Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா நாடு கடத்திய ஈழத்தமிழன் திருமலையில் படுகொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா நாடு கடத்திய ஈழத்தமிழன் திருமலையில் படுகொலை!

சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 18ம் திகதி இவர் திருகோணமலையில் வைத்து கொல்லப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது. இச் சம்பவத்தை அடுத்து, இலங்கை அதிரடிப்படையினர் திருகோணமலையில் பாரிய இரகசிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தனர். இதன்போது சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு இரகசியமாக அவர்கள் அனைவரையும் வெலிகந்தை முகாமுக்கு கொண்டு சென்றது அதிரடிப்படை.

இச் சம்பவத்தோடு, இக்கொலையும் தொடர்புற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. குறிப்பிட்ட 28 வயது இளைஞர் சம்பவ தினம் அன்று வெளியே சென்று வீடு திரும்பிய நிலையில், தன்னைச் சிலர் பின் தொடர்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் திரும்பவும் வெளியே சென்ற வேளை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்று தெரிந்தும், பிரித்தானிய அரசு தொடர்ந்தும் தமிழர்களை நாடுகடத்தி வருகின்றமை கண்டிக்கத்தக்க விடையமாகும்.

- ஈழம் பிரஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வேதனையான செய்தி.

பிரித்தானியாவில், வாழ்ந்திருந்தால்... உயிர் தப்பி இருப்பார்.

கனேடிய வானொலியில் தற்போது ஒருவர் வந்துசொன்னார் .இறந்தது தனது மருமகன் என்றும் 2010 ஆம் தானாகவே தான் லண்டனை விட்டு புறப்பட்டு சென்றாராம் .பெயர் நிரஞ்சன் .விளையாட்டு ஆசிரியரின் மூன்றாவது மகன்.இரவு ஒன்பது மணியளவில் கழுத்து அறுத்து கொலைசெய்யப்படாராம்.

மிக கவலையான விடயம் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்ட எவரும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை

தமது நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் எவரும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24928

சிங்களப்பயங்கரவாதிகளின் தொடரும் இனவழிப்பு, இவரின் இலண்டனில் உள்ள மனைவி ஒரு வழக்கை அந்த நாட்டு அரசுக்கு எதிராக தொடரவேண்டும். இதன் மூலம் விழிப்புணர்வு, பரப்புரை செய்யப்படல் வேண்டும். அதன் மூலம் இவ்வாறான படுகொலைகளை நிறுத்தலாம்.

Easwarathasan Ketheeswaran, forcefully sent back from UK in 2010, was living alone at Paalaiyoottu in Trincomalee city. Completing hotel management studies, he was making arrangements to leave the island seeking foreign employment. His wife is living abroad in UK.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.