகத்திற்கு கிடைக்கவில்லை என்ற விடயத்தையும் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய சகல விடயங்களும் இழுபறியாக இருப்பதாக மிக கவலையோடு கூறினார். அதனைத் தொடர்ந்து ஆரிப் அவர்கள் பேசுகையில் 34 வருடம் கடந்தும் பள்ளிக்குடா, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுடைய காணி அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கொடுக்க அங்குள்ள அதிகாரிகள் மறுப்பதாகவும் அந்த காணி உரிமையாளர்கள் பல தடவை வந்தும் அவருடைய காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் வளமான முஸ்லிம்களுடைய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் அண்மையில் கிளிநொச்சி காணி உரிமையாளர்கள் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்பட்ட போது அந்த செய்திகள் வடக்கு பத்திரிகையில் வரவில்லை என்றும் தென்னிலங்கை பத்திரிகையில் அந்த விடயங்கள் வந்ததாக ஆதாரத்துடன் செய்தித்தாளை காட்டினார். இந்த அக்டோபர் விடயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழ் ஆட்சியாளர்களை சார்ந்ததாகும் என கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் நிர்க்கதியாகச் சென்ற யாழ்ப்பாண முஸ்லிம்களை இரு கரம் கொண்டு வரவேற்ற புத்தளம் மக்களை பாராட்டியதோடு மறைந்த முன்னாள் பாராளுமன்ற மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அவர்களையும் நினைவு கூறினார். கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம். https://madawalaenews.com/7527.html
  4. எப்.அய்னா பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், அதில் இது­வரை 4 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணையில் பிர­தான நபர் ஒரு­வரை கைது செய்ய‌ பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவு மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக விசா­ரணை தக­வல்கள் தெரி­வித்­தன. குறித்த நபர் போதைப் பொருள் கடத்­த­லோடு தொடர்­பு­பட்­டவர் என கூறப்­படும் நிலையில், உரிய சாட்­சி­யங்­க­ளோடு அவரைக் கைது செய்ய மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. அதன் தொட­ராக கொழும்பு நீதிவான் நீதி­மன்றில், தற்­போதும் சிறையில் பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிலரை விசா­ரிக்க விசா­ர­ணை­யா­ளர்கள் அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். குறிப்­பாக, கொழும்பு , தெஹி­வளை, கவு­டான வீதியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து கைது செய்­யப்­பட்ட பிலால் எனும் பெயரால் அறி­யப்­ப‌டும் 30 வய­தான மாலை தீவு தொடர்­பினை கொண்ட இலங்­கை­ய­ருக்கு, இவ்­வா­றான தாக்­குதல் ஒன்­றினை நடாத்த ஒப்­பந்தம் கொடுத்­த­தாக கூறப்­ப‌டும், அவரை சந்­தித்த மூன்றாம் நபரை கைது செய்ய‌ இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் அறி­வியல் தட­யங்­களை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரி­வினர் பகுப்­பாய்வு செய்து வரு­கின்­றனர். குறிப்­பாக இந்த தாக்­குதல் ஒப்­பந்தம் ஒரு இலட்சம் அம­ரிக்க டொலர்கள் என கூறப்­படும் நிலையில் அதனை உறுதி செய்ய விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. இத­னை­விட, கொழும்பு, இரத்­ம­லானை பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்ட யாழ். சுன்­னாகம் பகு­தியை சேர்ந்த ஸ்டார் எனும் பெயரால் அறி­ய­ப்படும் யோக­ராஜா நிரோஜன் எனும் சந்­தேக நபர், 2006 ஆம் ஆண்டு இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னி­க­ராக கட­மை­யாற்­றிய பசீர் வலி மொக­மடை கொலை செய்ய சதித்­திட்டம் தீட்டி , அதற்­காக 2006 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி குண்டுத் தாக்­குதல் நடாத்தி 7 இரா­ணுவ வீரர்­க­ளுக்கு மர­ணத்­தையும், மேலும் பத்து பொது­மக்­க­ளுக்கு கடும் காயத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறி சட்ட மா அதி­பரால் தொடுக்­கப்­பட்ட வழக்கில் விளக்­க­ம­றி­யலில் இருந்து பின்னர் நீதி­மன்றால் நிர­ப­ராதி என விடு­விக்­கப்­பட்­டவர் ஆவார். இது தொடர்­பிலும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவ­தானம் செலுத்தி விசா­ரித்து வரு­கின்­றனர். இவ்­விரு சந்­தேக நபர்­களும் சிறைச்­சா­லைக்குள் வைத்தே அறி­முகம் ஆகி­யுள்­ள­தாக கூறப்­ப‌டும் தக­வலின் உண்மைத் தன்மை தொடர்­பிலும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. இத­னை­விட, கைது செய்­யப்­பட்ட மூன்­றா­வது நபர், தெஹி­வ­ளையில் உள்ள இஸ்­ரே­லிய கன்­சி­யூலர் அலு­வ­லகம் அருகே சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நட­மா­டி­யவர் எனவும், 21 வய­தான குறித்த இளைஞன் மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகு­தியை சேர்ந்­தவர் எனவும் பொலிஸ் தக­வல்கள் கூறினர். அவ­ரது தொலை­பேசி மற்றும் டிஜிட்டல் உப­க­ரண பதிவுத் தக­வல்­களை வைத்து அவ­ரி­டமும் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. நான்­கா­வது நபர் மாலை­தீவு பிரஜை என கூற­ப்படும் நிலையில் அவரும் தெஹி­வளை பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­ற‌து. ‘இலங்கை மீது நடத்­தப்­ப­டலாம் என கூறப்­பட்ட‌ தாக்­கு­தலின் தன்­மை­யின்­படி, அது பயங்­க­ர­வாதச் செய­லாக இது­வரை எம்மால் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் நிலவும் யுத்த நிலைமை கார­ண­மாக, இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு இலங்­கையில் மட்­டு­மல்­லாது உலகில் எங்கும் ஆபத்­துக்கள் ஏற்­ப­டலாம். அத­னால்தான் இது அவர்­களை இலக்கு வைத்த தாக்­குதல் என்று தகவல் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அது தவிர, இங்கு சுற்­றுலா பய­ணிக­ளாக இருக்கும் வேறு வெளி­நாட்­ட­வரை குறி­வைத்தோ அல்­லது இலங்­கை­யர்­களை குறி­வைத்தோ ஒரு நாச­கார சம்­பவம் இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ குறிப்­பிட்டார். எவ்­வா­றா­யினும் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்­றுக்­கான முகாந்­திரம் வெளிப்­ப‌­டுத்­தப்­ப­ட­வில்லை என விசா­ரணை நிறு­வ­னத்தின் உள்­ளக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவ்­வா­றான தக­வல்கள் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டுள்ள சூழலில், மிக முக்­கி­ய­மான பல அதிர்ச்சிகர தக­வல்­களும் வெளிப்­பட்­டுள்­ளன. அடுத்து வரும் 4 மாதங்­களில் அதிக சுற்­றுலா பய­ணிகள் : எதிர்­வரும் சுற்­றுலாப் பரு­வத்தில் அதி­க­ள­வான வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ளனர். குறிப்­பாக நவம்பர் முதல் அறு­கம்பே பகு­திக்கு அதி­க­ள­வான சுற்­றுலா பய­ணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்­க­ப்படும் நிலையில் அதில் அதி­க­மானோர் இஸ்­ரே­லி­யர்­க­ளாவர். இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­யக‌ தர­வு­க­ளின்­படி, இந்த வரு­டத்தின் முதல் 9 மாதங்­களில் இந்­தியா, சீனா, ரஷ்யா, ஜேர்­மனி, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடு­களில் இருந்தே அதிக சுற்­றுலா பய­ணிகள் நாட்­டுக்குள் வந்­துள்­ளனர். அந்த தர­வு­க­ளின்­படி, இந்த வரு­டத்தின் கடந்த 9 மாதங்­களில் இஸ்­ரேலில் இருந்து 20,515 சுற்­றுலாப் பய­ணி­களும் 43,678 அமெ­ரிக்­கர்­களும் 136,464 பிரித்­தா­னிய பிர­ஜை­களும் இலங்­கைக்கு சுற்­றுலா வந்­துள்­ளனர். ஆனால், சுற்­றுலா நட­வ­டிக்கை எனும் பேரில் இஸ்­ரேலும், அதன் உளவு அமைப்­பான மொசாட்டும் இலங்­கைக்குள் குறிப்­பாக கிழக்கில் முஸ்­லிம்­க­ளி­டையே குழப்­பத்தை அல்­லது வன்­மு­றையை தூண்ட முயன்­றார்­களா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தின் பொத்­துவில், அறு­கம்பை பகு­தி­க­ளிலும் திரு­கோணமலை மாவட்­டத்­திலும், தெற்கின் வெலி­கம, அஹங்­கம பகு­தி­க­ளிலும் இஸ்­ரே­லி­யர்­களின் நட­வ­டிக்­கைகள் இதனை பறை­சாற்று­வ­தாக உள்­ளன. குறிப்­பாக திரு­கோ­ண­ம­லையில் காஸா­வுக்கு எதி­ரான சுவ­ரோ­வி­யங்கள் இஸ்­ரே­லி­யர்­களால் வரை­யப்­பட்­டுள்­ள­துடன், முஸ்லிம் பள்­ளி­வா­சலை மிக அண்­மித்து ஹீப்ரு மொழி­யி­லான இஸ்­ரே­லிய இரா­ணுவ வீரர்­க­ளுக்­கான சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. வெலி­கம பகு­தியில் தொடர்ச்­சி­யாக ஒரு மத­ரஸா பாட­சாலை தீ பர­வ­லுக்கு உள்­ளான நிலையில், அதன் அருகே இருந்த கட்­டி­டத்தில் இஸ்­ரே­லி­யர்கள் தங்­கி­யி­ருந்­தமை அச்­சம்­பவம் தொடர்­பிலும் சந்­தே­கத்­தையே தோற்­று­வித்­துள்­ளது. எனவே இது இலங்­கையை பொறுத்­த­வரை சுற்­றுலா