Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chithambaram_CI.png

[size=3][size=4]ஈழக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size]

[size=4]கருணாநிதியின் தமிழீழ கோரிக்கைக்கு இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.[/size]

[size=4]எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கருணாநிதி தலைமையிலான டெசோஅமைப்பின் மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.[/size]

[size=4]நேற்றைய தினம் அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் டொசோ மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size]

[size=4]தமிழகத்தில் தமிழீழ கோரிக்கை n;தாடர்பான நடவடிக்கைகள் ஆபத்தாகஅமையக் கூடும் என மத்திய அரசாங்கம் கருணாநிதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Sivajisilverjublee40.jpg

மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு.

சென்னை: "தமிழீழம்" என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

1985-ல் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது ஈழத்தில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு "தமிழீழம் நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை" என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை கருணாநிதி புதுப்பித்தார். இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் "தமிழீழம்" என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனால் டெசோ மாநாட்டை திமுக நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகங்களுக்கு இன்று திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கண்டனம்.

கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், அமைப்பின் பெயரே தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம்..அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நடத்தும் மாநாட்டில் தமிழீழத்துக்கு ஆதரவாக தீர்மானம் போடமாட்டோம் என்பது கோபுரம் இல்லாத கோவிலைப் போன்றது என்று கூறியுள்ளார்.

இலக்கு- இன்றைய தேவை.

திமுகவின் இந்த பல்டியை நியாயப்படுத்தியுள்ள டி.கே.எஸ். இளங்கோவன், எங்களது இன்றைய தேவை டெசோ மாநாடுதான். இலக்கு தமிழீழம் என்பதில் எந்த மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தனி ஈழம் அமைய கலைஞருடன் சேர்ந்து போராட தயார்: தா.பாண்டியன் [/size]

[size=4]இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு கூட்டம் ஆகஸ்டு 18 முதல் 21-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது.

இதில் புதிய வேலைவாய்ப்பு திட்டம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் ஒபாமா பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். [/size]

[size=4]இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதை ஏற்கனவே தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. ஆனாலும் மறுபடியும் மத்திய அரசு இங்கு பயிற்சி கொடுக்க அனுமதிக்கிறது. இது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.[/size]

[size=4]இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு நடப்பதாக அறிகிறோம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிற அரசு இருக்கும் வரை இது தொடரும். எனவே இப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அகற்றப்பட்டால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும். [/size]

[size=4]இலங்கையுடனான இந்திய உறவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதுபற்றி கருணாநிதியை சந்தித்த ப.சிதம்பரம் டெசோ மாநாட்டை நடத்துங்கள். ஆனால் தனிஈழம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று சொன்னதாக தகவல் வருகிறது. [/size]

[size=4]எனவே டேசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி கொடுத்தால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம். [/size]

[size=4]கொலை வழக்கில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை போலீசார் தேடுகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் விசாரணை செய்வதில் நாங்கள் எந்த தலையீடும் செய்வதில்லை. ஆனால் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இதில் தவறு செய்திருக்க மாட்டார் என்றே கருதுகிறோம்’’என்று கூறினார்[/size].

http://www.nakkheera...ws.aspx?N=79172

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை என்பது அடிப்படையில் இந்திய இருப்புக்காக இந்தியாவால் செய்யப்பட்ட கொலை என்பது நிரூபணமாகிறது.

ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளை சம்பந்தப்படுத்தி.. அதன் மூலம்.. அவர்களை அழித்து.. தமிழீழக் கோரிக்கையை இல்லாமல் செய்வதன் மூலம்.. இந்தியா தனது தென்பிராந்தியம் பாதுகாப்பாக இருக்கும்.. அதன் ஒருமைப்பாடு கட்டிக்காக்கப்படும் என்ற வகையில்.. அந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

ராஜீவ் கொலை அல்ல.. விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு உண்மைக் காரணம். புலிகள் தமிழீழக் கோரிக்கையில் வைத்திருந்த உறுதியும் அதற்காக தம்மையே தியாகம் செய்ய வைத்திருந்த மன வைராக்கியமுமோ.. இந்தியா மற்றும் அதன் பிராந்திய ஆதிக்கத்தை விரும்பிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள்.. புலிகளைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தக் காரணம். அதன் தொடர்ச்சியே புலிகள் மீதான தடைகள்..!

