Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Featured Replies

ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதைக் குறிக்கின்றது

இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன.

அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும்.

சமூகவலையமைப்பு மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

நஸ்டக் (Nasdaq stock market) மூலமாக பேஸ்புக் தனது பங்கு விற்பனையை ஆரம்பித்தது.

பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமானது உலக அளவில் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக எவ்வித உறுதியான அடித்தளமுமின்றி அதாவது சாதாரண பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளமொன்று இணைய உலகில் தவிர்க்கமுடியாத பாரிய நிறுவனமாக வளர்ந்தமையாகும்.

மேலும் தனது மூலதனமாக அதன் பாவனையாளர்களின் தரவுகளைக் கொண்ட நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்தமையும், பங்குகள் மூலம் திரட்ட எதிர்பார்த்திருந்த பிரமாண்ட தொகையுமாகும்.

பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான (Initial public offering) முதற்கட்ட நடவடிக்கையை கடந்த பெப்ரவரி மாதமளவில் ஆரம்பித்தது.

UVwIH.jpg

பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களை அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) அம்மாதத்திலேயே சமர்ப்பித்தது.

இவ் வழங்கலின் மூலம் முதற்கட்டமாக 5 - 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை ஈட்டிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

பேஸ்புக் பங்குகளை விநியோகிப்பது தொடர்பில் நஸ்டக் (Nasdaq stock market) மற்றும் நியூயோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆகியவற்றின் இடையே அத்தருணத்தில் கடும் போட்டியே நிலவியது.

அத்தருணத்தில் வோல்ஸ்ரீட்டில் பேஸ்புக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கான காரணம் முதலீட்டாளர்கள் பலர் பேஸ்புக்கில் முதலிட முன்வந்தமையாகும்.

பேஸ்புக்கின் ஆரம்ப பொது வழங்கல் ஆரம்பம்

கடந்த வெள்ளிக்கிழமை 18/5/2012 அன்று கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில் நடைபெற்ற அறிமுகவிழா மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பேஸ்புக்கின் பங்கு வழங்கல் தொடங்கியது.

NnIi1.jpg

இவ்வழங்கலின் மூலமாக பேஸ்புக் 15-20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டிக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பங்குச்சந்தையான அமெரிக்க நெஸ்டக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) மூலம் பங்கு விநியோகங்கள் ஆரம்பமாகின.

'FB' எனும் குறீயீட்டின் கீழ் ஆரம்பமாகிய இப் பங்கு வழங்கலின் போது 421,233,615 பங்குகள்( 421 மில்லியன்) விற்பனைக்கு வந்தன.

இவ் எண்ணிக்கை அமெரிக்க சனத்தொகையை விட அதிகமாகும்.

சுமார் 72,759 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைமூலதனமாகக் கொண்டுள்ள பேஸ்புக் பங்கொன்றின் ஆரம்ப விலை 38$ அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்க்கப்பட்ட தொகையினை விட இது சற்று அதிகமாகக் காணப்பட்டதுடன் ஆரம்பத்திலேயே முதலீட்டாளர்களை சற்று கலக்கத்துக்குள்ளாக்கியிருந்தது.

எனினும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு 11% அதிகமாக சுமார் 45 அமெரிக்க டொலருக்கு சென்ற பங்குவிலையொன்று அன்றைய தின சந்தை நடவடிக்கைகளின் முடிவில் பங்கொன்றின் விலை 38.23 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இதேவேளை திங்கட்கிழமை பங்கொன்றின் விலை 34.03 டொலர்களாக வீழ்ச்சியடைந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை சந்தை நடவடிக்கைகளின் முடிவின் போது பங்கொன்றின் விலை 31 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இது ஆரம்பவிலையான 38 அமெரிக்க டொலர்களை விட 18% வீழ்ச்சியாகும்.

இது முதலீட்டாளர்களை பேஸ்புக்கின் பங்குகள் மீதான நம்பிக்கையைக் குறையச் செய்துள்ளதுள்ளதுடன் பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

தொடர்ந்து பங்கொன்றின் விலை வீழ்ச்சியடைந்தது.

இவ்வீழ்ச்சி நிலை தொடரும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேஸ்புக் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தமையினால் 104 பில்லியன் டொலர்கள் எனக் கணிக்கப்பட்ட அதன் சந்தைப்பெறுமதி தொடர்ச்சியாகக் குறைந்துள்ளது.

இதுமட்டுமன்றி பேஸ்புக்கில் 503.6 மில்லியன் பங்குகளைக்கொண்டுள்ள ஷூக்கர் பேர்க்கின் பங்குகளின் மொத்த பெறுமதியும் 19.25 பில்லியன் டொலர்களில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

04a1f694c3fce192669109e740f7edf2.png

FB data by YCharts

பேஸ்புக்கின் பங்குகளை ஆரம்பத்தில் கொள்வனவு செய்தவர்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் பலத்த நட்டமடைந்துள்ளனர்.

பேஸ்புக் பங்கு விலை தளம்பலுக்கு அவதானிகள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவையாவன:

1. அதிக எண்ணிக்கையிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை. அதாவது 421 மில்லியன் பங்குகள் என்பது ஒப்பீட்டளவில் மிகப்பெரியதொரு எண்ணிக்கையாகும்.

2. வாக்களிக்கும் உரிமை கொண்ட சாதாரண பங்குகளின் பெரும்பான்மையை ஷூக்கர் பேர்க் கொண்டுள்ளமை. பேஸ்புக்கில் அதிக பங்குகளைக் கொண்ட தனிநபராக அதன் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் திகழ்கின்றார்.

அவர் பேஸ்புக்கில் 28.4 % வாக்குரிமைகொண்ட சாதாரணபங்குகளைக் கொண்டுள்ளார். அதுவாக்குரிமையின்படி 56.9% ஆகும்.