பய­னிகள் எனும் போர்­வையில் நாட்­டுக்குள் வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவ சிப்பாய்கள் மற்றும் மொசாட் முக­வர்­களின் திட்­ட­மிட்ட வன்­முறை தூண்டல் நட­வ­டிக்­கை­க­ளாக பார்க்க வேண்டி இருக்­கின்­றது. இது தொடர்பில் மக்கள் போராட்ட அமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்­பாளர் புபுது ஜய­கொட இவ்­வாறு கூறு­கின்றார். ‘சுற்­றுலா விசாவில் நாட்­டுக்கு வந்­தி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஒரு சில இடங்­களில் முஸ்லிம் மக்­களை கோப­மூட்டும் வகையில் காஸாவில் இடம்­பெற்­று­வரும் இன அழிப்பு தொடர்­பான சித்­தி­ரங்­களை மதில்­களில் வரைந்­நி­ருக்­கின்­றனர். அதே­போன்று யுத்­தத்தில் கொல்லப்­பட்ட இஸ்ரேல் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ருக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் அவரின் படம் பொறிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டி­களும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சில இடங்­களில் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை­யான தூரத்தில் ஒட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விட­யங்­களை யார் செய்­கி­றார்கள் என்­பதை அர­சாங்கம் தேடிப்­பார்க்க வேண்டும். காஸாவில் இடம்­பெறும் இஸ்ரேல் இரா­ணு­வத்தின் இன அழிப்­புக்கு எதி­ராக இலங்­கையில் ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கங்­களும் பலஸ்­தீ­னுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு தெரி­வித்து வந்­தி­ருக்­கின்­றன. சுற்­றுலா விசாவில் வரு­ப­வர்கள் எவ்­வாறு மதில்­களில் சித்­திரம் வரை­யவும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டவும் முடியும்?. எமக்கு கிடைத்த தக­வலின் பிர­காரம் அந்த பிர­தே­சத்தில் தங்கி இருக்கும் இஸ்ரேல் இன­வாத பிரி­வி­னரே இதனை செய்­துள்­ளனர். அத்­துடன் இஸ்­ரே­லி­யர்கள் நாட்­டுக்குள் வியா­பார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு கட்­டி­டங்கள் இருக்­கின்­றன. பொலிஸ் பேச்­சா­ளரும் இதனை தெரி­வித்­தி­ருந்தார். சுற்­றுலா விசாவில் வந்து எவ்­வாறு வியா­பாரம் செய்ய முடியும். வியா­பாரம் செய்­வ­தாக இருந்தால் அதற்கு அர­சாங்­கத்தின் பூரண அனு­மதி பெற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும். அதே­போன்று மத வழி­பாட்டு தலங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். தெஹி­வளை அல்விஸ் பிர­தே­சத்தில் யூத மத வழி­பாட்டு இட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. எவ்­வாறு இதற்கு இட­ம­ளிக்க முடியும்? யூத வழி­பாட்டு நிலையம் தெஹி­வளை, வெலி­கம, அறு­கம்பே போன்ற இடங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. அந்த வழி­பாட்டு நிலை­யங்­க­ளுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதனால் முஸ்லிம் பகு­தி­களில் பதற்­ற­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லி­யர்­களை இலக்­கு­வைத்து தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­படும் தகவல் தொடர்­பிலும் சந்­தேகம் எழு­கி­றது. நாட்டுக்குள் இஸ்­ரே­லி­யர்­களின் இந்த நட­வ­டிக்கை சில கால­மாக இருந்து வரு­கி­றது. அதே­போன்று அண்­மையில் சுற்­றுலா பய­ணிகள் என இஸ்­ரே­லி­யர்கள் 20ஆயிரம் பேர்­வரை இலங்­கைக்கு வந்­தனர். அவர்­களில் இஸ்ரேல் இரா­ணு­வத்தைச் சேர்ந்­த­வர்­களும் வந்­தி­ருந்­தனர். ஏனெனில் காஸாவில் இஸ்ரேல் இரா­ணுவம் யுத்தம் நடத்­து­வ­தில்லை. அங்கு இன அழிப்பே அவர்கள் மேற்­கொள்­கி­றார்கள். யுத்தம் இடம்­பெ­று­மாக இருந்தால் இரா­ணு­வத்­தி­னருக்­கி­டை­யி­லேயே மோதல் இடம்­பெ­ற­வேண்டும். ஆனால் காஸாவில் 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு சிறுவன் கொலை செய்­யப்­ப­டு­கிறான். இவ்­வாறு இனப்­ப­டு­கொலை செய்யும் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் மன அழுத்­தங்­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டாது என்­ப­தற்கே குறிப்­பிட்ட காலத்­துக்கு பின்னர் அவர்­களை இவ்­வாறு சுற்­றுலா அனுப்பி, அவர்­களின் மன அழுத்­தத்தை இல்­லா­ம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. எனவே இன அழிப்பை மேற்­கொண்­டு­வரும் இஸ்ரேல் இரா­ணுவ வீரர்கள் மன அழுத்­தத்தில் இருந்து மீள இலங்­கையின் வளங்­களை இஸ்ரேல் பயன்­ப­டுத்­து­கி­றதா என்­பது தொடர்­பா­கவும் இஸ்­ரே­லி­யர்­களால் நாட்­டுக்குள் நிர்­மா­ணிக்­கப்­படும் சட்­ட­வி­ராேத கட்­டி­டங்கள் மற்றும் அவர்­களின் மத வழி­பாட்டு தலங்­க­ளுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டையின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்­பிலும் தற்­போ­துள்ள பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மற்றும் இதற்கு முன்னர் இருந்த பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஆகியோர் தெளி­வு­ப­டுத்த வேண்டும். பொலிஸ்மா அதி­பரும் விளக்­க­ம­ளிக்க வேண்டும். இஸ்­ரே­லி­யர்­களின் இந்த நட­வ­டிக்­கையால் எமது சுற்­றுலா துறை பாதிக்­கப்­படும் ஆபத்து இருப்­ப­துடன் நாட்­டுக்குள் மதங்­க­ளுக்­கி­டையில் முரண்­பாடும் ஏற்­படும் அபாயம் இருக்­கி­றது. அதனால் அர­சாங்கம் இது தொடர்­பாக விரை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்’ என புபுது ஜாகொட தெரி­வித்­துள்ளார். இவ்­வா­றான நிலையில் தான் இலங்­கைக்கு சுற்­றுலா வந்து வர்த்­தகம், மதம் சார் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் அனைத்து வெளி­நாட்­ட­வர்­க­ளையும் கைது செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கும் குடி­வ­ரவு குடியகல்வு திணைக்களத்துக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, இலங்கையின் சனத்தொகையில் பூச்சியமாக இருக்கும் யூதர்கள், 9 வீதமான முஸ்லிம்களை சீண்டுவதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. தன் குடிமக்களை சுற்றுலாவின் பேரில் வரும் ஒரு கும்பல், அச்சுறுத்திவரும் சூழலில் அதற்கு எதிர் நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக எடுக்க வேண்டும். நாட்டில் சட்டவிரோதமாக யூதர்களால் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், சட்ட விரோத‌ ஜெப ஆலயங்கள் சட்ட ரீதியாக அகற்றப்படல் வேண்டும். இஸ்ரேல், மொசாட்டின் ஆதிக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும். கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் கூற்றுப்படி, தற்போது அறுகம்பேயில் இருந்து இஸ்ரேலியர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்களது கட்டிடங்கள், ஜெப ஆலயம் ஆகியன அவ்வாறே உள்ளது. சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் யார்?: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கிழக்கிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேறிவிட்டதாக கூறிய போதும் மூன்று இஸ்ரேலியர்கள் இன்னும் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் பல வருடங்களாக அறுகம்பேயில் நிரந்தரமாக வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை சந்திக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்று அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அவர்களிடம் பேச அந்த இஸ்ரேலியர் மறுத்துள்ளார். அத்துடன் இதன்போது அவர் தங்கியிருந்த வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், இரண்டு இராணுவத்தினர், பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவின் பல அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்ப‌டுகின்றது. சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் தொடர்பில் வினவிய போது, அது தொடர்பில் தேடிப் பார்த்து பதில் அளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித்த ஹேரத்தும், பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவவும் நழுவிவிட்டனர். பதிவு செய்யப்படாத ஜெப ஆலயங்கள் : அறு­கம்பே உள்­ளிட்ட பகு­தி­களில் நிறு­வப்­பட்­டுள்ள யூதர்­களின் ஜெப ஆல­யங்கள் எங்கும் பதிவு செய்­யப்­பட்­டவை அல்ல என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இந்த ஜெப ஆல­யங்­க­ளுக்கு இஸ்­ரேலில் இருந்து மத போத­கர்­களும் வந்து செல்­வது தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் மேல­திக செய­லாளர் எச்.என். குமாரி தெரி­விக்­கையில், “இது­வரை, யூதர்கள் தரப்பில் எந்த அமைப்­பையும், ஸ்தலத்­தையும் பதிவு செய்­ய­வில்லை. பெரும்­பா­லான கிறிஸ்­தவ அல்­லாத விவ­கா­ரங்கள் கிறிஸ்­தவ விவகாரங்களின் மத அம்சத்தில் கையாளப்படுகின்றன. நாங்கள் இப்போது கிறிஸ்தவ மதத்துடன் நேரடியாக தொடர்பில்லாதவற்றை பதிவு செய்ய வேலை செய்கிறோம். வெளி நாடுகளில் இருந்து வந்து பிரார்த்தனை மையங்களைப் போல ஒவ்வொன்றாகத் தொடங்குகிறார்கள். அவற்றைப் பதிவு செய்ய எந்த அமைப்பும் இல்லை. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எவரும் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், எனவே பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.’ என தெரிவித்துள்ளார். எனவே நாட்டின் நிலையான அமைதி மற்றும் குடிமக்களின் அச்ச நிலையை நீக்க, சுற்றுலா வருவோரை சுற்றுலா பயணிகளாக மட்டும் நடந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலான பொறிமுறைகள் அவசியமாகும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18021
