Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கவும்!. ஹெல உறுமய இந்திய பிரதமருக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

letter_seithy290612.jpg

[size=4]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரை குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜாதிக ஹெல உறுமய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் வண. ஒமல்பே சோபித்த தேரர் எழுதிய இக்கடிதம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தில் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]"தமிழர்களுக்கான தனி நாட்டை அடைவதற்காக நேரடி நடவடிக்கையில் தாம் ஈடுபடக்கூடும் என குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த உரையானது கோபமேற்படுத்துவதும், ஆத்திரமூட்டுவதும் தேசத்துரோகமானதுமாகும் என்பதையும், மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து மெதுவாகவும் உறுதியாகவும் நாங்கள் மீளெழும்போது அனைத்து வகையான இன குரோதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்வீர்கள்" என வண. சோபித தேரர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]"ஆத்திரமூட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய மௌனமாகவும் பதிலளிக்காமலும் இருக்க முடியாது. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். கருணாநிதி, தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் இந்தியாவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாநாடொன்றை நடத்தவுள்ளதாக நாம் அறிகிறோம். தமிழர்களுக்கு தனியான தாயகம் அமைக்கப்பட வேண்டுமென பிரகடனப்படுத்துவதை இது நோக்கமாக்க கொண்டுள்ளது. துன்பமான சம்பவங்களுக்கும் பயங்கரவாத யுத்தத்திற்கு வழிவகுத்த, தனிநாடு அமைப்பதற்கான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1976 ஆம் ஆண்டு தீர்மானத்தை நாம் நினைவுகூருகிறோம்.[/size]

[size=4]எமது மண்ணில் இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளை நாம் எப்போதும் அனுமதிக்க வில்லை என்பதை நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். நட்பு நாடு என்ற அடிப்படையில் அத்தகைய நடவடிக்கைள் இடம்பெறுவதை நாம் எப்போதும் அனுமதிக்கமட்டோம்" என அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த கட்சியும் மேற்கொள்வதை தடுக்குமாறும் இந்திய பிரதமரை ஜாதிக ஹெல உறுமய தலைவர் கோரியுள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கத்துக்குரிய சோபித தேரர் அவர்களுக்கு!

இந்தியப் பிரதமருக்கு நீங்க எழுதியுள்ள கடிதம் மிகவும் மரியாதையானதாகத்தான் இருக்குது. அதெல்லாஞ்சரி! இலங்கைத் தமிழர் தொடர்பான உங்கள் கொள்கையென்ன? என்கிற விசயத்தையும் சேர்த்து எழுதியிருந்தாற்தான் நல்லா இருந்திருக்கும். அத நீங்க சொன்னாத்தான் உங்கட சுயரூபம் முழுசாத் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வெளி வந்த சகுனி படத்தில் முதலமைச்சரிடம் கார்த்தி மனு எழுதி கொடுத்து போட்டு வெளியால வந்து றீ கடையில் அவர் கொடுத்த மனுவிலேயே அவர் பஜ்ஜி வாங்கி சாப்பிடும் காமெடியை கட்டிங்க் சேவிங்க் போடனும்..

டிஸ்கி:

உள்ளூர் மாட்டுக்கே விலை காணோம் இங்க .. அசலூர் மாட்டுக்கு விலை கேக்கிறாங்கப்பா.. :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.