Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சயந்தனின் ஆறா வடு நாவல் திரைபடமாகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது சயந்தன் எழுதியிருக்கும் ஆறாவடு நாவலும் மிக முக்கியமான ஆவணங்கள் இந்த மூன்றுமே ஈழ சினிமாவுக்கான கதைக் களத்தைக் கொண்டிருக்கின்றன. அதிலும் தோழர் கோவிந்தனின் நாவலும், சயந்தனின் நாவலும் மிக மிக முக்கியமான பதிவைச் செய்திருக்கின்றன. இதை திரைப்படமாக்குவது தொடர்பாக நான் ஆறாவடு நாவலை எழுதிய சயந்தனிடம் பேசினேன். மேலும் சில நண்பர்களுடன் பேசினேன். தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது.-அருள் எழிலன்

http://www.globaltam...IN/article.aspx

Edited by stalin

ஸ்ராலின், செய்திகளை இணைக்கும் போது முழுமையாக இணைக்கவும்

-----------------

தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது அருள் எழிலன் -

14 ஏப்ரல் 2012

lg-share-en.gif

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அருள் எழிலன் - தீபச்செல்வன் உரையாடல்

arul%20elil_CI.png

தமிழகத்தின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களுள் ஒருவர் டி. அருள் எழிலன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வருகிறார். மனித உரிமை விவாகரங்களில் தனித்த அக்கறை கொண்ட இவர் ஆனந்த விகடன் வார இதழால் இதழியலில் துறைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். குங்குமம் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணி செய்தவர். 2007 ஆம் ஆண்டில் இந்தியா டுடே இதழால் சிறந்த ஊடகவியலாளராக அடையாளம் காணப்பட்ட அருள் எழிலன் ஒரு குறும்பட இயக்குநரும் கூட. ஓவியர் ஆதிமூலம் தொடர்பான 'வெளிகளினூடே' என்ற ஆவணப்படம் உட்பட பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் கதையை தமிழில் 'ராஜாங்கத்தின் முடிவு' என்ற பெயரில் எடுத்து கவனிக்கப்பட்டவர். ஈழப்பிரச்சினை பற்றி 'பேரினவாத்தின் ராஜா' என்ற நூலை எழுதியுள்ளார். இப்போது ஈழ அகதிகளின் பிரச்சனைகளைப் பேசக் கூடிய 'கள்ளத்தோணி' குறும்படத்தை இயக்கியுள்ள அருள் எழிலன் தற்பொழுது தென் தமிழகத்தின் குமரி மாவட்ட கடலோரத்தில் அரிய மணல் ஆலையால் பரவி வரும் கேன்சர் நோய் பற்றிய ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தாருங்கள்?

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தின் அரபிக்கடலோரக் கிராமமான புத்தந்துறையில் நான் பிறந்தேன். வரலாற்றில் பக்கங்களும் சமவெளி அரசியல் பரப்பிலும் நிராகரிக்கப்பட்ட என் பூமியும் அதில் வாழும் மீனவப் பழங்குடிகளின் அடையாளமுமே என் அடையாளம் என்று நினைக்கிறேன்.

02. எப்படி ஊடகத்துறைக்குள் வந்தீர்கள்? அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

சென்னைக்கு வந்தது சினிமாக்கனவுகளோடு. துவக்கத்தில் பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறேன். அப்படி ஒரு ஆவணப்படத்தைப் பார்த்த ஆனந்த விகடனின் ரா. கண்ணன் அவர்கள் என்னை பத்திரிகையில் எழுதுகிறாயா? என்று கேட்டு ஆனந்த விகடனுக்கு அழைத்து வந்தார். நான் பத்திரிகையாளனாக உருவாக விகடன் ஆசிரியர் ரா. கண்ணன் அவர்களே காரணம். நான் விகடன் உருவாக்கிய பத்திரிகையாளன் அதை நான் பெருமையாக நினைக்கிறேன். மற்றபடி தமிழ் ஊடகங்கள் மீது விகடன் மீதும் ஏராளமான விமர்சனங்கள் அரசியல் ரீதியாக உண்டு. சில காலம் சன் தொலைக்காட்சிக் குழுமத்திலும் வேலை செய்திருக்கிறேன். எல்லாமே சிறந்த அனுபவங்களாக இருந்தன. சினிமாக் கனவுகளோடு வந்து ஊடகவியலாளனாக மாறி சினிமாவிலும் பத்திரிகையிலுமாக உழண்டு ஜீவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

03. குங்குமம் இதழில் ஈழப் போராட்டம் பற்றி எழுதிய தொடருக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்தது? அதன் மூலம் என்ன விடயத்தை பதிவு செய்தீர்கள்?

