Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...அது சரி ஒன்று கேட்க வேண்டும் இப்பத் தான் ஊரில் புலிகளோ,போராட்டமோ இல்லை ஆனால் இன்னமும் அங்கிருப்பவர்கள் அகதியாய் இட‌ம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை எப்படி திட்டுவீர்கள்?

இது ஒன்று தான் நீங்க எழுதினதுக்க உருப்படியா இருந்திச்சு.. மற்றும்படி உண்மையைச் சொன்னா ரமிழ்ஸுக்கு பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும்..!

இன்னும்.. புலிகளில் புலனாய்வு வேலை செய்தன்.. புலிகளால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டன்... வன்னியை சேர்ந்தவன்.. வள்.. என்று தான் எங்கட லோயர் மார் கதை எழுதிக் கொண்டிருக்கினம். அதிலும்.. கதை எழுதிறவை.. சும்மா இல்ல.... பெரிய நாவல் எல்லாம் எழுதிக் கொடுக்கினம். புலியைப் பற்றி மட்டும் 5 பக்கம். ஆமி பற்றி 3 பக்கம். மிச்சம் 2 பக்கம். அதுதான் புலி செத்தும்.. இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில கிடக்குது. ஆனால் செத்த புலி.. இன்னும் நிறையப் பேரை வாழ வைக்குது..! இதற்கெல்லாம் அகதி ரமிழ்ஸ் எப்படித் தான் நன்றிக்கடன் செலுத்தப் போறாங்களோ...! :icon_idea::):rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 116
  • Views 11.2k
  • Created
  • Last Reply

நெடுக்ஸ், நீங்கள் குறை நினைக்காவிட்டால் உங்கள் தலைப்புடன் சார்ந்து ஒரே ஒரு கேள்வி முன்வைக்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்... ஈழத் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் புலம் பெயர் நாடுகளில் வதிவுரிமை பெற்ற பின்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை என்ற கவலையில் அவர்களை நோக்கி அக்கறையோடு எழுதப்பட்ட படைப்பா? அல்லது பொதுவாகத் திருமணமான பெண்கள் உணவுக்கட்டுப்பாடு இல்லாது இருப்பதால் எதிர் காலத்தில் பலவிதமான நோய்களை சந்திக்கவேண்டி இருப்பார்கள் என்று ஒரு விழிப்புணர்வோடு எழுதப்பட்ட படைப்பா?

[போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் நீங்கள் குறிப்பிடும் தலைப்பிற்குள் அடங்குகிறார்கள்... அதாவது சோற்றை சாப்பிட்டு தார்ப் பீப்பாக் கணக்குக்கு இருக்கிறார்கள், அதே நேரம் பல அகதியாக வந்து குடியேறியவர்களின் மனைவிமாரும் உணவுக் கட்டுப்பாட்டில் அவதானமாகவும் இருக்கிறார்கள்...

உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் எல்லோருக்கும் அவசியமானதொன்று என்பதை யாரும் மறுக்கவில்லை ஆனால் (தமிழ்) அகதியாக வந்தவர்களின் மனைவிமாரை மட்டும் குறிவைத்து தாக்குவது நியாயமானதா? பொதுவாக பெண்கள் என்றோ அல்லது இருபாலருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தால் பலரால் வரவேர்கபட்டிருக்கக் கூடிய பதிவு இது!]

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தைய...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

புலம்பெயர் மண்ணில் தானே இருக்கீங்க.. உங்கள் மகளையோ.. மகனையோ.. கூப்பிட்டு படிச்சுக் காட்டுங்கோ.. அவை சொல்லுவினம்...! ஏன்னா.. நாங்க வெளிக்கு மட்டும் தான்..தமிழர்கள்.. எங்களுக்க.. டமிழர்..! :lol::D:icon_idea:

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

அப்படியா.. அப்ப உங்க மகன் விழையாடப் போயிருக்கானா.. அதென்ன விழையாட்டு.. என்று ஒருக்கா தமிழ் அகராதில தேடிப் பார்த்திட்டு வந்து சொல்லுறீங்களா.. சுமங்களா ஆன்ரி..! :lol::D

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தையா...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