  5. ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினரும் அற்புதன் என்று வாசகர்களினால் அறியப்பட்டவருமான நடராஜா அற்புதராஜா படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் 1999ஆம் ஆண்டு நொவெம்பெர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். தினமுரசுப் பத்திரிகையை ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றிய பெருமை அன்னாரையே சாரும். மிகக் குறுகிய காலத்தில் அவர் தினமுரசுப் பத்திரிகையை சூடு சுவை சுவாரசியம் என பிரபல்யப் படுத்தி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றியிருந்தார். தினமுரசுப் பத்திரிகையின் ஜனரஞ்சக எழுத்தாற்றல் வாசகர்களை நின்று நிதானித்து உற்று நோக்க வைத்தது. தேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு மாற்றாக, தினமுரசு அற்புதமான ஒருpடத்தைத் தனக்க வைத்துக் கொண்டது. அரசியல், கலை, இலக்கியம், சினிமா, தொடர் கட்டுரைகள் என பல பகுதிகளிலும் வாசக நெஞ்சங்களுக்கு எது தேவையோ அவை தினமுரசுப் பத்திரிகையில் பிரசுரமானது. விஷேடமாக கூறப்போனால் இதில் வெளியாகிய அரசியல் கட்டுரைகளும் அரசியல் தொடர்களும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. வாராவாரம் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்ற பெயரில் அந்த நாட்களில் நடந்துகொண்டிருந்த ஈழப் போரியல் சம்பந்தமான கள நிலவரங்களை தினமுரசு வாரமலர் பத்திரிகை பிரசுரித்து கொண்டிருந்தது. எந்தப் பத்திரிகையிலும் இல்லாதபடி துல்லியமான கணிப்புகளும் களத்தின் அருகே நின்று பார்த்ததுபோல விவரிப்புகளும் இருந்தன. ஒவ்வொரு வாரமும் எக்ஸ்ரே ரிப்போர்ட் படித்தாலே போதும் வேறு எந்த கட்டுரைகளும் படிக்கத் தேவையில்லை என்ற நிலை உருவானபோது தினமுரசு பத்திரிகைக்கான மவுசு ஏறிக்கொண்டே போனது. படுகொலை செய்யப்பட்ட தினமுரசுப்’ பத்திரிகை ஆசிரியர் நடராஜா அற்புதராஜாவின் நினைவாக விசேட செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது இதய அஞ்சலிகளையும் அவருக்குத் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'ஈ.பி.டி.பி. கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய தோழர் ரமேஸ்(நடராஜா அற்புதராஜா) எம்மை விட்டு பிரிக்கப்பட்டு இன்றுடன் (02.11.1999) 25 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில், அவருடைய செயற்பாடுகளையும், எனக்கும் அவருக்கும் இடையிலான புரிந்துணர்வினையும் எண்ணிப் பார்க்கிறேன். ஆரம்ப காலம் தொடக்கம் என்னுடைய நிலைப்பாடுகளையும் நியாயங்களையும் வலுப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டவர் தோழர் ரமேஸ். அவர், கட்சி சார்பான கருத்தாடல்களின்போது, ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு கட்சியின் செல்நெறியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்தார். அதேபோன்று, அவரிடம் காணப்பட்ட பல்துறை திறமைகளை ஊக்கப்படுத்திய நான், அதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கி கொடுத்தேன். அந்தவகையில், தினமுரசு வாரமலர் என்ற வாரப் பத்திரிகைக்கான ஒத்துழைப்பினையும் வழங்கியிருந்தேன். அதனை சிறப்பாக செயற்படுத்தியவர், தமிழ் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யுமளவிற்கு தினமுரசை மக்கள் மனங்களில் இடம்பிடிக்கச் செய்திருந்தார். தினமுரசின் வளர்ச்சி, தங்களுடைய பாஸிச நிலைப் பாடுகளுக்கு பாதகமானது என்பதை உணர்ந்தவர்களினால் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டு இப்பொழுது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தோழர் ரமேஸின் நினைவுகளை மனதில் சுமந்து,.. அவரும் நானும், எம்மோடு கரம்கோர்த்த சக தோழர்களும் கண்ட கனவை நனவாக்குவதற்கான எமது பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார். https://www.jaffnamuslim.com/2024/11/25.html
  6. ஏ.எஸ்.எம் ஜாவித் 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக ஆயு­த­மு­னையில் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள், 34 வரு­டங்கள் கடந்தும் முழு­மை­யான மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டாது கண்­டு­கொள்­ளப்­ப­டாத சமூ­க­மாக உள்­ளனர். வடக்கில் தமிழ் மக்­க­ளுடன் முஸ்­லிம்கள் ஒன்­றோ­டொன்­றாக பின்­னிப்­பி­ணைந்து வாழ்ந்து வந்த வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறுதிப் பகு­தி­களைக் குறிப்­பி­டலாம். விடு­தலைப் புலி­களால் வடக்கை விட்டு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்கள் வெளி­யேற வேண்டும் என்ற சடு­தி­யான அறி­வித்தல் ஒவ்­வொரு வட­மா­காண முஸ்­லிம்­க­ளையும் தட்­டுத்­த­டு­மாறி நிலை குலைய வைத்த சம்­பவம் மறக்க முடி­யாத வடுக்­க­ளா­கவே இன்றும் இருந்து வரு­கின்­றது. சொந்த பூர்­வீ­கத்தை விட்டு வெளி­யே­று­வது என்­பது எவ­ராலும் ஜீர­ணிக்க முடி­யாத ஒரு சம்­ப­வ­மாகும். அது மட்­டு­மல்­லாது வாழ்வா? சாவா? என்ற இரண்­டுக்கும் மத்­தியில் தமது சொத்­துக்கள், வீடுகள், தொழில் துறைகள், காணி, பூமிகள் என அனைத்­தையும் விட்டு விட்டு வெளி­யே­று­வது என்­பது யாராலும் ஏற்றுக் கொள்­ளவோ அல்­லது ஜீர­ணித்துக் கொள்­ளவோ முடி­யாத ஒரு கசப்­பான சம்பவம் எனலாம். அந்­த­ள­விற்கு முழு முஸ்லிம் சமு­கத்­தி­னதும் மனங்கள் சுக்கு நூறாக்­கப்­பட்ட இந்த மரண அச்­சு­றுத்தல் நிலை­மை­களை சொல்ல முடி­யாத ஒரு மாபெரும் துன்­ப­க­ர­மான நாட்­க­ளாக அந்த 90ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாத இறுதி நாட்­களைக் குறிப்­பி­டலாம். தமது போராட்ட வெற்­றிக்­காக விடு­தலைப் புலிகள் இயக்கம் வட­கி­ழக்­கினை தாமே ஆள வேண்டும் என்ற நோக்கில் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்த ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் வெளி­யேற்றி விட்­டனர். அவர்கள் எடுத்த தவ­றான முடி­வுகள் வட­கி­ழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் உற­வு­களின் ஒற்­று­மைக்கும் பாரிய குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­து­டனும், ஒற்­று­மை­யா­கவும் வாழ்ந்த அந்த இரு சமு­கங்­க­ளையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடி­யாத ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்குள் தள்ளு­வ­தற்கு ஆளாக்­கி­விட்­டனர். இந்தச் செயற்­பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை கண் கலங்க வைத்­த­துடன் சகோ­தர தமிழ் உற­வு­க­ளை­யும்­கூட வாய்­விட்டு அழு­வ­தற்கும், கவலை கொள்­வ­தற்கும் வழி சமைத்து விட்­டது. ஆயு­தத்தின் விளிம்பில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தவ­றான தீர்­மா­னத்தை தமிழ் அர­சியல் தலை­மை­களோ அல்­லது புத்தி ஜீவி­களோ அல்­லது சமயத் தலை­வர்­களோ அதனை நிறுத்­து­வ­தற்கு முன்­சென்று கேட்­ப­தற்கு முடி­யாத ஒரு ஆபத்­தான கட்­டத்தில் இருந்­த­மையும் கவ­லை­யா­ன­தொரு விட­யமே. இவ்­வாறு விடு­தலைப் புலிகள் வட­மா­காண முஸ்­லிம்­களை ஒட்­டு­மொத்­த­மாக வெளி­யேற்­றி­யமை முஸ்­லிம்­களால் என்றும் மறக்க முடி­யாத ஒரு துன்­ப­க­ர­மான பதி­வினை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாகும். வட­மா­காண முஸ்­லிம்கள் எந்­த­வொரு கட்­டத்­திலும் தனி­நாடு கோரி­யதோ அல்­லது இடத்தை பறித்துக் கேட்­டதோ இல்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் முஸ்­லிம்கள் துரத்­தப்­பட்­டமை மிகவும் வேத­னை­யா­ன­தொரு சம்­ப­வ­மா­கவே பதி­வா­கி­யுள்­ளது. காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்து துன்­பியல் சம்­ப­வங்கள் நாட்­க­ளாக, வாரங்­க­ளாக, மாதங்­க­ளாக, வரு­டங்­க­ளாக, தசாப்­தங்­க­ளாக, கடந்து இவ்­வ­ருட (2024) இந்த ஒக்­டோபர் மாதத்­துடன் 34 வரு­டங்­களைத் தாண்டி 35வது வரு­டத்தில் காலடி பதிக்­கின்­றமை கவ­லை­யோடு குறிப்­பிட வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும். இவ்­வாறு 34 வரு­டங்கள் தாண்­டிய இம்­மக்­களின் அவல நிலை தொடர்ந்தும் அகதி வாழ்­வா­கவே அமைந்து கொண்டு செல்­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்து 15 ஆண்­டுகள் கடந்தும் வட­ மா­காண முஸ்­லிம்கள் ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கங்­க­ளினால் கண்டு கொள்­ளப்­ப­டாத ஒரு சமூ­க­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர் எனலாம். ஒவ்­வொரு கணப்­பொழு­திலும் தமது அகதி வாழ்­விற்கு விடிவு கிடைக்­காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள்­கு­டி­யேற்றமாட்­டார்­களா? என்ற கன­வு­க­ளு­ட­னேயே தமது துன்­பியல் நாட்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். இன்று வரை வட­மா­காண முஸ்­லிம்­களின் திட்­ட­மி­டப்­பட்ட பரி­பூ­ரண மீள் குடி­ய­மர்வு என்­பது கானல் நீரா­கவே அந்த மக்­க­ளுக்கு இருந்து வரு­கின்­றது. 