எமது அடிமை வாழ்வுக்கும்.. அழிவுக்கும்.. இழப்புக்கும் இந்தியா என்ற அந்த நான்கு எழுத்தே எப்போதும்.. காரணமாக இருந்துள்ளது. இருந்து வருகிறது.... என்பது இன்று வெளிப்படை உண்மையாகியுள்ளது. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயருக்கும் இந்தியா என்ற நாடே பொறுப்பு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல்டி மேல் பல்டி அடிக்கும் கருணாநிதி....................

[size=4]இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதை வலியுறுத்தி டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இப்போது அதுபற்றி எந்த முடிவும் எடுப்பதாக உத்தேசம் இல்லை. கடுமையான போரினால் பாதிக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாப்பதும் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதும்தான் முக்கிய குறிக்கோள். அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாநாட்டில் தலைவர்கள் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?

இந்த சமயத்தில் இது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆயுத கலாசாரம் உருவாகக்கூடாது என்பது என் கருத்து. அந்த அடிப்படையில் இந்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.

என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?

அதை எப்போதும் சொல்வேன்.

தனி ஈழ ஆதரவு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததா?

எந்த நெருக்கடியும் இல்லை.

மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று உங்களை சந்தித்த போது டெசோ மாநாடு குறித்து பேசினாரா?

கே.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனி ஈழம் பற்றி பேசினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி பேசமாட்டோம் என்கிறீர்களே?

டெசோ மாநாட்டுக்கு பல தரப்பினரும் வருகிறார்கள். அவர்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும், விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறி வரும் நிலையில் இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை தேவையா?

அதைபற்றி என்னை விட மாநில அரசுதான் அதிகமாக கவலைப்பட வேண்டும். நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துவீர்களா?

தனி ஈழம் வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.

மாநாட்டில் ஐ.நா. சபை நடவடிக்கை குறித்து தீர்மானம் வருமா?

அதுபற்றி எல்லாம் மாநாட்டுக்கு வருபவர்களை கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறதே?

இங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்பதே என் கருத்து. தி.மு.க.வை பொருத்தவரை இலங்கையில் ஆயுதப் போராட்டம் கூடாது என்பதே விருப்பம். அதற்கு காரணம் இலங்கை அரசிடம் ராணுவம் உள்ளது. போராளிகளை விட அவர்களுக்கு ஆயுத பலம் அதிகம். இறுதியில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல வந்தோம்.

காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனி ஈழத்தில் உடன்பாடு இல்லை. ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

மாநாட்டின் நோக்கம் பற்றி என்னிடம் கலந்து பேசி விட்டு கருத்து தெரிவித்து இருக்கலாம். அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.[/size]

http://www.nakkheera...ws.aspx?N=79173

Edited by nedukkalapoovan

... காட்டூனிஸ்ட் பாலாவின் ...

558412_3436668961812_377646631_n.jpg

... முன்பொருமுறை சரத் பொன்சேகா கூறியதுபோல் "கோமாளிகள்"!

தசாவதாரத்தை மிஞ்சும் ‘டெசோ’அவதாரம்! pdf_button.png printButton.png emailButton.png வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2012 12:17

[size=1]
[/size]

‘கோபாலபுரத்து குணாளனே...

அறிவாலயத்தின் பெருமானே...’

-இப்படி தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது முதல்வர் கருணாநிதியை கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து தாக்கினார் கவிஞர் வாலி.

ஒரு சிலரைக் கொன்று பல்லாயிரக்கணக்கானோரை வாழ வைப்பதற்காக, பெருமாள் தசாவதாரம் எடுத்ததாக கதை சொல்லப்படுவதுண்டு. ஆனால்... ஒருசிலரை வாழவைப்பதற்காக, ஒன்றரை லட்சம் பேரை கொன்றுகுவித்த கூட்டணிக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி இன்று எடுத்திருக்கும் ‘டெசோ’வதாரம்... அந்த கடவுளின்(!) தசாவதாரத்தையே மிஞ்சுகிறது!

