Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாடாளுமன்றக் குழு எங்கெங்கு செல்கிறது? – ‘இந்து‘ நாளிதழ் வெளியிட்ட தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sushma-swaraj-21.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, அங்கு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு என எல்லா இடங்களிலும் உள்ள தமிழ்க்குழுக்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாக என்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தக் குழுவினர் வரும் 16ம் நாள் கொழும்பு வருவர். 21ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பர்.

இந்தக் குழுவினர் 17ம் நாள் காலையில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவையும், அதையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அதையடுத்து சிறிலங்கா நாடாளுமன்றம் செல்லும் அவர்கள் அங்கு சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்திப்பர்.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் இந்தியக் குழுவினருக்கு அங்கேயே மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கு முஸ்லிம்களின் சார்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்களின் சார்பில் இதொகா ஆகிய கட்சிகளுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடுவர்.

அன்றிரவு இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, இந்தக் குழுவினருக்கு இராப்போசன விருந்தளிப்பார்.

இதில் கொழும்பை தளமாக கொண்டுள்ள இந்திய மற்றும் சிறிலங்கர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெறும்.

ஏப்ரல் 18ம் நாள் இந்தியக்குழுவினர் மதவாச்சிக்குச் செல்வர். அங்கு வடபகுதிக்கான தொடருந்துப் பாதை புனரமைப்பை மேற்கொள்ளும் இர்கோன் நிறுவன அதிகாரிகள் அந்தத் திட்டம் குறித்து விளக்கமளிப்பர்.

இதையடுத்து அவர்கள் முல்லைத்தீவுக்குச் செல்வர்.

அரச மருத்துவமனைக்கான கருவிகள் கையளிப்பு, வீடமைப்புத் திட்ட கையளிப்பு, சீரமைக்கப்பட்ட பாடசாலைகளை மீளத் திறத்தல், இருசக்கர வண்டிகள் கையளிப்பு நிகழ்வுகளில் பங்கேற்பர்.

அங்குள்ள நிலைமைகளை சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் தளபதி விளக்கிக் கூறுவார்.

அங்கிருந்து அவர்கள் யாழ்ப்பாணம் செல்வர். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறும்.

அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுநாள் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக்குச் செல்வர்.

நாகபட்டினத்தில் இருந்த 60 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் துறைமுகத்தின் புனரமைப்பு வேலைகள் தற்போது இந்திய உதவியுடன் இடம்பெற்று வருகின்றன.

விரைவில் இதன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்பின்னர், குழுவினர் தென்னக தொடருந்து திட்டத்தை களுத்துறையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர்கள் பங்கேற்பர்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பர்.

ஏப்ரல் 20ம் நாள், கிழக்குப் பகுதிக்கும் மலையகத்துக்கும் சென்று இவர்கள் மக்களை சந்திப்பர்.

மட்டக்களப்பில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனைச் சந்திக்கும் இவர்கள் சில திட்டங்களையும் பார்வையிடுவர்.

மலையகத்தில் டிக்கோயா மருத்துவமனைக்கும் சென்று இவர்கள் பார்வையிடவுள்ளனர்.

மறுநாள் எப்ரல் 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் காலை விருந்தில் பங்கேற்று விட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும்.

http://www.puthinapp...?20120415105995

இவர்களின் பயணம் இருநாடுகளுக்குள் நட்புறவை வேண்டுமானால் வளர்க்கும் ஆனால் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மைகளைவும் செய்யாது.

இந்தியாவி இந்த நடவடிக்கை எமக்குப் பாதகமாக முடிந்தாலும் ஆச்சரியப் பட முடியாது.

அண்மையில் கனேடிய குழு ஒன்றும் சென்றது...,

செல்லும் இடங்களும் சொல்லப்படவில்லை

விருந்தும் வழங்கப்படவில்லை

அரச பிரநிதிகளை சந்திக்கவும் இல்லை

படங்களும் பெரிதாக இல்லை

அது உண்மையை அறியும் பயணம். இது உண்மையை மறைக்கும் பயணம்.

இப்பயணமானது ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததைச் சாந்தப்படுத்துவதற்கானதும் சர்வதேச அளவில் சிறலங்காவுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவிப்பதற்கானதுமான பயணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.