Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே அழகும் அதே இளமையோடும் இருப்பது நயன்தாரா தான்

#ஹாப்பி பர்த்டே நயன்.....

 

இதனை நான்.... வன்மையாக, கண்டிக்கின்றேன்.

ஜெனொலியா, திரிசா... போன்றவர்களும் இன்னும் அதே இளமையுடனும், அழகுடனும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விளைகின்றேன்.

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆஸ்திரேலியா பாராளுமன்றில் பேசிய மோடி அழகிய ஆங்கிலத்தில் மிகவும் ராஜதந்திரமாக நகைச்சுவையையும் ஆங்காங்கே கலந்து பேசி ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்களையே மெய் மறக்க செய்துவிட்டார்..... இத்தனைக்கு மோடி தான் பேசபோகும் விடையங்களை எழுதி கொண்டுவந்து படிக்க வில்லை மற்றைய தலைவர்கள் மாதிரி..... ஆனால் பேச்சு அந்த்த மாதிரி இருந்திச்சு.... அவப்போது ஆஸ்திரேலியா பாராளுமண்ட உறுப்பினர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரவித்த வண்ணம் இருந்தார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னைத் தலைமைச் செயலகத்தில் அமெரிக்க குழுவுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வின்போது மக்களின் முதல்வர் என்று ஜெயா டிவியால் அழைக்கப்படும் மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எல்லோரையும் விட பிரதானமாக தெரியும்படியாக வைத்துக் கொண்டு சிரித்தபடி சும்மா உட்கார்ந்து இருந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அங்கு பேசியது எல்லாமே அதிகாரிகள் தான். ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்து கொண்டு இருந்தார் ஓ.பி.எஸ்.//////

இப்போ நினைச்சிருப்பாரு பேசாம அரசியலுக்கு வந்ததும் பாக்க டீக்கடையோட நின்டிருக்கலாம்னு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி

வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்....

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!

துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்....)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!

பலமாகி நிற்கும் தூண்கள்!

(மாவீரர்....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 மீனவர்களை விடுதலை செய்துவிட்டு 50 MLA க்கள் தமிழ் நாட்டில் கிடைப்பார்கள் என்றால் அது பா ஜ கவின் பகல் கனவாகவே இருக்கும்.... பா ஜ க அதற்க்கு நீண்ட தூரம் பயணிக்கணும்.... நல்ல தலைமையை தமிழ் நாட்டில் உருவாக்கணும்....

ராஜா , சுப்பரமணிய சுவாமி போன்றவர்களை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டில் அதனால் கட்சியை வளர்க்க முடியாது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் ஸ்கெட்ச் போட்டு 100 அமித்ஷாக்கள் தமிழகத்துக்கு வந்தாலும் வட இந்தியாவின் அரசியல் செல்வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழகத்தில் காலூன்ற முடியாது.....வட இந்தியாவில் மதவாதம் என்பது மிக சுலபமாக எடுபடும்.....ஆனால் தமிழகம் அப்பிடி அல்ல......நல்ல பேச்சாற்றல் மிக்க தலைவர்கள் ....தமிழக மக்களிடம் உணர்வுபூர்வமாக ஒன்றி போன தலைவர்கள் தான் எடுபடுவார்கள்......கர்நாடகாவில் கட்சியை வளர்த்தது எடியூரப்பா போன்ற ஜாதி தலைவர்கள்.......ஆகவே சும்மா பா ஜ க தமிழகத்தில் காலூன்ற போகின்றது என்று அலறவேண்டாம்.......அதற்க்கு இன்னும் பல பல வருடங்கள் ஆகும்........இப்பொழுது அவர்கள் திராவிட கட்சிகள் மேல் ஒரு உளவியல் தாக்குதலை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள் அவ்வளவே......

