Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழம் குறித்து ஜெயலலிதா..

Featured Replies

நாரதர்

ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.

ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.

அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப

வசம்பர் யாழ்ப்பாணம் பற்றிய பதிவை யாழ்களத்தில் பல மாதங்களுக்கு முன்னரே இட்டு இருக்கிறேன்.... அதுவும் இதே விக்பீடியா தமிழில் இருந்து சுட்டு..... ( உதவி செய்ததும் என்னுடன் கூட இருந்ததும் அகிலன்)

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6493

அப்போது நாங்கள் படித்த விடயம்தான் நாரதர் போட்டது...!

முதலில் வசம்பர் பொது அறிவை வளர்பது நல்லது... சுற்றி பலவிடயம் நடைபெறுகிறது... ஆராய வேண்டி பல விடயம் இருக்கிறது....

இங்கே ஈழம் என்பது சிங்களச் சொல் என்று அகிலன் எழுதிய தவறைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அது புரியாமல் தலாவும் ஏன் புலம்புகின்றாரோ??

அது சரி விளுந்தனீர் இப்ப மீசையில மண்பட இல்லை எண்டுறதுபோலகிடக்கு.... உப்பிடி பலபேரைப்பாத்திட்டம்.... :lol::lol::lol:

தலா

தலைகால் தெரியாமல் புலம்புவதை நிறுத்தும். விக்கிபீடியாவின் தகவலை இணைத்த நீரே மேலே இருக்கிற தகவல்களில் பிழை இருக்கலாம். சரியான தகவல் தெரிந்தோர் தயவு செய்து திருத்த உதவவும்...

காலப்போக்கில்இ பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது.ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல் இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.

வசம்பு இதையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாக்களே.. ஈழம் இலங்கையைக் குறிக்கின்ற சொல்லாகத்தான் இருந்தது. ஆனால்.. நடைமுறையில் ஈழம் தமிழீழத்தின் சுருக்கசொல்லாகி விட்டது. (பல நாடுகளுக்கு இரண்டு பெயர் இருப்பதில்லையா..) இலங்கை அரசு கூட.. தனது அரச ஊடகத்துறைக்கு ஈழம் என்பது பிரிவினையை உணர்த்தும் சொல் என அறிவித்தது. அதனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அது வரை ஒலித்துவந்த.. ஈழம் என்ற சொற்கள் உள்ள பல பாடல்களை ஒலிபரப்பமுடியாமல் போனது. (உ+ம்) மீன் மகள் பாடுகிறாள்..

இதுக்குபிறகும் இல்ல ஈழம் எண்டால் இலங்கை தான் எண்டு சொன்னால்.. அன்ரன் பாலா சொன்னமாதிரி.. ஐயாக்கள்.. இது நீதிமன்றம் இல்ல.. சட்ட நுணுக்கங்களோடை உங்கடை விவாத திறமையை காட்ட.. நடைமுறையில என்ன நடக்குது எண்டு பாருங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு சொல்வது சரி! ஈழம் என்றது தொன்று காலம் தொட்டே வழங்கி வந்த பெயர்!! இலங்கையை சிங்களவர்களுக்கு சொந்தமானது. தமிழர்கள் எல்லாம் சிங்களவர் என்ற மரத்தைச் சுத்தி வழரும்படர் கொடிகள் என்று முந்தி ஆட்சி புரிந்த சந்திரிக்கா( முந்தி அம்மா என்று எல்லாம் மதிப்பு கொடுப்போம். ஆனால் எனி தேவையில்லைத் தானே! அவரின் ஆட்டம் முடிந்து விட்டது தானே. இப்போது மகிந்தாவிற்கு தான் கால் பிடிக்க வேணும்)சொல்லும்போது அதை ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். எனவே ஈழம் என்ற சொல் சிங்களவர்கள் பின்பற்றி வந்த பாளி மொழியில் இருந்து தான் வந்தது என்பதை அடித்துக் கூறுவோம்.

எம்மோடு நல் உறவாக இருக்கம் வசம்பு பொன்றவர்களை அவமதிப்பது இலங்கையின் இறைமையை அவமதிப்பதற்கு சம்ம் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் அம்மணிக்கு ஈழம் என்பது முழு இலங்கையைத் தான் குறிப்பதென்பது தெரியவில்லையா??

என்ன நேசன் உம்மை நீரே தேற்றிக் கொள்கின்றீரா??

முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.

அகிலன்

இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!! :lol::lol::lol:

அகிலன்

பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரியாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.

எங்கள் வசம்பு அவர்கள் எவ்வளவு அற்புதமாக மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கின்றார். அதை கௌரவிக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புலம்ப வேண்டாம்.

அரைவக்காடு

கற்றுக் கொள்ளுங்கள்

எடுத்தேன், கவிழ்த்தேன்

பொய் கூறுதல்

நழுவ வேண்டாம்

என்று இன்னாரென்ன தமிழின் அரிய சொற்களைப் பாவித்து, ஒரு பேராசிரியர் தகுதிளை நிருபித்துள்ளார். (யாரும் களவாக இந்தியாவில் சேட்விக்கட் வாங்கியதாக நினைக்க வேண்டாம். இந்தியாவிற்கான அந்த உறவு முறை வேறு)

தொடர்ந்து பல அரிய சொல்களைப் பாவித்து கட்டுரை வரைய வசம்புவை கௌரவிக்கின்றோம்.

