Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒரு குழந்தை கடத்தலா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இப்படியும் ஒரு குழந்தை கடத்தலா..?[/size]

1861722915.jpg

ஒரு வயது குழந்தையை தங்கள் கைப்பையில்(Hand bag) திணித்து, அமீரகத்திற்குள்(UAE) போதிய பயண ஆவணங்கள் இல்லாமல் கடத்த முயன்ற குற்றத்திற்காக சார்ஜா சுங்க அதிகாரிகள், எகிப்திய பெற்றோரை கைது செய்துள்ளனர்.

முப்பது வயதான எகிப்திய தம்பதிகள் கடந்த சனிக்கிழமை(7-07-2012) 'சார்ஜா' விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய சுங்க சோதனையின் போது, வழக்கமாக் நடைபெறும் x-கதிரியக்க இயந்திரத்தில் தங்கள் கைப்பையினை சோதனைக்கு அனுப்பும்போது அப்பையினுள்ளே தெரிந்த குழந்தையின் உருவத்தைக் கண்டு சுங்க அதிர்காரிகள் அதிர்ந்தனர். மேற்கொண்டு விசாரணையில் அப்பையினை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு வயது குழந்தையை ஒளித்து வைதிருப்பதைக் கண்டனர்.

X-கதிரியக்க கருவியால் ஏற்படும் விளைவுகளை யாரும் அறியாமல் இப்படி செய்வது மிகவும் அபாயகரமானது என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழாக்க மூலம்:

http://gulfnews.com/news/gulf/uae/crime/parents-try-to-smuggle-baby-into-uae-in-hand-luggage-1.1046300

டிஸ்கி:

ஒரு சாதாரண பாமரனுக்கே தற்பொழுது விமான நிலைய சோதனை முறைகள் பற்றி தெரிந்திருக்கும் போது, இப்படியும் சில எகிப்தியர்கள்...!

ம்ம்..கொடுமையப்பா...! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:blink: :blink: :blink:
:o :o :o
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை உயிருடன் காப்பாற்றப் பட்டது மகிழ்ச்சியே....

இருக்கின்ற முஸ்லீம் நாடுகளுள், எகித்தியரை புத்திசாலிகள் என்று நினைத்திருந்தேன். இனி, அந்த எண்ணத்தை கைவிட வேணும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரண பாமரனுக்கே தற்பொழுது விமான நிலைய சோதனை முறைகள் பற்றி தெரிந்திருக்கும் போது, இப்படியும் சில எகிப்தியர்கள்...!

ம்ம்..கொடுமையப்பா...! :rolleyes:

ராஜா வன்னியன்;

உங்களை பற்றி எதோ எதோ என்று நினைத்து வைத்திருந்தேன், இப்படி செய்து போட்டியளே :blink: ..எகிப்த்திலும் பாமரன் இருக்கிறன், பாரமரன் என்கிறவன், எப்பவவும் கந்தசாமியும், முடியாண்டியும் அல்ல. :icon_idea: .

மற்றது; என்னக்கு இன்னும் தெரியாது பார்டரில் எப்படி எப்படி என்னென்ன வெல்லம் செக் பன்னுகிரவங்கள் என்று. கனடாவிற்கும் USA இடையில் பெரிய வர்த்தகம் நடக்கும், பெரியளவில் truck இல் தான் பொருட்டகள் கொண்டு செல்லுவார்கள். நண்பர் ஒருவர் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார் 3M USA , ஒருநாள் சொன்னார், தங்கட பொருட்டகள் ஒன்றும் போடரில் செக் பண்ணுவது இல்லை என்று. ஆனால் எதோ கதையில் நேற்று என்னுடைய பிரியபத்தினி சொன்னா, போடரில் மெட்டல் detector வைத்திருக்கிரார்கால்ம்- அவர் ஒருக்கா உந்த வேலைகளுக்கும் ட்ரை பண்ணினவ- அது காரோ, லாரி ஒ எல்லாம் பிச்சு பிச்சு கட்டுமாம் எல்லா விதமான மெட்டல் எல்லாவற்றையும். அப்ப நம்மாளையும் (3M ) பாமரன் என்றா சொல்லுகிறது?- இல்லாவிட்டால் அவற்றை கதையை கேட்ட நானா :(:icon_mrgreen:

மற்றது பிள்ளையை பாக்ஸ் வைத்த்தவர் பாமரன் அல்லல் பனியர் :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜா வன்னியன்;

உங்களை பற்றி எதோ எதோ என்று நினைத்து வைத்திருந்தேன், இப்படி செய்து போட்டியளே :blink: எகிப்திலும் பாமரன் இருக்கிறன், பாமரன் என்கிறவன், எப்பவும் கந்தசாமியும், முடியாண்டியும் அல்ல. .

