Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வரம் - திருக்கோணேஸ்வரம் - பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன்மீதே கட்டப்பட்டுள்ளனவாம்! கூறுகிறார் மேதானந்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ellawala-medhananda-150news.jpg

பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டே இந்துக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? இலங்கையின் எந்தவொரு பகுதியையும் உங்களின் தாயகம் என்று கூற முடியாது.தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள்.

வடக்கு, கிழக்கில் கோவிலை உடைத்து கட்டப்பட்ட ஒரு பௌத்த விஹாரையை கூற முடியுமா? தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது அப்பட்டமான பொய்யாகும். சிங்களவர்களின் பகுதிகள் தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட புகழ்பெற்று விளங்கும் அனைத்து இந்து கோயில்களும் பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன்மீதே கட்டப்பட்டுள்ளன. நாம் இந்து கோயிலை இடித்து அழித்தோமா?

நாம் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்றோம். இந்து கோயிலை கட்டுவதற்கு நான் கூட நிதியுதவி வழங்கியுள்ளேன். தமிழ் கூட்டமைப்போ பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றது.

ஏறாவூல் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்தே பௌத்த விஹாரையை நிர்மாணித்தனர். தமிழர்களே புத்தர் சிலைகளை தலையில் தூக்கி சென்றனர் என்பதனால் இன, மத, பேதமின்றி சகலரும் ஐக்கியப்பட்டு கைகோர்த்து அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கியப்படுவோம். இது உங்களுடையதும் எங்களுடையதும் நாடாகும் என்பதனால் சகோதரர்கள் போல் செயற்படுவோம் என எல்லாவள மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

அனுராதபுரம் முதல் தேவேந்திர முனை மட்டும் உள்ள அனைத்து விகாரைகளும் சிவாலயங்களின் மீதே கட்டப்பட்டன! இதுவே உண்மை.

UNESCO இன் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட விஹரைகள் அனைத்திலும் கீழே சிவாலய தொல்பொருட்களும், சிலவற்றில் நந்திகளும் சிவலிங்கங்களும் கூட கண்டெடுக்கப்பட்டன. இவை பற்றிய கட்டுரைகள் அரச பயங்கரவாதிகளின் Daily News பத்திரிகைகளிலும் வந்தன. பின்னர் அவை மெல்ல மெல்ல மறைக்கபப்ட்டுவிட்டன.

மகா பொய்வம்ச சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகளை கூண்டோடு கைலாசம் அனுப்பவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்கோனேசுவரமும் திருக்கேதீசுவரமும் நாயன்மார்களால் பாடப்பெற்ற தமிழர்களின் தொன்மையான திருத்தலங்கள். போர்த்துக்கேசரால் கோணேசர் கோவில் இடித்து அழிக்கப்பட்டு அக்கற்களால் தற்போதைய கோட்டை கட்டப்பட்டது. ஆயிரம் தூண்களையுடைய சைவரின் கோயிலை இடித்தோம் என்று போர்த்துக்கேசர் எழுதி வைத்துள்ளார்கள். திருக்கேதிசுவரத்தில் அகழ்வாராச்சியில் சிவலிங்கமே க்ண்டெடுக்கப் பட்டது பௌத்த சின்னங்கள் அல்ல. மேதானந்த தேரருக்கு மேலே தெறித்துவிட்டது போலும். த்மிழ் பிரதேசங்களில் பௌத்த/சிங்கள‌ ஆக்கிரமிப்புப் பற்றிய எமது பிரச்சாரத்தை தமிழகம் நோக்கி திருப்புவோம்

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய்கள், உண்மை என்ற மாயத்தோற்றத்தை காலப் போக்கில் உருவாக்கிவிடும்!

சைவர்கள் தங்கள் வாழ்வின் நெறி மறந்து, கோவில்களில் கவனம் செலுத்துவது போலவே, புத்தமும் போகத் தொடங்கிவிட்டது!

இறுதியில் விகாரைகளும், கோவில்களும் மட்டும் மிஞ்சுமேயன்றி, சைவமும் புத்தமும் காட்டிய வாழ்க்கை நெறி, காலத்துடன் கரைந்து போய்விடும்!

திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய்கள், உண்மை என்ற மாயத்தோற்றத்தை காலப் போக்கில் உருவாக்கிவிடும்!

சைவர்கள் தங்கள் வாழ்வின் நெறி மறந்து, கோவில்களில் கவனம் செலுத்துவது போலவே, புத்தமும் போகத் தொடங்கிவிட்டது!

இறுதியில் விகாரைகளும், கோவில்களும் மட்டும் மிஞ்சுமேயன்றி, சைவமும் புத்தமும் காட்டிய வாழ்க்கை நெறி, காலத்துடன் கரைந்து போய்விடும்!

வரலாற்றை பேண, காக்க மறந்தவர்கள் தமது வாழ்க்கை நெறிகளை இலகுவில் தொலைத்துவிடுவார்கள் - இது வரலாறு சொல்லும் பாடங்களில் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.