Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
ஐம்பதில் ஆசை
நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்பத்து நாட்களாகக் காய்ச்சல் என்றால் அவர்கள் முதலே வைத்திய ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். 90 வீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது மற்றும் இதயத் துடிப்பு குறைந்து இருந்தது என்றால் அவரால் எழுந்துநடமாடவே முடியாதும் இருந்திருக்கலாம். நான் கூறியது என அனுபவம். நீங்கள் கூறியது உங்கள் நண்பி கூறியதை. எனக்குத் தெரிந்த பலர் இரண்டாவதுதடவை வந்தும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. ஒருமாதத்தின் பின் கூடக் குணமாகியுள்ளனர். வைத்தியசாலைக்குச் சென்ற பலர் உயிரிழந்துதானிருக்கின்றனர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக் கூறிய சுவி அண்ணா, கிருபன், ஈழப் பிரியன் அண்ணா,யாயினி, இணையவன், கந்தையா 57, குமாரசாமி, பெருமாள், புங்கை, நிலாமதி அக்கா, உடையார், ஜெகதா துரை ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்உண்மைதான் நுணா ஆனாலும் எனக்கும் மகளுக்கும் அடிக்கடி ஒரு தலைவலி புதிதாக வருகிறது. திடீரென உடற்சோர்வு ஏற்படுகின்றது. ஆனாலும் நீங்கள் கூறியவர் பாவம். எனது நண்பி ஒருவரின் கணவர் இங்கு போலீசாக இருந்தவர். அவருக்கு கொரவனா வந்து ஒரு மாதம் எடுத்தது எழுந்து நடக்க. இரண்டு மாதங்களின் பின்னர் முழங்கால் நோ ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றவரை கொறோனா என்று மறித்து மனைவியையோ மகனையோ பார்க்கவிடாது ஒரு தனி அறையில் கொண்டுபோய் போட்டுவிட்டனர். அவர் தாதிமாரை அழை க்கும் அழுத்தியை அமத்தியும் யாரும் வரவில்லையாம். பின்னர் அவருக்குத் தெரிந்த ஒரு வைத்தியாரின் துணையுடன் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். அவரை விடும்போது தவறுதலாகக் கூறிவிட்டோம். அவருக்குக் கொறோனா இல்லை என்று கூறினார்களாம். அவருக்கே அந்த நிலை என்றால். .. .. இன்னும் பல ஆட்களை வேறு வேறு அறைகளில் வைத்திருக்கின்றனர். ஏதும் பரிசோதனை செய்து பார்க்கப் போகின்றனரோ என்றார்.
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்உதுகள் எல்லாம் விலாவாரியாத் தெரிஞ்சிடும்😃
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்எமக்குப் பக்கத்து நகரத்தில் வசிக்கும் ஒரு வைத்தியர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியீட்டிருந்தார். அதில் கூட அவர் கூறுகிறார். நீங்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்கப் பாருங்கள் என்று. நான் வெளிப்படையாக எதையும் கூற முடியாதுள்ளது என. நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் அம்மாவை நாம் இழந்தது யேர்மன் மருத்துவத்துறையின் கவனமின்மையால். யேர்மனியிலும் இப்போது வைத்தியசாலைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே நடத்துகின்றனவாம். எங்கும் எல்லாம் இப்போ பணம் மட்டுமே குறிக்கோள். எலும்பு தொடர்பான நோய்களுக்கு இன்னும் யேர்மனியில் நல்ல வைத்தியம் தான். அதற்காக எடுத்ததுக்கெல்லாம் அங்கு ஓட முடியுமா???
