Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது.

அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு அங்கவீனமானவர்களும் முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர் மொட்டை பாஸ் என செல்லமக அழைக்கப்படும் லண்டனில் வசிப்பவரான ஸ்கந்த தேவாவே என்டபதை நான் ஒரு பேப்பர் மூலமாக அம்பலப்படுத்தியிருந்தேன். அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னராக அதனுடன் சம்பந்தப் பட்டவர்களான . ரிசி மற்றும் ஸ்கந்தா ஆகியோடும் தொடர்பு கெண்டு அவர்களது கருத்துக்களையும் கேட்டிருந்தேன். விபரம் வெளிவந்ததுமே ரிசி என்பவர் அவர் இயக்கிய தமிழ் செய்தி இணையத்தளத்தினையும் நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டிருந்தார். ஆனால் ஸ்கந்தாவோ தனக்கு யாரையும் தெரியாது தனக்கும் இவற்றிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒற்ரை வரி பதிலில் மறுத்திருந்ததோடு ரிசி என்பவர்தான் (I.S.O.T.O.) என்கிற தொரு அமைப்பின் ஊடாக போரால் பாதிக்கப் பட்ட மாணவர்களிற்கு உதவுவதாக தன்னிடம் பெரும் தொகை பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் எனக்கு மின்னஞ்சல் முலம் பதில் தந்திருந்தார்.

அங்கவீனமடைந்த முன்னை நாள் போராளிகளை ஏமாற்றிய விடயத்தில் சம்பந்தப் பட்டதாக கூறப்பட்ட உதயகலா மற்றும் தயாபர ராஜ் ஆகியோரோடு அப்பொழுது என்னால் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.அதன் பின்னர் சிலகாலங்களிற்கு பின்னர் உதயகலா மற்றும் தயாபராஜ் ஆகிரோடு தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்பம் எனக்கு கிடைத்த பொழுது செய்திகளில் வெளியானபோல் தங்களிற்கும் நடந்த மோசடிகளிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அனைத்திற்கும் ஸ்கந்தாவே பொறுப்பு என அதற்குரிய ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னரும் ஸ்கந்தா அவர்களிற்கு உதயகலா எழுதியிருந்த கடிதத்தினையும் இணைத்து அவரது பக்க கருத்துக்களை கேட்டிருந்தேன். ஆனால் அவர் நேரடியாக எவ்வித பதிலையும் தராமல் இலங்கையில் வாழும் ராதிகா என்பரிற்கு அவற்றை அனுப்பி ராதிகா மூலமாக சம்பந்தமேயில்லாத பதில் ஒன்றினை அனுப்பியிருந்தார். அவற்றை பின்னர் பார்க்கலாம்.இனி நடந்து முடிந்த மோசடி பற்றியும் அதில் ஸ்கந்தாவின் பங்கு என்ன என்பதனையும் பார்ப்போம்.

ஸ்கந்ததேவாவே , ரிஷி என்ற ரிசாந்தன் அல்லது ரிஷி ஆகிய இருவரும் gatherpage என்கிற அமைப்பினை தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து நடாத்தி வந்தனர். இந்த gatherpage இல் 20 வரையிலான இளம் பெண்களை வைத்து பல்கலைக்கழகமாணவர்கள், கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி நடாத்தி வந்தனர். சமநேரத்தில் I S O T O என்ற அமைப்பினை ஸ்கந்ததேவாவின் மகளின் பெயரிலும், ரிஷியின் பெயரிலும் பிரித்தானியாவில் பதிவு செய்து நடாத்தத் தொடங்கினார்கள்.

இதேநேரம் நம்பிக்கையொளி என்றொரு அமைப்பினை லண்டனில் ஸ்தந்ததேவாவின் மனைவி கமலாவின் பெயரில் (வியாபார நிறுவனம் என்ற பதிவோடு) பதிந்து கொண்டார். நம்பிக்கையொளி மூலம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியென்ற பெயரில் ஊடகங்கள் மூலமும், மக்களிடமும் பண வசூலிப்பு ஸ்கந்ததேவாவும் அவரது குழுவினரும் செய்து வந்தனர். இதில் சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போக மீதப்பெரும்பகுதிக்கு கணக்கில்லாது போனது.

