Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் வங்கிகளில் குவியும் இந்தியர்களின் கறுப்புப்பணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dollar-15612-150.jpg

[size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது தான் முதன்முறையாக உயர்ந்துள்ளது.[/size]

[size=4]சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, தங்கள் நாட்டு வங்கிகள் தொடர்பான வருடாந்திர கையேடு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:[/size]

[size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் டெபாசிட் செய்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இந்தியர்களின் டெபாசிட் அளவு கூடியுள்ளது.[/size]

[size=4]சுவிஸ் வங்கிகள், இந்தியாவைச் சேர்ந்த தங்களின் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் இது. இதில், இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை. சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியர்களும், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும், மற்றவர்கள் பெயரில் டெபாசிட் செய்துள்ள பணம் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறவில்லை. இப்படி கணக்கில் வராத பணம் குறித்த, அதிகாரப்பூர்வமான மதிப்பீடு எதுவும் இல்லையென்றாலும், அது, 90 ஆயிரம் கோடி முதல், 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம்.[/size]

[size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், கடந்த 2006ம் ஆண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. ஆனால், 2010ம் ஆண்டில் இதில் மூன்றில் ஒரு பங்கிற்கு கீழ் குறைந்தது. 2011ம் ஆண்டில் 3,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது, 2010ம் ஆண்டின் முடிவில், சுவிஸ் வங்கிகள் இந்தியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 9,295 கோடி ரூபாய். இவ்வாறு வருடாந்திர கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=1]

[size=4]மூன்றாம் உலகநாடுகளின் வறிய மக்களின் பணத்தை சுருட்ட சுவிஸ் அரசும் உதவுகின்றது.[/size][/size][size=1]

[size=4]யூரோ நாணயத்தின் தாக்கம் இதுவரை சுவிஸ் நாட்டின் பிராங்கை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் நீண்ட காலத்திற்கு இவ்வாறு அந்த பணம் தப்பமுடியாது எனகூறப்படுகின்றது.[/size][/size]

சுவிற்சர்லாந்து மூன்றாம் நாடுகளுக்கு வ்லிய சென்று கட்டாயப்படுத்தி இந்த பணங்களை புடுங்கவில்லை. இவர்கள் இவளவு பணத்தையும் இங்கெ கொண்டுவந்து போடும்வரை அந்த நாட்டு அரசு என்ன பண்ணுகிறது...???????

கடைசியில் எல்லாப்பணமும் சுவிஸ் காரனுக்குத்தான் சொந்தமாகும்

[size=4]இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் யூதர்களின் பணத்தை (அவர்களை வேலைவாங்கி) இந்த சுவிஸ் வங்கிகளில் நாசிகள் ஒளித்தனர் / முதலீடு செய்தனர். பின்னர் அவர்கள், அமெரிக்க யூதர்கள், வெற்றிகரமாக வழக்கு போட்டு வென்று அந்தப்பணத்தை எடுத்தனர். [/size]

[size=1]

[size=4]அதுபோன்று சுவிஸ் அரசு மீது இவ்வாறான கருப்பு பணத்தை பதுக்கும் முறைக்கு எதிராக வழக்கு போடவேண்டும். [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக அடிச்ச காசும் உழலில் கிடைத்த காசும்தானே போனாபோகட்டும் , <_<

