Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவ்விடத்தில் அதாவது முகப் புத்தகத்தில் இருந்து விலகிக்கொண்டதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது..அதில் சிலவற்றை எழுதப் போக மற்றவர்கள் என்ன சொல்வார்களோ,என்ன எழுதுவார்களோ என்ற எண்ணமும் கூடவே  இருந்தது சுண்டு.....சுயமாக முடிவு எடுக்க தெரியாததுகளின் கதையை,பேச்சை நம்பி மனம் நொந்து நிப்பவர்களின் நானும் ஒருத்தி...பறவா இல்ல மற்றவர்களை கஸ்ரப்படுத்தியாவது தாங்களும்,தங்களைச் சார்ந்தவர்களும் சந்தோசமாக வாழனும் என்று நினைத்து செயல்பட்டு இருக்கிறார்கள்...என்ன செய்வது மற்றவர்களின் இயலாமை மனிதனை எப்படி எல்லாம் திசை திருப்புகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்......

 

Edited by யாயினி

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது.

//////////////////

அப்பிடியே தேர்தல் மட்டும் நேர்மையா நடந்தா இவனுங்க தனிய போட்டி போட்டு வெற்றியடைய போற மாதிரில சவுண்டு விடுறானுங்க......

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி திராவிட கட்சிகளின் முதுகில சவாரி செய்றது .......பேரம் படியல ன்னா உடனே சவுண்டு விட்டு எங்களையும் திரும்பி பாரீர் என்று காட்டிக்கிறது.......

ஹையோ லெனின் மட்டும் உயிரோட இருந்தா தற்கொலை தான் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க.,வில், அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கிறது. உட்கட்சி தேர்தல் முடிந்ததும், கட்சியின் தலைமை பொறுப்பை, மீண்டும் கருணாநிதி ஏற்பாரா அல்லது ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை தாரை வார்த்து கொடுப்பாரா என்ற கேள்வி, ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களின் கேள்விகளுக்கு விடை தேடிக் கொடுக்கும் வகையில், ஸ்டாலின் குடும்பத்தினர், ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழுவில், ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன் சபரீஷ், மகன் உதயநிதியின் மைத்துனர் கிரீஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில், சென்னை அன்பகத்தில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும், மாலையில், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தலைமையில், முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.மேலும், பிரதமர் மோடியின் இணையதளத்தில் பணியாற்றிய, 10 பேர் கொண்ட குழுவினர், தற்போது ஸ்டாலினின் இணைய தளத்திற்காகவும் பணிபுரியத் துவங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, சொந்தமான ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தெரிவித்த ஆலோசனைப்படி, முதல் கட்டமாக, கருணாநிதியை எதிர்த்தும், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் கட்சியில் குரல் எழுப்ப, அவரின் ஆதரவாளர்கள் துவங்கியுள்ளனர்.

உட்கட்சி தேர்தலில், மாவட்ட செயலர்கள் சிலர், ஸ்டாலினுக்கு ஆதரவாக, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால், தி.மு.க., மீது பொதுமக்களுக்கு உள்ள அதிருப்தி நீங்கும்; நிலஅபகரிப்பு, ஊழல் புகாரில் சிக்கியவர்களை, கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தால், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு வங்கி அதிகரிக்கும் என, அந்த, 10 பேர் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, 'ஸ்டாலினுக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும்; அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை போல, அரசியலை விட்டு கருணாநிதி விலக வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 17 மாவட்ட செயலர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். அதில், முதல் நபராக, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தா.மோ. அன்பரசன் ராஜினாமா செய்துள்ளார் என்றும், அக்கடிதத்தை பெற்ற கருணாநிதி, 'ஆகட்டும் பார்க்கலாம்' எனக்கூறி அனுப்பியதாக தெரிகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ் எங்கள் உயிர் மூச்சு... காற்று, தண்ணீர், வெண்ணீர், புடலங்காய்...' என, வீர முழக்கமிடும் ஆசாமிகள் நம்மில் ஏராளம். இவர்கள் தமிழை வளர்க்க, என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என பட்டியல் போட்டால், பூஜ்ஜியத்திற்கு மேல் ஒரு எண் கூட எழுத முடியாது. ஒரு மொழி வளர, அம்மொழியில் எழுத்துகள் குறைவாக இருக்க வேண்டும் என்பது உலக அளவில் உள்ள மொழியியலாரின் ஒருமித்த கருத்து!