2009 ஆம் ஆண்டு யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்த மஹிந்த அர­சும்­சரி அதற்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த அர­சு­களும் சரி இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் துன்­பப்­பட்டுக் கொண்டு அல்­ல­லுறும் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யி­லேயே இருந்­தனர். அந்த மக்­க­ளுக்­காக ஆற்ற வேண்­டிய கரு­மங்­களை கவ­னத்திற் கொள்­ளாது தட்­டிக்­க­ழித்து வந்து கொண்­டி­ருக்கும் செயற்­பா­டு­களே இடம் பெற்று வரு­கின்­றன. அதன் பின் வந்த அர­சாங்­கங்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு­சில முன்­னெ­டுப்­புக்கள் கூட வடக்கு முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை கானல் நீரான கதை­யா­கவே மாறி­விட்­டது. கடந்த காலங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்று அர­சாங்கம் ஒதுக்­கிய பல கோடி ரூபாய்­க­ளைக்­கூட வட­மா­காண சபையும் முடக்கி வைத்­த­தையும் சுட்­டிக்­காட்­டலாம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அரசும் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக புரை­யோடி இருந்த முஸ்லிம் சமு­கத்தின் அக­தி­வாழ்வு விட­யத்தில் அக்­கறை காட்­டப்­ப­ட­வில்லை. புதிய அரசு தோற்றம் பெற்­ற­போது நூறுநாள் வேலைத் திட்­டத்தில் அப்­போது ஆட்­சியில் இருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்ற விட­யங்கள் தொடர்­பாக மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கூறி­யி­ருந்­த­மையும் யாவரும் அறிந்த விட­ய­மாகும். எனினும், அப்­ப­டி­யொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டதா? அதற்கு என்ன நடந்­தது என்­பது இன்னும் புரி­யாத புதி­ராக உள்­ளது. மன்னார், யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்­ட­போது பல ஆயி­ரம்­க­ளாக காணப்­பட்ட வட­புல முஸ்­லிம்­களின் சனக்­தொகை இன்று இலட்­சத்தை கடந்­துள்­ளது. வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு சொந்த இடத்தில் வாழ சரி­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் கண்­ணீ­ரு­டனும், கவ­லை­யு­டனும் இன்று வரை வடக்­கிற்கு வெளியே பல மாவட்­டங்­களில் ஏக்­கத்­து­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர். முஸ்லிம் மக்­களின் வெளி­யேற்றம் சர்­வ­தேசம் வரை தெரிந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யத்தில் கண்­டு­கொள்ளாத் தன்­மை­யுடன் மன­தா­பி­மா­ன­மற்ற முறையில் இருந்து வரு­வதும் சர்­வ­தே­சம்­கூட குறைந்த பட்சம் இலங்கை அர­சுக்கு அழுத்­தங்­க­ளை­யா­வது கொடுக்­கலாம் அல்­லவா ஆனால் இந்த விட­யத்­திலும் சர்­வ­தே­சமும் தொடர்ந்தும் பிழை­க­ளையே செய்து வரு­கின்­றது. இந்த நாட்டுக் குடி­மகன் என்ற அடை­யா­ளங்­களும் ஆதா­ரங்­களும் இருந்தும் வடக்கு முஸ்­லிம்­களின் நிலை மிகவும் மோச­மான கவ­லைக்­கி­ட­மான முறையில் இருந்து வரு­வ­துடன் அரசு முன்­வந்து செய்து கொடுக்­காத நிலை­மை­கள்­கூட அவர்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் தொட­ராக காணப்­பட்டு வரும் தடங்­கல்­க­ளா­கவே இருக்­கின்­றன. குறிப்­பாக முல்­லைத்­தீவில் முஸ்லிம் சமூகத்தின் காணிகள் முற்­றா­கவே சூறை­யா­டப்­பட்­டுள்­ள­துடன் அரச காணி­க­ளைக்­கூட பெற்றுக் கொள்­வ­தற்கு வட­மா­காண சபையும் அங்­குள்ள அர­சியல்வாதி­களும் தடை­களைப் போட்டு முஸ்லிம் சமூகத்­திற்கு எதி­ராக பொய்­க­ளைக்­கூறி ஆர்ப்­பாட்­டங்­க­ளைக்­கூட மேற்­கொண்­டனர். மன்­னாரில் சிலா­வத்­துறைப் பகு­தியில் கடற்­ப­டை­யினர் முஸ்­லிம்­களின் கிரா­மங்­களை முற்­றா­கவே கைய­கப்­ப­டுத்தி வைத்துக் கொண்டு விடா­தி­ருப்­பதும் முஸ்லிம் மக்­களை விரக்­தி­ய­டையச் செய்­துள்­ளது. இதேபோல் யாழ்ப்­பா­ணத்­திலும் தமது சொந்த வீடு­க­ளைக்­கூட பாது­காத்துக் கொள்ள முடி­யா­த­ளவு இருப்­ப­துடன் சட்ட ரீதி­யான ஆவ­ணங்­க­ளைக்­கூட காட்ட வேண்­டிய நிலை­மைகள் இருந்­தன. இவ்­வாறு யுத்­தத்தால் முஸ்லிம் மக்கள் இன்று வரை பல்­வே­று­பட்ட இன்­னல்­களுக்கு முகம்­கொ­டுக்கும் நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றனர். பல­வந்­த­மாக இவ்­வாறு விரட்­டப்­பட்டு இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட வடக்கு முஸ்­லிம்கள் எதிர்­பார்ப்­பது 1990ஆம் ஆண்­டுக்­குமுன் தமிழ் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­துபோல் மீண்டும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற ஆவ­லு­ட­னேயே இருக்­கின்­றனர். தேர்தல் காலங்­களில் மட்டும் அரசும், அர­சியல்வாதி­களும் தமது வாக்கு வேட்­டைக்­காக அந்த மக்­களின் முன்­வந்து உங்­களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவோம், அது செய்து தருவோம், இது செய்து தருவோம் என்று மண்டியிடுவதும், மூட்டை மூட்டையாக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் நடந்தேறிய சம்பவங்களாகும். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்று கல்வி, சுகா­தாரம், தொழில் உள்­ளிட்ட பல தேவைப்­பா­டு­க­ளுடன் காணப்­ப­டு­வ­துடன் இவ்­வி­ட­யங்­களில் முஸ்­லிம்கள் பின்­னோக்­கிய நிலையில் இருப்­பதும் கடந்த காலங்­களில் கிடைக்­கப்­பெற்ற புள்ளி விப­ரங்­களில் இருந்து அறிய முடி­கின்­றது. இந்த வகையில் இந்த மக்கள் பூர­ண­மான மீள் குடி­யேற்­றத்­தையே விரும்­பு­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் என்ற வகையில் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க வேண்­டிய பொறுப்பும் கடப்­பாடும் அர­சாங்­கத்­திற்கே உள்­ளது. இந்த விட­யத்தை அரசு சரி­யான முறையில் முன்­னெ­டுத்து துரத்­தப்­பட்ட அந்த மக்­களை அவர்­க­ளது பூர்­வீ­கத்தில் நிம்­ம­தி­யாக வாழ வழிசமைக்க வேண்டும் என்பது வடமாகாண முஸ்லிம்களின் ஏக்கமாகும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18013
  7. கனத்த இதயத்துடன் தமக்கு எதிரான இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருடத்தை நினைவுகூர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் Thursday, October 31, 2024 செய்திகள் வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இன்று (30) மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் அவர்களின் தலைமையில் “இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் - வடக்கு முஸ்லிம் மக்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேற்படி இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் ஜனாப் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ் கதீஜா மகாவித்தியாலய அதிபர் ஜனாபா ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 1990.10.30 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. விருந்தினர்களின் உரைகள் ஒவ்வொன்றும் வெளியேற்றத்தின் சம்பவங்கள், மக்களின் இழப்புக்கள், அகதி வாழ்க்கையின் அவலங்கள், மீள்குடியேற்றத்தின் சவால்கள், முஸ்லிம் சமூகம் தாமாக இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் பிரதிநிதி ஜனாப் ஆரிப், பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். தகவல் என்.எம்.அப்துல்லாஹ் https://www.jaffnamuslim.com/2024/10/34_31.html
