Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க - சென்னையில் தீவிர விழிப்பூட்டல் பரப்புரை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chennaibuycort090612_tgte-150.jpg

தமிழக - சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், சிறிலங்கா தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால் ,வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு சிறிலங்கா தயாரிப்பு பிஸ்கட் , இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார்.

  • Chennaibuycort090612_tgte-001.jpg
  • Chennaibuycort090612_tgte-002.jpg
  • Chennaibuycort090612_tgte-003.jpg
  • Chennaibuycort090612_tgte-004.jpg
  • Chennaibuycort090612_tgte-005.jpg
  • Chennaibuycort090612_tgte-006.jpg

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றில், சிறிலங்கா அரசுமீது பொருளாதார தடையினைக் கொண்டுவருமாறு, இந்திய மத்திய அரசினை, தமிழக அரசு கடந்தாண்டு கோரியிருந்தது. சிறிலங்காவைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் போராட்டங்கள் , சென்னையின் பல இடங்களில் ஏலவே இடம்பெற்றுள்ளன.

இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசினைப் புறக்கணிப்போம் என முதன்மை முழக்கத்துடன், சிறிலங்காவின் பொருட்கள், துடுப்பெடுத்தாட்டம், விமானசேவை, பரிவர்தனைகள், உல்லாசத்துறை ஆகியனவற்றைப் புறக்கணிக்குமாறு, இந்த விழிப்பூட்டல் பரப்புரையினை மேற்கொள்பவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிந்த பாராட்டுக்கள்.

கண்ணாடி முன் போய் நிற்க வெட்கமாக இருக்கிறது.

உண்மை, ஈழப்பிரியன்.

எம்மை, விட தமிழக மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

தொடரட்டும் உங்ககள் பணி

விடியட்டும் தமிழீழம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசார பாராட்டுகின்றேன் ,

நாம் சோர்வுற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு விரக்தியுடன் இருக்கும் வேளையில் எமது தமிழக உறவுகள் முன்னெடுக்கும் இந்த முயற்சியை பார்க்கும்போது பெருமை கொள்கின்றேன்.

தமிழக காவல் துறை கூலிப் படைகளின் கவனத்திற்கு: -

இந்த படத்தை பாருங்கள் . இலண்டனில் கொடுங்கோலன் ராஜபக்சேவின் உருவ பொம்மையை தமிழர்கள் எரித்தார்கள். அந்த பொம்மை எரிந்து முடியும் வரை இலண்டன் காவல் துறை காத்துக் கொண்டிருந்தனர். அதை அணைக்க பாயவில்லை. நீங்களோ தமிழர்களின் போராட்டத்தில் ராஜபச்கேவின் உருவ பொம்மையை எரித்தால் உடனே பாய்ந்து வந்து தீயை அணைக்கிறீர். பொம்மைக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர் .

என்னே உங்கள் கடமை உணர்ச்சி ! இங்கிலாந்து காவல் துறையை பார்த்து வெட்கி தலை குனியுங்கள். அவர்கள் மனிதர்கள் அதனால் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்கிறார்கள், நீங்களோ காசுக்கு மாரடிக்கும் மாக்கள் போல் செயல் படுகிறீர் . இனியாவது சிறிதளவு இன உணர்வோடு செயல்படுங்கள் தமிழக காவல் துறையினரே.

லண்டனில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்த தமிழர்களுக்கு பாராட்டுகள்.

523652_248997601870826_330881380_n.jpg

"சென்னையில் நடைபெற்ற ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்"

251844_248969728540280_517087878_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே.

525961_248997235204196_1775911930_n.jpg

நீல்கிரிஸ் அங்காடியில் இலங்கை திண் பண்டங்கள் வியாபாரம் செய்யப்படுவதை அறிந்து இன்று சென்னை , ஜவஹர் நகர் நில்கிரிஸ் சிறப்பங்காடி முன் இலங்கை புறக்கணிப்பு குறித்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து. துண்டறிக்கைகளை விநியோகம் செய்த உறவுகள் தெரிவிக்கையில்!

பல வாடிக்கை யாளர்களுக்கு எது இலங்கை தயாரிப்புகள் என்றே தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு இலங்கை தயாரிப்பான பிஸ்கட் , இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம். இப்படியான இலங்கை தயாரிப்புகள் இந்த நீல்கிரிஸ் சிறப்பங்காடியில் விற்கப்படுகிறது , அதனால் அவற்றை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம். பலரும் இனி நிச்சயம் இத்தகைய பொருகளை வாங்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தனர். பலரும் இலங்கை தயருப்புகளின் பெயர்களை குறித்துக் கொண்டனர். இதை பற்றி முன்பே தெரிந்திருந்தால் வாங்கி இருக்க மாட்டோம் என்று பல வாடிக்கை யாளர்கள் கூறினார்.

முடிவாக கடையின் மேலாளரை சந்தித்து நாம் கொண்டு வந்த துண்டறிக்கை கொடுத்து இனி இந்த இலங்கை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டோம். அவரும் நிச்சயம் இதை கடையின் உரிமையாளரிடம் சொல்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார். விரைவில் இந்த பொருட்கள் அங்கிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறோம்.

இது நிற்காது , சென்னை உள்ள பல கடைகளுக்கு சென்று இலங்கை தயாரிப்புகளை வாங்காதீர்கள் , விற்காதீர்கள் என்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளோம் . இந்த பணியில் இணைத்து செயல் படக் கூடிய தோழர்கள் கலந்து கொள்ளலாம் . இலங்கை அரசை அடிபணிய செய்வோம் என்று தெரிவித்தார்கள்.

இன்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

523652_248997601870826_330881380_n.jpg

சமருக்கு வந்த மகிந்தவுக்கு, வின்ரர் சப்பாத்து போட்டு கொழுத்திறீங்களே...

சரி... இதிலெல்லாம்... காலநிலை பார்க்க முடியுமா? :D:lol::icon_mrgreen:

தமிழக உறவுகளுக்கு மிக்க நன்றி.

ஏன் தமிழ் ஸ்ரீ அண்ணா. மகிந்தவுக்கு வடிவான வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சிவப்பு கழுத்து துண்டு எல்லாம் போட்டுத்தானே ரோட்டு ரோட்டாய் இழுத்துப்போய் கொளுத்தினனாங்கள். உங்களுக்கு குறை சொல்வதே வேலையாப் போச்சு.. :D:lol::icon_mrgreen:

Edited by Gajen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.