இவர்கள் தேர்தல் காலத்தில் என்ன வேண்டுமானலும் சொல்வார்கள்

அப்பு மதனராசா

சும்மா சொல்லக் கூடாது நன்றாகத்தான் ஜால்ரா அடிக்கின்றீர். அரைவேக்காடு என்ற சொல்லை யார் உபயோகித்தது என்று பக்கத்தை முழுவதுமாக படித்துப் பாரும் தெரியும். அப்படி எழுதியதைத் தான் நான் சுட்டிக் காட்டி எழுதியுள்ளேன். கண்களில் ஒன்றும் கோளாறு இல்லைத் தானே.

தலா

தலைகால் தெரியாமல் புலம்புவதை நிறுத்தும். விக்கிபீடியாவின் தகவலை இணைத்த நீரே மேலே இருக்கிற தகவல்களில் பிழை இருக்கலாம். சரியான தகவல் தெரிந்தோர் தயவு செய்து திருத்த உதவவும்...

நான் அங்கு சொன்னது இதைவிட விளக்கமான விளக்கம் இருந்தால் வந்து தெளிவுபடுத்துங்கள் என்பது உமக்கு நான் விளக்கம் இல்லாமல் கேட்டதாக தெரிகிறதா...???

ஈழம் என்கின்ற பதம் தோண்ற காரணம் என்ன எந்த மொழியில் இருந்து வந்தது என்கின்ற ஆராச்சியை மொழியியலாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்களாலேயே சொல்ல முடியவில்லை... இதுக்குள்ள நீர் வந்து பாடப்புத்தகத்தில வந்தது... ஆசிரியர் சொன்னவர், சரியாய்தான் இருக்கும் எண்று சொல்லி கொள்கிறீர்.... அதை ஏற்றுக்கொள்ள மாட்டம் என்பவர்களை உமது பாணியில் தூற்றாமல் வேறவேலையைப்பாருமோய்...

இல்லை யாராவது சிங்களவனிடம் அவன் ஈழத்தவன், தன் நாடு ஈழம் எண்று எழுத்தில் வாங்கிவாரும்...! பாக்கலாம் ( இதுதான் நிதர்சனம்.) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவனோ புட்ட பற்றி கதைக்க இவங்கள் சோத்தை பற்றி கதைக்கிறாங்க... :roll: :roll:

ஒரு செய்தி வந்தா அதற்க்குரிய விமர்சனங்களை வைக்கலாமே! அதை விடுத்து தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாமே! :idea: :!: :!: :!:

நீங்க வேறயப்பா நிதர்சன்..! :twisted:

ஜெயலலிதா சொன்ன ஈழம் எண்ட பதம் பிழையாமில்லை அதுதான் விவாதம்... கருப்பொருளை அண்டித்தான் விவாதம் நடக்குது ஆக்கும்.... அதுவும் வசம்பண்ணா பாணியிலேயே.... 8) 8) 8)

ஈழம் என்றால் நாங்கள் தான்,பிறகு என்ன ஆராய்ச்சி.

எதிலுமே தளம்பல் நிலை.

ஈழம்+சிறீலங்கா =இலங்கைத்தீவு

இப்பகுதியில் ஈழம் , இலங்கை என்பவை தமிழ் சொல்லா என பலரும் சந்தேகத்தோடு கருத்துக்கள் எழுதியிருப்பதால் அச்சொற்கள் பற்றி இராம , கி அவர்கள் தனது பதிவு ஒன்றில் எழுதிய விளக்கம்.

தமிழ் சொற்கள் எந்த அடிச்சொல்லில் இருந்து உருவாகி இருக்கலாம் என பல கட்டுரைகளை அவர் தந்துள்ளார்.

இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.

இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.

ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம்.

நன்றி இராம கி.

http://valavu.blogspot.com/2006/03/blog-post_13.html

இதை தொகுப்பதில் உதவிய வசந்தனுக்கும் நன்றி.

அதற்கப்பால்

ஈழம் எனும் சொல் சங்க இலக்கியங்களில் இருந்து பாவனையில் இருக்கும் சொல், சங்க காலத்தில் சிங்களம் எனும் மொழியே தொன்றாத காலம்.

அப்படி இருக்கும் போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்குமோ எண்டது சந்தேகம் தான்.

  • 5 years later...

காலத்துக்கு ஏற்ற ஒரு செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற ஒரு செய்தி...

5 வருசத்துக்கு முந்திய தலைப்பை, தூசி தட்டி எடுத்து வைத்துக்கொண்டு....

காலத்திற்கேற்ற செய்தி சொல்லும் பனங்காயின் உள் நோக்கம்..... நன்றாகவே புரிகின்றது.

ஈழத்தமிழர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து எழுத வைக்கும் முயற்சியே அன்றி வேறில்லை.

எடுத்தவுடன் ஒருவரை எதிரியாகப் பார்க்காமல்.... முதல்வரின் நடவடிக்கைகளை ஈழத்தமிழர் அணுகுமுறையை சிறிது அவதானிப்பதே சிறந்தது. இப்போ... அவசரப் பட்டு எதிர்த்து விட்டு.... அடுத்த 5 வருசம் மட்டும், அடுத்த முதல்வர் வரும் வரை காத்திருக்க வேண்டாமே....

Edited by தமிழ் சிறி

காலத்திற்கேற்ற செய்தி சொல்லும் பனங்காயின் உள் நோக்கம்..... நன்றாகவே புரிகின்றது.

ஈழத்தமிழர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து எழுத வைக்கும் முயற்சியே அன்றி வேறில்லை

காலம் மாறினாலும் தமிழன் மாறவில்லை..

எல்லொரும் அடுத்தகூத்துக்கு விசிலடிக்க ரெடியோ.....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறினாலும் தமிழன் மாறவில்லை..

எல்லொரும் அடுத்தகூத்துக்கு விசிலடிக்க ரெடியோ.....

கூத்துப் பார்க்கத்தான் ஆவலாக இருக்கிறீர்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.