Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A9 வீதி – ஓர் வரலாற்று நினைவிடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a9-road-2006.jpg?w=470

(A9 in 2006)

கொக்காவில் தனில்..

கொடும் பகைவர் விதி முடித்து..

சீறும் அந்தப் புலி - நடுவே

பதிந்து நிற்க

பறந்த

அந்தச் செங்கொடி...

மாங்குளந்தனிலும் ஏற

அண்ணன் போர்க்

கரும்புலியாய் வாகனம் ஏறி

ஏக வழிவிட்ட வீதி..!

ஆகாய கடல் வெளியில்

எம் சொந்தங்கள்

சுகமாற..சுமந்த வீதி

பால்ராஜும் சூசையும்

களம் பார்க்க

பாதை காட்டிய

சுதந்திர வீதி..!

யாழ் தேவி கொண்டு

பகை.. புறப்பட

புலி வீரர்

காட்டிய தீரத்தில்

அது தடம்புரள..

சத்ஜெயவால் அது தொடர..

அடிக்கு அடி

எம் சொந்தங்களின்

தசைகளின் சிதறலில்

பசி தீர்த்து

ஜெயசிக்குறுவில்

மிச்ச இரத்தம் குடித்து

ஏப்பம் விட்டு..

சிங்களம்

கேடயம் தந்து

வெற்றி விழா எடுக்க...

சினங் கொண்ட

எம் புலிவீரர்

புயலாகி எழுந்து

அடித்த..

ஓயாத அலைகளில்

எம் கைகளில்

மீண்டும் தவிழ்ந்த

வராலாற்றுப் பூமி..!

வீரத்தின் குருதியும்

தமிழ் மாதரின் பூசு மஞ்சளும்

செம்மையும் மஞ்சளுமாய்

அலங்கரிக்க

வரிகளாய்

இயற்கையை அன்னை

நாட்டிவிட்ட

பாலையும் வீரையும்

வீரம் காட்ட

புலிவீரர்

நிலை எடுத்த மண்..!

எத்தனையோ

விண்ணேகு கழுகுகள்

ஆயிரமாயிரமாய் இட்ட

கந்தக முட்டைகள் கண்டும்..

சீர் குலையாது

சீராய் நின்ற

தேசம்..!!!

சர்வதேசம் கொண்டு வந்த

கொடும் பகை நடுவில்..

துரோகமும் பகையும்

கூட்டணி வைத்து

கொட்டிய நஞ்சுக் குண்டுகளில்

புலி வீரர் தம்

தீரம்

வேரோடு சாய

மீண்டும்

மண்டியிட்டுக் கொண்டது..!!

இன்று

அது அடிமையாய்..!!!

சுமந்து நின்ற

சொந்தப் புதல்வர்களின்

கல்லறைக் கூடுகளின்

புனிதக் கற்களைக் கூட

இழந்து..

அநாதையாய்...!!!!

அடுத்தவன்

ஏசும்

கூலிக்கு

கேலிக்கு

இரையாகி

புத்தன் சிலைகளின்

சரணாலயமாய்..!

மீண்டும்

அந்த பண்டார வன்னியனும்

பிரபாகரனும்

வரலாறாய் மீளும்

நாள் வரும்

வன்னி மண்

சுமந்த வீதியே

நீ...

விடுதலை பெறுவது

உறுதி..!

எம் உயிர் மீது

சத்தியம்

செய்கிறோம்..!

உன் புனித மண்ணெடுத்து

எம் மாவீரர்

இல்லம்

இமயம் அளவு

அமைத்து....

உலகிற்கு

எம் இன

நிமிர்வு காட்டுவோம்..!

செங்கொடியாம்

சோழப் புலிக்கொடி

அங்கும்

பட்டொளி

வீசும் நாள்

இவ்வகையகத்துள்

வந்தே

தீரும்..!!

தமிழா

அதுவரை

துரோகிகள் ஓட்டும்

குலுங்கு வண்டியோ

சொகுசு வண்டியோ

நிரந்தரம் என்று

எண்ணாதே...!!!

சொந்த இரத்தத்தில்

சேறான அந்த மண்ணின்

புனிதம் அறியாது

சகதி என்று அள்ளித் தெளிக்காதே..!

மாவீரர்

தியாகம் நிறைந்த

புனித பூமியை

ஒரு தடவை

தொட்டு வணங்கு

பாதணி அகற்றி..