'தமிழ் மொழியில் மொத்தம், 247 எழுத்துகள்; இவற்றில், 131 எழுத்துகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில், 26 எழுத்துகளே உள்ளன. இந்த எழுத்துகள் எல்லாமே பயன்படுத்தப்படுகின்றன. இதே போல தமிழ் எழுத்துகளையும் குறைக்க வேண்டும்...' என்கிறார் கல்வெட்டுகளில் உள்ள தமிழை படித்து, ஆராய்ச்சி செய்யும் அறிஞர் ஒருவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுவைக்கு மாநில அந்தஸ்து- தீக்குளிக்க காங்கிரசார் ரெடியாக இருக்க வேண்டும்: 'நாசா' பரபரப்பு பேச்சு//////

முதல்ல இவர பிடிச்சு தான் தள்ளனும் தொண்டர்களே அதற்க்கும் தயாராக இருங்க......ஏற்கனவே தீயில கருகி போனவங்க மாதிரி தான்....ஆளு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜாதகப்படி தளபதியாருக்கு முதல்வராகும் யோகம் இல்லை என்று தெரிஞ்சு போச்சாம் தலிவருக்கு...... அதனால் தானாம் இப்போ கனி ஆனவரை முன்னிறுத்த தொடங்கி இருகின்றாராம்....

அமைப்பு செயலாளர் மாற்றத்தில் தன்னுடைய நேரடி விசுவாசியை நியமித்தவர் இப்பொழுது தனது பெயரில் இருக்கும் தொலைக்காட்சியின் இயக்குனராக கனியானவரின் தீவிர விசுவாசியான..... இளங்கோ வானவர் நியமிக்கபட்டிருக்காரம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. புலிகளின் சரிகளையும், பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே.

மனோ கணேசன்.....

இது தான் உண்மை புலிகள் விட்ட சரி பிழைகளுக்கு அப்பால் இன்று தமிழர் போராட்டம் சர்வதேச மயமாகி இருப்பது புலிகளால் தான் இது கொழும்பில் இருந்து அரசியல் செய்யும் மனோ கணேசனுக்கு புரிந்திருக்கு .... ஆனா சில புலம்பெயர் புன்னாக்குகளுக்கும் போராட்டங்களில் கூட இருந்தவர்களுக்கும் புரியவில்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா மிகப்பெரிய 12 நீர்மூழ்கி கப்பல்களை ஜப்பானிடம் இருந்து வாங்க இருக்கு.... எல்லா பக்கத்தாலையும் சீனாவுக்கு ஆப்பு இருகுது......

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா மிகப்பெரிய 12 நீர்மூழ்கி கப்பல்களை ஜப்பானிடம் இருந்து வாங்க இருக்கு.... எல்லா பக்கத்தாலையும் சீனாவுக்கு ஆப்பு இருகுது......

 

 

கப்பலை  வாங்கி

அவனை உசாராக்கிவிட்டு

இவை  குடி குட்டி என பொழுது   போக்க... 

 

இதுக்கு பதிலடி  கொடுக்க

இரவு பகலா சீனாக்காறன் நித்திரை கொள்ளான்....

12  சீனர்கள் போதும்

தண்ணிக்குள்ளால கயிறு கட்டியே  இழுத்தெடுத்துவிடுவார்கள் :lol:

எத்தனை  நீர்மூழ்கிகள் அவன் கைக்கு போகப்போகுதோ... :lol:  :D  :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A decision to buy submarines from japan would further entrench what Beijing seed as a creeping three way alliance between the US, japan and australia in the pacific, aimed at containing a growing china

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை வாங்கி

அவனை உசாராக்கிவிட்டு

இவை குடி குட்டி என பொழுது போக்க...

இதுக்கு பதிலடி கொடுக்க

இரவு பகலா சீனாக்காறன் நித்திரை கொள்ளான்....

12 சீனர்கள் போதும்

தண்ணிக்குள்ளால கயிறு கட்டியே இழுத்தெடுத்துவிடுவார்கள் :lol:

எத்தனை நீர்மூழ்கிகள் அவன் கைக்கு போகப்போகுதோ... :lol::D:D

இப்போ சீனாவுக்கு எதிரா ஜப்பான் தான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில இறங்கி இருக்கு அமெரிக்கா , இந்தியா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் ஒரே அணியில் சோ சீனாக்கு கஷ்டம் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமில்லாத போது அதற்காக ஏங்குவதும் , எல்லாம் வந்த பின் அதற்கு மதிப்பில்லாமல் போவதும்

பொருட்களிலிருந்து உறவுகள் வரை எல்லாவற்றுக்கும் எல்லாக் காலங்களிலும் பொருந்துகிறது.

சன் நியூஸ் நெல்சன் எழுதியது

எவ்வளவு அழகான வரிகள்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அறிவுரைப்படி மோடி ஆட்சி செய்ய வேண்டும் - திமுக மாணவர் அணி தீர்மானம்!