3. பேஸ்புக்குடன் அதன் எதிர்கால வருவாய் மார்க்கங்கள் தொடர்பில் தெளிவான கொள்கையைக் கொண்டிராமை .உதாரணமாக கையடக்கத்தொலைபேசி ஊடாக பேஸ்புக் பாவனை அதிகரித்து வருகின்றமையால் அவற்றில் காட்சிப்படுத்தும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகும். இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

விளம்பர வியாபாரத்தில் கூகுள் போன்ற நிறுவனத்தின் அளவிற்கு பேஸ்புக் இதுவரை வளர்ச்சியடையவில்லை.

அதுமட்டுமன்றி பங்கு வழங்கல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களின் எதிர்கால வருவாய் தொடர்பில் சில மாற்றங்களை மேற்கொண்டமை.

பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கல்கலுக்காக மோகன் ஸ்டேன்லீ போன்ற முதலீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்பட்டது. பேஸ்புக் தனது வருவாய் தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதினை இந்நிறுவனங்களுக்கு தெரிவித்தமையும், அம் முதலீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கயாளர்களிடம் அத் தகவல்களைத் தெளிவுபடுத்தியமையும் பங்கு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையக் காரணமாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பங்குகளை வாங்கியவர்கள் அதனை உடனடியாக விற்பனை செய்யத் தொடங்கியமை.

4. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்ட விலை.

5. அமெரிக்க நெஸ்டக் (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) பங்குச்சந்தையானது பங்கு விற்பனையை ஒழுங்கான முறையில் கையாளாமை.

U5GnD.jpg

வெள்ளிக்கிழமை பங்கு விற்பனை ஆரம்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட நேரத்தினை விட தாமதமாகவே வியாபார நடவடிக்கைகள் தொடங்கின.

அதிகப்படியான 'ஓடர்கள்' பெறப்பட்டமையால் அதனை நெஸ்டக் (NASDAQ) இனால் கையாளமுடியவில்லை.

முதலீட்டாளர்களால் வழங்கப்பட்ட 'ஓடர்களை' உரிய நேரத்தில் நெஸ்டக் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஏற்பட்ட தாமத்தினால் முதலீட்டாளர்கள் அசௌகரியத்திற்கு ஆளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெஸ்டக் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறே இப்பிரச்சினைகளுக்கு மூல காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

6. ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி

7.ஊடகங்கள் விடயங்களை பெரிதுபடுத்திக்காட்டுதல்.

பேஸ்புக் தொடர்பான செய்திகளைக் குறிப்பாக இப் பொது வழங்கலில் ஏற்பட்ட சிறிய விடயங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டிவிட்டதாகவும் இவை முதலீட்டாளர்களில் உளவியல் ரீதியான 'emotional trading' தாக்கங்களை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பேஸ்புக்கின் விளம்பர வாடிக்கையாளரான ஜெனரல் மோட்டர்ஸ் பேஸ்புக்கில் இருந்து தனது விளம்பரங்களை அகற்றிக்கொள்ளப்போவதாக அறிவித்தமை.

இதற்குமுன் ஆரம்ப பொது வழங்கலில் ஈடுபட்ட இணைய நிறுவனங்கள் சிலவற்றின் பங்குவிலையில் ஏற்பட்ட வீழ்ச்சி என பல காரணங்கள் தற்போது தெரிவிக்கப்படுகின்றன.

எது எவ்வாறாயினும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கிற்கு பங்குச்சந்தையில் பாரிய அடிவிழுந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஆரம்ப பொது வழங்கல்களில் ஒன்றான பேஸ்புக் ஆரம்பப் பொதுவழங்கல் புஸ்வானமாகிப்போனமை சற்றுக் கவலையான விடயம்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38262

பேஸ்புக்கின் பெறுமதி 104 பில்லியன் ஆகக் கணிக்கப்பட்டது. இத் தொகை கணிப்பீடு அளவுதானே தவிர அதனிடம் உள்ள நிஜமான பண/சொத்து/வருமானம் மிகக் குறைவானது.

பங்குச் சந்தையில் இதன் பங்குகள் விற்கப்பட்டபோது கணிப்பீட்டுத் தொகையாக (உண்மையான பணமாக அல்லாதது) இருந்த பணத்தின் ஒரு பகுதி உண்மையான மாறி பேஸ்புக்கின் உரிமையாளர்களின் கைக்கு வந்துள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்த இலாபம்.

பேஸ்புக் தொடர்ந்து இலாபமீட்டும் நிறுவனமாக நிலைக்குமானால் பங்குச் சந்தையில் இதன் பெறுமதி குறைந்தாலும் அப் பங்குகளை வாங்கியவர்கள் நட்டமடைய மாட்டார்கள். பேஸ்புக் தனது பிரபலத்தை முதலீடாக வைத்துள்ள மாயையான வளர்ச்சி இன்றோ நாளையோ கூட இடிந்து விழலாம். அண்மைக் காலங்களில் Yahoo நிறுவனத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இத்துடன் நோக்கலாம்.

பொதுவாக ஒரு நிறுவனம் அதன் இலாபத்துடன் எவ்வளவு மடங்காக விலையாகின்றது எனப்பார்ப்பார்கள். அந்த வகையில் ஆப்பிளுடன் ஒப்பிடும்பொழுது இதன் விலை17-18 டாலராக இருக்கவேண்டும்.

ஒரு கையால் இதன் பங்குகளை வித்தவண்ணம் மறுபக்கத்தில் இதன் பெறுமதியை குறைத்துள்ளார்கள், பலரும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர் சொன்னால் சரியாகத்தான் இருக்கம்.. :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.