Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும் - மாவை சேனாதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

- கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்ல -

Mavai001_CI.JPG

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற வேர் அறுதலின் வலிகவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம். ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார். அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் கழிந்துள்ளதை கூறவிரும்புகின்றேன். இன்று எனது பிரதேசம் விடுவிக்கப்ப்ட்டது குறித்து பேசினாலும்,எமது தமிழ்,முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் முற்றாக இடம் பெறாத நிலையில் அங்கு எனது மீள்குடியேற்றம் இடம் பெறாது.

தமிழரசுக்கட்சியின் கொள்கையிலும் நாங்கள் கலந்த கூட்டங்களிலும் எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல அது எமது முஸ்லிம்களுக்கும் பொருத்தப்பாடு உடையனவாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். மட்டக்களப்பில் இருந்த போது என்னை வந்து பார்த்து எனக்கு உணவு கொடுத்தவர்களில் முஸ்லிம்கள் அதிகமானவர்கள். அவர்களது உணவின் இரத்தம் இன்றும் எனக்கு ஞாபகமிருக்கின்றது.

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தனியான ஒரு அலகை பெற வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர் அஷ்ரப் அவர்கள். ஆனால் அன்றைய காலம் அதற்கு இடமளிக்காமல் போனதுடன், வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இன்று அது வேறாக இருக்கின்றது.

வடகிழக்கு என்பது தமிழர்களதும், முஸ்லிம்களதும் தாயகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட முடியாது. அவர்கள் வாழ,வேண்டும், தம்மைத் தாமே ஆள வேணடும் என்பது தான் தமிழரசுக்கட்சியின் கொள்கையாகும். அதை அன்று தந்தை செல்வா சொன்னார், இன்றும் அதை நாம் பகிரங்கமாக செல்வோம்.

வடக்கில் தற்போது தமிழ், முஸ்லிம் பூமிகளில் பெரும்பான்மை சமூக குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன.மீண்டும் இராணுவ மயமாக்கல் இடம் பெறுகின்றது. இதனால் எதிர்காலத்தில் நாம் பல இழப்புக்களை சந்திக்க வேண்டியேற்படும். இப்போது இரு சமூகமும் ஒனறு சேரந்து எமது தாயக பூமியை பாதுகாக்க முடியாது போனால் எதிர்காலத்தில் நாம் அனாதைகளாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது. சில சக்திகள் எம்மை பிரிக்க முற்பட்டாலும், அந்த சதிகளின் வலையில் நாம் சிக்காது,எமக்குள் காணப்படும் முரன்பாடுகளை களைந்து அதனை உடன்பாடுகளாக மாற்றி இணைந்த தாயகத்தில் ஒற்றுமையாக வாழலாம்.

முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் வாழந்த பல பிரதேசங்களுக்கு நாங்கள் சென்று அந்த மக்களின் துன்பங்களை கணடிருக்கின்றோம். எமது மக்கள் படும் துன்பங்களை தீர்ப்பதற்கு நாம் பிரிந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை தற்காலிகமாக ஏற்பட்டது.ஆனால் இன்று அதனை செய்ய முடியாது, தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றால், அப்போது முஸ்லிம்களுக்கான தீர்வும் வழங்க்ப்ப்பட வேண்டும் என்பது உறுதியானது. அதனை அடைவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சுப் பதவி தடையாக இருக்கும் என நான் தெரிவித்து கொள்ளவிருமபுகின்றேன்.

இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேற வாருங்கள், அது உங்களதும் தாயகம் ,வருகின்ற சவால்கள் குறித்து நாம் பேசி இந்த நாட்டில் எமது பலத்தை நிருப்பிப்போம். இந்திய வீடமைப்புத் திட்டம் இலங்கை கொண்டு வரப்பட்ட போது அதில் முஸ்லிம்களது பங்கு வழங்கப்படவில்லையென எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, அதற்காக நாம் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி முஸ்லிம்களின் பங்கை சரியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டியதை ஒரு போதும் நாம் பலவந்த்மாக தட்டிப்பறிக்க மாட்டோம், இந்த நுல் வெளியீட்டுக்கு முன்னர் எனது கட்சியின் தலைவர் சம்பந்தன் அய்யா அவர்களிடம் இவ்வாறான ஒரு நிகழ்வுக்கு செல்லவுள்ளதாக கூறிய போது, நிச்சயமாக இந்த நிகழ்வுக்கு சென்று தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற செய்தியை சொல்லமாறு கேட்டுக் கொண்டதையும் இவ்வேளையில் நினைவுபடுத்துகின்றேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அங்கு கூறினார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும் - மாவை சேனாதிராஜா