குங்குமத்தில் நான் எழுதத் துவங்கியது 'அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை' என்ற ஈழம் தொடர்பான தொடர். அந்த தொடரைத்தான் போரின் முடிவுகள் தொடர்பாக விரிவு படுத்தி பேரினவாதத்தின் ராஜா நூலாக வெளியிட்டேன். குங்குமத்தில் வந்த அது வெளிவந்த போது ஏராளமான வாசகர்களின் ஆதரவைப் பெற்ற தொடராக அது வெளிவந்தது. ஆனால் பேரினவாதத்தின் ராஜா நூலாக அதை நான் வெளிக்கொண்டு வந்த போது அது குறித்து கள்ள மவுனம் சாதித்தவர்கள்தான் அதிகம். காரணம் அது தமிழ் தேசியவாதிகளையும் விமர்சித்தது இலங்கை அரசையும் விமர்சித்தது. யதார்த்தங்களை கண்கொண்டு காணச் சகியாதவர்கள் எனது நூல் குறித்து மௌனம் காத்தார்கள். அது பற்றி வாயே திறக்காத சிலர் அந்நூலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தங்களின் அவதூறு பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆக மொத்தம் ஈழம் தொடர்பாக நான் எழுதிய எல்லா விஷயங்களையும் மூன்றாண்டுகளுக்குப் பின்னர் காலம் மெய்பித்துக் கொண்டிருக்கிறது அதுதான் எனக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்கிறது.

04. நீங்கள் இயக்கிய கள்ளத்தோனி குறும்படம் நோர்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. அந்தப் படம் எதைப்பற்றியது ? எப்படி உருவானது?

கள்ளத்தோணி தமிழகத்தில் வாழும் ஒரு முதிய ஈழ அகதியைப் பற்றியது. இந்தப் படத்தில் ஈழத்துக் கவிஞர் மஹாகவியின் புகழ் பெற்ற பாடலான சிறு நண்டு பாடலை இசையமைத்திருக்கிறோம். ஒளிப்பதிவாளர் செழியன், எடிட்டர் சுரேஷ் அர்ஸ், இசையமைப்பாளர் ரஹ்நந்தன் என தமிழின் தரமான நண்பர்களோடு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். நாம் புகலிடச் சூழலில் வாழும் மக்கள் பற்றி பேசுகிறோம். ஆனால் இந்தியாவிலே பதிவு செய்தும் பதிவு செய்யாமலும் சுமார் இரண்டு லட்சம் நாடாற்ற ஈழ அகதிகள் தமிழகத்தில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிவில் உரிமைகள் எதையும் இந்திய அரசு வழங்க வில்லை. திறந்தவெளி கழிப்பிடங்களில் வாழ்வதைப் போல இவர்கள் இங்கே வாழ்கிறார்கள். இந்த மக்களின் பிரச்சினைகளைப் பேசத்தான் கள்ளத்தோணி கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தை லண்டன் வாழ் ஈழத் தமிழரான நடராஜா குருபரனின் பூரணி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க முன் வந்ததற்காக நான் அவருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

04. திரைத்துரையில் உங்களது ஈடுபாடு எத்தகையது?

சினிமாதான் விருப்பமானது. துவக்கத்தில் நான் இயக்குநர் கரு. பழனியப்பன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணி செய்தேன். நண்பர்களுடன் இணைந்து சில சினிமா முயர்ச்சிகளை மேற்கொண்டேன். நண்பர் மிஸ்கின் அவர்களுடன் வேலை செய்தேன். இப்போது என் நெருங்கிய நண்பர்களின் திரைப்படத்தில் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதிகாளில் பரவி வரும் கேன்சர் நோய் ஆபத்து பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

மணவாளக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அரிய மணல் ஆலையினால் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு பற்றிய படம் அது. அடுத்ததாக 'மகாநகரமும் மூன்று பெண்களும்' என்ற படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறேன். வெவேறு சூழல்களில் இருந்து சென்னைக்கு வரும் மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு அது. மற்றபடி சினிமா, பத்திரிகை இரண்டு வேலைகளும்தான் எனக்குத் தெரியும். அதில் என்னால் முடிந்த வேலைகளைச் செய்கிறேன்.

05. நீங்கள் ஈழ விவாகரங்களிலேயே தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறீர்;கள். இந்த ஈடுபாடு எதற்காக எப்படி வந்தது?