மற்றது; என்னக்கு இன்னும் தெரியாது பார்டரில் எப்படி எப்படி என்னென்ன வெல்லம் செக் பன்னுகிரவங்கள் என்று. கனடாவிற்கும் USA இடையில் பெரிய வர்த்தகம் நடக்கும், பெரியளவில் truck இல் தான் பொருட்டகள் கொண்டு செல்லுவார்கள். நண்பர் ஒருவர் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார் 3M USA , ஒருநாள் சொன்னார், தங்கட பொருட்டகள் ஒன்றும் போடரில் செக் பண்ணுவது இல்லை என்று. ஆனால் எதோ கதையில் நேற்று என்னுடைய பிரியபத்தினி சொன்னா, போடரில் மெட்டல் detector வைத்திருக்கிரார்கால்ம்- அவர் ஒருக்கா உந்த வேலைகளுக்கும் ட்ரை பண்ணினவ- அது காரோ, லாரி ஒ எல்லாம் பிச்சு பிச்சு கட்டுமாம் எல்லா விதமான மெட்டல் எல்லாவற்றையும். அப்ப நம்மாளையும் (3M ) பாமரன் என்றா சொல்லுகிறது?- இல்லாவிட்டால் அவற்றை கதையை கேட்ட நானா

மற்றது பிள்ளையை பாக்ஸ் வைத்த்தவர் பாமரன் அல்லல் பனியர்

அய்யோ எரிமலை, என்ன இப்படி சொல்லிப்போட்டியள்? நானே இன்னும் ஒரு பாமரன் தான். :rolleyes:

x-கதிரியக்க சோதனை என்பது மிகச் சாதாரண சோதனை முறைதான். பலமுறை ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் பேசப்படுவதே. எல்லைகளில் நடக்கும் சோதனைக்கும், விமான நிலைய சோதனைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மேலும் இன்னொரு நாட்டின் விமான நிலையத்தில் எந்தவித சோதனையும் செய்யாமல் ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாட்டவர் நுழைய முடியும், அதாவது முழுப் பூசணிக்காயை சோற்றில் எளிதாக மறைத்து கொண்டு செல்ல முடியும் என எண்ணுபவர்களும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கடினம், எரிமலை!

தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களிலிருந்து (இராமநாதபுரம், தூத்துக்குடி) வரும் மூக்கன், சொக்க்ன எல்லாம் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருபவர்கள் கூட, வலு அவதானமாக விமான நிலைய சோதனை முறைகளை பற்றி விசாரித்தே வருகின்றனர்.

என்ன, சிலநேரம் சிறு கத்தி, நகவெட்டி, பொம்மை துப்பாக்கி மற்றும் திரவப்பொருட்களை கைப் பைகளில் தெரியாமல் எடுத்து வந்து சோதனையின் போது மாட்டுப் படுவதுண்டு.

சில சமயம் சோத்து ஆன்ரிகள்(?), மிளகாய் பொடி, சாம்பார் பொடி, சமையல் பொடி என கைப் பைகளில் அடுக்கி வந்து, பாதுகாப்பு சோதனையின் போது காவலர்கள் அவைகளை குப்பையில் வீசி எறிவதையும் பார்க்கலாம். இதை நானும் பலதடவைகள் திருச்சியிலும், சென்னையிலும் கண்டுள்ளேன்.

ஆனால் அரபிகளில் இன்றும் மெத்தப் படிததவர்கள் (அதாவது இந்திய பிராமணர்கள் என்றளவில் ஒப்பீடு செய்யப்படுபவர்கள்) என போற்றப்படும் எகிப்திய சமூகத்தில் இப்படியும் நபர்கள் இருப்பது என்பது நிச்சயம் ஆச்சரியமளிக்கக் கூடியதே!

இப்படியும் நடந்திருக்கலாம்:

ஒன்று, அந்த குழந்தையை எளிதில் கடத்திவிடலாமென தூக்க மாத்திரையை கொடுத்து துணியில் சுற்றி பையில் வைத்திருக்கவேண்டும்.. ஏனெனில் ஸ்கேன் செய்யும்போது அது அசையா பொம்பையாகவே தோன்றும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். துரதிஸ்டவசமாக குழந்தை அசைந்து இவர்களை மாட்டி விட்டிருக்கும்.

இரண்டாவது மத்திய கிழக்கு நாடுகளில் சோதனை செய்யப்படும், பொறிகளிலும், யுக்திகளிலும் அதை கையாளும் மனித மூளைகளின் மீதுள்ள அவநம்பிக்கையும், எளிதில் ஏமாற்றிவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையும் எகிப்திய தம்பதிகளுக்கு இருந்திருக்கலாம்.

மூன்றாவது உண்மையிலேயே மிக மிக பின்தங்கிய எகிப்திய பகுதியிலிருந்து முதல் தடவையாக வெளிநாடு வந்து இப்படி மாட்டுப் பட்டிருக்க வேண்டும்...ஆனால் இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு-ஏனெனில் இங்கே மத்தியகிழக்கு நாடுகளில், அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மேல்மட்டத்தில் இருக்ககூடியதும், அரசாங்க அளவில் செல்வாக்கு செலுத்தக் கூடிய மெத்தப் படித்த அரபிய சமூகமும், எகிப்து சமூகமே!

நான்காவது சில மனிதனுக்கே உரிய குறுகுறுப்பு, சந்தேகக் கண், எதையும் நுணுக்கமாக துருவி ஆராயும் தன்மை அல்லது அனிச்சை செயலால் அன்று சோதனை செய்த அதிகாரிக்கு தோன்றியிருக்கும். அத்தம்பதியரின் படபடப்பான பதிலாலும், விழியாலும், செய்கையாலும் (Body language) அதிகாரிகளுக்கு சந்தேகம் தோன்றி மாட்டியிருக்கலாம் (விதியின் சதி! :o)

.

Edited by ராஜவன்னியன்

எது எப்படி இருந்தாலும் பச்சை குழந்தையை இப்படி செய்வது மன்னிக்க முடியாத குற்றம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.