கஸ்ரப்பட்டு வேர்வை சிந்தி உழைத்த காசு ஒருபோது வீண்போகாது . :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடியாவர் தான் மிகவும் கஸ்டப்பட்டு சம்பாதித் செல்வங்களையெல்லாம் தனது வீட்டுத்தோட்டத்தின் வேப்பமரத்தின்கீழ் புதைத்துவைத்திருந்தார். அடிக்கடி அவ்வெப்பமரத்தின் நிழலில்போய் புதைத்த இடத்தினைக் கவனித்துவருவது அவரது வழக்கம். ஒருநாள் என்ன நினைத்தாரோ தெரியாது, தான் புதைத்துப் பாதுகாக்கும் பெரும்செல்வம் பத்திரமாக இருக்கின்றதா என அறிய, அவிடத்தைத் தெண்டிப்பார்கையில் அச்செல்வம் அவ்விடத்தில் இல்லாது மிகவும் அதிர்ச்சியும் மனவேதனையுமடைந்தார். இவரது கவலையைக் கவனித்த அவரது நண்பர் விடையம் என்னவெனக் கேட்டார் குடியானவரும், தனக்கு நேர்ந்த விடையத்தைக் கூறினார். நண்பர் அதற்கு, கவலைப்படாதே, இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை நாளையும் நீ அவ்விடத்துக்குப் போ, போய் புதைத்து வைத்த இடத்தினைப் பார் ஆனால் ஒரு விடையம் உனது செல்வம் களவு போகவில்லை புதைத்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றது என மனதில் நினைத்துவிடு அவ்ளவுதான் எனக் கூறினார். இதுபோன்றதே சுவிஸ் வங்கியில் இட்ட இந்தியர்கள் பணமும். கோவிந்தா கோவிந்தா. இரு பணமும் எதற்கும் உதவிடப்போவதில்லை. புலம்பெயர் தேசத்து தமிழர்களது பெட்டிகளில் உறையும் பொடிவிளக்கணம் செய்கூலி சேதாரம் கலந்த, ஆபரணத்தின் எங்கோ ஒரு பகுதியில் பொறிக்கப்பட்ட 22 எனும் எண்ணுடன் இருக்கும் தரங்குறைந்த தங்க(?) நகைகளைப்போல்.

[size=4]மேற்குலக நாடுகளில் வருமான வரி திணைக்களம் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவதாலும் சட்டங்கள் ஓரளவுக்கு சமமாக பார்க்கப்படுவதாலும் கருப்புப்பணம் குறைவாக உள்ளது. [/size]

[size=1]

[size=4]கனடாவில், வருமான வரி செலுத்த (இல்லை மறைக்கும்) ஒருவர் பற்றி இன்னொருவர் மறைமுகமாக (நண்பர், உறவினர் இல்லை தெரிந்தவர்) கூறலாம். இல்லை ஒருவர் தானாகவே முன்வந்து தனது கருப்பு பணம் பற்றி வருமான வரை திணைக்களத்திற்கு கூறி வரியை கட்டலாம். [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை ஒருவர் வறியவராக இருந்து வருமான வரி கட்டாவிட்டால் அவரை சின்னா பின்னமாக்கி விடுவார்கள். ஆனால், பணம் உள்ளவர்கள் நல்ல கணக்காளர்கள், சட்டத்தரணிகள் என உதவிகளை நாடி ஓரளவிற்கு தப்பித்து கொள்ளுவார்கள். [/size][/size]

  • 9 months later...

பணச்சலவை


கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.

 

இந்த வங்கிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அல்லது அனைத்துத் தனியார் வங்கிகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். பொதுத்துறை வங்கிகள் இச்செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது குறைவாக இருக்கலாம். அல்லது ஒருசில அரசியல்வாதிகளுக்காக மட்டும் பொதுத்துறை வங்கிகளின் கதவுகள் இதற்கெனத் திறந்திருக்கலாம்.


நம் நாட்டில் எக்கச்சக்கமான கருப்புப் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. (1) ரியல் எஸ்டேட் துறை, (2) அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெறும் லஞ்ச, ஊழல் பணம், (3) கடத்தல், திருட்டு, கஞ்சா, கொலை, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கப்படும் கருப்புப் பணம், (4) சினிமாத் துறையில் புழங்கும் பெருமளவு பணம், (5) தொழில் நிறுவனங்கள் இரண்டு கணக்குகள் வைத்துச் சம்பாதிக்கும் கருப்புப் பணம் என்று பலதைச் சொல்லலாம்.

 

ரிசர்வ் வங்கி இந்தக் கருப்புப் பணத்தின்மீது அழுத்தம் தரத் தர, இதனை வெள்ளையாக ஆக்குவதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும். அதைத்தான் இந்தத் தனியார் துறை வங்கிகள் செய்கின்றன.


இந்தக் கருப்புப் பணம் நாட்டைவிட்டு வெளியே போய், பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்னும் முறை வழியாக இந்தியாவிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்று சுப்ரமணியன் சுவாமி கூறுகிறார். இந்த முறையைக் கொண்டுவந்தது பாஜக ஆட்சியின்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்த காலத்தில் என்று ஞாபகம்.

 

இதற்கெல்லாம் முன்னர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்து ஒருமுறை அரசுக்கு வரி கட்டிவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றார். அதன்படிக் கொஞ்சம் பணம் வெளியே வந்தது. ஆனால் மிகப் பெரும் தொகை வெளியே வரவே இல்லை.