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்புறம்?....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளார்!– ஏ.எச்.எம். அஸ்வர்////

அதுகெல்லாம் முன்னோடியே நீங்க தானே சார்.....ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சுதந்திர கட்சிக்கு தாவி உங்க கட்சிக்கும் உங்க இனத்துக்கும் துரோகம் செய்த நீங்க எப்பிடி மற்றவர்களை துரோகி எண்டுறீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலையில் குட்டவும் கால்களில் மிதிக்கவும் காறி உமிழவும் வாய்த்துப் போன பரிதாபத்துக்குரிய இனமாகிக் கிடந்த தமிழினத்திலிருந்து வீழ்ந்த விதையொன்றின் மூலம் தமிழர்மான உணர்ச்சிப் பெரு விருட்சமாகிய நாள். 27.11.1982. லெப். சங்கர் எதிரியின் முற்றுகை ஒன்றை உடைத்து உடலிடை ஊடறுத்துச் சென்றவரை வழி சிந்திய குருதியோடு தன் பாசறை சென்றவன் அன்று காத்தது துப்பாக்கியும் இயக்கத்தின் இரகசியங்களும்தான்.

ஆனால் இன்று அந்த வீரன் மூட்டிய நெருப்பு ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் முளாசி எரிவதோ பெருவீரமாக.

எத்தனை ஆண்டுகளாய்… எத்தனை ஆட்சியாளர்கள்… எத்தனை முறை பெரும் காட்டாற்று வெள்ளம் போல திரண்டு தமிழர் விடுதலைத் தீயை அணைத்துவிட முயன்றனர். முயல்கின்றனர். ஆனால் முடிகிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந்துக்கு ஒரு சவுந்தர்யா என்றால் சத்தியராஜ் கஷ்டப்பட்டு உழைச்ச பணத்தை எல்லாம் வீணாக்க ஒரு சிபிராஜ் .....

வரல்லனா விட்டிடனும் ...சும்மா அப்பா பேர கெடுக்கப்படாது நடிக்கிறம் என்ற பெயரில.......

‪#‎நாய்கள்‬ ஜாக்கிரதை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தமிழ் தேசியம் என்று பலராலும் வரையறுக்கப்படும் கட்டுமானம் தனது அடிப்படை கொள்கைகள், அரசியல் தேவைகள், போதாமைகள், மனோவியல் மாற்றங்கள், சமூகவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு தளங்களில் தனது நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்க்கவும் உறுதி செய்யவேண்டிய நிலையிலுமே இயங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

தமிழ் தேசியம் என்னும் சிந்தனை தனக்கென ஒரு மெல்லிய வரலாற்று பதிவை கொண்டுள்ளது உண்மை என்றாலும், இந்திய அரசியல் வரலாற்றில் அது தெளிவான வரையறைகளை கொண்ட இயக்கமாக இருந்ததில்லை என்றே கூறமுடியும். இந்தியாவில் வடநாடு தென்னாடு என்னும் மண் சார்ந்த அரசியல் கோட்பாடுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அது ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. மேலும் இந்திய விடுதலை உணர்வலைகள் தோற்றுவித்த பல்வேறு ‘தேசியமய’ மாற்றங்களினாலும் தமிழ் பேசும் மக்களிடையே ஆரிய-திராவிட போராட்ட அரசியல் சிந்தனை மேலோங்கியதாலும் தமிழ் தேசியம் என்னும் கோட்பாடு ஒரு பண்பாட்டு விழிப்புச் சிந்தனையாகவே இருந்து வந்துள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனிப்படி ஏனிப்படி

என வாழ்வின் சுழற்சிகளில் மாட்டி உழலாமல்

வரும் ஒவ்வொரு தோல்வியையும்

ஏணிப்படி ஆக்கிகொண்டால்

வானம் கூட எட்டும்

இல்லை என்றால்

வண்டு கூட திட்டும்

ஏதோ என்னால முடிஞ்சது

அப்போ நான் வட்டா ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி அடைந்திருந்தும் கூட தேர்தல் முடிவுகள் இறுதி நேரத்தில் எப்பிடி மாற்றப்பட்டது.....தேர்தல் ஆணையாளர் சிறைவைக்கப்பட்டு முடிவுகள் எல்லாம் எப்பிடி மாற்றியமைக்கப்பட்டது என்பதெல்லாம் அப்பொழுது அரசின் உயர்மட்டங்களில் இருந்த பலருக்கு தெரியும்.......