  8. 0 Less than a minute wp-content/uploads/2024/10/Picsart_24-10-31_11-55-15-628-780x922.jpg ஜ‌ன‌நாய‌க‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் ச‌பாப‌தியும் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் ம‌ஜீத் முப்தி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, எம‌து க‌ட்சியை லைக்கா நிறுவ‌ன‌ம் வாங்கியுள்ள‌து என‌ ப‌ல‌ரும் குற்ற‌ம் சாட்டுகிறார்க‌ள்..எம‌து க‌ட்சிக்கும் லைக்காவுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. எம‌து க‌ட்சியின் நிர்வாக‌த்தில் லைக்காவின் உரிமையாள‌ர் அங்க‌த்த‌வ‌ராக‌ இல்லை. அத்துட‌ன் முன்னாள‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராகிய‌ ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் எம‌து க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பையின் ஏகோபித்த‌ அனும‌தியுட‌ன் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். இது தேர்த‌ல் கால‌ம் என்ப‌தால் அவ‌ர‌து நிய‌ம‌ன‌ம் ப‌ற்றி தேர்த‌ல் திணைக்க‌ள‌ம் தேர்த‌ல் முடிவுற்ற‌ பின் அறிவிப்பார்க‌ள். ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் ல‌ஞ்ச‌ம், க‌ள‌வு இல்லாத‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தை முழு நாடும் அறியும். எம‌து க‌ட்சியின் முத‌லாவ‌து பாராளும‌ன்ற‌ தேர்த‌லிலேயே ஒன்ப‌து மாவ‌ட்ட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ வேட்பாள‌ர்க‌ளை போட்டிருப்ப‌தாலும் அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வெற்றியை நோக்கி செல்வ‌தாலும் ஏற்ப‌ட்ட‌ எரிச்ச‌ல் கார‌ண‌மாக‌ எம‌து க‌ட்சி ப‌ற்றி பொய்க‌ளை ப‌ர‌ப்புகிறார்க‌ள் என‌ முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார். https://madawalaenews.com/7297.html
  9. யாழ் அஸீம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக பல நூற்­றாண்டு கால­மாக வாழ்ந்த வட­புல முஸ்­லிம்கள் அவர்­க­ளது தாயக மண்­ணி­லி­ருந்து தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு, இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு இன்றுடன் 33 வரு­டங்­க­ளா­னாலும், இவ்­வ­ர­லா­றா­னது வட மாகாண முஸ்­லிம்­களின் வர­லாற்றில் என்றும் அழிக்க முடி­யாக வடு­வாக பதிந்து விட்­டது. 1990 ஒக்­டோபர் மாதத்தின் இறு­தியில் வட­மா­கா­ணத்­தி­லுள்ள சகல மாவட்­டங்­க­ளி­லி­ருந்து சுமார் 75,000 முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக்­கப்­பட்ட துயர நிகழ்வை நினைவு கூறும் கறுப்பு ஒக்­டோ­ப­ருக்கு மூன்று தசாப்­தங்கள் கடந்தும் முடி­யாத துய­ரோடு வட­புல முஸ்லிம் அக­திகள் வாழ்ந்து கொண்­டி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். வட­பு­லத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு 33 வரு­டங்­க­ளா­கியும், பூர­ண­மான மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டாமல் அகதி முகாம்­களில் வாழும் அவலம் இன்னும் தொடர்­கின்­றது. இன்னும் ஆக்­க­பூர்­வ­மான பூரண மீள் குடி­யேற்றம் நடை­பெ­றாத கார­ணத்தை முன்­னிட்டும் வெளி­யேற்­றத்தை ஆண்­டு­தோறும் நினை­வு­கூர்­வதன் மூலம் மறுக்­கப்­படும் எமது உரி­மை­களை வெளிச்­சத்­துக்கு கொண்டு வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் இது­வாகும். சில அர­சி­யல்­வா­தி­க­ளாலும் அரச அதி­கா­ரி­க­ளாலும், புனர்­வாழ்வு நிறு­வ­னங்­க­ளாலும் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிலை இன்னும் காணப்­ப­டு­வது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். முப்­பத்து மூன்று வரு­டங்கள் கடந்­தாலும் அந்த வெளி­யேற்ற நிகழ்­வு­களும், அவ­லங்­களும் எமக்கு இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­களும் இப்­போது நினைத்­தாலும் இதயம் வலிக்­கின்­றது. காலத்தின் நீட்­சியில் எம்மால் மன்­னிக்க முடிந்­தாலும் மறக்க முடி­யாது . மீள்­கு­டி­யேற்­றமும் வீட்டுத் திட்­டமும் 1990ம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து 75,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­டனர். 33 வரு­ட­கால சனத்­தொகை வளர்ச்சி கார­ண­மாக இப்­போது இத்­தொகை பல­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. எனினும் வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் பல சவால்கள் காணப்­ப­டு­கின்­றன. அரசாங்கம், புலிகள் யுத்தம் 2009 இல் முடி­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். ‘1990ம் ஆண்டு முஸ்­லிம்கள் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்ட போது அதனைத் தடுக்க எவரும் முன்­வ­ர­வில்லை. இப்­போது எனது அர­சாங்கம், பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­த­ப­டியால், 2010 மே மாத­ம­ளவில் முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­டு­வ­தற்­கான சகல வேலைத் திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­படும் என்றார். இவ்­வாக்­கு­று­தியும் இதுவரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. வட­மா­காண முஸ்­லிம்கள் மீள்குடி­யே­றாமைக்கு பல இறுக்­க­மான நிபந்­த­னைகளும் கார­ண­மா­கும். குறிப்­பாக வீட்டுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மாயின் மீள்­கு­டி­யே­றிய மாவட்­டத்­தி­லுள்ள அந்த இடிந்து சிதைந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும். குறு­கிய கால 2 அல்­லது 3 வரு­டங்­களில் மீளக் குறி­யேறும் தமிழ் மக்­க­ளு­டைய வீடு­களில் உடன் குடி­யேற முடியும். முப்­பத்து மூன்று வருட கால­மாக இடம்­பெ­யர்ந்து அக­தி­மு­காம்­களில் அல்­ல­லுற்று வீடு திரும்பும், வட மாகாண முஸ்­லிம்கள், இடிந்து சிதைந்து குட்டிச் சுவ­ராகி காடு­க­ளாக மாறி­யி­ருக்கும் நிலையில் எவ்­வாறு குடி­யே­று­வது? எப்­படி வசிப்­பது? கிண­று­களும் மலசலகூடங்­களும் அழிந்து சிதைந்த நிலை­யி­லுள்ள வீட்டில் எவ்­வாறு வாழ்­வது? இத்­த­கைய இறுக்­க­மான நிபந்­த­னையும் வட மாகாண முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்தில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. யுத்­தத்தால் வெளி­யேற்­றப்­பட்டு, அக­தி­க­ளா­கவும் உள்­நாட்­டிலும், இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்ற மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தவும், அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈட்­டை பெற்றுக் கொடுக்­கவும் மீண்டும் இவ்­வாறு நடக்­காது என உத்­த­ர­வாதம் அளிப்­பதும் நிலை­மாறு கால நீதி எனப்­படும். இம்­மு­றைமை பல நாடு­களில் நடை­மு­றை­ப்­ப­டுத்­தப்படு­கி­றது. இந்­நீதி ஒழுங்கை ஐக்­கிய நாடுகள் சபையும் அங்­கீ­க­ரித்­துள்­ளது. இதனை கடந்த நல்­லாட்சி அரசும் அங்­கீ­க­ரித்து கையொப்­ப­மிட்­டுள்­ளது. இந்­நீதி ஒழுங்­கின்­படி வட மாகாண முஸ்­லிம்கள் உட­ன­டி­யாக மீளக்­கு­டி­யேற முடி­யாத காரணம் 30 வரு­டங்­க­ளாக பாவ­னை­யற்று, காடு­க­ளாக மாறி­யுள்ள இடங்­களில் கொட்­டில்கள் அமைத்து, மல­சல கூடங்கள் உரு­வாக்கி எவ்­வாறு குடி­யே­று­வது என்­ப­தாகும். இவ்­வாறு பல இறுக்­க­மான நிபந்­த­னை­களை விதிப்­பதன் கார­ண­மாக வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது பற்றி சமத்­து­வத்­துக்­கான யாழ் சிவில் சமூக அமைப்பின் தலை­வரும், யாழ் கிளி­நொச்சி முஸ­்லிம் சம்­மே­ள­னத்தின் பொதுச் செய­லா­ள­ரு­மான ஆர். கே. சுவர்­கஹான் (சுனீஸ்) பல்­வேறு கார­ணி­களைக் குறிப்­பிட்­டுள்ளார். “வட­மா­காண முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேற்ற விட­யத்தில் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தற்­கான சில உதா­ர­ணங்­களைக் குறிப்­பி­டலாம். 