Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சரியான நேரம்; மஹிந்தவிற்கு ஐ.நா. செயலர் அறிவுரை!

Featured Replies

நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

இந்தியாவுக்கான தனது மூன்று நாள்கள் பயணத்தை இன்று ஆரம்பிக்கும் பான் கீ மூன், அதற்கு முன்பாக நேற்று பி.ரி.ஐ. செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பான் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் கேட்டபோது, இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் அது தொடர்பான விசாரணைகள் பகிரங்கமாக, பக்கச்சார்பற்ற வகையில் நடப்பதை உறுதிப்படுத்துவதற்கும் தீர்மானம் மிக முக்கியமானது என்றார்.

“மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் கவலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது மனித உயிர்களுக்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

“இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் நீதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே மிகச்சரியான தருணம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பயணத்தின்போது பான், மூத்த அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்துப் பேச்சு நடத்துவார். மும்பை, டில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவுள்ளார்.

http://thaaitamil.com/?p=16911

மகிந்தரால் ஜெனீவா பிரேரணைகளை அமுலாக்க முடியாது.

இந்தியா தமிழர் சார்பாக மாறும்பொழுது ஐ.நா.வுக்கும்; ஐ.நா. தமிழர் சார்பாக மாறும்பொழுது இந்தியாவுக்கும்; அவற்றுடன் மேற்குலத்திற்கும் சிங்களம் மீது நடவடிக்கைகள் எடுக்க சுலபமாக இருக்கும்.

நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

இது ஒரு இறுதி சந்தர்ப்பம் என்றும் பாங்கிமூன் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு பல சரியான நேரங்கள் கிடைத்தன.அவர் இனப்பிரச்சனையை தீர்க்க விரும்பாத போது எந்த சரியான நேரமும் சரியாக அமையாது.

  • கருத்துக்கள உறவுகள்

“மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் கவலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது மனித உயிர்களுக்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

அதாவது போர்குற்றம் புரிந்த சிங்கள் கோஸ்டிகளை லாக்கபுக்கு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி உயிர்பலி எடுக்காமல் விசாரிக்க சொல்லுகிறார். இப்படி சுத்தி சுத்தி பேசுவதுதான் ராஜ தந்திரமா .?இதெல்லாம் தெரிஞ்சிருதால் எங்கிட்டோ இருந்திருப்பென்

காந்தி போட்டோவை மாட்டிவிட்டு கள் சாராயம் விற்பது போல

அம்பேத்கர் போட்டொவை மாட்டிவிட்டு சாதி கட்சி நடத்துவது போல..

இந்த குரங்கிடம் பூமாலையை கொடுக்க சொல்கிறீர்கள்.. பேஸ் பேஸ் நல்லா இருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.