இச்செயற்பாட்டின் மூலம் நிகழ்ந்த ஊழல்கள் மக்கள் மத்தியில் தெரியவர இவ்வருடம் பெப்ரவரிமாதம் வாழைக்குட்டி கொடுத்து தாயக மக்களை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் நம்பிக்கையொளியை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து மீண்டும் மக்களை ஏமாற்றிப் பண வசூல் பண்ண புறப்பட்டுவிட்டது ஸ்கந்ததேவா கூட்டணி. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஸ்கந்தா போன்றவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அது போகட்டும். உதயகலாமீது எப்படி கள்ளப்பட்டம் விபச்சாரப்பட்டம் சூட்டப்பட்டது என்பதனைப் பார்ப்போம்.

உதயகலா துடிப்பும் துணிச்சலும் மிக்க ஒரு பெண். இந்தப்பெண்ணை ஸ்கந்தா கூட்டணியின் முகவர்கள் அணுகுகிறார்கள். சமூக முன்னேற்றம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தமது நிறுவனங்கள் மூலம் செய்து வருவதாகவும் தமது நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமது நிறுவனத்தில் பணியாளாக உதயகலாவை இணையுமாறும் மாதாந்தம் சம்பளம் தருவோம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஊர்கள் தோறும் சென்று எடுத்துத் தருமாறும் வேண்டுகிறார்கள். தரப்படுகிற விபரங்களுக்கு, உரியவர்களுக்கு நம்பிக்கையொளி, I S O T O இரண்டும் உதவிகளைத் தருமென்றும் கேட்டுள்ளனர். மக்களுக்கான உதவிகள் மூலம் தனக்கும் ஒரு வேலை வாய்ப்புக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் உதயகலா ஸ்கந்தாவின் பணிப்பில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இவர்கள் சொல்கிற இடங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உதயகலாவும் சேகரித்து அனுப்பத் தொடங்கினார்.

இத்தோடு நின்றுவிடாமல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாகச் செய்வதாகவும் ஸ்கந்தா கூறியுள்ளார். வெளிநாடு போக விரும்புகிற போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 முதல் 3 லட்சம் வரையான பணத்தையும் சேகரிக்குமாறும் பணித்தார். உதயகலா சுவிசிலிருந்து வந்திருப்பதாக மக்களிடம் அறிமுகமாகும்படியும் பணித்தார்கள் ஸ்கந்தாவும் அவர் பின் நின்ற கும்பலும்.

ஸ்கந்தா மீதிருந்த நம்பிக்கையில் உதயகலாவும் செயற்படத் தொடங்கினார். அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பலரை உதயகலாவுடன் ஸ்கந்தா தொலைபேசத் தொடர்புபடுத்திவிட்டார். தமது பணி மக்களுக்கானது அதில் உதயகலாவின் பங்கு தங்களுக்கு வேண்டும் என்பதனையும் வெளிநாட்டு முகவர்கள் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து மக்களுக்காக இயங்குவோரென பலர் ஸ்கந்தாவின் ஏற்பாட்டில் உதயகலாவுடன் பேசியிருக்கிறார்கள். இப்போது முழுமையான நம்பிக்கை ஸ்கந்தா கூட்டணிமீது உதயகலாவுக்கு வந்துவிட்டது.

