Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரமும் கலாச்சார சீரழிவும்!!

kuss3.308uy4ouci8kw044csk4osw8s.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th.jpeg

“டேட்டிங்”கலாசாரம் மெல்ல மெல்ல கவனத்துடன் கையாளப்படுவது கேள்விக் குறியாகிவிட்டது.உடல் ரீதியான உறவுக்காகதானே டேட்டிங்?பெண்களே உஷார்..எப்போதும் விழித்திருங்க!எல்லா ஆண்களையுமே சந்தேகிப்பதையும் கைவிடுங்கள்.அறிவுரை சொல்லும்போது இதமா,பதமா சொல்லுங்கள்.”டேட்டிங்”இச்சொல் இன்று மேற்கத்திய நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் சகஜமாகிவிட்டது.முன்பின் தெரியாத ஒருவருடன் செல்வது டேட்டிங் கிடையாது.நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வது டேட்டிங்.இப்படி செல்லும்போது கண்ணியப் பேச்சுடன் கட்டுப்பாட்டுக்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.டேட்டிங் என்பது முட்கள் நிறைந்தது.முட்கள் குத்தாமல் பார்த்துக்கொள்வது அவரவர்களுடைய பொறுப்பு,கடமை.

டேட்டிங் என்ற பெயரில் அறியாமையில் உள்ள பெண் தோழிகளை சில ஆண் நண்பர்கள் நாசப்படுத்திவிடுகின்றனர்.அறியாமையில் கற்பை இழந்து நிற்கும் அப்பாவிப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறாள்.ஆனால் ஆறுதல்தான் கிடைக்காது.இதையே பலவீனமாக வைத்து அந்த ஆண் நண்பர் அப்பாவிப் பெண்ணை தொடர்ந்து அனுபவிக்க முயற்சிப்பார்.தற்போதைய காலகட்டத்தில் ஆணுடன் பெண்ணோ,பெண்ணுடன் ஆணோ உறவு வைத்திருந்தால் தான் சரியான மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.அல்லது அவர்களுக்கு ஏதோ மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர்.

இந்த உந்துதல் கட்டாயம் இவர்களை நண்பர்களாகத் தூண்டுகிறது.நண்பர்களுக்கு நான் அந்தப் பெண்ணை மடக்கிக் காட்டுகிறேன் பார் என்று காதல்கொண்டேன் பட சவாலைப்போல சவாலும் விடுவார்கள்.இதை மான,கௌரவப் பிரச்சினையாகவே ஆண்கள் எடுத்துக்கொள்கின்றனர்.இதுமாதிரி செய்பவர்கள் பெரும்பாலும் 16வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பர்.பலரும் தங்களது செக்ஸை வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.டேட்டிங்கில் ஆண் பெண் தனியே சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் இவர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டுகிறது.பெரும்பாலான ஆண்கள் டேட்டிங் என்ற பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடி விடுவார்கள்.இது அவர்களது ஆண்மைக்கு அழகு என்று நினைக்கிறார்கள்.

ஆண் நண்பருடன் டேட்டிங் செல்ல தயாராகும் பெண்களில் சிலர் எதற்கும் துணிந்துதான் செல்கின்றனர்.அந்த ஆண் நண்பரை நாம் இழந்துவிடுவோமோ என்ற பயம்-ஆதங்கம் அவர்களைஎந்தக் கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லத்தூண்டுகிறது.செக்ஸ் உறவுக்கு ஆண் நண்பரால் தூண்டப்படும்போது அப்பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் இசைவு தெரிவிக்கிறார்.பெரும்பாலான ஆண் நண்பர்கள் பெண் நண்பிகளுக்கு கூல் டிரிங்ஸ் வாங்க,டிபன் வாங்க,பெட்ரோல் போட காசு செலவழித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள விழைகின்றனர்.சில ஆண் நண்பர்கள் நீ என்னிடம் அன்பாக இருப்பது உண்மையானால் இதற்கும் இசைவு தெரிவிக்கவேண்டும் என்று பிளாக்மெயில் செய்கின்றனர்.இங்கேதான் அந்தப்பெண்,தன்னுடைய பாதுகாப்பு,எதிர்காலம் நற்பெயர் குறித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.முடிவு உணர்ச்சிகரமானதாக இருக்ககூடாது.