சில அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. கருப்புப் பணம் இருக்கும்வரையில் கருப்பை வெள்ளையாக்கும் ஆசாமிகள் வந்துகொண்டே இருப்பார்கள்.

 

 

என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?

1. ரியல் எஸ்டேட் டிரான்சாக்‌ஷனில் ஸ்டாம்ப் கட்டணத்தையும் லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரியையும் கடுமையாகக் குறைக்கலாம். அதன்பிறகும் பொய்யாகப் பணத்தைக் குறைத்துச் சொல்பவர்களுக்குச் சிறை தண்டனை என்று சட்டத்திருத்தம் செய்யலாம். உதாரணமாக ஸ்டாம்ப் கட்டணத்தை வெறும் 1% என்றோ அல்லது 0.5% என்றோ ஆக்கிவிடலாம். தமிழகத்தில் 12% என்று இருந்தது இப்போது 8% என்று ஆகியுள்ளது. இதுவே மிக அதிகம். அதேபோல வீடு விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு 2% வருமான வரி கட்டினால் போதும் என்று சொன்னால் பெருமளவு கருப்புப் பணம் ஒழிந்துவிடும். இன்று கேபிடல் கெயின்ஸ் வரி (இண்டெக்சேஷனுக்குப் பிறகு) 20% என்று உள்ளது. (அல்லது உடனேயே அந்த லாபத்தை இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்யவேண்டும், அல்லது குறிப்பிட்ட சில கடன்பத்திரங்களை வாங்கி வரித்தொல்லையிலிருந்து மீளலாம்.) காசோலை, வரைவோலை வாயிலாக மட்டும்தான் ரியல் எஸ்டேட் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யமுடியும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

 

 

2. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலை என்ன செய்வது என்று ஒரு வரியில் சொல்வது மிகக் கடினம். எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.


3. அரசியல் கருப்புப் பணம் போலவே, கெட்ட காரியங்கள்மூலம் சம்பாதிக்கும் பணமும் கருப்பாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்புள்ளது. வரி கட்டி, வெள்ளையாகப் பணம் வைத்திருக்கும் கெட்ட காரியர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலர் லெஜிடிமேட் கம்பெனிகளையும் கூடவே வைத்து பணத்தை உள்ளே வெளியே செய்துகொண்டிருக்கலாம். அனைத்துவித கிரிமினல் தண்டனைகளுடன் அந்தக் கெட்ட காரியங்களைச் செய்பவர்களுடைய சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் இங்கு நல்ல பலன் கிடைக்கலாம்.

 

4. சினிமாத் துறையை நிஜமாகவே ஒழுங்குபடுத்த முடியும். அரசு மனது வைத்தால். இதுதான் உள்ளதிலேயே மிகவும் எளிதான ஒன்று. ஆனால் சினிமாத் துறையினரின் பலம் காரணமாக அவர்களுக்கு எந்தச் சிக்கலும் நேர்வதில்லை. தனிப்பட்ட முறையில் நடிகர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடப்பதாக ஒரு செய்தி வரும். அப்புறம் எல்லாம் அடங்கிவிடும். ஒவ்வொரு படக் கம்பெனியும் செய்யும் ஒவ்வொரு துண்டு துணுக்குச் செலவையும் ஒழுங்காக ஆடிட் செய்தாலே போதும். தவறு செய்பவர்களைத் தண்டிக்க என்று தனியான வருமான வரி தீர்ப்பாயங்கள் இருந்தாலே பிரச்னை ஓவர்.


5. கொஞ்சம் கஷ்டமான இடம் இது. ஏனெனில் இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் - சிறு கடைகள் முதல் அம்பானி வரை - மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வருமான வரித் துறையில் பல லட்சம் பேரை வேலைக்கு எடுத்தால்தான் இங்கு உருவாகும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இதன் சாத்தியக் கூறுகள்மீதும் எனக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது.

 

வங்கிகளை நெருக்கிப் பிடிப்பதன்மூலம் அவர்கள் பணச்சலவை செய்வதை நிறுத்தலாம். அப்படியானால், அந்தக் கருப்புப் பணம் அதற்கான தனியான பொருளாதாரச் சுற்றில் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். கருப்புப் பணத்தின் ஊற்றையே ஒழிப்பதுதான் (அல்லது குறைப்பதுதான்) சரியான தீர்வு.

 

http://www.badriseshadri.in/2013/03/blog-post_14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.