Jump to content

சிறப்பு முகாம் அல்ல சிறை” உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள்- காணொளி


Recommended Posts

தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் , தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் செங்கல்பட்டு சிறப்புமுகாமிலிருந்து அளித்த பேட்டியின் போது, ஒன்றரை வருடத்திற்கு மேலாக இங்கு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், 12 முறைக்கு மேல் இவ்வாறு உண்ணாவிரதமிருந்துள்ள போதும் இன்னமும் பாராமுகமாக இருக்கும் அதிகாரிகளை நோக்கி இப்போராட்டத்தை தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கும் தமக்கும் எவ்வித தொடரும் இல்லை, தமிழகத்திற்கு தங்களின் பாதுகாப்பு கோரியே இலங்கை யுத்தத்திலிருந்து வந்திருப்பதாக இவர்கள் கூறியுள்ளதுடன், போரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமது குடும்பத்தினரை பராமரிக்க வேண்டியுள்ளதால் தங்களை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டுமென இவர்கள் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=16182

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 03:03 AM   யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து  தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார்.  சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.  அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோசடியில் ஈடுபட்ட நபர், போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.  இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  https://www.virakesari.lk/article/185253
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.