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்என அனுபவத்தைத் தானே கூறினேன். நான் வைத்தியாரிடம் கேட்டபோது அவர் கூறியதைத்தான் சொன்னேன். மற்றது என மக்களுக்கு 83 கூட ஒருதடவை காட்டியது. உடனே 111 இக்கு போன் செய்யும்படி கூறினேன். அது பிரச்சனை இல்லை அம்மா என்றுவிட்டாள். மறுமுறை பார்த்தபோது 90 இல் இருந்தது. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாயிருக்க வேண்டியது அவசியம் தான். வரவுக்குநன்றி அதுதான் என அனுபவம் என்று போட்டாச்சே🤣 வருகைக்கு நன்றி
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்அப்படியும் சொல்ல முடியாது. ஏதோ எமக்கு அப்படி விதிக்கப்பட்டிருக்கு 😀
-
படம் சொல்லும் வரிகள்-1
கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதா அதை அனுபவிக்காது மிச்சம் பிடித்துச் சேர்த்து என்ன பயன்???? 😂😀
-
மாஸ்க் எடுத்தாச்சே
உங்கள் நகைச்சுவை உணர்வு என்றும் மாறாது
-
காவலூர்க் கனவுகள்
ஆகா அழகிய ஊர் வாசம் மனதை நிறைக்கிறதே
-
பரிசு.
வரவர இவருக்கு வயது மறந்துபோய் குசும்பு கூடிப்போச்சு. 😀😂 இருந்தாலும் நல்லாய் இருக்கு கவிதை
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
அந்த இடத்தில் நான் இல்லாமல் போயிட்டனே யாயினி 😂
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
ஆமாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இங்கு இப்போதெல்லாம் பெரிதாகக் கவனம் எடுப்பதில்லை வயதுபோனவர்களுக்கு மட்டுமல்ல. வெளிநாட்டினருக்கு.
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்இங்கு சிலருக்கு இரண்டாவது தடவையும் வந்திருக்கு. கோவிட் தொற்று ஏற்பட்டால் ஒருவாரமோ இரு வாரமோ உடலை அலட்டிக்கொள்ளாது இருக்கவேண்டும் என்கின்றனர். சிலர் வேலையை விட முடியாதவர்கள், விசா இல்லாதவர்கள் அல்லது காசு ஆசை கொண்டவர்கள் சும்மா உடல் வலிதானே என்று தெரிந்தும் வேலைக்குச் சென்று பின் நோய் முற்றி இறந்தும் போயுள்ளனர். அதுதான் தவறு. எனக்குததேறிய வைத்தியசாலைக்குச் சென்ற பலர் இறந்துள்ளவர்.
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
கொஞ்சம் அவசரப்படாமல் சொல்லியிருக்கலாம் . போராளியே கதைசொன்னதுபோல் இருக்கு
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்என் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் பெற்றோருக்கும் கடந்த ஆண்டு ஒருதடவையும் இந்தத் தையில் இரண்டாவது தடவையும் கோவிட் தொற்று ஏறப்பட்டு முதற் தடவை ஐந்தாறு நாட்களும் இரண்டாவது தடவை 28 நாட்களுக்குக் கிட்ட எழுந்து நடக்கவே முடியாமல் படுத்தே கிடந்தனர். ஒரு தடவை வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டும் அவர்கள் செல்லவில்லை. குடிநீர் இரசம் வெடிகு பிடித்தல் என்றும் இரண்டு நாட்கள் வேப்பம் பட்டை அவித்தும் குடிகததாகக் கூறினார்கள். உடலின் ஒட்சியன் அளவு குறைந்தால் மட்டும் வைத்தியசாலைக்குப் போங்கள் என்று பல தமிழ் வைத்தியர்களே சொல்கின்றனர். தகப்பனைத் தொட்டு விளையாடித் தனக்கு வராது என்ற மகளுக்குத்தான் வந்தது. 😀 நன்றி அண்ணா நன்றி ஜெகதா
-
என் கொறோனா அனுபவம்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி நிலாமதியக்கா
-
பாவத்தின் சம்பளம்
அடடா கதை முடிந்திருக்கும் என்று வாசிக்க ஆரம்பித்தால் இப்படி வந்து நிற்குதே. அருமை மர்மக் கதை
-
காற்றாய் நீயும் மாறிவிடு
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்போட்டாச்சு குமாரசாமி 😀
-
இனி இளவேனில் காலம் - நிழலி
அருமையான கவிதை. உங்கள் அயல்தான் இந்தக் கவிதை எழுதிய வைத்ததோ ???
-
அண்ணா அறிவாலயம்.
களவு செய்யாத ஆட்கள் இல்லை எண்டுதான் நினைக்கிறன்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
நல்ல கதைதான் புங்கை. உங்களை அப்பிடியே பார்த்தமாதிரி இருக்கு கதையில் 😂
- என் கொறோனா அனுபவம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.