ஸ்கந்தாவினதும் அவரது கூட்டணியினரின் சொற்படி பல ஊனமுற்றவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சேகரித்து அவர்கள் சொன்னபடி கொழும்பில் இட ஒழுங்குகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளையும் ஸ்கந்தாவின் ஆலோசனைப்படி உதயகலா பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கு இரு பகுதியிலும் ஸ்கந்தா வழங்கிய தரவுகளோடு உதயகலா சென்று வெளிநாட்டுக்கு ஆட்கள் சேர்த்ததோடு ஸ்கந்தாவின் பெயரால் வழங்கப்பட்ட WheelChair, பண உதவிகளும் பல ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. றால் போட்டு சுறாபிடித்த ஸ்கந்தாவின் சூழ்ச்சியை நம்பிய உதயகலாவும் ஸ்கந்தாவின் சொற்படி இயங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வேளையில் gatherpage என்கிற அமைப்பில் ரிஷியாலும் ஸ்கந்தாவாலும் இயக்கப்பட்ட அலுவலகத்திலும் அது சார்ந்த இடங்களிலும் பெண்கள் துஸ்பிரயோகம் ஏமாற்று வேலைகள் , ஆட்களைக் கொல்வதற்கான திட்டமிடல்கள் போன்ற வேலைகள் நடைபெறுவதனை பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் மூலம் உதயகலா அறிந்து கொள்கிறார். gatherpage அலுவலகத்தில் நடைபெறுகிற ஊழல்கள் ஸ்கந்தாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்த உதயகலா இவ்விடயம் பற்றி ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார்.

ஆயினும் ஸ்கந்தாவால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த உதயகலா gatherpage இல் நடக்கிற துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் அதுபற்றி இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப் போவதாக ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் மிரட்டினார். அத்தோடுgatherpage இற்கு நேரே சென்று அங்கு பணியாற்றிய கஸ்தூரி , ராதிகா போன்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கஸ்தூரி , ராதிகா இருவரும் உதயகலாவுடன் முரண்பட்டு ஸ்கந்தாவுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. விடயம் இப்பெண்களுக்கு இடையில் கைகலப்பு வரை சென்றுவிட உதயகலா பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்போவதாக தொலைபேசியை எடுக்க கஸ்தூரி திடீரென gatherpage அலுவலகத்தில் இருந்த எழுத்துப்பிரதி ஆவணங்கள் யாவற்றையும் தீயிட்டெரித்தார். விடயங்கள் உடனுக்குடன் ஸ்கந்தா கூட்டணிக்கு கஸ்தூரி , ராதிகா மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விடயத்தைச சமாளிக்க ஸ்கந்தா உதயகலாவுடன் சமாதானம் பேச முயன்றார். உதயகலா விடாப்பிடியாக இந்த மோசடியை இணையங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப் போவதாகக் கூறினார். விடயத்தின் நிலமையைப் புரிந்து கொண்ட ஸ்கந்தா உதயகலாவை அமைதியாகச் சிலநாள் இருக்கும்படியும் தவறுகளை விசாரித்து முடிவுக்கு வருவோம் எனவும் வேண்டிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து இந்த மோசடிக்காரர்களுடன் தான் இயங்கமாட்டேன் எனக்கூறிய உதயகலா நம்பிக்கையொளியுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

gatherpage இல் நடைபெறுகிற மோசடி வெளியில் உதயகலா மூலம் வெளிவராது இருக்க ஸ்கந்தா தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் அவசர அவசரமாக உதயகலா தயாபரராஜ் மோசடி, விபச்சாரம் என செய்தியைப் பரப்பி மின்னஞ்சல் மூலமும் பரப்புரையை மேற்கொண்டார். வெறுமனே ஸ்கந்தாவின் மோசடியை வெளியில் சொல்லுவேன் என்ற உதயகலா மீது முழுப்பழியும் விழுந்துவிட ஸ்கந்தா கருணாநிதி கணக்கில் ஒரு புனைவையும் அவிழ்த்துவிட்டார். அதுதான் 28ஆயிரம் பிரித்தானியப் பவுண்ஸ்களையும் ரிஷியிடம் கொடுத்து ஏமாந்ததான கதை. உதயகலாவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத ரிஷியை உதயகலாவுடன் தொடர்புபடுத்தி செய்தியை ஆளாளுக்கு ஊடகங்கள் கதையெழுதி வெளியிட்டிருந்தன.

ஸ்கந்தாவை நம்பி வெளிநாட்டுக்கு போகும் கனவோடு கொழும்பில் தங்கியிருந்தவர்களுக்கு விடயத்தைச் சொல்வதெப்படியெனத் தவித்த உதயகலா வெளிநாடு அனுப்பும் முகவர் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதோடு பணத்தைக் கொடுத்தவர்கள் உதயகலாவையே சுற்றத் தொடங்கினார்கள். பெருந்தொகை பணத்தை உதயகலா முன்னின்று பெற்றுக் கொடுத்தமையால் அதற்கான பதிலையும் உதயகலாவே சொல்ல வேண்டியிருந்தது.

