Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்த சில விசயங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். முடிந்தால்

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் கற்கிற கல்வி தெருவில்,பஞ்சர் ஓட்டும் சிறுவன் வரை போய் சேர வேண்டும்.

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு

உட்பட்டு நிலகரியாக மாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி

ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ

ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும்

கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்துவிடுவார்கள்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே

எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று

பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...

ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம்

15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.

மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.

அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.

அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை

உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்

மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்

பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5

மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்

கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து

கிழித்து விடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம்

எதுவும் கிடையாது.

தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 ௦ முறை மரத்தை கொத்தும்.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

இந்த அறிய விசயங்களை எல்லாம் நான் அறிந்து கொள்ள உதவிய புத்தகங்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி.

படித்ததில் பகிர்ந்தது.

அற்புதமான பகிர்வு பொது அறிவுபோட்டி ஒன்று வந்தால் உங்களை யாரும் அசைக்கமுடியாது நிலாமதி

பதிவுக்கும்,தகவல்களுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல பயன் உள்ள தகவல்கள், நன்றி நிலாமதி பகிர்வுக்கு .............

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். முடிந்தால்

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் கற்கிற கல்வி தெருவில்,பஞ்சர் ஓட்டும் சிறுவன் வரை போய் சேர வேண்டும்.

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்

:lol:  பகிர்விற்கு நன்றிகள் அக்கா
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள தகவல்கள். நன்றி நிலாமதி அக்கா.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

கடுப்பேத்திறதுதான் எங்கட ஒரே தொழில் :D :D

sleeping_cats_17.jpg

cute16.jpg

sleeping+cat.jpg

sleeping_cat_resize.jpg

ws_Sleeping_cat_1280x1024.jpg

sleeping-cat.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.