ஈழ விவாகரத்தில் மட்டுமல்ல உலகின் எங்கெல்லாம் மானுடம் மீறப்படுகிறதோ அந்த பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் என் அறிவுக்கும் புரிதலுக்கும் உட்பட்டு எழுதுகிறேன்., எழுதியிருக்கிறேன். அந்த வகையில் மட்டுமே ஈழ மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் எழுதினேன். 2001 ஆம் ஆண்டுகளில் ஈழ மக்களைப் பற்றி எழுதினால் அது மகா பாவம் என்று கருதிய சூழலில் ஆனந்த விகடனின் நான் ஈழம் தொடர்பாக எழுதினேன். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பேட்டி தமிழக ஊடகங்களில் வரவே வராத அந்தச் சூழலில் அடுத்தடுத்து சுமார் எட்டு பேட்டிகள் வரை புலிகளின் தலைவர்களை எடுத்தேன்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு அறிவிக்கப்படாத அடக்குமுறை பத்தாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அதை உடைத்ததில் ஆனந்த விகடனின் பங்கு பெரும் பங்கு. புலிகள் தரப்பு நியாயங்கள் தமிழகத்திற்கு தெரிந்தது என்றால் அது விகடன் குழும இதழ்கள் மூலம்தான். சுப. தமிழ்ச்செல்வன், இளந்திரையன், பின்னர் நடேசன் என புலிகளின் முக்கியத் தலைவர்களை தமிழில் அதிகமான நேர்காணலை எடுத்தவன் நானாக மட்டுமே இருப்பேன் என நினைகிறேன். மற்றபடி ஈழ விஷயத்தின் மீதான என் அக்கறை இப்போதும் குறைந்து விட வில்லை. சூழல்கள் மாறியிருக்கின்றன. நேற்று பேசிய விஷயங்களை இன்று பேச முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைகிறேன். ஈழத்தில் மக்கள் வாழ வேண்டும் என்று.

06. தமிழக ஊடககங்களில் ஈழ விவகாரங்கள் பற்றி எந்தளவுக்கு பேசப்படுகின்றன? ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எப்படி அதை அணுகுகிறார்கள்?

நான் இது பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். முன்னர் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, போன்ற இதழ்கள் வந்தன. அவர்கள் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட்டதில்லை. தொண்ணூறுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் உருவான ஊடகங்கள் எல்லாமே அரசியல் தலைவர்கள். அரசியல் கட்சிகளால் துவங்கப்பட்டவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் என்ன விதமான அரசியல் கூட்டணிக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றனவோ அதற்கேற்பவே அவர்களின் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு சேனல் 4 தனது இரண்டாவது ஆவணப்படத்தை இப்போது வெளியிட்டது அதில் அவர்கள் புதிய காட்சியாக எதைக்காட்டினார்கள். எல்லாமே நாம் பார்த்த பார்க்க மறுத்த காட்சிகளை எடுத்து அதை புதிய கோணத்தில் கொடுத்தார்கள். தமிழக ஊடகங்களோ இப்போது அதிர்ச்சி அதிர்ச்சி என்று அதைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 2009 இல் இந்த விடீயோக்களை இவர்களுக்குக் கொடுத்த போது கண்கொண்டும் இதைக் காண மறுத்தவர்கள் இன்று போட்டி போட்டுக் கொண்டு பழைய வீடீயோக்களை ஓளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாக தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஈழம் தேவைப்படுகிறது. ஈழ மக்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆகவே அதற்கேற்றாப்போல் தங்களின் ஊடகங்களை அப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றபடி தமிழக அரசியல்வாதிகளால் ஈழ மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டது கிடையாது. ஈழ மக்கள்தான் காலம் தோறும் தங்களை பலியிட்டு இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு ஓட்டாக மாறியிருக்கிறார்களே தவிற இங்குள்ள அரசியல்வாதிகள் ஈழ மக்களுக்கு பயன்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு 2009களிலேயே போய் விட்டது.

ஆனால் தமிழக மக்களையும் தமிழக தலைவர்களையும் நீங்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். கடந்த முப்பதாண்டுகளாக தமிழக மக்கள் ஈழ மக்களின் வாழ்வின் மீது தீராத கவலை கொண்டிருக்கிறார்கள். அந்த உணர்வை இங்குள்ள அரசியல்வாதிகள் அறுவடை செய்கிறார்கள். இதை வைத்தே ஊடகங்களின் நிலையையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்றபடி ஈழப் போர்ச்சூழலில் பல காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டதும் விகடன் குழும இதழ்கள்தான். நான் உருவான பத்திரிகை என்பதால் இதைச் சொல்லவில்லை அது உண்மை என்பதால் சொல்கிறேன். பல பத்திரிகையாளர்களுக்கு ஈழம் பற்றியோ அங்குள்ள பாரம்பரீய தமிழர்கள் பற்றியோ எதுவுமே தெரியாது. ஏதோ இந்தியாவில் இருந்து பிழைக்கச் சென்றவர்கள் அங்கே போராடினார்கள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய பத்திரிகையாளர்களுக்கே வரலாற்று ரீதியான இலங்கையின் இன முரணை விளங்கிக் கொள்ள முடிகிறது.