இந்தப்பணப்பிரச்சனை வந்ததும் ஸ்கந்தாவையும் ஸ்கந்தாவின் முகவரான மட்டக்களப்பின் முகவருக்கும் தொலைபேசியெடுத்து தான் பொறுப்பு நின்று பெற்றுத் தந்த பணத்தை உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டினார். ஸ்கந்தா எதற்கும் தான் பொறுப்பில்லையெனத் தப்பிக்க பல பொய்களைச் சொன்னார். இறுதியில் உதயகலா மோசடி விபச்சாரம் என்ற செய்தியை தான் இணையங்களுக்கு கொடுக்கவில்லையென்று சத்தியம் செய்தார்.gatherpage இல் பணியாற்றிய பெண்பிள்ளைகளில் சிலரது பெயரைச் சொல்லி அவர்களே செய்தியை வெளியில் போட்டதாகவும் சொன்னார்.

செய்தி வந்த அவமானத்தால் தயாபரராஜ்ஜின் குடும்பம் அவரை வெறுத்து ஒதுக்கிவிட்டது. அத்தோடு சகோதரனுடன் இருந்த உதயகலாவின் தாயாரை உதயகலாவின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியேறச் சொல்லிவிட்டார். அந்தத்தாய் இன்று வரையும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாபரராஜ் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்ற நிலமையில் உதயகலாவும் மன அழுத்த நோய்க்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவமானத்துடன் வாழ முடியாத துயரத்தில் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவில் உதயகலா தயாபரராஜ் இருந்த நேரம் கடவுள் காட்டிய வழிபோல அவர்கள் பட்ட துன்பங்கள் யாவும் வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையிலான சந்தர்ப்பம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.

gathepage.jpg

தொடரும்.....

அடுத்த தொடரும் அங்கங்களில்.....

1) தயாபரராஜ் உதயகலா மோசடியானவர்களா புலிகள் தண்டித்தார்களா ?

2) உதயகலாவுடன் ரிஷி தொடர்புபடுத்தப்பட்டது எப்படி ?

3) தயாபரராஜ் எப்படிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது ?

4) ஸ்கந்தா தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பதாக கூறும் குழலி (றஜிதன் ஜோதி) யார் ?

5) குழலியின் அண்ணனின் மகனான ஜோய்க்கும் ரிசிக்கும் என்ன சம்மந்தம் ? ஜோயிடம் ரிஷியின் முகவரான நிதர்சன் என்பவர் பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது ?

6) இந்த நாடகத்தில் ஸ்கந்தா தயார்படுத்தியயவர்கள் யார் ?

பிற்குறிப்பு :-

தொடர்ந்த மர்மங்களுக்கான பதில் இனிமேல் தொடரும்......மேற்படி மோசடிகள் தொடர்பான சகல புகைப்பட ஆதாரங்கள் ஒலிப்பதிவுகள் யாவும் எஎன்னிடம் உள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.

news2.jpg

1001-1.jpg

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல எழுத்துருக்களை மாற்றும் போது எழுத்து பிழைகள் ஏற்பட்டு விட்டது மன்னிக்கவும்.

இவர்களெல்லாம் அரசியலுக்கு எப்ப வந்தார்கள் என்று எப்போதோ எழுதியதாக நினைவு .

இவர் சுரேஷ் பிரேமசந்திரனின் மிக நெருங்கிய உறவினர் ,என்னை விட ஒரு வகுப்பு கூட எனது பள்ளியில் படித்தவர் .லண்டனிலும் சிறிது பழக்கம் ஆங்கிலம் தெரிந்தவனேன்றால் புலிகளுக்கு எப்போதும் ஒரு மயக்கம் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா பகிர்வுக்கு,

சாப்பாடு / 2xபார்ட்டி என்றால் முன்னால் கிளடுகளுக்கும் ஒரு மயக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.