பாதம் வைத்து

புனிதம் பெறு..!

வீரம் வளர்..!!

இன.. மண்..

விடுதலைக்காய்

உழைக்க

சாத்தியமாம் வழியெல்லாம்

அங்கேயே உறுதி எடு...!

நன்றி: நெடுக்ஸ் (01-04-2012)

a9-at-2010.jpg?w=470

(A9 in 2010)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள முதல் படத்தில், பல்வேறு பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைபுலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியின் வீதிகளில் எதிரியின் அச்சுறுத்தல் எந்தக்கணத்திலும் எதிர்பார்க்கக்கூடியதாகவிருந்தாலும், அங்கு ஆயுதம் தாங்கிய புலிகளின் நடமாட்டத்தையோ அன்றேல் வாகனங்களையோ காணமுடியவில்லை. கீழே உள்ள படத்தை பாருங்கள் நிலைமை படுமோசம்.

புலிகள் வியாபாரத்தில் விழுந்து

தலைக்கனம் ஏறி

கிளிநொச்சி தண்ணி ராங் போல்

இருதடவை தலைகுப்பிற விழுந்த (பேச்சுவார்த்தையிலும், சண்டையிலும்)

வீதியும் இதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வியாபாரத்தில் விழுந்து

தலைக்கனம் ஏறி

கிளிநொச்சி தண்ணி ராங் போல்

இருதடவை தலைகுப்பிற விழுந்த (பேச்சுவார்த்தையிலும், சண்டையிலும்)

வீதியும் இதுதான்.

இப்ப மட்டும் என்னவாம்.. ஆளாளுக்கு கூலி வாங்கிக்கிட்டு இருக்கினம்.

புலிகள் வாங்கினது.. அந்த வீதியின் விடிவுக்காக உயிர் நீத்த.. காயமடைந்த போராளிகளின் குடும்பங்களின் பராமரிப்பு உட்பட.. அப்பகுதி மக்களின் மறுவாழ்விற்காக..!

ஆனால் இன்று சிங்கள அரச.. படைக் கூலிகளும்.. எஜமானர்களின் காலில் குப்புற விழுந்து விழுந்து.. கூலி வாங்கும்.. தமிழ்.. முஸ்லீம் கைக்கூலிகளும்.. வாங்கும் கூலி.. எதற்கு.. சுய இலாபத்திற்காக.

இங்க தான் (யாழ் உட்பட) புலிகள் தலைக்குப்பிற விழுந்ததை நீங்கள் சிலர் கொண்டாடினாலும்.. அவர்களை அவர்களின் கொள்கைகளை தலைமிர வைக்க மக்கள் அவர்களின் தடம் பின்பற்றுகிறார்கள். அதுவே புலிகளின் வெற்றி. மக்களுக்காக போராடுறம் என்று புறப்பட்டவர்கள்.. இன்று மண்டியிட்டு.. எஜமான சேவகம் செய்வதை அல்ல.. நிஜப் புலிகள் செய்தார்கள். போராடி வீழ்ந்தார்கள். அதுதான் வீரர்களின் வரலாறே..!

அதை உணர்ந்து கொள்ளுதல் நன்று..! :icon_idea:

இந்த வீதி பல நூறு மாவீரர்களின் தியாகத்தைக் கண்ட வீதி என்ற உணர்தல் இன்று இப்படிக் கருத்தெழுதும் நீங்கள் யார்..???! சாதாரண மனிதன்..?????! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கதிர் அவர்களே தாங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்பது உங்கள் சுட்டியில் தெரிகிறது. விசுவாசமாகத்தான் இருக்க வேண்டும் இல்லையேல் இருப்புக்கு ஆபத்து. இதையே மெய்ன்டேன் பண்ணுங்கோ. நெடுக்கு வந்தவரத்தில படங்களை மட்டும்தான் பார்த்துவிட்டு கருத்தெளுதினேன் இப்போதன் தங்கள் கவி வரிகளை வாசித்தேன். உங்கள் கவிவரிகளில் உள்ள உங்களின் துயரம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இன்னுமொரு, புலிகளின் காலத்துக்காக, இரத்தம் சிந்தி எமது இளவல்கள் போராடாது ஈழம் அடங்கிலையும் தமதாக்கிக் கொள்ளும் காலத்துக்காக என் மனம் ஏங்குகிறது. அப்போது எங்கள் எதிரிகள் நாணும்படி தோள்தட்டி அவர்களையும் வரவேற்போம். கூடியவிரைவிலோ அன்றேல் இன்னும் பல பதிண்மவருடங்களின்பின்போ நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வியாபாரத்தில் விழுந்து

தலைக்கனம் ஏறி

கிளிநொச்சி தண்ணி ராங் போல்

இருதடவை தலைகுப்பிற விழுந்த (பேச்சுவார்த்தையிலும், சண்டையிலும்)

வீதியும் இதுதான்.

:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வந்தவரத்தில படங்களை மட்டும்தான் பார்த்துவிட்டு கருத்தெழுதினேன். இப்போதான் தங்கள் கவி வரிகளை வாசித்தேன். உங்கள் கவி வரிகளில் உள்ள உங்களின் துயரம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இன்னுமொரு, புலிகளின் காலத்துக்காக, இரத்தம் சிந்தி எமது இளவல்கள் போராடாது ஈழம் அடங்கிலையும் தமதாக்கிக் கொள்ளும் காலத்துக்காக என் மனம் ஏங்குகிறது. அப்போது எங்கள் எதிரிகள் நாணும்படி தோள்தட்டி அவர்களையும் வரவேற்போம். கூடியவிரைவிலோ அன்றேல் இன்னும் பல பதின்ம வருடங்களின் பின்போ நிறைவேறும்.

எல்லாவற்றிற்கும் வரலாறு எழுதும்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் பதில் விரைந்து கிடைப்பதும் விடுவதும்.. எமது செயற்பாடுகளில்.. ஒற்றுமையில் தான் உள்ளது. நாம் செயற்படாது.. சுய விமர்சனம் என்ற போர்வைக்குள் இருந்து எம்மை நாமே காட்டிக் கொடுத்துக் கொண்டு.. அடுத்தவன் செயற்படக் காத்திருந்தால்.. ஏக்கங்கள் நிறைவேற தசாப்தம் அல்ல.. மிலேனியங்கள் கூட ஆகலாம்..! :icon_idea:

தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி.

எல்லோரும் இருந்துகொண்டு புலிப் போராளிகளை பந்தயக் குதிரைகளாய் எண்ணியதன் விளைவுகள் தான் இன்றைய காலம். யாருமே கற்களை எறிய தயாரில்லை. கற்களை எறிபவர்கள் சிலர், கற்களை எறிபவர்களுக்கு பின்னால் நின்று பரணிபாடுவோர்தான் தமிழினத்தில் பலர்........... பலர்........

சும்மா ஒரு கதைக்கு வைப்பம் இன்னும் ஒரு 15 வருடத்தில் மீளவும் ஒரு போர் வந்தால்.............. இன்று 03-10 வயதில் உள்ள தனது மகளையோ, மகனையோ “போய் வா செத்தும் ஈழம் கொண்டு வா என்று பிள்ளைகளை அனுப்ப இங்கு எத்தனை நபர்கள் தயார்...???

வன்னியிலே வீடுவீடாக போருக்கு பலியிட ஆட்களை பிடித்தபோது, புலம்பெயர்ந்த 10 பேராவது தங்கள் பிள்ளைகளை அனுப்பினார்களா போய் வா மகனே, மகளே போராட என................... எதுவுமேயில்லை.

எல்லா வலிகளையும் சுமந்தவர்கள் அந்த வன்னி,மட்டு மக்களே. இனியென்றாலும் அவர்களை வாழவிடுங்கள். குழியிலிருந்து எழுந்து வரும் அந்த மக்களை உசுப்பேற்றி பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு விடாதீர்கள் தயவுசெய்து....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலே வீடுவீடாக போருக்கு பலியிட ஆட்களை பிடித்தபோது, புலம்பெயர்ந்த 10 பேராவது தங்கள் பிள்ளைகளை அனுப்பினார்களா போய் வா மகனே, மகளே போராட என................... எதுவுமேயில்லை.

எல்லா வலிகளையும் சுமந்தவர்கள் அந்த வன்னி,மட்டு மக்களே. இனியென்றாலும் அவர்களை வாழவிடுங்கள். குழியிலிருந்து எழுந்து வரும் அந்த மக்களை உசுப்பேற்றி பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு விடாதீர்கள் தயவுசெய்து....