1. மீள் குடி­யேற்­றத்­துக்­கான ஆண்­டுகள் 13 வரு­டங்கள் சென்­றாலும் யாழ் முஸ்­லிம்­களைப் பொறுத்தவரை பூர­ண­மாக சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இது­வரை 250 க்கு உட்­பட்ட வீட்டு உத­விகள் தான் யாழ் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இது ஏற்றுக் கொள்ள முடி­யாது. நாம் வெளி­யேற்­றப்­ப­டும்­போது 4500 குடும்­பங்கள் இருந்­தன. மீள் குடி­யே­று­வ­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்ட போது 2500 குடும்­பங்கள் விருப்பம் தெரி­வித்­தி­ருந்­தன. அதனை பேருக்கும் பதிவு ஏற்­ப­டுத்தி பங்­கீட்டு அட்­டையும் வழங்­கப்­பட்­டது. ஆனாலும் திட்­ட­மிட்டு இதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மீளாய்வு என்ற பெயரில் யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­வர்­களை மட்டும் பதிவில் வைத்­தனர். பதிவில் உள்ள 600 பேரைத் தவிர ஏனை­ய­வர்­களை இரத்துச் செய்­தனர். தற்­போது சிறிது சிறி­தாகக் குடி­யேறி 1000 குடும்பங்கள் குடி­யே­றி­யுள்­ளனர். இன்னும் 1000 குடும்பங்கள் குடி­யே­றக்­கூ­டிய சாத்­தியம் உண்டு. கடந்த 13 ஆண்­டு­களில் 250 க்கு உட்­பட்ட வீட்டு உத­விகள் கிடைத்­தன என்றால் 2000 குடும்­பங்­க­ளுக்கு எடுக்கும் காலம் மிகக் கூடி­ய­தாகும். இவ்­வா­றான சூழ்­நி­லையில் வெளி­யேற்­றத்தின் வலி­களை சுமந்­த­வர்­களும், மீள்­கு­டி­யேற்றம் தேவை என விருப்­புடன் வந்­த­வர்­களும் மீளக்­கு­டி­யே­று­வதில் விரக்­தி­ய­டைந்து திரும்பி விடு­வார்கள். இவ்­வா­றான சூழ் நிலைக்குக் காரணம் அர­சாங்­கமா, மாவட்ட அர­சாங்க அதி­கா­ரி­களா என்­பதை நாம் சிந்­திக்­கும்­போது யாழ் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் திட்­ட­மிட்டுத் தடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதைப் புரிந்து கொள்ள முடியும். 2. மேலும் புத்­தளம் மாவட்­டத்தில் யாழ் முஸ்லிம் வாக்­குகள் 21,000 ஐ தாண்­டி­யுள்­ளது. யாழ் மண்ணில் இந்த வாக்­குகள் இருக்­கு­மாயின் நாம் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை பெறக்­கூ­டிய சாத்­தியம் உண்டு. அதே நேரம் புத்­தளம் மாவட்­டத்தில் யாழ் மண்ணில் பிறந்­தவர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­ராயின் புத்­தளம் மக்க­ளுடன் முரண்­ப­டக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாகக் கூடும். அதே­நேரம் புத்­த­ளத்­தி­லுள்ள பல அகதி முகாம்­களில் அடிப்­படை வச­தி­க­ளின்றி பல சிர­மங்­களை எதிர்­நோக்கி வாழ்­கின்­றனர். எனவே அவர்­க­ளு­டைய தேவை­களை நிறை­வேற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தேவை. எனினும் யாழ் மண்ணை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரு­வ­ருக்கு அது சாத்­தி­ய­மில்லை. அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் 2010 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் 4 பிர­தி­நி­தி­களைப் பெற முடிந்­தது. 2018 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் 4 பிர­தி­நி­தி­களைப் பெற முடிந்­தது. 2018 இல் நடந்த மாந­கர சபை தேர்­தலில் ஒரு பிரதி நிதி­யையே பெற்றோம். எதிர் காலத்தில் எவ­ரையும் பெற முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது. வட்­டார இணைப்­புக்கள் கார­ண­மாக இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக யாழ் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அர­சியல் அனா­தை­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். 3. வீட்டுத் திட்­டத்­துக்கு விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு வெளி­மா­வட்­டத்தில் சொந்­த­மாக விடு இருக்கக் கூடாது என்­பதும் மீள் குடி­யேற்­றத்தை தடுக்கும் ஒரு கார­ணி­யாகும். 33 வரு­டங்கள் வாழ்­ப­வர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து சிறி­ய­தொரு குடி­சையை வாங்­கி­னாலும் மீள்­கு­டி­யேற்ற உரிமை மறுக்­கப்­ப­டு­வது மிகப்­பெரும் அநீ­தி­யாகும். 4. தாம் வாழும் பிர­தே­சத்­தி­லி­ருந்து வாக்­கு­களை இரத்துச் செய்து விட்டு மீளக்­கு­டி­யேறும் மாவட்­டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில் போன்ற கார­ணங்­களால் ஏற்­க­னவே வாழ்ந்த மாவட்­டங்­களில் திடீ­ரென வாக்­கு­களை வெட்டிச் செல்­வது சாத்­தி­ய­மில்லை. இதன் கார­ண­மா­கவும் மீள்­கு­டி­யேற்றம் தடைப்­பட்­டுள்­ளது. 5. வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்றம் தொடர்பாக ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு, விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடப்­பட்ட போதிலும், இன்­று­வரை நிரா­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. 6. அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஐக்­கிய நாடுகள் அக­திகள் அமைப்பு போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு, வட­பு­ல­முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்தை விரும்­பாத அரச அதி­கா­ரி­களும், சில அர­சி­யல்­வா­தி­களும், சில இன­வா­தி­களும், மீளத்­தி­ரும்பும் அக­திகள் தம் சொத்­துக்­களை விற்­ப­தற்கும், வியா­பா­ரத்­துக்­கா­கவும், நட்­ட­ஈட்டைப் பெறவும் வரு­கின்­றனர், இவர்கள் நிரந்­த­ர­மாக குடி­யி­ருக்க வர­வில்லை என்ற கார­ணங்­களைக் கூறி மீள் குடி­யேற்­றத்தை தந்­தி­ர­மாகத் தடுத்து வரு­கின்­றனர். 7. மீள் குடி­யேற்­றத்தை தடுப்­ப­திலும், வீட்டுத் திட்­டங்­களில் உள்­வாங்­கப்­ப­டு­வ­தற்கும் இடை­யூ­றான கார­ணி­களுள் பிர­தா­ன­மா­னது யாதெனில், 2008 க்கு முன் இடம் பெயர்ந்­த­வர்கள், பழைய அக­திகள் எனவும், 2008 க்கு பின்னர் இடம் பெயர்ந்­த­வர்கள் புதிய அக­திகள் எனவும் பாகு­ப­டுத்­தப்­பட்டு, புதிய அக­தி­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­ட­தாகும். இது1990 இல் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் அக­தி­களைப் புறக்­க­ணிப்­ப­தற்கு அர­சி­யல்­வா­தி­க­ளாலும், சில தமிழ் உயர் அதி­கா­ரி­க­ளாலும் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். அண்­மையில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, வடக்கில் வாழும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சத்தில் 100 ஏக்கர் காணி வழங்கத் திட்­ட­மிட்­டுள்ளேன் எனக் கூறி­ய­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழ் – முஸ்லிம் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த பிர­தமர் முயற்­சிக்­கிறார், இம்­மீள்­கு­டி­யேற்றம் சாத்­தி­ய­மில்லை எனக்­கூறி தடுக்க முயற்­சிக்­கிறார். இவ்­வா­றான அர­சி­யல்­வா­தி­களும், தமிழ் உயர் அதி­கா­ரி­களும் வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை தடுக்க முடி­யற்­சிக்­கின்­றனர் என்­ப­தற்கு இந்­நி­கழ்வு அத்­தாட்­சி­யாகும். 33 வரு­டங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து தாயக மண்­ணுக்கு திரும்பும் இம்­மக்கள் மீது கரு­ணை­காட்­டு­வ­தற்குப் பதி­லாக, எவ்­வித நெகிழ்வுத் தன்­மை­யற்ற இறுக்­க­மான நிபந்­த­னை­க­ளையே தொடர்ந்தும் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். மீள்­கு­டி­யேற்றம் ஆரம்­ப­மாகி கடந்த 13 வரு­டங்­க­ளாக யாழ் முஸ்லிம் அக­தி­க­ளுக்கு கிராம சேவை­யாளர் பிரிவு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு, இந்­திய வீட­மைப்புத் திட்டம் என்­ப­வற்­றி­னூ­டாக இது­வரை 250 வீடுகள் மட்டும் வழங்­கப்­பட்­டுள்­ளன என்பதிலிருந்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் நாச்சிக்குடாவிலிருந்து ஹாமீம் என்ற சகோதரரும் அவருடன் ஈசப்பா என்பவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் வரை நடந்து சென்று தமது கோரிக்கைகளை கையளித்தனர். 45 நாட்களாக பலசிரமங்களுக்கு மத்தியிலும் நடந்து சென்ற அவர்களுக்கு நீர்கொழும்பில் சிறிது தடை ஏற்பட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். நாச்சிக்குடா மக்களுடைய மீள்குடியேற்றத்தில் பல தடைகளும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய வாழ்விட எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடா என்ற பிரதேசம் சுருங்கி முழங்காவில் என்ற பிரதேசம் விரிவாக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளால் எமது மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுவதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணமாகும். 1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சகல பொருட்களும் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு உலகறிந்த விடயம். அம்மக்கள் வாழ்ந்து இடிந்து சிதையுண்ட வீடு, காணி உறுதிப்பத்திரம், முன்னர் குடியிருந்ததற்கான வாக்குப்பதிவு, இவைகள் யாவும் இருக்கும்போது, இம்மக்கள் தாயக மண்ணில் வாழ்ந்த உரிமையை நிரூபிக்க வேறென்ன ஆதாரம் வேண்டும். எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கு அறியத்தருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும், குறுகிய காலத்தில் மீள் குடியேறிய தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கென விசேட திட்டங்களையும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாகும். 0 225 https://www.vidivelli.lk/article/15918
