Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழுவில் பங்கேற்றால் தமது இரு ஆசனங்களை கூட்டமைப்புக்கு விட்டுக் கொடுக்குமாம் ஐ.தே.க?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil1_CI.jpg

கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாட்டினை தெரிவுக்குழுவில் சமர்ப்பித்து அதன் மூலம் தீர்வுகாணப்படுமாயின் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம் என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இன்னிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க முன்வந்தால் தெரிவுக்குழுவில் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் 2 ஆசனங்களை கூட்டமைப்பினருக்கு விட்டுக்கொடுக்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெரிவுக்குழுவில் தமிழர்களின் பங்களிப்பையும், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்துவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இந்த விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர்கள் தின நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தனது விருப்பத்தை தமக்கு நெருக்க மானவர்களிடம் தெரியப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகளுக்கு 12 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜே.வி.பிக்கு ஒரு ஆசனமும். ஐ.தே.கவுக்கு 8 ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

தெரிவுக்குழுவில் தமிழர்களின் பங்களிப்பையும் பலத்தையும் அதிகரிக்கச் செய்வதற்காக ஐ.தே.கவுக்கு உள்ள 8 ஆசனங்களில் 2 ஆசனங்களை கூட்டமைப்புக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் ஆசனங்களை 5ஆக உயர்த்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் கூட்டமைப்பிலிருந்து அதிக பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் ரணில் இந்த விட்டுக்கொடுப்பை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு இடம் கொடுத்தாயிற்று....சம்பந்தர் கூட்டம் மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான்...அங்காலை கக்கீம் வேண்டாம்..நாங்களே ..கதைப்பம் என்றும்..சவுண்டு வருகுது....இங்கை கனடாவிலை..may 18 கு 3 விளம்பரம் ஒட்டிக்கிடக்கு.....சனம்தான் பாவம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

AreyanenthiranMPTNA150.jpg

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை படுகொலை செய்தவைதான் இதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேதினத்தில் கலந்துகொண்ட விடயம் சம்பந்தமாகவும் இலங்கை தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த விடயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் திட்டமிட்டு இலங்கை தேசியக் கொடியை பிடிக்கச் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நரித்தந்திரமாகும் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தி அந்த அமைப்பை அழிப்பதற்கு உதவிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இப்போது தமிழர்களின் அரசியல் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்குடனேயே இரா.சம்பந்தன் ஐயாவின் கையில் பலாத்காரமாக சிங்கக்கொடியை கொடுத்து உயர்த்திப்பிடிக்கச் சொய்துள்ளார் என்னைப் பொருத்தமட்டில் மேற்படி சம்பவம் இலங்கையில் உள்ள எந்த பேரினவாதக் கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டணிவைக்கக் கூடாது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த இலங்கையின் அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் "83 யூலை கலவரத்தின் மூலம் தமிழர்களை கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு கொஞ்சிக் குலாவுவதாக" கூறியிருந்தார்.

என்னை பொறுத்தவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்த கட்சிகள் தான் அது 83 யூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியாகவிருந்தாலும் சரி 2009ம் ஆண்டு இராணுவ படைநடவடிக்கை மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியாகவிருந்தாலும் எல்லா சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும் தமிழர்களை கொலை செய்து அதனூடாக சிங்களமக்களிடம் ஆதரவு திரட்டியவர்கள் தான் இவர்களுடனான கூட்டணி ஒருபோதும் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதே வரலாறு எனவே கூட்டமைப்பு பெரும்பான்மைக் கட்சிகளுடனான கூட்டணிகளை புறக்கணித்து தமிழர்களுக்கான தனித்துவம் நிறைந்த கட்சியாக கூட்டமைப்பை செயற்படுத்தவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவுக்குழுவில் பங்கேற்றால் தமது இரு ஆசனங்களை கூட்டமைப்புக்கு விட்டுக் கொடுக்குமாம் ஐ.தே.க?

பார்த்து ஆசனம் என்று ஏதாவாது மான் தோலு .. தர்ப்பை பாய் கொடுத்து விட போகிறார்கள்.. அதில் முனிவர் மாறி உட்கார்ந்து தவம்தான் பண்ணா முடியும்.. ஒருக்கா எந்த ஆசனம் என்று நேரில் தட்டி தடவி சரி பார்த்து கொள்ளுங்கோ..!

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா...நீங்கள் ஆளாளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்லி சமாளித்தாலும்....உண்மை இதுதான்...சம்பந்தரின் கையில் கொடி தினிக்கப்பட்டது என்பது ஒளினாடாவில் தெரிகிறது...ஆனால் அதை ஏன் நீண்ட நேரம் அசைத்துக் காட்ட வேண்டும்.....சரி திணிக்கப்பட்டது போகட்டும்...பேசிய்ச் பேச்சில் ..உள்ள கருத்தையாவது அடக்கி வாசித்திருக்கலாம் அல்லவா?.....நரி ரனிலுடன் பேசப் போகும்போதே ..அவன் குணம் தெரிந்திருக்க வேண்டும்.....அவந்தான்..இன்றைய எம்மினதின் இழி நிலைக்கு காரணமானவன்.....எனவே இனி மன்னிபபு கேட்பதில் அர்த்தம் இல்லை....அவன் எம்மை உடைத்து விட்டடான்....தெரிவுக்குழு விசயத்தில் ஆவது அவதானம் பேணுவீர்களாயின் எம் மக்களை காப்பாற்ற முடியும்..விரைந்து செயற்படுங்கள்...முடிவெடுத்தபின் மன்னிப்பு கேட்காதீர்கள்....அது எம்மினத்தையே அழித்துவிடும்...

சம்பந்தருக்கு இத்தனை வயதாகியும் ஒரு பக்குவமும் இல்லை!

சிங்களப் பயங்கரவாதி ரணில்! முதலில் நீ முன்வைக்கும் தீர்வுத் திட்டம் என என்று சொல்லு!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.