சமீப காலமாக ரி.வி,நாவல்கள்,திiர்ப்படங்கள் ஆகியவை டேட்டிங்கில் நடக்கும் சமாச்சாரங்களைவெட்ட வெளிச்சமாக்குகின்றன.காதல் வயப்படுவதற்கு ஊக்குவிக்கின்றன.முதன் முதலாக ஆண் நண்பருடன் டேட்டிங் செல்லும் பெண் வசீகரிக்கப்பட்டுச் செல்கிறார்.அல்லது உணர்ச்சிவசப்பட்டுச் செல்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.ஆண் நண்பரின் ஆசைகளை ஆரம்பத்தில் தட்ட முடியாமல் பலியான பிறகு தனிமையில் இருக்கும்போது தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

சில வசதிபடைத்த ஆண் நண்பர்கள் தங்களிடம் கார்,செல்போன் போன்றவை இருப்பதால் கூப்பிட்டவுடன் பெண் நண்பி வந்துவிடுவாள் என்று நினைக்கின்றனர்.இவர்களின் பகட்டிற்கும் சில பெண்கள் பலியாகி விடுகின்றனர்.இந்த விஷயத்தில் ஆணை மட்டும் பழிசுமத்தக்கூடாது.பெண்ணும் இதற்குச் சம்மதித்துத்தானே செல்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனிமையில் இருக்கும்போது எல்லைமீறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நண்பருடன் செல்ல நண்பி தயார் என்று கூறிவிட்டாலே,அந்த நண்பி எதற்கும் சம்மதிப்பாள்

என்று அந்த ஆண் நண்பர் நினைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.தொடர்ந்து தவறு நடந்துவிட்டாலும் அந்த நண்பியைத் திருமணம் செய்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.சில ஆண் நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருந்துவிட்டுச் செல்கின்றனர்.டேட்டிங் செல்வது என்றாலே அந்த ஆணின் மனதில் 90சதவீதம் செக்ஸ் பற்றிய சிந்தனை தான் இருக்கும்.உடல்ரீதியான உரிமைகளை எடுத்துக்கொள்ளவே பெண் நண்பிகளை ஆண் நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கின்றனர்.டேட்டிங் என்பது அவர்களுக்கு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக நினைக்கின்றனர்.

ஒரு பெண் மேற்கத்திய பாணியில் உடை அணிந்து பார்ட்டிக்கு அல்லது டான்ஸ் கிளப்பு சென்றால்,அந்தப் பெண் எதற்கும் துணிந்தவர் என்று ஆண் நண்பர்கள் நினைத்துக்கொள்கின்றனர்.இப்படி நினைப்பது தவறானது ஏனெனில் இவையெல்லாம் இன்றைய காலகட்டங்களில் சகஜமான ஒன்றாகிவிட்டது.சில பெண்கள் தெரியாத்தனமாக சூழ்ச்சிகர ஆண் நண்பர்களிடம் மாட்டிக்கொள்வார்கள்.இதற்கு உதாரணம்தான் அம்ரிதா என்ற 16 வயதுப் பணக்காரப் பெண். பல மாதங்கள் பழகிய நண்பரை தனிமையில் சந்திக்க அம்ரிதா சென்றார்.அப்போது அம்ரிதா தனது ஆண் நண்பர் மட்டுமின்றி,அவரது நண்பர்கள் மூவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள்.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆண் நண்பர் அம்ரிதாவை பாட்டிக்கு அழைத்துச்சென்று போதை கொடுத்து,கற்பழித்து பல கோணங்களில் ஆபாசப் போட்டோக்களை எடுத்தார்.தொடர்ந்து இந்த போட்டோக்களை வைத்து அம்ரிதாவை பிளாக் மெயில் செய்து உறவு கொண்டார்.

