Jump to content

இறுதி நேரத்தில் காலை வாரியது கூட்டமைப்பு! கடுப்பில் ரணில்!


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி ஒன்றில் இன்று நண்பகல் பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது.

இச் சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் தலைவர்கள் இறுதியில் வரவில்லை என்றும் இதனால் அச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ளவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் கட்சியின் முக்கியஸ்தர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது.

பாதை புனரமைப்பு என்ற பெயரில் நாளை ஏ 9 நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக முடக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவதே நடைமுறை ஆனால் மேதினத்தினைக் குழம்பும் வகையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மேதினத்தைக் குழப்ப அரசு முயல்வதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியிருக்கின்றார் .

http://thaaitamil.com/?p=17605

Link to comment
Share on other sites

சம்பந்த/சுமத்திரர்களுக்கு தெரிந்த தமிழ்த்தேசியம் .... ரணிலுக்கு தலையை காட்டுவதும், மகிந்தருக்கு வாலை காட்டுவதுமான கொள்கை!! ... ஆனால் இரண்டு இனவாதிகளினால், கொள்கையற்ற சம்பந்த/சுமத்திரர்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை! ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்த/சுமத்திரர்களுக்கு

ரெண்டு பேரையும் மாத்திட்டு புது ஆளை போடணும்..

Link to comment
Share on other sites

இறுதி நேரத்தில் காலை வாரியது கூட்டமைப்பு! கடுப்பில் ரணில்!

காலை வாருவதில் நாம் என்ன குறைந்தவர்களா.......[நோ ஏற்பட்ட காலுக்கு மசாச் கொடுப்பதை கூறுகிறேன்.]...............

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

கூட்டத்திற்குக் காலைவாரியதற்கு இப்படிக் கொதித்தால் காலங்காலமாக இவர்களால் காலைவாரிவிடப்பட்ட ஈழத்தமிழராகிய நாம் எவ்வளவு கொதிப்புள்ளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

பல சிங்கள இனவாதிகளின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் வடக்கில் தனது மே தின கூட்டத்தை வைப்பது மூலம் சர்வதேசத்திற்கு ஒரு நாடு என்பதை காட்ட விரும்பினார்.

மகிந்தரை விட இரணில் ஆபத்தானவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.