Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமையுள்ள இலங்கையருக்கு பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை தமது நாட்டிற்கு வேலைசெய்ய அழைப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையிலும் மாலைதீவிலும், விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் திறமையான சில மேதாவிகள் உள்ளனர்.[/size]

[size=4]இவர்கள் 'மேதாவி திறமையாளர் குடிவரவு பாதை' என்னும் விசேட ஏற்பாடு வழியாக பிரித்தானியாவில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.[/size]

[size=4]இந்த விசேட ஏற்பாட்டிற்கு அமைய ஆகஸ்ட் 2011 இல் ஏப்ரல் 2013 வரையான காலப்பகுதிக்கு 1000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின்கீழ் விஸாவுக்கு விண்ணப்பிப்போருக்கு வேலை வழங்குநரின் அனுசரணை தேவை இல்லை. இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருவோருக்கு முதலில் 3 வருடம் 4 மாதங்களுக்கு விஸா வழங்கப்படும்.[/size]

[size=4]தேவைக்கேற்ப விஸாக்காலம் நீடிக்கப்படும். 5 வருடங்கள் பிரித்தானியாவில் இவர்கள் தங்கிவிட்டால் நிரந்தர வதிவுரிமை கோர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

இந்தவாய்ப்பை பயன்படுத்தி சிங்களவன் அதிகமாக ஓடினாலும் அவனது சனத்தொகை பெருகியபடிதான் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சரியான தகவல் தானா?

பிரித்தானியாவில் வேலைகளை பாதுகாக்க வேண்டும் என ஆளும் பழமைவாதக் கட்சி 'Skills Migration' முறைமையினை அடியோடு நிறுத்தி விட்டது.

குறைந்த பட்சம், இங்கே மாணவர் விசாவில் வந்து கற்கும் மாணவரில் திறமையானவர்களுக்கு வழங்கிய வேலை விசாக்களையே நிறுத்தி விட்டார்கள். மேலும் மாணவர்கள் செய்யக் கூடிய பகுதி நேர வேலை அளவினையும் குறைத்து விட்டார்கள்.

மேலும் 'work permit' கூட குதிரைக் கொம்பு ஆகிவிட்டது. TCS, Wipro போன்ற இந்திய நிறுவனங்கள் இங்கேயே ஆட்கள் தேடுகிற நிலை.

கடந்த அரச காலத்தில் 188,000 பேர் இந்த நாட்டினில் 'Skills Migration' முறைமையினை பயன் படுத்தி வந்து விட்டனர் என கூப்பாடு போடும் இந்த அரசு மேலும் ஆக்களை உள்ளே விடும் தேவையோ, சாத்தியமோ இல்லை என்று தோன்றுகின்றது.

இவர்களை சட்ட ரீதியாக திருப்பி அனுப்ப முடியாது எனினும், இரு வருட காலத்தில் விசா நீடிப்புக்கு செல்கையில், 'Odd Jobs' செய்பவர்களை இனம் கண்டு விசா நீடிக்காமல், எந்த வேலைக்கு வந்தார்களோ அதை செய்யாமல் வேறு ஒருவரின் 'unskilled jobs' இனை செய்கிறார் என திருப்பி அனுப்புகின்றனர்.

விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமை கொண்டர்வர்களை வரவழைத்து வேலை கொடுக்கும் நிலையில் பிரித்தானிய பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைமை இல்லை என்பதே உண்மை.

யாராவது இந்த விசா எடுத்து தருகிறோம் என காசு பார்க்கலாம். கவனமாக இருப்போம்.

Edited by Nathamuni

இது ஒரு சரியான தகவல் தானா?

[size=4]ஆம், இது பற்றி கொஞ்சம் அவதானமாக இருந்தால் ஏமாறாமல் இருக்கலாம். [/size]

[size=4]இவர்கள் 'மேதாவி திறமையாளர் குடிவரவு பாதை' என்னும் விசேட ஏற்பாடு வழியாக பிரித்தானியாவில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.[/size]

முடிந்தவர்கள் [size=4]உயர்ஸ்தானிகராலயத்திற்கு[/size] ஒரு கோல் போட்டல் செய்தி பொய்யா மெய்ய என்று கூறிவிடுவார்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.