இவருக்கு இப்படி என்றால்,மாயாவுக்கு திருமண வாக்குறுதி கோலத்தில் வந்தது பூகம்பம்.இவருடன் செக்ஸ உறவு வைத்துக்கொள்வதற்காக திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தார்.ஆசை நிறைவேறியதும் பெண் நண்பியை தூக்கி எறிந்தார்.வேறொருவரை திருமணம் செய்ய இதுபோன்ற பெண்கள் முடிவு செய்தாலும் மிரட்டியே சில ஆண் நண்பர்கள் உறவு வைத்துக்கொள்ள துணிகின்றனர்.தற்போது இன்டர் நெட் யுகம் என்பதால் இதன் மூலமும் ஆண் நண்பர்கள் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றுகின்றனர்.நேரில் பார்க்க முடியாது என்பதால் தங்களது சுய ரூபங்களை மறைத்துவிடுகின்றனர்.இருவரும் இன்டர்நெட்டில் நீண்ட நாட்கள் பழகிவிட்டு ஒரு நாள் சந்திக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த ஏமாற்றம் வயது த்தியாசம்,அழகு,கல்வி தகுதி குறைவு,அந்தஸ்து குறைவு போன்றவற்றால் ஏற்படலாம்.

சிலர் முன்பே திட்டமிட்டு குளிர்பானம் அல்லது பழரசங்களில் போதை மாத்திரைகளைப்போட்டு

கொடுத்துவிடுக்ன்றனர்.இந்த போதை மாத்திரைகள் வாசம் மற்றும் கலர் இல்லாதது.இதைக் குடித்தால் 10முதல் 12மணி நேரம் வரை போதையில்தான் இருப்பார்கள்.இவற்றை தவிர்க்க டேட்டிங் செல்லவேண்டாம் என்று ஒரு வரியில் கூறிவிட்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது.பொறுப்பான நடவடிக்கை மூலமே பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.அதே சமயம் அனைத்து நண்பர்களும் இதுபோன்று இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து பெண்களுக்கு தவறான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடாது.அப்படிக் கொடுத்தால் பாலியல் பாகுபாடு,வெறுப்புகள் ஏற்படும்.அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைத்துவிடவில்லை.டேட்டிங் என்ற கலாசாரமே ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டுப்பேசி,ஆரோக்கியமான முறையில் நட்புச் செலுத்துவதற்காகவே ஏற்பட்டது.இந்த உறவில் குழப்பம் ஏற்படும்போதோ ஆண்மீது பெண் கவர்ச்சியோ,பெண் மீது ஆண் கவர்ச்சியோ,ஏற்படும்போது தான் வழி மீறல்,விதி மீறல் எல்லாம் ஏற்படுகின்றன.

http://www.dinsari.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80.html#more-1029

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை இன்னும் செய்து பார்க்கல்ல.. எப்படி டேட்டிங் செய்யுறது..???! கொடுக்கிறதெண்டால்.. நம்மட்ட பணம் காசு பிடுங்காத ஒரு ஐடியாவா கொடுங்க..! :lol::D

டேற்றிங் என்று போய் சீரழியுறது.. இப்ப பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் என்று நினைக்கிறன்..! விபச்சாரிகளும்.. இதே ரெக்னிக்கத்தான் இப்ப கடைப்பிடிக்கிறாங்க என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் படித்த ஞாபகம். இதன் மூலம் நிறைய பால்வினை நோய்கள் பரவுவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. :icon_idea:

நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வது டேட்டிங்.

டேட்டிங் என்ற பெயரில் அறியாமையில் உள்ள பெண் தோழிகளை சில ஆண் நண்பர்கள் நாசப்படுத்திவிடுகின்றனர்.அறியாமையில் கற்பை இழந்து நிற்கும் அப்பாவிப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறாள். இதையே பலவீனமாக வைத்து அந்த ஆண் நண்பர் அப்பாவிப் பெண்ணை தொடர்ந்து அனுபவிக்க முயற்சிப்பார்.

