Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8471
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. அருமையான கவிதை. உங்கள் அயல்தான் இந்தக் கவிதை எழுதிய வைத்ததோ ???
  2. எம்முடன் வேம்படியில் படித்த நிர்மலா என்ற பெண்ணும் அப்படக்கில் வெட்டிக் கொல்லப்பட்டதாக அறிந்தேன். உணக்களுக்கு அவளைத் தெரியுமா?
  3. இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀 நான் பெண்ணியவாதி அல்ல அல்ல 😂
  4. நீங்கள் ஒரு சிறப்பான கதை சொல்லி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  5. உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான். எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட அத்தனை கடினமாக உணரவில்லை.
  6. நல்ல ஆண்களைப் போற்றியும் ஒரு கவிதை எழுதிவிடுகிறேன் 😀 நன்றி அண்ணா கருத்துக்கு எல்லோரும் ஒரே வழியே எப்படிப் போவது? ஒவ்வொருவரின் இயல்புகள், தேவைகள் வே றுவேறானவையல்லவா எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம். முக்கியமாய் இதில் குமாரசாமி எழுதியதை பார்த்தே களை தொட்டுட்டுது.🤣
  7. வசிட்டரின் வாயால் வாழ்த்து. நன்றி 😀 பெண்கள் அப்படி ஆசைப்பட்டதனால்த்தான் ஆண்கள் இந்தளவாவது முன்னேற்றம் கண்டுள்ளார்கள். இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா இதுதானே முதற் தடவை ஆண்கள் இல்லாத காரியாலயம் .. ............செருக்கும் இல்லை என்றால் பெண்ணை என்ன பாடு படுத்துவார்கள்.
  8. அத்தனைக்கும் ஆண்கள் வீக் என்றுதானே அர்த்தம் 😂 அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... இருந்தாலும் இன்னும் கிராமங்களில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளில் கூடப் பெண்கள் பல அடக்குமுறைக்குள் தான் இருக்கின்றனர்.
  9. சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பலதும் துறந்து உதிரம் தந்துயிர் தந்திடுவாள் பெற்றவர்க்காகப் பெருமை துறந்து மற்றவர்க்காக மனதைப் புதைத்து கற்றிருந்தாலும் கலைகள் மறந்து பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க பாரங்கள் பலவும் சுமந்திடுவாள் குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள் தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை தயங்காது உழைத்திடும் அவளின் மேன்மை திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம் காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப் போவதும் கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும் காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள் மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள் பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள் பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள் பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள் பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம் குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும் பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும் பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர் ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன் ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள் ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம் உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில் பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும் மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும் மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும் தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும் கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும் பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும் காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும் பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும் ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும் கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும் கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு
  10. தமிழர்கள் நாங்களும் கட்டாயம் குடும்பப் பெயர் ஒன்றைப் பின்பற்றி வந்திருந்தோமாலால் எம் மூதாதையர் பற்றிய தெளிவும் எமக்கு இருந்திருக்கும். எப்படி நாம் எம் வரலாறுகளை எழுதிய மறந்தோமோ அதுபோலவே குடும்பப் பெயர் இல்லாது பரம்பரையை அறிய முடியாதவர்கள் ஆகிவிட்டோம். என் மகள் இதைப் பெரும் குறையாகக் கூறுவாள். நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன். ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மவர்கள் மற்றவர்களுக்காகவே எதையும் மாற்றிப் பழக்கிவிட்டனர். இது எம்மவரிடையே உள்ள ஒருவித தாளவுச் சிக்கல் என்றே நான் எண்ணுகிறேன்.
  11. எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமிழர் பெயரை தரணியே போற்றிட தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர் அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால் கட்டிய கூடும் சிதைந்தே போனதே அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே ஓசை கொண்டு ஒலித்த குரல்கள் ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில் கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள் கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும் போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும் அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் ஊரை இழந்து உருகினோம் ஆயினும் மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம் மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம் வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன் வேங்கையானவர் வீரம் மறந்திடோம் கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய உங்களின் வீரம் என்றும் மறந்திடோம் படை நடத்திப் பகைவரை விரட்டித் துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம் கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம் மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
  12. நந்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  13. புத்தன், குமாரசாமி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. பச்சைப் புள்ளிகளை அதிகம் பெற்ற குமாரசாமி, சுவி அண்ணா, நிழலி , தமிழரசு , ரதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
  15. மனிசி வெளியில விடாமல் உங்களுக்கு சங்கீத வகுப்பு எடுக்கிறாவோ ?????🤣
  16. ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முதல் கொண்டுவந்து போட்டிருக்கலாம். இப்ப படிக்கப் பஞ்சிதான் வரும் பிரென்சுக்குப் பதிலா 😃😃 ஆனாலும் நல்ல பதிவு சுவி அண்ணா
  17. ஐயய்யோ நான் என் கறிவேப்பிலைக்கு கன்றைத் தூக்கி வெளியே வைத்துள்ளேன்😀
  18. எனக்கு இதை இரசிக்க முடியவில்லை. ஆண்களின் இரசனை ....... அது வேறுபோல 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.