07. ஈழ மக்களின் கதைகள் தமிழ் சினிமாவில் எப்படிக் கையாளப்படுகின்றன? ஈழப் போராட்டத்தில் எந்தளவுக்கு அவை உதவுகின்றன?

ஈழ மக்களின் சினிமாவை ஈழத் தமிழ் கலைஞர்கள்தான் இயக்க வேண்டும். யுத்தத்தின் காயங்களையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் சினிமாக்கள் தயாராவதற்கான தரமான படைப்புகள் ஈழத்தில் உண்டு. யூலைக் கலவர காலத்தில் அருளர் எழுதிய லங்காராணியும், இயக்கங்களில் துவக்க காலங்களில் தோழர் கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகமும், போருக்குப் பின்னர் இப்போது சயந்தன் எழுதியிருக்கும் ஆறாவடு நாவலும் மிக முக்கியமான ஆவணங்கள் இந்த மூன்றுமே ஈழ சினிமாவுக்கான கதைக் களத்தைக் கொண்டிருக்கின்றன. அதிலும் தோழர் கோவிந்தனின் நாவலும், சயந்தனின் நாவலும் மிக மிக முக்கியமான பதிவைச் செய்திருக்கின்றன. இதை திரைப்படமாக்குவது தொடர்பாக நான் ஆறாவடு நாவலை எழுதிய சயந்தனிடம் பேசினேன். மேலும் சில நண்பர்களுடன் பேசினேன். தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது.

அதை வைத்து பேண்டஸிதான் பண்ண முடியுமே தவிற உண்மையாக அவர்களின் பிரச்சனைகளைப் பேச முடியாது. உலகெங்கிலும் போர்க் கால சினிமா வந்திருக்கிறது அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்த படம் உண்டு. அது போல எல்லா வகையில் உலக தரத்தில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் கவனம் இன்று ஈழச் சூழலில் ஏற்பட்டிருக்கிறது. நான் நினைக்கிறேன் கோடம்பாக்கம் சினிமாவை விட தரத்திலும் கதையிலும் வலுவான ஒரு சினிமாக் களம் ஒன்று புகலிடத்தில் உருவாகும் அது ஈழ மக்களின் பிரச்சனைகளை சர்வதேச அளவில் பேசும். அதற்கான எல்லா சாத்தியங்களும் ஈழத் தமிழ் கலைஞர்களிடம் உருவாகி விட்டது. கோடம்பாகத்தில் ஈழ மக்களின் பிரச்சனையை மட்டுமல்ல உள்ளூர் மக்களின் பிரச்சனைகளைக் கூட முறையாக இன்னும் கையாள வில்லை. வெகுவேகமான தமிழ் சினிமா மாறிக் கொண்டிருக்கிறது. பாலா துவங்கி வைத்த மாற்றத்தைத் தொடர்ந்து அமீர், ஜனநாதன், மிஸ்கின், சசிக்குமார், குமார ராஜா, பிரபு சாலமோன் உட்பட டஜன் கணக்கில் புதிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76154/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

நிழலி ..எனக்கு அந்த இணைப்பில் இருந்த விடயத்தில் இது தான் ஹைலட்டாக இருந்தது ..அது தான் எனக்கு முக்கியமாக இருந்தது ..அதுவும் நீண்ட கால யாழ் இணைய நண்பர் சயந்தனின் நாவல் திரைபடம் ஆவது என்ற விடயம் ...அதை பகிர்ந்து கொண்டேன் ..பொதுவாக ..நான் செய்திகளை பகிர்ந்து கொள்ளுவதற்காக திரியை தொடங்குவதில்லை .....தொடங்கில் ..உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தின் அரபிக்கடலோரக் கிராமமான புத்தந்துறையில் நான் பிறந்தேன்
.

இந்து சமுத்திரம் அரபிக் கடலாக இப்பொழுது மாறிவிட்டது,,,,,,அல்லாகு அக்பர் சொல்ல வேண்டிய சூழ்நிலை வெகு விரைவில் சிறிலங்காவுக்கு வரும்

குங்குமம் ஆசியர் குழுமம் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

இந்து சமுத்திரம் அரபிக் கடலாக இப்பொழுது மாறிவிட்டது,,,,,,அல்லாகு அக்பர் சொல்ல வேண்டிய சூழ்நிலை வெகு விரைவில் சிறிலங்காவுக்கு வரும்

கன்னியகுமாரி மாவட்ட வரைபடத்தை பார்த்தீங்கள் என்றால் தெரியும் அந்த தமிழ் பகுதிகள் கொஞ்சம் இப்ப கேரளா விழுங்கிவிட்டன..கேரள கரையோரம் அரபுக்கடல் தானாம் ...அந்த திருவள்ளுவர் பெரிய சிலைக்கு அங்கால் பக்கம் அரபு கடலாம் இப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.