நண்பர்களுக்கு நான் அந்தப் பெண்ணை மடக்கிக் காட்டுகிறேன் பார் என்று காதல்கொண்டேன் பட சவாலைப்போல சவாலும் விடுவார்கள்.இதை மான,கௌரவப் பிரச்சினையாகவே ஆண்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

டேட்டிங்கில் ஆண் பெண் தனியே சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் இவர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டுகிறது.பெரும்பாலான ஆண்கள் டேட்டிங் என்ற பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடி விடுவார்கள்.

சில ஆண் நண்பர்கள் நீ என்னிடம் அன்பாக இருப்பது உண்மையானால் இதற்கும் இசைவு தெரிவிக்கவேண்டும் என்று பிளாக்மெயில் செய்கின்றனர்.இங்கேதான் அந்தப்பெண்,தன்னுடைய பாதுகாப்பு,எதிர்காலம் நற்பெயர் குறித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும். முடிவு உணர்ச்சிகரமானதாக இருக்ககூடாது.

முதன் முதலாக ஆண் நண்பருடன் டேட்டிங் செல்லும் பெண் வசீகரிக்கப்பட்டுச் செல்கிறார்.அல்லது உணர்ச்சிவசப்பட்டுச் செல்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.ஆண் நண்பரின் ஆசைகளை ஆரம்பத்தில் தட்ட முடியாமல் பலியான பிறகு தனிமையில் இருக்கும்போது தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

நண்பருடன் செல்ல நண்பி தயார் என்று கூறிவிட்டாலே,அந்த நண்பி எதற்கும் சம்மதிப்பாள்

என்று அந்த ஆண் நண்பர் நினைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.தொடர்ந்து தவறு நடந்துவிட்டாலும் அந்த நண்பியைத் திருமணம் செய்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.சில ஆண் நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருந்துவிட்டுச் செல்கின்றனர்.

டேட்டிங் செல்வது என்றாலே அந்த ஆணின் மனதில் 90சதவீதம் செக்ஸ் பற்றிய சிந்தனை தான் இருக்கும். உடல்ரீதியான உரிமைகளை எடுத்துக்கொள்ளவே பெண் நண்பிகளை ஆண் நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கின்றனர். டேட்டிங் என்பது அவர்களுக்கு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக நினைக்கின்றனர்.

சில பெண்கள் தெரியாத்தனமாக சூழ்ச்சிகர ஆண் நண்பர்களிடம் மாட்டிக்கொள்வார்கள்.

  • பல மாதங்கள் பழகிய நண்பரை தனிமையில் சந்திக்க அம்ரிதா சென்றார்.அப்போது அம்ரிதா தனது ஆண் நண்பர் மட்டுமின்றி,அவரது நண்பர்கள் மூவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள்.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆண் நண்பர் அம்ரிதாவை பாட்டிக்கு அழைத்துச்சென்று போதை கொடுத்து,கற்பழித்து பல கோணங்களில் ஆபாசப் போட்டோக்களை எடுத்தார்.தொடர்ந்து இந்த போட்டோக்களை வைத்து பிளாக் மெயில் செய்து உறவு கொண்டார்.
  • மாயாவுக்கு, இவருடன் செக்ஸ உறவு வைத்துக்கொள்வதற்காக திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தார்.ஆசை நிறைவேறியதும் பெண் நண்பியை தூக்கி எறிந்தார்.வேறொருவரை திருமணம் செய்ய இதுபோன்ற பெண்கள் முடிவு செய்தாலும் மிரட்டியே சில ஆண் நண்பர்கள் உறவு வைத்துக்கொள்ள துணிகின்றனர்.