ஆமாம்..... அப்போ தான் 5 வருஷத்தில வீட்டுக்கு நடைய கட்ட சரியா இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்தநாளை கொண்டாடத் தயாராகும் அவரது ஆதரவாளர்கள் மற்றொரு போஸ்டரை தயார் செய்து வைத்திருக்கிறார்களாம். அதுதான் ‘ இளைஞர் அணியை மீட்க வரும் கும்கியே!' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க் கிராமம் நந்தமித்திரகம என்ற சிங்களப் பெயரில் மாற்றம்

சொறி லங்காவில் தேனும் பாலும் ஓடிட்டு இருக்கு....என்று விடுமுறைக்கு போயிட்டு வந்து சொல்லிட்டு திரியும் சில புலம் பெயர் புண்ணாக்குகளுக்கு இது சமர்ப்பணம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்காக நாம் கொடுத்துள்ள விலையை அறியாதோர் இல்லை. அதன் அறுவடைக்கான முதற்கட்டம் கனிந்து வந்துள்ளது.

இப்போதே அதைச் செய்யா விட்டால் கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்தச் சந்தர்ப்பம் ஒருமுறை தான், இன்னொருமுறை வரவே வராது.

2009ல் லட்சக்கணக்கானோர் கொட்டும் பனியிலும் வாட்டும் குளிரிலும் பல மாதங்களாய் வீதிகளில் தவம் கிடந்தோம். அழுது புலம்பினோம். அப்போது எதுவும் கிட்டவில்லை. ஆனால் தற்சமயம் ஒரு சந்தர்ப்பம், ஒரு சர்வதேச விசாரணை வந்துள்ளது.

ஒக்ரோபர் 30 வரைதான், இன்னும் சில நாட்கள் தான் நமக்கான அந்தச் சந்தர்ப்பம் இருக்கும். இன்றே செயலில் இறங்குவோம்.

உலகில் மிகக் கொடுமையான முறையில் மானிடத்திற் கெதிரான அதிகப்பட்சக் குற்றங்களைப் புரிந்து எதிரியால் வெற்றிகொள்ளப்பட்ட அந்தப் போரினால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராக கடந்த 5 வருடங்களாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எங்களுக்கு இருட்டில் கிடைத்த ஒரு குப்பி விளக்கைப் போல ஐநா மனித உரிமைச் சபையினால் முன்னெடுக்கப் படுகின்ற சர்வதேச விசாரணை உதவுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலாவது ஆணவத்தாலும் பொறாமையாலும் எதிரியைத் தப்பவிட்டுவிட்டு எதிரிக்குச் சாதகமாக தமக்குள்ளேயே போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள், ஒன்றிணைந்து செயற்படா விட்டாலும் எதிரெதிராகச் செயற்படாதிருக்க வேண்டுமென்பதே ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரார்த்தனையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுண்டல், இந்தச் சந்தர்ப்பத்தில்... எம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக விஜயகாந்த் 10 லட்சம் நிதி உதவி......

1000 விஷயங்களில் கழுவி ஊத்தினாலும் குடுப்பதர்க்கும் ஒரு மனது வேண்டும்......10லட்சம் நிதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு வேளை உண்ண முடியும்........

பாராட்டுக்கள் கப்டன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வெளிநாடுகள்ள விதமான விதமான உணவுகள் இருந்தாலும்......எங்கட புட்டையும் கருவாட்டையும் அடிச்சிக்க முடியாது......

ஒரு வெட்டு வெட்டியாச்சு......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வெளிநாடுகள்ள விதமான விதமான உணவுகள் இருந்தாலும்......எங்கட புட்டையும் கருவாட்டையும் அடிச்சிக்க முடியாது......

ஒரு வெட்டு வெட்டியாச்சு......

 

 

அடப்பாவி

வேலை  நேரத்தில் புட்டும் :D

அத்துடன் கருவாடுமா???

 

அப்படியே  கொஞ்சம் சாய்ந்தால் நல்லா  இருக்குமே.... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஆப் சோ வீட்ட தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஆப் சோ வீட்ட தான் :D

 

புட்டுக்கு தண்ணீர்  கேட்கும் :lol:

பக்கத்தில  தண்ணீர் சப்ளை  இருக்கட்டும்... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும்-சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்;-இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

என்று கடவுளர்களையும் உரிமையாய் கேட்ட

பாரதியின் நினைவுநாள் இன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிது தமிழினிது தமிழினிது நண்பா

தமிழளிக்கும் கவியினிது தவறெனிற்சொல் நண்பா

தமிழினிமை தேனினிமை அமிழ்தைவிட நண்பா

தமிழளித்த பாரதியின் புலமையுச்சம் நண்பா

தமிழ்படித்து தமிழ்குடித்து தமிழ்படைப்போம் நண்பா

தமிழ்பிடித்த தமிழரெல்லாம் இணைந்திருப்போம் நண்பா

தமிழ்கடலில் முத்தெடுக்க மூழ்கிடுவோம் நண்பா

தமிழ்முத்தை தரணியெல்லாம் ஒளிரச்செய்வோம் நண்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.