Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்பு விவகாரம்: ஐ.நாவை நோக்கி அமெரிக்கா - பிரான்ஸ் - ஜேர்மனியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Featured Replies

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில், நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு விவகாரத்தினை, ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லும்பொருட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயங்களுக்கு நோக்கிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்களை ஒருங்கு செய்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நில அபகரிப்பினை மையப்படுத்தி மனுங்களையும் ஐ.நா அதிகாரிகளிடம் கையளித்திருந்தது.

http://youtu.be/qZ3fM22ptgQ

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தாயக உறவுகளுக்கு தோழமையுணர்வினை வெளிப்படுத்தவும், தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் வகையிலும் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னாலும், பிரான்சில் ஐ.நா நிறுவனங்களில் ஒன்றான UNESCO நோக்கியும், ஜேர்மனியில் பொன் நகரில் உள்ள ஐ.நா காரியாலயத்திற்கு முன்னாலும், இக் கவனயீர்ப்பு போராட்டங்கள் சமவேளையில் இடம்பெற்றிருந்தன.

தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் யூன் 26ம் நாள் இடம்பெற்ற போராட்டங்களுக்கு சமாந்திரமாக, அதேநாளில் புலத்திலும் இப்போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

landagf01.JPG

landagf02.JPG

landagf03.JPG

landagf04.JPG

landagf05.JPG

landagf06.JPG

landagf07.JPG

landagf08.JPG

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி.. நாடு கடந்த தமிழீழ அரசையும் திட்டி திட்டி.. அதனையும் செயல் இழக்கச் செய்தாச்சுப் போல..!

ஆக இவ்வளவு பேருக்குத்தானா.. தாயகப் போராட்டத்தை பிழைப்புக்குப் பயன்படுத்தி.. 10 இலட்சம் பேர் அசைலம் அடிச்சு வாழிர இடத்தில..... தாயக ஆக்கிரமிப்பில அக்கறை...!

அப்ப இஞ்ச எல்லாம்.. வாய் தான் போல. நீ போறனியோ என்று கேள்வி கேட்பினமாக்கும்.. தாங்கள் போக மாட்டினம் போல...!! அதுசரி... வேலை.. குடும்பம்.. குட்டி.. பார்க்.. பீச்.. காதல்.. கத்தரிக்காய் செய்யனுமே...! அதுக்கே நேரத்தைக் காணல்லையாம்.. தாயகமாம் தாயகம்.. கண்டறியாத தாயகம். நாங்கள் என்ன அங்க போகவே போறம். நமக்குத்தான் இங்க சிற்றிசன் சிப் கிடைச்சிட்டில்ல.. எங்களுக்கென்ன... என்று நினைக்கினம் போல..! ம்ம்ம்ம் :(:icon_idea:

Edited by nedukkalapoovan

நாடு கடந்த தமிழிழ அரசை நட்டு கழண்டதாய் மாற்றிவிட்டார்கள் போலிருக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.