சிலர் முன்பே திட்டமிட்டு குளிர்பானம் அல்லது பழரசங்களில் போதை மாத்திரைகளைப்போட்டு

கொடுத்துவிடுக்ன்றனர். இந்த போதை மாத்திரைகள் வாசம் மற்றும் கலர் இல்லாதது.இதைக் குடித்தால் 10முதல் 12மணி நேரம் வரை போதையில்தான் இருப்பார்கள்.

பொறுப்பான நடவடிக்கை மூலமே பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

அதே சமயம் அனைத்து நண்பர்களும் இதுபோன்று இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து பெண்களுக்கு தவறான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் பாலியல் பாகுபாடு,வெறுப்புகள் ஏற்படும்.அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைத்துவிடவில்லை.

டேட்டிங் என்ற கலாசாரமே ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டுப்பேசி,ஆரோக்கியமான முறையில் நட்புச் செலுத்துவதற்காகவே ஏற்பட்டது. இந்த உறவில் குழப்பம் ஏற்படும்போதோ ஆண்மீது பெண் கவர்ச்சியோ,பெண் மீது ஆண் கவர்ச்சியோ,ஏற்படும்போது தான் வழி மீறல்,விதி மீறல் எல்லாம் ஏற்படுகின்றன.

dating பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இணைப்பை வழங்கியமைக்கு நன்றி.

நான் இதை இன்னும் செய்து பார்க்கல்ல.. எப்படி டேட்டிங் செய்யுறது..???! கொடுக்கிறதெண்டால்.. நம்மட்ட பணம் காசு பிடுங்காத ஒரு ஐடியாவா கொடுங்க..! :lol::D

தெரிந்ததையும் தெரியாதது போல் கேட்பதில் ஆண்கள் கில்லாடிகள் :lol::D .

டேற்றிங் என்று போய் சீரழியுறது.. இப்ப பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் என்று நினைக்கிறன்..! விபச்சாரிகளும்.. இதே ரெக்னிக்கத்தான் இப்ப கடைப்பிடிக்கிறாங்க என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் படித்த ஞாபகம். இதன் மூலம் நிறைய பால்வினை நோய்கள் பரவுவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. :icon_idea:

விபச்சாரிகளை விட அறியாமையில் உள்ள பெண்கள் தான் பலமடங்கு அதிகம் நெடுக்ஸ் அண்ணா :( . எனவே ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்ததையும் தெரியாதது போல் கேட்பதில் ஆண்கள் கில்லாடிகள் :lol::D

விபச்சாரிகளை விட அறியாமையில் உள்ள பெண்கள் தான் பலமடங்கு அதிகம் நெடுக்ஸ் அண்ணா :( . எனவே ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

நாங்க தெரியாததைத் தான் தெரியாது என்று சொல்லுறம். நீங்களா அப்படி கற்பனை பண்ணிக்கிறதுக்கு நாங்க என்ன செய்ய முடியும். அது பொண்ணுங்க சுபாவம். எப்ப பார் சந்தேகம்..!

அறியாமை என்ற ஒன்றில்லை.. பெண்கள் அறிந்தே.. தெரிந்தே கெடுகின்றனர். அறியாமலா டேற்றிங் என்று போகிறார்கள். பெண்கள் தாங்கள் விடும் தவறுக்கு சொல்லும் இரண்டு காரணங்கள்..

1. அறியாமல் செய்திட்டன்.

2. நீ சொல்லுறதை எல்லாம் நம்பிட்டன் பார்.

இதில இரண்டையுமே அவர்கள் நல்லா அறிந்து தான் செய்கிறார்கள். தங்களில் பிழை வரக்கூடாது.. அது அப்படியே அந்த ஆணைச் சேர வேண்டும் என்ற அறிவுக்கு அமையவே இப்படிச் சொல்கிறார்கள். இவை அறியாமைகளின் விளைவல்ல.. அழியாமைகளின் விளைவு. பெண்களின் சந்தேகம்.. சுயநலம் அழியாததன் விளைவு..! :):D

Edited by nedukkalapoovan

1. அறியாமல் செய்திட்டன்.

