Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழர் ஒருவரின் வீடு தீக்கிரை, மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி! ( காணொளி)

Featured Replies

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவில் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீப்பிழம்பு காரணமாக மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வீடு பாரிய சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் வெளியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று வாகனங்கள் முற்றாக தீக்கிரையாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீல் அவெனியூ- மார்க்கம் றோட்டுக்கு அண்மையில் ஈஸ்ட்வல் ட்ரைவ்வில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான வீடே தீக்கிரைக்கானது. இதில் குழந்தைகள் உட்பட 12 பேர் இருந்தார்கள். இவர்களில் 6 பேர் விருத்தினராக தங்கியிருந்தார்கள் எனவும் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த மூவருக்குமே காயம் ஏற்பட்டதாகவும், இவர்களை வீட்டின் உரிமையாளரினால் வெளியேக் கொண்டுவரப்பட்ட பின் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அறிய வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் தீக் காயங்களுடன் ரொறொண்ரோ மருத்துவமனையிலும், மற்றைய இருவரும் புகையினை உட்சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் தாமதமாக வந்தனர் எனவும் இதனால் தான் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், மீட்புப்படையினர் வராமல் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வரவில்லை எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கார் தரிப்பிடத்தினுள் (காராஜ்) ஏற்ப்பட்ட தீ வெடிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் $ 900,000 ஆக இருக்கும் என மதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மார்க்கம் 7 ஆம் வட்டாரத்துக்குச் சேர்ந்த பகுதியாக இருப்பதனால் நகரசபைத் தலைவர் திரு லோகன் கணபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கள் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

[size=4]பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலமடைய வேண்டுதல்கள்.[/size]

[size=1]

[size=4]எம்மவர்களில் பலரும் (அநேகமானோர்) வீட்டு காப்புறுதி எடுப்பதில்லை. இப்படியான ஒரு துரதிஸ்ட சம்பவத்தின் பின்னர் அவ்வாறு வீட்டுக்காப்புறுதி இல்லாததால் வீட்டை திருத்த முடியாத நிலை இருக்கும். [/size][/size]

[size=1]

[size=4]முடிந்தவர்கள் ஆயுள் காப்புறுதி, வீட்டுக்காப்புறுதி - இரண்டையும் வைத்திருக்க வேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காப்புறுதிகள் இல்லாமல் சொந்தவீடும் வைத்திருக்கிறார்களா? :(

காப்புறுதிகள் இல்லாமல் சொந்தவீடும் வைத்திருக்கிறார்களா? :(

[size=1]

[size=4]பலருக்கும் தரப்படும் அறிவுரை ' வீட்டு அடைமான காப்புறிதி(வீட்டின் உரிமையாளர் இறப்பின் வீட்டு அடைமான தொகை கட்டப்படும்) ' இல்லை 'வீடு காப்புறுதி (நெருப்பு, நீர் சம்பந்தப்பட்ட) தேவையில்லை என்று. அந்த பணத்திற்கு 'ஆயுள் காப்புறுதி மலிவாக செய்யலாம்; என்று. [/size][/size]

[size=1]

[size=4]வீட்டு அடைமான காப்புறுதியின் மாதப்பணம் உங்கள் வீட்டு அடைமான வீட்டுத்தொகை குறையும்பொழுதும் குறைவதில்லை. எனவே உங்கள் வீட்டு அடைமானம் உங்கள் மொத்ததொகையின் ஐம்பது வீதத்திற்கு மேலாக உள்ளபொழுது வீட்டு அடைமான காப்புறுதியின் மாதப்பணம்கட்டுவது நல்லம். [/size][/size]

[size=1]

[size=4]'வீடு காப்புறுதி (நெருப்பு, நீர், வீட்டில் உள்ள நகைகள் .. சம்பந்தப்பட்ட) பணத்தை வாகனத்தின் காப்புறுதியுடன் இணைத்து செய்வது நல்லம். [/size][/size]

அந்த இடம் புது வீடுகள் என்று நினைக்கிறேன். இன்னமும் கடன் கட்டி முடித்திருக்க மாட்டார்கள். அவ்வாறாயின் குறைந்த பட்டசம் கடனுக்கு காப்புறுதியிருந்திருக்க வேண்டும். அது கட்டாயம். அந்த நிலையில் மிகுதிக்கும் வைத்திருந்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.