அங்கே இரத்தம் சிந்தப்பட்டதா? சும்மா ஓவரா பில்டப் குடுக்கக் கூடாது.. செத்தவனுக்கே அங்கே மதிப்பில்லை.. இதுக்குள்ளை இவர்.. :huh:

வரலாற்றுக் கறை என்று சொன்னால் ஒத்துக்கொள்ளலாம்.. போனால் போகுது..

  • கொழும்பிலிருந்து தமிழர்களை பஸ்களில் ஏற்றி வடக்கு நோக்கி அனுப்பினானே கோத்தா.. அதைச் சுட்டிக்காட்ட துப்பிருக்கா?
  • கிழக்கிலிருந்து தமிழர்களை விரட்டியதால் கறை வரவில்லையா?
  • 1956 முதல் 1983 வரையில் டிசைன் டிசைனாக தமிழர்களை வெளியேற்றினார்களே.. கேட்கத் துப்பிருக்கா?

அடுத்த தேர்தலில் வோட்டு வேண்டுமென்றால் தைரியமா கேக்கிறதுதானே.. :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுடன் ஓற்றுமையாக இருப்பதற்கு முதல் தமிழர்கள் நீங்கள் ஓற்றுமைப்படுங்கோ.பிறகு முஸ்லிம்களை இணைப்பதைப்பற்றிப் பார்க்கலாம். 4 கட்சி சேர்ந்த கூட்டமைப்பையே ஒன்றாக இணைக்கவிடாமல் எல்லோரும் தமழரசுக்கட்சிக்குள்ளே வாருங்கோ.என்று சும்மா இயங்காமல் கிடந்த தமிழரசுக் கட்சியை தூசுதட்டி மாநாடு நடத்தி கூட்டமைப்புக்குள் பிரிவினையை உண்டாக்கியதுதான் கண்ட மிச்சம்.தமிழரசுக்கட்சியை விட்டுத்தானே எல்லாக்கட்சிகளையும் இணைத்து தவிகூட்டணியை உருவாக்கினார்கள்.தமிழ்க் காங்கிரசாவது தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு இயங்கிக் கொண்டிருந்த கட்சி.ஆது சரி உங்க தலைவர் சம்பந்தன் ஐயா!தவிகூட்டணிக்குத் தலைவரா?தமிழரசுக் கட்சிக்குத் தலைவரா?ததேகூட்டமைப்புக்குத் தலைவரா?விட்டால் புலிகளுக்கே தலைவர் என்றும் சொல்லுவார்போல.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும் - மாவை சேனாதிராஜா

ஆம் இவர்கள் இப்போ பேசுவார்கள் .........முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி மட்டுமல்ல ,சகோதர யுத்தம்....இன்னும் பட்டியலிடலாம்.........ஆனால் தங்களைப்போல் எமையும் முட்டாள்கள் என்று நினைத்து கருத்துகளை தம் செவ்விகள்.மேடைப்பேச்சுக்கள் மூலம் வழங்கும் போது தான் மனம் கொதிக்கிறது.

எங்கோ ஒரு மூலையில்,கவனிப்பாரின்றி, வாடி வதங்கி கிடந்த இவர்களை கௌவரவமான் மனிதர்களாக.ஓர் தமிழின பலம் பொருந்திய அரசியல் வாதிகளாக வெளியே காட்டியவர்கள் யார் ......அது த.வி.புலிகள் என்பதை மறக்காமல்,அவர்கள் காலத்தில் எப்படி இருந்தார்களோ ,அதாவது அரசியல் இராஜதந்திரத்தோடு இந்த உலகை வலம் வர வேண்டும் என்பதே எமது அவா....இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வரலாற்றுக்கு, அடுத்த சந்ததிக்கு இவர்களின் மணமே தெரியாத .அறியாத மயப்பொருளாகி விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் எல்லா பிரச்சனைகளும் பேசி தீர்த்தாச்சா .......? இப்போது முஸ்லிம்களின் கடந்த காலத்து கறையை கழுவ சலவை சோப்புடன் கிளம்பி விட்டார் மாவை :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.