இத்தனை செல்வாக்கோடு இருந்த ஒரு இரானுவத்தளபதிக்கே மகிந்த சகோதர்களை அசைக்க முடியவில்லை.....கடைசியில் அவரை தூக்கி சிறையில் போடுமளவுக்கு......நிலைமை இருந்தது.........

அவருக்கே இந்த நிலைமை என்றால்.....இப்போ சுகாதார அமைச்சரா இருந்து கட்சி தாவி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்...மைத்திரிபால எல்லாம் மகிந்த சகோதரர்களுக்கு வெறும் ஜுஜுபி.......

இலங்கையில் ஆட்சிமாற்றம் என்பது அனைவரும் விருப்பமாக இருந்தாலும்.....ஜதார்த்தம் மீண்டும் மகிந்த சகோதரர்களே வருவார்கள்........

இந்தியாவில் இருக்கும் அதிகாரம் இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு இல்லை இலங்கையில் நீதிபதிகளில் இருந்து தேர்தல் நடாத்துபவர்கள் வரை இலங்கை ஜனாதிபதிக்கு கட்டுப்பட்டவர்கள்.......அவர்களை எப்பிடி கட்டுபடுத்த வேண்டும் என்ன செய்து அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மகிந்த சகோதரர்கள் அறியாததல்ல........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பின இளைஞனை கொன்ற குற்றச்சாட்டில் இருந்து வெள்ளையின போலீஸ் அதிகாரியை அமெரிக்க நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்ததை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பின மக்கள் வீதிகளில் இறங்கி நீதி வேண்டி போராட தொடங்கி இருகின்றார்கள் ஆங்காங்கே கலவரமும் நடைபெறுகின்றது.....

இந்த நீதி மன்ற தீர்ப்பு சொல்லி நிற்கும் செய்தி, என்னதான் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தாலும் இது வெள்ளையர்களின் நாடு என்பதனை.......

சமத்தும் , ஜனநாயகம் என்பவற்றை அடுத்த நாடுகளுக்கு போதிக்கும் அமெரிக்காவில் இனவெறி என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்றது......என்பது ஆச்சரியமான விடையம் இல்லை என்றாலும் அது இன்றையை நவீனத்துவ காலத்தில் இருப்பதுவும் அமெரிக்கா கறுப்பினத்தவர்களுக்கு இன்றும் நீதி மறுக்கபடுவதுடன் அவர்களை அடிமைகளாக பார்க்கும் கண்ணோட்டமும் இருந்து வருவது கவலைக்குரியதே......

அமெரிக்கா கறுப்பினத்தவர்களுக்கு தேவை மீண்டும் ஒரு மார்டின் லூதர் கிங் மாதிரியான தலைவர்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை/////

நாங்கள் இந்தியாவை நக்கலடிக்க முதல் எங்கள் வீட்டில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்யவேண்டும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா கடைசியில சசிகலாவ பின்னுக்கு தாளிட்டு அ தி மு க இளவரசியோட கைக்கு தான் போக போகுது போல.... இளவரசியோட மருமகன் ராஜராஜன் தான் திருச்சி இடைத்தேர்தலில் போட்டிபோடபோவதாக ஒரு கிசு கிசு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா இதுக்கு தான் நான் மரக்கறி சாப்பிடுறதில்லை.......

Australian vegetarians are physically healthier than meat-eaters but have more mental problems.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2)

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்

மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

பாசத்தில் எங்களின் தாயானான்..

கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2)

தேசத்தில் எங்கணும் நிலையானான்(2)

நிலை தேடியே வந்திடும் தலையானான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே.

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல

இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2)

தன்னின மானத்தை தான் மதித்தான் (2)

பகை தாவியே வந்திட கால் மிதித்தான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

இங்கொரு தாயகம் மூச்சென்றான்

தமிழ்ஈழமே எங்களின் பேச்சென்றான்(2)

வந்திடும் படைகளை வீசென்றான்-(2)

புலிவாழ்ந்திடும் வரையினில் தூசென்றான்..

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ்

வீடுகள் யாவிலும் மலரானான் (2)

படுகளம் மீதிலொரு புலியானான் (2)

பிரபாகரன் எங்களின் உயிரானான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே! மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

என்றுமே எங்களின் தளபதியே நீ

எங்களின் வானத்து வளர்மதியே(2)

இன்றுனக்கு ஆயிரம் சோதனைகள்-(2)

தமிழ் ஈழத்தை வாங்கும் உன் போதனைகள்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்

மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்

மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

#என்றும் எங்களின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய தலைவருக்கு.....எங்கள் தமிழ் ஈழத்தின் தலைமகனுக்கு.......பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ்
வீடுகள் யாவிலும் மலரானான் 
படுகளம் மீதிலொரு புலியானான் 
பிரபாகரன் எங்களின் உயிரானான்

  • கருத்துக்கள உறவுகள்

 

 


பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2)
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

பாசத்தில் எங்களின் தாயானான்..
கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2)
தேசத்தில் எங்கணும் நிலையானான்(2)
நிலை தேடியே வந்திடும் தலையானான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு மாவீரர் தினம் தலைவரின் பிறந்த நாள் வந்தாலே பைத்தியம் முத்திடும்.......புலி எண்டு பேர ஒருக்கா சொன்னா காணும்..... பைத்தியம் தெளிஞ்சிடும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவினுடைய பாரம்பரிய கட்சியான இந்திய காங்கிரசின் தலைவி சோனியா காந்தி இத்தாலியை சேர்ந்தவர்.... இப்பொழுது சேர்ந்து இனி காங்கிரசின் தமிழ் நாட்டு தலைவியாக போகும் குஷ்பூ ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்......

எப்பிடி பா இந்தியா உருப்படும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா மகிந்தாக்கு அதரவா கொடுத்த பதவிக்கு மேல கூவிட்டு இருந்த அஸ்வர் MPயோட பாராளுமன்ற உறுப்புரிமையை மகிந்தா தூக்கிட்டாராமே......அந்த பதவிக்கு மகிந்தாவின் உறவினர் ஒருவர் நியமிக்க பட இருக்கின்றாராம்......

என்ன தான் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிந்தாவுக்காக பேசி திரிந்தாலும் இவர்களை அவர்கள் மூன்றாம் தர பிரஜைகளாக தான் நடாத்துவார்கள்....... இனி அஸ்வர் எதிர் கட்சி பக்கம் தாவி மகிந்தாவை திட்டி தீர்ப்பார்..... அன்று தொடக்கம் அவர் செய்து வருவது இதை தானே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

600 மில்லியன் ரூபாவுக்கு தன்னை வாங்க எதிர்க்கட்சி முயற்சிக்கிறது என்கிறார் விமல் வீரவன்ஸ///

ஒரு 60 ரூபா கூட கொடுத்திருக்க மாட்டாங்க என்ன மாதிரி கதை விடுறார் பாருங்க......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆஸ்திரேலியா பிராஜவுரிமை வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்கு செல்ல இங்கிருக்கும் இந்திய தூதரகத்துக்கு அலைய தேவை இல்லை விசா வாங்க , உங்களுக்கான 30 நாள் விசா சென்னை விமான நிலையத்திலேயே கிடைக்கும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.