2. நீ சொல்லுறதை எல்லாம் நம்பிட்டன் பார்.

dating போவது அறிந்து தான், ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாமல் தான் உள்ளனர்.

ஆண்கள் சொல்வதெல்லாத்தையும் உண்மை என பெண்கள் நம்பி விடுவார்கள். அவை பொய் என தெரிந்த பின் தான் என்ன செய்வதென்று தெரியாமல் " நீ சொல்லுறதை எல்லாம் நம்பிட்டன் பார்" என்று கூறுகிறார்கள்.

இது உண்மை :).

dating 100% உத்தரவாதமானது என்று எங்கும் விளம்பரம் போட்டிருக்காக.. பெண்கள் அறியாமல் கெட. இதென்னவோ.. பெண்கள்.. வாய்க்குள்ள விரலை வைச்சா கடிக்கத் தெரியாத பாப்பாக்கள் என்ற கணக்கா எல்லோ இருக்குது. டேற்றிங் என்று போய் ஒரு ஆணோட உடலுறவு வரை போகத்தக்க அளவிற்கு சிந்திக்கினம்... தவறு செய்யுறம் என்று அறியாமல் அதைச் செய்யினம் என்பதை நம்பவே முடியவில்லை. இது நிச்சயம்.. இப்போதைக்கு என்ஜோய் பண்ணுவம்.. அப்புறம் பாப்பம் என்று என்ஜோய் பண்ணிட்டு.. அப்புறம்.. தலைக்கு மேலால பிரச்சனை வந்ததும் ஐயோ அறியாமல் செய்திட்டன்.. என்ற வெற்றுப் புலம்பலும்.. ஆண்கள் மீதான திட்டித் தீர்ப்பும். என்ன உடலுறவு கொண்டால்.. பிரச்சனை வரும் என்ற அறிவு கூடவா பெண்களிடம் இல்லை. இதை நாங்க நம்பனும் என்றீங்க..????! இது பற்றி பள்ளிகளில் இப்ப 9 வயசிலையே கற்றுக் கொடுக்கினமே.. பிறகென்ன..??! அப்ப பெண்கள் பள்ளிக்கூடமே போறதில்லையா..???! :lol::D

பெண்கள் தாங்களே மூட்டைக் கணக்கா பொய்களை அவிழ்த்துவிடும் போது ஆண்களும் பொய்களைச் சொல்வார்கள் என்று தெரியும் தானே. இதென்னவோ.. தாங்கள் எப்பவும் அரிச்சத்திரன் போல உண்மையே பேசுக் கொண்டிருப்பது போலவும்.. பதிலுக்கு ஆண்களும் அப்படியே என்று நம்புவதுமாக எல்லோ இருக்கு கதை...! கடவுளே.. கடவுளே எப்படி எல்லாம் ஒரு பில்டப் கொடுக்கிறாங்கப்பா.. உண்மைக்குப் புறம்பாக. ஆண்களை விட அதிகம் பொய் சொல்லுறது பெண்கள் தான்..! ஆண்கள் அச்சத்தின் காரணமாக.. இழக்கக் கூடாது என்பதற்காக சொல்லும் பொய்கள் போன்றதல்ல.. பெண்கள் சொல்லும் பொய்கள். பெண்கள் திட்டமிட்ட பொய்களை நன்கு சொல்லக் கூடியவர்கள் மட்டுமன்றி.. தங்களுக்கு பாதிப்பு வரும் என்று கண்டால்.. உண்மையை அப்படியே மூடி மறைக்கவும் தயங்கமாட்டார்கள். ஆண்கள்.. சிறுகச் சிறுக என்றாலும்.. அதைச் சொல்லி பிடிபட்டு.. திட்டு வாங்கிட்டு.. ஓய்ந்துவிடுவார்கள்..! :lol::icon_idea:

நீங்கள் கூறுவது உடலுறவு கொள்ள சம்மதிக்கும் பெண்கள் பற்றி.