நெடுக்கரின் கவிதைக்கு நிறைய எழுதவேணும்.. ஆனால் இப்போ முடியல.. எனினும் சிறு வார்த்தை.. விடுதலைக்காக போராட விளைபவன் படிப்பதற்காக வெளிநாட்டை நாடமாட்டான்.. படித்துவிட்டு என்ன செய்கிறார்கள் நம்ம ரமிள்சுகள்? யாரோ ஒருத்தனுக்கு கீழதானே வேலை செய்கிறார்கள்.. முக்கி முக்கி ஓ ஓடிப் படித்து இவர்கள் என்னத்தை கண்டு பிடித்தார்கள்.. இவர்கள் எல்லாம் படிக்கிறது சமூகத்துக்கு சேவை செய்யவோ.. புதிய படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவோ இல்லை.. தகுதி தராதரம் என்று சில சான்றிதழ்களையும் சம்பளத்தையும் காட்டி சுளையாக சீதனம் அள்ளத்தான்.. அதுமட்டுமல்ல.. படிச்சனாங்கள்தானே.. அதனால சாதாரண வேலை செய்பவன் அகதி தஞ்சம் கேட்டவன் எவனையாவது தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் முகத்தை மற்றப்பக்கம் மிருப்பிக் கொண்டு போவார்கள்.. அதுமட்டுமா.. படிச்சாக்கள்தானே.. கட்டாயம் சாயிபாபா பக்தராகணும்.. மகளுக்கு வீண அல்லது பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கணும்.. மகன் என்றால் மிருதங்கம்.. அதுதான் லண்டன்லயும் அவுஸ்ரேலியாலயும் கன வீடுகளில நடக்குது.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு சோழியண்ணா. எல்லாம் சரி.. சோழியண்ணா.. சோத்து ஆன்ரிங்க பற்றி ஒன்றுமே சொல்லேல்லையே..! (ஜோக்ஸ்) :lol::D

எனக்குத் தெரிய.. ஒருவன் இருந்தான்.... அவன் படிக்க வந்ததே போராடத் தான்..! இப்ப போராடி வீரமரணமும் அடைஞ்சிட்டான்..! அவன் எல்லாம் அசைலம் அடிச்சுப் பிழைக்கல்ல பாருங்க.. அவன் எங்க.. நாங்க எங்க..! :icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

ஆன்ரி வந்து மட்ராஸ் தமிழ்,அது இப்போ சர்வதேச பாசையாகி விட்டது

எல்லாவற்றுக்கும் எம்மால் தீர்வு கண்டுவிடமுடியாது, இப்போது நல்ல தீர்வு என்று கொண்டாடப்படுவது நாளை ஒருபெரிய அழிவுக்கு கொண்டுபோய்சேர்க்கலாம்.எதிர்ப்பாலாரை வேண்டுமென்றே பருமனாக்குவது, (தன்னைவிட்டு பிரிந்து போகாமல் பார்த்துக்கொள்வது) மனிதனில் இயல்பான ஒரு அம்சம் என்று எங்கோ படித்தேன்.(உண்மையோ தெரியவில்லை .....கல்யாணக்களை என்பது ஒருவிதத்தில் ஒரு சுற்று பெருப்பது).இப்போது தேடினேன் கிடைக்கவில்லை.பெண்கள் பாவம்.விட்டுவிடுங்கள்.

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

இதைத்தான் தமிழர் போராட்டங்களும் சொல்லி நிற்கின்றன....

தற்போது கூட யாழின் சில தலைப்புகள் சொல்லிகொண்டிருக்கிறது

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

Edited by சொப்னா

  • கருத்துக்கள உறவுகள்

சொப்னா.. நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தீர்கள்? :D படிச்சது எங்கே யாழ் இந்துவா?! :rolleyes:

யாழ் இந்து ஏன் கேவலமாகப் போய்விட்டதா? :lol:

வெளிநாட்டில் படிக்க வந்த சிலர் படித்த பின்பும் ஊருக்குப் போகாமல், வீசாவை நீடிக்க எவ்வளவு தகிடு தத்தோம் எல்லாம் போட்டு, நிற்க முயற்சிக்கிறார்கள். ஏன்? படித்த வழியில் வேலை கிடைக்காவிட்டாலும் கூட, வேறு வேலைகளும் செய்கிறார்கள். ஏன்?

எல்லாமே பொருளாதார நன்மைக்காகத் தான். நாம் முன்னேற வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் விருப்பம். இதை குறை சொல்லமுடியாது.

"திரைகடலோடியும் திரவியம் சேர்" என்று சொல்லிவைத்தார்கள் எம் முன்னோர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

சொப்னா.. தாயி.. நீங்க சொலுறதெல்லா நெஜம் தாங்க. பட்.. ரெம்பவே உணவு கிடைக்குதுண்ணுட்டு.. சாப்பிடுறாங்க பாருங்க.. அங்க தாங்க.. வெயிட் போடுறது அப்புறம் கொலஸ்ராலுன்னு.. . பிரச்சனையே ஸ்ராட் ஆகிடுது. அப்புறது அது சக்கரவியாதின்னு... காட் பிராப்பிளமுன்னு.. போயிக்கிட்டே இருக்கும்..!

நம்மள பொண்ணுங்க.. கிறாஸ் பண்ணலா.. ஆனா குளோஸ் பண்ண முடியாது. வகுந்திடுவமில்ல வகுந்து..! உங்க சப்போட்டுக்கு தாங்க்ஸ்.. சொப்னா..! :):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.