புது சட்டை போட்டவன் எப்படி அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டே இருப்பானோ, அதேபோல புதிதாய் டெசோ வேஷம் போட்டிருக்கும் கலைஞர் அடிக்கடி அதுபற்றி தன் கைப்பட எழுதிக் கொண்டே இருக்கிறார்.

ஜூலை 12-ம் தேதி வியாழக் கிழமை வெளிவந்த முரசொலியில் முதல் பக்கத்தில் விடுதலைப் புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் கலைஞர் காட்டியிருக்கும் போங்கு... மன்னிக்க... பாங்கு ஐயய்யோ உருக வைக்கிறது.

ஒன்றரை லட்சம் பேரை தீர்த்துக் கட்டிவிட்டு அந்த பிணங்களையே உரங்களாக எடுத்துக் கொண்டு வளர்ந்த புற்களில் பனித்துளி ஒட்டியிருக்கிறது. உடனே அதைக் காட்டி, ‘இதோ பாருங்கள் என் கண்ணீர்’ என்று ஓலமிடுகிறார் கலைஞர்.

MURASOLI-july-12_copy.jpgஇலங்கையில் தொடரும் அநீதி... என்ற தலைப்பில் அவர் முரசொலியில் கொட்டியிருக்கும் கண்ணீர் என்ன?

“இலங்கையில் வவுனியா சிறையிலே நிர்மல ரூபன் என்ற விடுதலைப் புலியை அடித்துக் கொன்றுவிட்டனர் சிங்கள சிறை அதிகாரிகள். நிர்மல ரூபனின் உடல் முழுதும் ரத்தக் கறை படிந்திருப்பதாகவும் அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறந்த நிர்மல ரூபனை வவுனியாவில் தகனம் செய்ய போவதாக அவரது பெற்றோர் கூறினர். ஆனால்... இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குக் கூட அனுமதிதராமல் கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிர்மல ரூபனை தகனம் செய்துவிட்டார்களாம்.

மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது மாபாதாகம் இல்லையா?’’

என்று தனது போலிக் கண்ணீரை குடம் குடமாய் கொட்டியிருக்கிறார் கருணாநிதி.

அதுமட்டுமா.... இதுக்கெல்லாம் நீதி கிடைக்கவே டெசோ மாநாடு நடத்தப்போவதாவும் புளுகி... மன்னிக்க புளங்காகிதம் அடைந்திருக்கிறார்.

எப்படி எப்படி...

இன்று ஒரே ஒரு நிர்மல ரூபன் இறந்ததற்கு இந்தக் குதியாட்டம் போடும் கருணாநிதி அவர்களே...

அதே பூமியில் அதே மண் உரிமைக்காகத்தானே மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒன்றரை லட்சம் தமிழர்கள் போராடினார்கள். விடுதலைப் புலிகளுக்குக் கேடயமாக நின்று போராடினார்கள். அப்போது அவர்கள் மீது மக்கள் மீது, போர் அற்ற பகுதியில் ( நான்- வார் சோன்) என்று தாக்குதல் இல்லாத பகுதி என்று அறிவிக்கப்பட்டு அங்கே தமிழர்களை குவித்து... பின் ஒட்டுமொத்தமாக அவர்கள் மீது குண்டுபோட்டுக் கொன்றார்களே...

கருணாநிதி அப்போது உம் பேனா யாருக்கு முதுகு சொறியப் போயிருந்தது? சொக்கத் தங்கம் சோனியாவுக்கா? அல்லது மக்குத் தலைவன் மன்மோகன் சிங்குக்கா?

ஒன்றரை லட்சம் தமிழர்கள் மண்ணுரிமை மறுக்கப்பட்டு, மனித உரிமை கூட மறுக்கப்பட்டு எல்லா திசைகளில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு போர்க் களத்தில் பிணங்களாக வீழ்ந்தபோதும்...

karunanidhi-fasting-stunt_copy.jpgஇங்கே இரண்டு பக்கமும் இரண்டு பெண்டாட்டிகள், இரண்டு ஏர்கூலர்கள் என்று ஒன்றரை மணி நேர உண்ணாவிரதக் கூத்து நடத்தியவரே! மண்ணுரிமை பற்றி இன்று மட்டும் வாய்கிழிய பேச முடிந்த உம்மால் அன்று என்ன கிழிக்க முடிந்தது?

