Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுத்து ஆட்டிகல சற்றுமுன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்- பேட்டி இணைப்பு

Featured Replies

கடத்திச் செல்லப்பட்ட மக்கள் போராட்ட அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவி திமுத்து ஆட்டிகல சற்று முன்னர் முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ம் திகதி திமுத்து ஆட்டிகல இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

காணொளியை காண...

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4314:2012-04-10-09-11-59&catid=1:latest-news&Itemid=18

கடத்தியவர்களைக் கைது செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் போதிக்கும் ஜனநாயகம் இலங்கையில் எந்த அளவில் இருக்கு என்பது அவர்களுக்கு தெளிவு படுத்தப்படுகிறது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் நன்றாக புரிகின்றது, சர்வதேசத்தின் பார்வை சிறிலங்கா மீது விழுந்ததை சிங்களம் புரிந்துள்ளதை இந்த செயல்கள் எடுத்து காட்டுகின்றது

மேற்குலகம் பொருளாதார தடையை விதிக்க வற்புறுத்தப்பட்டு வருகின்றது. அதன் மூலமே மகிந்த குடும்ப அரசியலை கட்டுப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/3p1U9wsZUK0

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புண்ணாக்குகளாகிய எம் பங்கும் இதில் உண்டு என்பதை சுமத்திரனுக்கும் ,ககிமுக்கும் அறியத்தருகின்றோம்...

வாழ்க ஜனநாயகம்

ஒழிக மாவோயிசம்

ஒழிக காந்தியம்

இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை விடுதலையான முற்போக்கு சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

அதன் விபரம் வருமாறு,

'கடந்த 6ஆம் திகதி மாலை கட்சியின் செயற்பாடுகளை முடித்துவிட்டு கட்சி செயற்பாட்டாளர்கaளுடன் வீட்டுக்குச் செல்லத் தயாரானேன். நான் கொடகமவில் உள்ள வீட்டுக்குச் செல்லும் வழியில் வெள்ளை வேனில் வந்த நபர்கள் சிலர் கண், வாயைக் கட்டி வேனுக்குள் தூக்கிப்போட்டனர்.

'நீங்கள் ஆங்கில ஆசிரியைதானே...?", 'மக்கள் போராட்ட இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராக விளங்குகிறீர்கள்தானே?" - இப்படிப் பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். நான் அவற்றுக்குப் பதில் கூறாததால் ஒரு தடவை என்னைத் தாக்கினார்கள். அதன் பின்னர் தாக்கவில்லை.

வேன் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டிருந்தது. வேன் நின்ற இடம் ஒரு முகாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அது பாதுகாப்பான பிரதேசம் என்பதை என்னால் உணர முடிந்தது.

என்னை அங்கு அழைத்துச் சென்று மாடிப்படியேறி ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டினார்கள். அங்கு சுமார் இரண்டு மணிநேரம் அதிகாரியொருவர் என்னிடம் கேள்விகள் கேட்டார். சர்வதேச ரீதியில் மக்கள் போராட்ட இயக்கத்துக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனவும் அவர் கேட்டார்.

நான் பதில் கூறினேன். எனது கைப்பையிலிருந்து வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்து அவைபற்றி விசாரித்தார். வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கிறதா எனக் கேட்டார். புலி சார்பானவர்களிடமிருந்து பணம் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

என்னோடு இணைந்து பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் பற்றி தனித்தனியாக கேள்விகள் கேட்டார். அவர்களுடைய வீடுகளுக்குச் செல்லும் வழி பற்றியும் விசாரித்தார்.

லலித், குகன் பற்றி பல்வேறு வகையில் கேள்விகள் கேட்டார்.

அதன் பிறகு மீண்டும் அறையைப் பூட்டி வைத்தார்கள். எனது கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிடப்பட்டிருந்தன. மறுநாள் காலை 5 அல்லது 5.30 மணியிருக்கும.;

பறவைகளின் சத்தத்தின் மூலம் நேரத்தை ஊகித்துக்கொண்டேன்.

அப்போது என்னிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவ்வேளை, தோழர் குமார் அருகில் இருந்தார். அவரிடமும் என்னிடமும் மாறி மாறி கேள்விகள் கேட்கப்பட்டன. ஆயுதக் குழு தொடர்பாகவும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் வினவினார்கள். நாம் இல்லையென்றால் 9ஆம் திகதி போராட்டம் தோல்வியுறுமா என்றும் கேட்டார்கள்.

கட்சி விபரங்கள், பணவரவு பற்றியும் விசாரித்தார்கள்.

பின்னர் மீண்டும் என்னை அடைத்து வைத்தார்கள். குமாரை வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

மறுநாள் என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். சுமார் ஒரு மணிநேரம் வாகனம் பயணித்தது. வாகனத்தில் குமார் இருந்தார் என நினைக்கிறேன். அப்போது பேசியவர்கள் பாதுகாப்புத் தரப்பினர் போலவே கதைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய பேச்சுமொழி வழக்கு அவர்கள் பாதுகாப்புத் தரப்பினர்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

வீதியோரமாக மக்கள் நடமாட்டமுள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வந்த அதிகாரியொருவர் குமார் ஓர் அவுஸ்திரேலிய பிரஜை என்றும் அவரை அந்நாட்டுக்கு அனுப்பிய பின்னர் என்னை விடுவிப்பதாகவும் நான் கூறிய கருத்துக்களை நம்புவதாகவும் கூறினார்.

மறுநாள் வந்த மற்றுமொரு அதிகாரி, குமார் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டதால் விடுதலை செய்வதாகவும் தயாராக இருக்குமாறும் கூறினார். அதன்பின்னர் தங்களைப் பற்றி ஆராய வேண்டாம் என்றும் கண்ணைக் கட்டியுள்ள துணியை எடுத்தவுடன் வாகன இலக்கத்தையோ முகங்களையோ பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் எனக்கு அச்சுறுத்தப்பட்டது.

என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள். எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். எனது கட்சி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என நான் கூறினேன். அங்கு செல்லமுடியாது என்றும் வேறோர் இடத்தில் விடுவிப்பதாகவும் கூறி கையில் பணம் தந்தார்கள்.

தலபத்பிட்டி நடுஹேன எனும் பகுதியில் என்னை விடுவித்து விட்டு திரும்பிப் பார்க்க வேண்டாம் எனக் கூறிச் சென்றுவிட்டார்கள். நான் கண் திறந்து பார்த்தபோது, வாகன இலக்கம் தெளிவாக விளங்கவில்லை. 28 - 1 - 1 என்பதுதான் வாகன இலக்கமாக இருக்க வேண்டும். மங்கலில் அப்படித்தான் தெரிந்தது.

அவர்கள் இறக்கிவிட்ட இடத்திலிருந்து, நான் எனது கட்சி அலுவலகத்தை வந்தடைந்தேன்" என அவர் விபரித்தார். __

http://www.virakesar...asp?key_c=37540

_

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.