Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
வாழ்த்துகள் இணையவன். என்னைக் கேட்டால் சரியானதொரு முடிவையே எடுத்துள்ளீர்கள். எமது நாடுபோல் எதுவும் எமக்கு மகிழ்வைத் தராது. நானும் கணவரும் எப்பவோ உந்த முடிவை எடுத்துவிட்டோம். மற்றவர்க்காக எமது வாழ்வை வாழவே கூடாது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்அதையும் கொடுத்துவிட்டால் நின்மதியாய் செல்லலாம் அன்று காலை நான்கு மணி மட்டில் தான் விமானம் தரையிறங்கியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. அதனால்த்தான் தப்பியிருக்கும் என நினைக்கிறேன். இரண்டு மணிநேரம் என்பதானாலும் இருக்கலாம். மொத்தம் மூன்று 😀 😂🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு நான்என்ன கதையா எழுதிறன். 😂 உது எல்லாம் கேட்கப்படாது. அதெண்டா உண்மைதான்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நான்கு , கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம். அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின் நீங்கள் போங்கோ என்கிறேன். திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான் தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும் போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது. நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என் போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உங்களுக்குப் பொறாமை கண்டியளோ 😂 காக்கவைக்க எனக்கு என்ன ஆசையா??? கணனியில குந்த எனக்கும் நேரம் வரவேணும் எல்லோ ?
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நல்ல சந்தோஷமாக்கும். ஒருதற்றையும் துலையேல்லை அண்ணா. ஒரு பழைய யாழ் உறவுதான் இந்தப் பெயரில் வருகுது எண்டு உங்களுக்கும் விளங்கித்தானே இருக்கும் அண்ணா.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
யாழ் கள இளசுகளுக்கு ஏற்றமாதிரி நல்ல கிழுகிழுப்பாகக் கதையை நகர்த்தி நன்றாக நிறைவு செய்திருக்கிறீர்கள் அண்ணா.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்அங்கு வந்திட்டு உங்களுக்குச் சொல்லாமல் இருப்பேனா. நன்றி சுவி அண்ணா அவவுக்கு யாழ் களமே தெரியாதபடியால்த்தானே இத்தனை துணிவா எழுதிறன். நன்றி சுவைப்பிரியன் ஆர் சண்டை பிடிப்பினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறதுதான் வேலையாக்கும்.
-
அந்தக் கண்கள்- நிழலி
நன்றாக எழுதியுள்ளீர்கள் நிழலி
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
வாசிக்கவே சரியாக குளிருது . தொடருங்கள் அண்ணா.
-
படம் கூறும் கதைகள்
நான் போன இடங்களுக்கும் நீங்ககளும் போயுள்ளீர்கள். தொடருங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உண்மைதான். மற்றைய தளங்களில் எழுதும்போது ஏதோ அந்நிய நாட்டுக்குப் போவது போல் ஓர் உணர்வு. யாழ் இணையத்தில் எழுதும்போதுதான் கருத்துக்களத்தினூடாக வரும் விமர்சனங்கள் எழுதும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் தருகின்றன குமாரசாமி. அது அத்தாருக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லாருக்கும் வரும்தான். ஆனா உணக்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஒரு ஆண்டுக்கு முன்னர் அரிசி உட்பட பல மளிகைப் பொருட்களை இங்கிருந்து அனுப்பியவர்களும் உண்டு. வேறவழி?
-
தையல்கடை.
அப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே. ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஏலக்காய், மஞ்சள் போன்ற சில அங்கே சரியான விலை.
-
வெள்ளித் தேரோட்டி...
கவிதை சிறப்பு
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இவர் பழைய ஆள் வேறு பெயரில் இப்ப என்றால் பார்த்துத்தானே இருப்பார் நந்தன் 😀 நல்ல ஆசைதான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நான் என்ன பொய்யாவா எழுதிறன்.???? உங்கள் மகிழ்ச்சி நல்லாப் புரியுது அண்ணா 😀 வரவே மாட்டா எண்ட துணிவுதான்.😂 😂🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ம் தொடரிறன் 😀 அப்பா நீங்கள் உண்மையை எழுதுவதில்லையா?? 😀 ம்கும் 😃 எழுதி முடியத்தான் இதுக்குப் பதில் சொல்லலாம். ஏன் நான் மட்டும் சுதந்திரமாய் இருக்கேல்லையோ? இப்ப படம் போடமுடியாது. எப்ப போடவேணுமோ அப்ப படம் வரும். இங்க விட்டா வேறெங்க எழுதுறது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
வழமை போலவே உங்கள் கதை விறுவிறுப்பாகப் போகிறது அண்ணா. தொடருங்கள்
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
அடடா இத்தனை விறுவிறுப்புடன் கைதேர்ந்த எழுத்தாளர்போல் இக்கதையை நகர்த்தியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கோஷான்.