Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனையும் டக்ளசையும் ஒரே மேசையில் உணவருந்த வைத்த இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-dinner.jpg

யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்கு நேற்றிரவு இந்திய துணை தூதரகத்தின் சார்பில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இராப்போசன விருந்துக்கு, அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஈபிடிபி சார்பில் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த இராப்போசன விருந்தில் சுஸ்மா சுவராஜ், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் சந்திரசிறி உள்ளிடோர் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்தினர்.

jaffna-dinner-1.jpg

http://www.puthinapp...?20120419106023

சம்பந்தனையும் டக்ளசையும் ஒரே மேசையில் உணவருந்த வைத்த இந்தியா

இதிலென்ன அதிசயம்!

ஒருவர் தமிழனப் படுகொலைகளுக்கு பூரண ஒத்துழைப்பு, ஆளணி, ஆயுதம் வழங்கிய இந்திய அரச கும்பலின் அடிவருடி, மற்றவர் இந்திய அரசின் உத்தியோகபூர்வ கொலைகாரக் கும்பலின் கையாள்.

அங்குள்ள சீன இராணுவ அதிகாரியையும் அழைத்திருந்தால் விருந்து இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனை டக்ளஸ் ஆக்கும் இந்தியாவின் வேண்டுதல் முயற்சியின் முதல் கட்டம்தான் இது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

......... எண்பதுகளில் பல தமிழ் இயக்கங்களை வைத்து கேம் ஆட வெளிக்கிட்டது இந்தியா ....... அதை புரிந்த விடுதலை புலிகள் அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவின் ஆட்டத்துக்கு பலியாகாது விழிப்பாக செயற்பட ஏனைய பல இயக்கங்கள் இந்தியாவின் ஆட்டத்துக்குள் சிக்குண்டு சின்னாபின்னமானது ........ அதன்பின்னர் EPDP நேரடியாகவும் சம்பந்தர் திரைமறைவாகவும் புலிகளை அழிக்க இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் உதவியிருந்தனர்

EPDP யும் சம்பந்தரும் சேந்து உணவு உண்பதில் என்ன ஆச்சரியம் உள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்
2119028806cartoon19042012.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.