  10. வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் இனச்சுத்திகரிப்பிருந்து மீளெழுவோம் வடக்கு முஸ்லிம் மக்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் பிரதான விருந்தினர்களாகவும், பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி நிகழ்வு தொடர்பான தகவல் தங்களின் செய்திப் பிரசுரத்திற்கான தகவலின் பொருட்டு அறியத்தரப்படுகின்றது. என்.எம்.அப்துல்லாஹ் 2024.10.29 https://www.jaffnamuslim.com/2024/10/34.html
  11. அனுரகுமாரவின் ஆட்சி எவ்வளவு காலங்கள்வரை நீடிக்கும்? சிங்கள மக்களின் மனோநிலை என்ன ? இலங்கை அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை பெரும்பான்மை மக்கள் எதிர்கொண்டபோது ஆட்சியாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதற்காக ஒரே தரப்பினருக்கு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்கியதில்லை. 2009 வரைக்கும் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தம்தான் முதன்மைப் பிரச்சினையாக இருந்தது. அதனை முடிப்பவர்களே சிங்கள மக்களின் கதாநாயகர்கள் என்ற பார்வை இருந்தது. ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதில் தோல்வியடைந்ததனால், மகிந்த ராஜபக்ச அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அதனால் சிங்கள மக்கள் மகிந்தவை எல்லாளன் மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு மன்னனுக்கு இணையாக கொண்டாடினர். மகிந்தவின் ஆட்சியை இன்னும் இருபது வருடங்களுக்கு அசைக்க முடியாதென்ற பார்வை அப்போது இருந்தது. ஆனால் 2015 இல் நியாயமான காரணங்களின்றி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பினார்கள். 2019 இல் 69 இலட்சம் வாக்குகளை பெற்று கோட்டா ஆட்சிபீடம் ஏறியதும் ராஜபக்ச குடும்பத்தை அசைக்க முடியாது. நாமலின் புதல்வர் வரைக்கும் ராஜபக்சவின் குடும்பமே தொடர்து ஆட்சி செய்யும் என்றனர். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் அவரை துரத்தியடித்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் வறுமையில் துன்பப்பட்டபோது ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சிபீடம் ஏறி வறுமையை போக்கினார். ஆனாலும் 1983 இல் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு பயத்தினால் ஊழல் நிறைந்த சர்வசன வாக்கெடுப்பினை நடத்தி தன்னை காத்துக்கொண்டார். 1994 இல் 62.28 வீத வாக்குகளினால் வெற்றிபெற்ற சந்திரிக்கா அவர்கள் 1999 இல் சிங்கள மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் நடைபெற்ற புலிகளின் தற்கொலை தாக்குதலில் காயமடைந்தார். இதனால் ஏற்பட்ட அனுதாபத்தினால் தோல்வியிலிருந்து மயிரிழையில் தப்பித்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழல் நிறைந்த முதலாளித்துவ தலைவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அனுரகுமார திசாநாயக்காவுக்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளதுடன், நடைபெற உள்ள தேர்தலில் அவர்களே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சக்தி அனுரகுமாரவிடம் உள்ளது. அதன்பின்பு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்குவார்களா ? எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/10/blog-post_831.html
  12. இஸ்லாமிய அடையாளம் ++++++++++++++++++++++ Mohamed Nizous ஜுப்பா போடாதே தப்பாக நடப்பதென்றால், தலையை மறைக்காதே பிழையாக ஓட்டும் போது, துருக்கித் தொப்பி வேண்டாம் குறுக்கால பூரும் வேளை, முஸ்லிம் ஐடி தவிர் முக நூலில் 'அது' போட, பாத்திமா என்று சொல்லாதே பாட்டுக் கேட்டு கோல் எடுத்து, தாடியை எடுத்து விடு காடைத் தனம் செய்வதென்றால், அபாயாவை விட்டு விடு அபாய மருந்து கடத்தும் போது, மாஷா அள்ளாஹ் ஸ்டிக்கரை பேசாமல் கழற்றி விடு புகை கக்கும் வாகனத்தை பகை வளர்த்து ஓட்டும் போது... இப்படிச் சொன்னவுடன் எரியும் பலருக்கு இஸ்லாத்தின் அடையாளத்தை இல்லாமல் ஆக்கிறாயா முஸ்லிமா நீயெல்லாம் முறைப்பார் சில பேர்கள். அடையாளம் காட்டாமல் அவனவன் தப்பு செய்தால் முடிந்து போகும் அவனுடன் முஸ்லிமென காட்டிக் கொண்டு அடாவடிகள் செய்வோரால் அள்ளாஹ்வின் மார்க்கத்தையே கடுமையாய் நோக்குகிறார் கலிமாச் சொல்லாதோர். கேட்டுப் படிப்பதிலும் ஆட்களைப் பார்த்தே மார்க்கம் இதுவென்று மனிதர் புரிகின்றார். தப்பான நடத்தைகளை தவிர்த்துத் திருந்துங்கள். அப்படி உங்களால் ஆக முடியாதெனின் அடையாளம் காட்டி அவமானப் படுத்தாமல் விடயத்தை செய்யுங்கள் விழுதலும் வேதனையும் உங்களுடன் முடியட்டும் ஊரார்க்கு வேண்டாம். https://www.importmirror.com/2018/03/blog-post_577.html
  13. பிள்ளையானைச் சுற்றி இறுகத் தொடங்கியுள்ள வலை? அஷ்ரப் அலி- ஏழு முக்கிய வழக்குகளின் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது அதன் பிரகாரம் கடந்த 2006ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக அன்றைய உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள பிள்ளையான் மிக விரைவில் கைது செய்யப்படலாம் என்றே தெரிய வருகின்றது. அதேபோன்று ரவீந்திரநாத் கடத்தல் விவகாரத்தில் கருணாவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகின்றது. https://www.importmirror.com/2024/10/blog-post_13.html
  14. நன்றி நல்லதொரு பதிவு. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இவர்கள் சொர்கத்தில் 72 கன்னிககைகள் கொடுக்கப்ப்டும் என கூற‌ப்பட்டுள்ளது.
  15. FL, CA இரண்டில் எது திறம் ரசோதரன்? FL கியுபா பக்கம் என நினக்கின்றேன். CA மெக்ஸிகோ பக்கம். வீட்டு விலைகள், வேலவாய்ப்பு? இயற்கை அழகு, இனத்துவேசம் என்பவற்றில் ஏது சிற‌ந்தது?
  16. இது தாயகத்தில் இருந்து வந்ததா என்பது சந்தேகம். தலையங்கம் ஊரில் வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக‌ உணர்கின்றேன். நாங்கள் தேசிய மறதி நோயாளிகளா? அப்ப இதற்கு மருந்தென்ன? 70 களில் இருந்து மாறி மாறி வந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுமே எங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வையாவது தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை யார் இப்பொழுது இந்த ஜேவிபி எங்களுக்கு எல்லாம் தரப்போவது என்று கூறினோம்?. இவன் இன‌வாதியால்ல என்று கூறினோமா? மாதாம் 50,000 ஆயிரம், 60 ஆயிரம் ரூபா ச‌ம்பளம் வாங்கும் எங்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றுதானே இவர்களுக்கு வாக்களித்தோம். ஏதும் நம்பிக்கை பொறி தெரியுமா? பஸ் கட்டணம் கொஞ்சம் குறையாதா? ஊழல்கள் குறையாதா? எங்கள் வாழ்க்கைதான் இப்படி போரிலும் அழிவிலும் போய்விட்டது. பிள்ளைகளாவது பிரச்சினையின்ன்றி கெம்பஸ் முடிக்குமா? அரச ஆஸ்பத்திரிலாவது ஒரளவு நல்ல மருந்தாவது கிடைகாதாப்பா? விலைவாசி கொஞ்சமாவது குறையாதா என்ற ஒரு நப்பாசையில், வேறு எந்த தெரிவுகளுமின்றி, அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம். வெளி நாடுகளில் வாழும் நீங்கள் அப்பப்போ எங்களுக்கு பண உதவி செய்கின்றீர்கள், அதற்கு நன்றி. நீங்கள் வசதியாக இருக்கின்றீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றார்கள், திருமணம் முடித்து வசதியாக வாழ்கின்றார்கள். ஏலாத பட்சத்தில் தானே உங்களிடம் இவ்வாறு கையேந்துகிறோம். எங்காவாது ஒரு பிடி கிடைக்கதா என்று வாழும் எங்களை ஏன் மறதி நோயாளி, அம்னிஷியாகாரன், டைமென்சியாகரன் என்று அழைக்கின்றீர்கள். அனுரவுக்கு வாக்களித்ததினாலா? இது என்னுடைய உரிமை/தெரிவுதானே? என்னுடைய சூழ்னிலை அப்படி அதைவைத்து தானே என்னால் முடிவெடுக்க முடியும். சரி ஐயா நங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கோ? உங்களில் தங்கி வாழ்வதனால் நீங்கள் வெளி நாட்டில் இருந்து போடும் எல்லா கட்டளைகளையும் கை கட்டி, வாய்பொத்தி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்களா? வாக்களிப்பது என்னுரிமையல்லவா? நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா?
  17. நான் நினக்கின்றேன் விசுகு ஐயா புலிகளும் ஜேவிபியும் ஒர் புள்ளியில் இணைந்த ஒரு சந்தர்ப்பம் எப்போதென்றால் என்றால் இந்திய அமைதிகாக்கும் படையை வடக்கு கிழக்கில் இருந்து விரட்டுவ்தில். ஜேவிபி இந்திய படை வருகையை மூர்க்கமாக எதிர்த்தது என நினைக்கின்றேன். (நான் அப்பொழுது சிறுவனாக ஓ.எல் செய்த காலம். சரியாக தெரியவில்லை. ப‌ரிட்சைகள் எல்லாம் தள்ளிப்போடப்பட்டது) இது ஒரு நல்ல செயல் என்று நினைக்கின்றேன், இல்லாவிட்டால் இன்னும் நிறைய தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். விசுகு ஐயா, ஈழப்பிரியன் ஐயா நந்தன் போன்ற அந்த காலத்தில் இளஞ்ர்களாக இருந்தவர்களுக்கு இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்திருந்தால் எழுதுங்கள்.