நான் கூறுவது dating மட்டுமென்று நம்பி போன பின் ஆண்களால் வலுக்கட்டாயமாக்கப்படும் பெண்கள் பற்றி.

பெண்கள் பொய் சொல்வதில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அவர்கள் கூறும் பொய்கள் வேறு விதம். திட்டமிடப்படாதவை.

ஆண்கள் கூறும் பொய்கள் பெண்களை கவிழ்ப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்கள்.

ஆண்களால் வலுக்கட்டாயம் ஆக்கப்படும் சூழ்நிலை நிலவாத இடமாக டேட்டிங் போறது. அதைவிட்டிட்டு.. பூங்கா.. புதர்... காடு.. ஹோட்டல்.. கார்.. என்று மறைவு தேடி ஏன் போகனும்..! மறைவு தேடி போறவைக்குத் தெரியாதா ஆபத்து வரும் என்று. ஆபத்தை தேடிப் போயிட்டு ஆபத்து வந்த பின்.. ஆண்களில் குறை சொல்லிப் பயனில்லை. ஆண்கள் அழைத்து நீங்கள் மறைவு தேடிப் போனால் அவர்கள் உங்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாக எண்ணி அத்து மீறவே செய்வார்கள். அது யார் தப்பு.. அத்து மீறுபவனின் தப்பா.. அதைத் தூண்டியவளின் தப்பா..???!

அவன் அத்து மீறாட்டி கேட்பீர்கள்.. நீ எல்லாம் என்ன ஆம்பிளை.. அவனப் பார்.. இவனப் பார் என்று ஒப்பீடு செய்வது. தப்புச் செய்யுறவன் தாண்டா ஆம்பிளை. நீ தப்புச் செய்யுறது எனக்குப் பிடிங்குண்டா செல்லம்.. என்று கொஞ்சி வழியுறது.. அவங்கள் தப்புச் செய்ததும்.. ஐயோ.. தப்பு பண்ணிட்டானே... ஐயோ கற்புப் போச்சே.. என்று வெளி உலகிற்கு நடிக்கிறது. ஏன் இந்தப் பொய் வேசங்கள்.. இந்தப் பெண்களுக்கோ தெரியல்ல..!

நான் ஏலவே சொல்லிவிட்டேன். பெண்கள் திட்டமிட்ட பொய்களை சொல்லக் கூடியவர்கள். ஆண்கள் பெண்களை எல்லாம் கவிழ்க்க முடியாது. பெண்களுக்கு சுயபுத்தி இருக்குது. இன்னது பொய் மெய் என்று ஆராய பகுத்தறிவு இருக்குது. அதனால் ஆண்களின் பொய்களை பெண்கள் இலகுவாக அடையாளம் காண முடியும். ஆனால் பெண்கள் தங்களின் தவறை மறைக்க செய்யும் திட்டமிட்ட மறைப்புச் செயற்பாடுகளும் பொய்களும் அவ்வளவு இலகுவில் கண்டறியப்பட முடியாதவை. அந்த வகையில் பெண்களிடம் ஏமாறும் ஆண்களே டேற்றிங்.. மற்றும் இணையக் காதலில் அதிகம்..! ஆண்களிடம் அழகைக் காட்டி பணம் பறிப்பது.. உதவி பெறுவது.. பின் கழற்றி விடுவது என்று பெண்கள் அநாகரிகமாக நட்பை.. காதலை பாவிக்க வெளிக்கிடுவதால் தான் ஆண்களும் அத்துமீற முனைகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே பெண்கள் தாங்களே தான் தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்களே தவிர ஆண்களின் பங்கு இதில்.. பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆண்களால் அல்ல..! இதை துணிந்து சொல்லலாம். :):icon_idea:

நெடுக்ஸ் அண்ணா, கடவுள் முடிவே பண்ணிட்டார். அடுத்த பிறவியில நீங்கள் பெண் தானென்று..... :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.