வன்னியில் நின்று போராடியவர்கள் வன்னியை பிறப்பிடமாகக் கொண்டவர்களை விட மற்றவர்களே அதிகம். மாவீரர் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கும் மாவட்டம்.. யாழ்ப்பாணம். அடுத்து மட்டு..! அடுத்து திருமலை... அடுத்து மன்னார்.. அடுத்து தான் வன்னி மாவட்டங்கள்.. மற்றும் அம்பாறை. மலையக சொந்தங்களும்.. தமிழக சொந்தங்களும் கூட உயிர் விட்டிருக்கிறார்கள் வன்னி மண்ணில்..!

அடிப்படையில்... உண்மைகளை விளங்கிக் கொள்ளும் பொறுமையின்றி நீங்கள் சகட்டு மேனிக்கு போராட்டம் பற்றிய தவறான புரிதல்களோடு கருத்திட்டு வருகிறீர்கள் என்பதைக் காட்ட இந்த உண்மை போதும்.

வீட்டுக்கு ஒருவர் போராட அழைக்கப்பட்டது சமாதான காலத்தில். அதற்காக சரியான விளக்கங்களும் தாயக.. புலம்பெயர் மக்களுக்கு அளிக்கப்பட்டன. புலம்பெயர் மண்ணில் நின்ற தாயகப் பற்றாளர்கள் கூட களம் ஏகி சண்டை இட்டு.. அல்லது பணி செய்து.. இருக்கிறார்கள்.

எமது மாவீரர்களினதும்.. மக்களினதும் தியாகங்கள் வீண் போக அனுமதிக்க முடியாதபடிக்கு மக்கள் ஒரு உறுதியோடு இருக்கிறார்கள். மட்டக்களப்பிலும்.. திருமலையிலும்.. அம்பாறையிலும்.. வன்னியிலும்.. யாழ்ப்பாணத்திலும் மக்கள் நிம்மதியாக இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மக்களோ தங்கள் நிலம் விழுங்கப்படுவது.. ஊர் திருடப்படுவது.. வீடுகள் தகர்க்கப்படுவது.. குடியேற்றங்கள்.. சமூகச் சீரழிவுகள்.. இராணுவ உபத்திரபங்கள்.. சுதந்திரச் செயற்பாட்டுக்கான தடை.. என்று சொல்லனா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை எல்லாம் மறைத்து கருத்தெழுதும் உங்களின் நோக்கம் என்ன என்பதை எம்மால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் நாசிப் படைகளிடம் தோல்வி முகம் கண்ட போது கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டு.. பல்லாயிரக்கணக்கானோர் பலியிடப்பட்ட நிலங்களில் தான் நீங்கள் தமிழர்கள் இன்று அகதி அந்தஸ்துப் பெற்று வாழ்கிறீர்கள். அதிகம் இல்லை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எவனோ உயிர் கொடுத்து காத்த மண்ணில் தான் நீங்கள்.. இரண்டாம் நிலை பிரஜா உரிமைக்கு அடிபடுகிறீர்கள். இதையே தான் நீங்கள் ஈழத்திலும் செய்வீர்கள். அதற்காக ஒரு இனம்.. தன் விடுதலையை தொலைத்து நிற்க முடியாது.

இன்றைய உலக ஒழுங்கில்.. ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் விடுதலை என்ற நோக்கத்திற்கு எதிரான விளைவுகளை உருவாக்கும் என்ற நிலையில் ஆயுதங்கள் மெளனிக்கச் செய்யப்பட்டு.. போராட்டம் பிற வடிவங்களோடு முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில்.. மக்கள் (புகலிடத்திலும்.. புலத்திலும்) அதனை உணர்ந்து வரும் நிலையில்.. உங்களைப் போன்றோர் பரப்பி வரும் அவதூறுகளும்.. விளக்கமற்ற செய்திகளும்.. எதிரிகளின்.. ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கங்களுக்கு தீனி இடுமே அன்றி.. மாண்டு போனவர்களின் இலட்சியம் அடையப்படவோ.. எதிர்கால தமிழ் சந்ததி.. விடிவு காணவோ எள்ளளவும் உதவாது..! இதனைப் புரிந்து கொண்டு கருத்துரைத்தல் நன்று. :icon_idea:

Edited by nedukkalapoovan

சங்கே முழங்கு......... குகுகுகுகு..............கூகூகூகூகூகூ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கே முழங்கு......... குகுகுகுகு..............கூகூகூகூகூகூ........

