Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் 1ம் நாள் சிறிலங்காவுக்கு மற்றொரு நெருக்கடி.

Featured Replies

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் வரும் நவம்பர் மாதம் சிறிலங்கா மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் ஒக்ரோபர் - நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது.இந்த மீளாய்வில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்.

இந்தநிலையில், சிறிலங்கா தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளுக்கு பதிலளிகப்பதற்கு சிறிலங்காவுக்கு வரும் ஜுலை 23ம் நாள் வரை காலஅவகாசம் அளிக்கப்படும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் நாள் சிறிலங்கா தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை கொழும்பு மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜுன், மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=15856

தொடரழுத்தங்கள் சிறிலங்காவை பணியவைக்கலாம். ஆனால் செயற்பாடுகளின் பின்னான முடிவுகளின் அமுலாக்கம் தள்ளிப் போடப்படும் பொழுது பாதகமானதொரு நிலை தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுவிடாலாம் என எண்ணுகிறேன்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் குணரட்ணம், திமுது விவகாரம் கருத்திற்கொள்ளப்படலாம்: கிரியெல்ல

முன்னிலை சோஷலிச கட்சியின் இரண்டு முக்கிய அங்கத்தவர்கள் கடத்தப்பட்ட விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நவம்பர் மாதம் நடைபெறும் மதிப்பீட்டுக் கூட்டத்தின்போது கருத்திற் கொள்ளப்படவுள்ளதால் இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகள் எவ்வளவு தூரம் சென்றுள்ளன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டியிருக்கும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் கடத்தல் விடயம் நிச்சயமாக கருத்தற்கொள்ளப்படும். குற்றவாளிகளை கைது செய்து விசாரணையில் அக்கறையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவிடயம் என அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இரண்டாவது அமர்வு இவ்வருடம் நவம்பரில் நடைபெறும். இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மதிப்பீடும் இடம்பெறும். இதற்காக ஐ.நா. மற்றும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் தத்தம் நியாயங்கள், விளக்கங்களை ஏப்ரல் 23 ஆம் திகதிக்குமுன் கையளிக்க வேண்டும்.

17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குதல், சட்டத்தின் ஆட்சி, ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களுடன் கடத்தலும் காணாமல் போதலும் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரின் கடத்தலுக்கு அப்பால் திருகோணமலையில் 5 மாணவர்கள் காணாமல் போனமை, கடந்த பல வருடங்களில் பலர் காணாமல் போனமை, உதலகம ஆணைக்குழு முதலானவை குறித்து அரசாங்கம் தகவல்களை வழங்க வேண்டியிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இலங்கை மீது ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டியவரும். எனவே இவை தொடர்பில் அடைந்த முன்னேற்றங்களை விளக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39394-2012-04-16-17-43-40.html

தொடரழுத்தங்கள் சிறிலங்காவை பணியவைக்கலாம். ஆனால் செயற்பாடுகளின் பின்னான முடிவுகளின் அமுலாக்கம் தள்ளிப் போடப்படும் பொழுது பாதகமானதொரு நிலை தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுவிடாலாம் என எண்ணுகிறேன்.

இத்தகைய ஒரு நிலை ஏற்படலாம்.

அவ்வாறான ஒரு நிலையை எதிர்கொள்ள தமிழினம் தம்மை பல வழிகளில் தயார் படுத்திக்கொள்வதும், முடிந்தளவு எச்சரிக்கையாக இருப்பதுவும் தான் ஒரேவழி என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.