‘பிரபாகரன் பிடிபட்டால் அவரை போர் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவேண்டும்’

சொன்னது யார்? இப்படி சொன்னதின் அர்த்தம் என்ன?

‘பிரபாகரனைப் பிடிக்கவேண்டும்’ என்ற உமது உள்ளத்தின் முப்பது ஆண்டுகளாக அரிப்பை உமது மொழி சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தமிழக முதல்வராக இருக்கும்போது சொன்னீர்கள். இன்று மண்ணுரிமை பேசும் விடுதலைப் புலிகளுக்காக வேடக் கண்ணீர் வடிக்கிறீர்!

ஆஹா... ஆஹா....

காரணம் அது ஆளுங்கட்சிக் கண்... இது எதிர்க்கட்சிக் கண். பல கூட்டங்களில் உங்கள் கண்ணைப் பற்றி நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.

Karunanidhi-FAMILY_copy.jpg‘எனக்கு ஒருகண் தான்’ என்று!

அந்த ஒரு கண்ணிலும் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பார்வை... எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேறு பார்வையா?

ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒன்றரை மணிநேர உண்ணாவிரதக் கூத்தை ஏர்குலர்களுக்கு இடையே நடத்திமுடித்தபின்பு செய்தியாளர்கள் கருணாநிதியைக் கேட்கிறார்கள்.

‘போர் நிறுத்தம் என்று சொல்லி உண்ணாவிரத்ததை முடித்துவிட்டீர்கள்... ஆனால், இன்னமும் குண்டுவீச்சு நடப்பதாக செய்திகள் வருகின்றனவே?’

இந்தக் கேள்விக்கு கருணாநிதியின் பதில்.

‘மழைவிட்டாலும் தூவானம் விடுவதில்லை’

-எந்த மனித நாவாவது இப்படி ஒரு பதில் சொல்லுமா?

அங்கே ரசாயன குண்டுகள் போடப்பட்டு உடல் தீய்ந்து, அறுந்து, கிழிந்து, வெந்து, ரணப்பட்டு, புழுபுழுத்து மக்கள் ரத்தச் சேற்றில் கிடக்கிறார்கள். அது உமக்கு மழையா? அப்படியானால் கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் கொஞ்சம் ‘மழை’ பெய்யச் சொல்லலாமா?

ஆளுங்கட்சியாக இருக்கும்போது குண்டுகளைக் கூட மழை என்று வர்ணித்த பதவித் திமிர், அதிகார ஆணவம்....

இப்போது எதிர்க்கட்சியாக பின் மண்ணுரிமை காக்கும் மகாத்மாவாக மாறிவிட்டதா?

அதை நம்புவதற்கு என்ன நாங்கள் சுப.வீரபாண்டியனா, திருமாவளவனா? அவர்கள் கூட உள்ளே உம்மை நம்பவில்லை. வெளியேதான் காட்சி தருகிறார்கள்.

Karunanidhi--555_copy.jpgகருணாநிதி அவர்களே... இன்று உம்மால் உமது பிள்ளைகளையே ஒற்றுமைப்படுத்த முடியவில்லை. ஸ்டாலின் ஒருபக்கம், கனிமொழி ஒருபக்கம், அழகிரி ஒருபக்கம் என்று மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வலியிலிருந்து தப்பிக்க உங்களுக்கு ஈழம் என்ன பொழுதுபோக்கும் மனமகிழ் மன்றமா? அங்கே கொத்துக் கொத்தாய் தமிழர்கள் செத்துவிழுந்துகொண்டிருந்தபோது... உமது கோபாலபுரத்து வீட்டுவாசலில் நின்று பிரணாப் முகர்ஜி என்ன சொன்னார்?