  18. இது ஒரளவு உண்மை. சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்க‌ள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும். என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான். ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான். மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற‌ இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது. முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்
  19. பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன். மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள். ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு. "எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை.
  20. இதுபோல் சில வாரங்களுக்கு முன் சுவிசை சேர்ந்த 52 வயது ஒரு நபர் ஒருவர் பணம் இழந்ததாக செய்தி வந்ததே. இது சிரிக்க கூடிய ஒரு விடயமல்ல. சிந்திக்க வேண்டியது. நான் இதை பஸ்ஸிலும், இரயிலிலும் பயணிக்கும் போது இவ்வாறான நிறைய ஜோடிகளை நிறைய காண்கிறேன். இது தமிழர் மத்தியில் குறைவென்றாலும் சிங்களவர் மத்தியில் அதிகம். இது வீட்டில் துணையிடம் கிடைக்காத "ஏதோ" ஒன்று இந்த உறவுவின் மூலம் இவர்களுக்கு கிடைக்கின்றது. இதை பற்றி நான் இணயத்தில் தேடியபோது (The Psychology Behind Why Younger Women Prefer Older Men) சுவரஸ்யமான விடையங்களை அறிந்து கொண்டேன். முக்கியாமாக 50, 52 அஜித் வய‌தில் இருக்கும் ஆண்களிடம் இருக்கும் நிதானமும், பொறுமையும், முதிர்ச்சியும், நிதி நிர்வாகத்தில் இவர்கள் சுதந்திரமாக இருப்பதுமே இவ்வாறு இருக்கும் ஆண்களை நோக்கி இந்த இளம் பெண்கள் ஈர்க்கப்பட காரணம். ஆனாலும் ஒரு பெண்குழந்தையின் தகப்பனாக எனக்கு இதை ஏற்ற்றுக்கொள்ள முடிவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
  21. கடந்த காலங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. அப்படி பார்த்தால் எந்த ஒரு இயக்கமும் தூய்மையானதல்ல. புலிகள் கூட ஆரம்ப காலத்தில் வங்கியை கொள்ளயடித்தார்கள் தானே? அப்பாவிகளை மத்திய வங்கி குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார்கள். ஒரு சிறிய நிலபரப்பிற்குள் 20க்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி அடிபட்டு சின்னபின்னபட்டு எல்லாம் இழந்து போய் இருக்கும் எம்மை சிறிது எங்களை ஆசுவாசப்ப்டுத்தி கொள்ள விடுங்களேன். எத்தியோப்பியனது நிறத்தை மாற்ற முடியுமா? சிங்களவனது இன துவேசத்தை மாற்ற முடியுமா? ஒரு 6 மாதம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.
  22. 70, 80 களில் சிறுவனாக இருந்தபோது நான் இவரின் தீவிர ரசிகன். இவருடைய அனேக‌ படங்கள அக்காலத்தில் வீடியோவில் (VHS) பார்த்துள்ளேன். (சண்டை காட்சிகளை பார்த்துவிடடு அதேபோல் பாடசாலையில் சென்று அடிபடுவது) பல படங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. மூன்று முடிச்சு,காளி,தீ, மூன்று முகம், கர்ஜனை, தனிக்காட்டு ராஜா, தர்ம யுத்தம், அன்புக்கு நான் அடிமை.. புவனா ஒரு கேள்விக்குறி என பல.. கழுகு ஒரு நல்ல திரில்லர் படம். 90 களுக்கு பிறகு எனோ இவரை பிடிப்பதில்லை. இப்பொழுது யாருடைய ரசிகனும் அல்ல அஜித் படங்களை சற்று விரும்பி பார்ப்பேன். வயது போக போக மனம் இவற்றில் பெரியளவு நாட்டம் கொள்வதில்லை. சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.
  23. இருப‌து வ‌ருடமாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தேர்த‌லுக்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்தி எந்த‌ உரிமையையும் பெற்றுத்த‌ராத‌ ச‌மூக‌த்தை ஏமாற்றும் முஸ்லிம் க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டு நிராக‌ரிக்காத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெற்றிபெற‌ முடியாது என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ஒரு உறையில் இர‌ண்டு வாள்க‌ள் இருப்ப‌து த‌வ‌று என‌ ரிசாத் ப‌தியுதீனுக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னோம். ஹ‌க்கீம் இருக்கும் ப‌க்க‌ம் இருப்ப‌து பிழை என்றும் அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ம் ப‌ற்றிய‌ அறியாமை என்றும் சொன்னோம். இப்போது இர‌ண்டு பெரிய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஆத‌ரித்தும் ச‌ஜித் பிரேம‌தாச‌ தோற்ற‌த‌ன் மூல‌ம் இந்த‌ இரு ஏமாற்று க‌ட்சிக‌ளும் இருக்கும் ப‌க்க‌த்தை ஆத‌ரிப்ப‌தில்லை என்ற‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் முடிவு தெளிவாகியுள்ள‌து. இதையே க‌ட‌ந்த‌ 2019 தேர்த‌லிலும் காட்டின‌ர். அதிலும் த‌மிழ் கூட்ட‌மைப்பு யாரை ஆத‌ரிக்கிற‌தோ அவ‌ர் ப‌டு தோல்வி அடைவார் என்ப‌தும் மீண்டும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் ச‌ஜித் பிரேம‌தாச‌ இணைந்த‌து மிக‌ப்பெரிய‌ த‌வ‌று. 2010ம் ஆண்டு தேர்த‌லில் ச‌ம்ப‌ந்த‌ன் ச‌ர‌த் பொன்சேக்காவுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌ போது அடித்துச்சொன்னேன் ம‌ஹிந்த‌வின் வெற்றி உறுதியாகிவிட்ட‌து என‌. அத்தேர்த‌லில் ஆடையின்றி நிற்கும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்குரிய‌ கோவ‌ண‌ம் ச‌ர‌த் பொன்சேக்கா என‌ ஹ‌க்கீம் கூறினார். பின்ன‌ர் கோவ‌ன‌த்தையும் இழ‌ந்து நின்றார். ஆக‌வே இருப‌து வ‌ருடமாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தேர்த‌லுக்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்தும் ச‌மூக‌த்தை ஏமாற்றும் ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ், அ.இ. மக்க‌ள் காங்கிர‌ஸ், தேசிய‌ காங்கிர‌ஸ் போன்ற‌ க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டு நிராக‌ரிக்காத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெற்றிபெற‌ முடியாது. முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி 23.9.2024 https://www.importmirror.com/2024/09/blog-post_872.html
  24. இவர் திருமணமானவரா என்று தெரியவில்லை? இவர் பொது நிகழ்வுகளில் குடும்ப அங்கத்தவர்களை தவிர்த்து வருகின்றார் என நினக்கின்றேன்.
  25. அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர். இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர். ஏனெனில் பிரச்சனை தீர்ந்து விட்டால் நீதி திரட்ட முடியாது தாங்கள் நினைத்தது போல் வாழ முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது பொது வேட்பாளரை நிறுத்தி இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும் பின்னர் புலம்பெயர் அமைப்புக்களின் வழிகாட்டலில் தவறான பாதையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியினை வழங்கும் புலம்பெயர் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தும் விடுதலைப் புலிகள் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் தற்போது பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குவதாக அறிகிறோம். இவர்களது செயற்பாடுகளால் தெற்கில் குறைந்திருக்கும் இனவாதத்திற்கு உரம் போட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா உதவும், சர்வதேசம் வரப்போகுது, இதனால் தமிழீழம் வரப்போகிறது என சொல்லி தெற்கில் பூதாகரமாக காட்டப்படும். எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்ற மாய மானுக்கு வாக்களிப்பது எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இருப்பை பாதிக்கும். தெற்கில் தமிழர்களுக்கு உச்ச பட்ச உரிமையை வழங்கும் வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிசக் கட்சியின் சிறீதுங்க ஜயசூரியவும் மக்கள் போராட்ட முன்னணியின் நுவான் போபகேவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தேவையற்ற இனவாத கருத்துக்களை தவிர்க்க முடியும். தற்போதைய நிலையில் ரணிலோ சஜித்தோ அனுரவோ மூவரில் யார் வந்தாலும் தமிழர்கள் ஜக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்காக பேரம்பேசும் நிலைமை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி என்பதை விட கூட்டு களவு என்றே சொல்லலாம். எந்தவொரு அரசியல் கட்சியும் தமது பணக்கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜனநாயகம் வெளிப்படைத் தன்மை என பேசுபவர்கள் அதனை செய்யவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறு செயற்பட முடியாது. அவர்கள் ஆயுத இயக்கம். மில்லியன் கணக்கில் ஆயுதம் வாங்கினோம் என கணக்கு காட்டமுடியாது. வெளிப்படையாக ஜனநாயக அரசியல் செய்பவர்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்பவர்கள் தமது கணக்கு விடயத்தில் பலவீனமாக இருக்கிறார்கள். அது பாரிய மோசடி என நான் நம்புகிறேன். விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கை அரசாங்கத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. சரி தவறுக்கு அப்பால் இராணுவ கட்டமைப்பை வைத்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு எதுவும் கிடையாது. விடுதலைப் புலிகளின் நிறங்களான சிவப்பு மஞ்சளை பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் இளையோரை பயன்படுத்தி உணர்ச்சியை தூண்டி தற்கொலைக்கு அனுப்ப செயற்படுகிறார்கள் – என்றார் https://www.todayjaffna.com/364833
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.