சங்கு முழங்கிற இடத்தைப் பொறுத்திருக்குது...

போர்க்களத்தில் முழங்கினால்.. அது வீர முழக்கம்..

சாவு வீட்டில் முழங்கினால்.. அது சாவு முழக்கம்...!

நான் நினைக்கிறேன்.. உந்தச் சங்கு சாவு வீட்டில் முழங்குது என்று..! :lol::D

நிச்சயமாய் சாவு வீட்டிற்கான சங்குதான்.............. அதுதானே ஏற்கனவே ஊத தொடங்கிவிட்டீரே....

Edited by ilankathir

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு சனத்தொகைப் பரம்பல் அதன் பெறுபேறு என்பவற்றை பற்றி விளக்கம்காணாது. யாழ்ப்பாணத்தையும், பிற மாவட்ட சனதொகை பரம்பலை ஒப்பிடணும்.

வன்னியிலே வீடுவீடாக போருக்கு பலியிட ஆட்களை பிடித்தபோது என்பதை வீட்டுக்கு ஒருவர் போராட அழைக்கப்பட்டது என்ற கௌரவப்படுத்தல். ம்.... நடக்கட்டு்ம்

பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்திலை இருந்து வெளிநாடுகளுக்கு போன சனம் தான் அதிகமாமே???? உண்மையே தம்பியவை....

போராட்டம் பிற வழிகளிலை முன்னெடுத்து செல்லப்படுதாமே............ பிரபாகரனை நம்பி விழுந்துகிடந்த தமிழர் போராட்டம் சர்வதேசத்தை நம்பி இப்ப விழுந்து கிடக்கிறது. அதாவது அடிமை அரசியல் தொடர்கிறது என்று சொல்லும்

விகிதாசாரக் கணக்கு பார்த்தாலும் சரி.. வீதி ஓரமா நின்று விரலில எண்ணிக் கூட்டிக் கழிச்சு.. பார்த்தாலும் சரி.. செத்தது தமிழன் தான் அதிகம். அதிலும் யாழ் மாவட்டம் அதிகம். அது வன்னில நின்று செத்திருந்தாலும் சரி.. மட்டக்களப்பில நின்று செத்திருந்தாலும் சரி... கொழும்பில நின்றிருந்தாலும் சரி..!

வன்னியில் வீடு வீடாக பிடித்ததாகத் தெரியவில்லை.. பிடிச்சிருந்தா.. ஈழம் கிடைச்சிருக்கும். ஆனால்.. இந்தியப் படைகளோடு.. சேர்ந்து தமிழ் தேசிய இராணுவத்துக்கு பலிக்கடாவாக்க ஆட்பிடிச்சாக்களும்.. கருணா கும்பலுக்கு ஆட்பிடிச்சாக்களும்.. பிள்ளையான் குழுவிற்கு தொண்டர் சேர்த்த ஆக்களும்.. டக்கிளசிற்கு.. தோழர்கள் சேர்த்த ஆட்களும்.. புளொட்டுக்கு.. சோத்துப் பார்சல் பிரிக்க.. கூட்டம் சேர்த்த ஆக்களும்.. வரதராஜப் பெருமாளுக்கு மண்டையன் குழு அமைக்க.. ஆள்பிடிச்ச ஆக்களும்.. இதற்கு நீலிக்கண்ணீர் வடிப்பது தான் வேடிக்கை.... விநோதம்.

இந்தியப் படைகளிடம் சரணடைந்து.. சிங்களவனிடம்.. மண்டியிட்டு.. டக்கிளஸ்.. சித்தார்த்தான்.. சங்கரி.. அமிர்தலிங்கம்.. வரதராஜப் பெருமாள்.. எல்லாம் தமிழீழம் பெற மாற்றுவழில முயற்சிக்க முடியுமுன்னா.. ஏன் பிரபாகரன் பிள்ளைகள் மட்டும் முடியாது. போங்கையா நீங்களும் உங்கட வியாக்கியானங்களும். அகதி என்று வந்து அரச பிச்சைப் பணத்திற்கு ஏங்கி வாழுற அடிமைக் கூட்டம்.. தாயக மக்களை நோக்கி அடிமை என்று சொல்ல.. என்ன அருகதை இருக்குது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.