‘போர் நிறுத்தத்தை நாங்கள் கேட்கவில்லை’

-உன் வீட்டு வாசலில் நின்று போர் நிறுத்தம் கேட்கவில்லை என்றாரே பிரணாப்.... அப்போது எதிர்த்து உம்மால் கேள்வி கேட்க முடிந்ததா? கேட்டீரா?

karuna-sreya_copy.jpgஇன்று அதே பிரணாப்பை குடியரசுத் தலைவர் ஆக்குவதற்காக.. தமிழ்நாட்டுக்கு முதலில் அழைத்துவருகிறீர்கள். தமிழனை அழித்தவனை தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து மரியாதை செய்கிறீர்கள்... செண்டை மேள வரவேற்பு கொடுக்கிறீர்கள்.

ஈழத்துக்கு இழவு மேளம் கொட்டியவனுக்கு சி.ஐ.டி. காலனி வாசலில் சென்டை மேள வரவேற்பு!

அவன் டெல்லி போய் சேர்வதற்குள் இங்கே டெசோ அறிவிப்பு!

யார் ஏமாறுவார்கள் கருணாநிதி இனி உம்மிடம்?

தலைவர் பதவியைத் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே உம் பிள்ளை ஸ்டாலினை ஏமாற்றியதுபோல... ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றலாம் என்று கறுப்புக் கண்ணாடிக்குள் கணக்கு போடுகிறீரா?

உமது டெசோவை கூத்தாடி மீசை என்று வர்ணித்தார் புலவர் புலமைப்பித்தன்.

கூத்தாடியாவது மக்களை மகிழ்ச்சிப்படுத்த மீசை வைப்பான். மீசையை எடுப்பான்.

நீங்கள் அரசியல் கூத்தாடிக் கூட அல்ல... அரசியல் கோமாளி. சிரிப்பு வரவைக்கும் கோமாளி அல்ல... வெறுப்பை வரவைக்கும் கோமாளி!

karunanidhi-selvi_copy.jpgதனி ஈழம் மலர்ந்திட தலைவர் அழைக்கிறார் என்று காசு கொடுத்து சுவர்களில் எழுதிவைக்கிறார்கள் உம் கட்சிக்காரர்கள்!

இதேபோலத்தான், ‘நான்கு நாட்களில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிய தலைவா’ என்று பளபளக்கும் காகிதத்தில் போஸ்டர்கள் அடித்து உனது உண்ணாவிரதக் கூத்தின்போது ஒட்டினார்கள் உமது தொண்டர்கள்.

நான்கு நாட்களா.. நான்கு ஆண்டுகள்... ஏன் உமது அரசியல்வாழ்வில் நாற்பது ஆண்டுகளாக ஈழம் ஈழம் என்று கூவிக் கொண்டுதான் இருக்கிறீர்களே தவிர, அதற்கென ஒரு கான்க்ரீட் ஸ்டெப் எடுத்து வைத்ததுண்டா?

கடவுள் நடித்த தசாவதாரத்தை கூட மக்கள் நம்புகிறார்கள். கமல் நடித்த தசாவாதாரத்தை கூட மக்கள் ரசிக்கிறார்கள்.

கருணாநிதி அவர்களே... இரண்டு கைகளிலும் ரத்தக் கறை... வாயில் தமிழர்களின் உரிமைப் பறை!

karuna_and_sonia_11_copy.jpgஇந்த உமது மிகக் கொடூரமான ‘டெசோ’வதாரத்தை தமிழர்கள் சகிக்க மாட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தை தூக்கிப் பிடித்து ரத்தம் ருசிக்க நினைக்காதீர்கள்!

ஈழம் ஒன்றும் நீங்கள் மதியம் போகும் சி.ஐ.டி. காலனியோ, இரவில் தங்கும் கோபாலபுரமோ, ஓய்வுக்குப் போகும் மாமல்லபுரமோ அல்ல!

அது... கொள்கை மறவர்களின் குருதியில் நனைந்து கிடக்கும் புண்ணிய பூமி!

-திலீபன்

http://www.tamilleader.in/news/2060-2012-07-13-07-28-13.html

முதுகெலும்பில்லாத கொலைஞர் கருநாய்நிதியின் டெசோ நாடகத்தை காங்கிரஸ் பயங்கரவாதிகள் முதலிலேயே குழப்பிவிட்டார்கள்!

கொலைஞர் ஒரு பொம்பிளைப் பொறுக்கி! இந்தாள் உருப்படியா செய்யக்கூடியது அது ஒன்றுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.