Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதம் எல்லா மதங்களையும் விழுங்கிச் சீரணிக்கும் எனக்கேட்கும்போது உலகக் கிண்ணத்தையே வென்ற ஆனந்தத்தில் மனம் துள்ளுகிறது, :D  :lol:  மதமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழரையும் அது விழுங்கிச் சீரணிக்கிறது என்பதை மறந்துவிட்டு...... :o  :o

உண்மை.. நாங்களும் மதம் மாற்றப்பட்டவர்களே.. இந்து மதத்தில் இருந்து பழையபடி சைவ மதத்திற்கு மாற வேண்டும்.. :o

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.

கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதம் எல்லா மதங்களையும் விழுங்கிச் சீரணிக்கும் எனக்கேட்கும்போது உலகக் கிண்ணத்தையே வென்ற ஆனந்தத்தில் மனம் துள்ளுகிறது, :D:lol: மதமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழரையும் அது விழுங்கிச் சீரணிக்கிறது என்பதை மறந்துவிட்டு...... :o:o

`தமிழர்’ என்றொரு இனம் உருவானபோது, `அவர்களிடம் எந்தவிதமான மதக்

கருத்துகளும் இல்லை’ என்று நீங்கள் சொல்வது நகைப்புக்கு இடமானது.

உலகில் எந்த இனம் பிறந்தபோதும், மதமும் கூடவே பிறந்ததில்லை.

பிற்காலத்தில், அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான், மதத்தின் வரலாறு.

அப்படித்தான் தமிழர்களும் இந்துக்கள் ஆனார்கள்.

சிந்துவெளி நாகரிகத்திலேயே தமிழர்களுக்கு இறை வழிபாடு இருந்திருக்கிறது.

இறைவழிபாடு உள்ளவர்களைத் தான் `மதம்’ என்ற சொல் ஒன்று சேர்க்கிறது.

`சைவர்கள்’ என்றும் `வைணவர்கள்’ என்றும் தனித் தனியாக அழைக்கப்பட்ட எல்லாரையும் ஒன்றாகச் சேர்த்துப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயரே `இந்து’ என்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் சொல்ல முடியாத அந்நிய மதத்தை சேர்ந்தவர்கள், தாய்மதம் திரும்புங்கள்

இந்து புராணங்களில் இந்து கடவுளர்கள் குறித்து சித்தரிக்கப்படும் அமானுஷ்ய கதைகளை குறித்து பல அரேபிய அடிமைகளும், அல்லேலூயா அடிப்பொடிகளும் கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் பொய், கட்டுக்கதை, இப்படியெல்லாம் நடக்குமா ? இவையெல்லாம் மூட நம்பிக்கை என்கிறார்கள்.

இந்துக்களின் மொத்த புராணங்களையும் நீங்கள் பொய் என்று நிரூபித்து விட்டால் கூட இந்து மதம் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அதன் அடிப்படைகள் புராணங்களை சார்ந்து இல்லை. அதன் சித்தாந்த செழுமையினாலும், பல மகரிஷிகளால் வெளிக்கொணரப்பட்ட சூத்திரங்களாலும் அசைக்க முடியாததாக இருக்கும்.

ஆனால் உங்கள் நிலை ? காரண அறிவால் விளக்க முடியாத ஆயிர‌க் கணக்கான சம்பவங்களை கொண்டிருக்கும் உங்கள் பைபிளையும், குரானையும் கட்டுக்கதை என்று ஒதுக்கிவிட்டால் உங்கள் மதத்தில் என்ன மிஞ்சும் ?

கன்னிக்கு ஒரு குழந்தை எப்படி பிறக்கும் என்று அறிவியல் ரீதியாக கேள்வி எழுப்பினால் மொத்த கிறிஸ்துவமும் படுத்துவிடும்.

எந்த சாட்சியமும் இல்லாமல் தன்னை தானே இறைவன் நியமித்த இறுதித்தூதர் என்று ஒருவர் சொல்லிக் கொண்டு வஹியாய் இறக்கிய சட்ட திட்டங்கள் எந்த நீதிமன்றத்திலும் எடுபடாது. காரண அறிவுக்கு பொருந்தாத இந்த ஒரு கேள்வியிலேயே மொத்த இஸ்லாமிய மதமும் படுத்து விடும்.

எஞ்சி நிற்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் நுட்பமான விவாதங்களினாலும், ஆழமான தேடல்களாலும், நிலைநிறுத்தப்பட்ட சனாதன தர்மமே !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி! பொதுபல சேனா குற்றச்சாட்டு/////

அப்பிடி போடு........

, இப்பிடியான பிரச்சாரத்தை தான் சிங்கள இனவாதம் முன்னெடுக்கும் என்பதனை நேற்றே சொல்லிட்டனே.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் கால் பதித்திருக்கும் தந்தி நிறுவனம் இலங்கையிலும் கால் பதிக்க போகின்றதோ என்னவோ.....அதான் இந்த திடீர் மகிந்தா விசுவாசம்......இல்லது தந்தி நிறுவனத்தில் இலங்கைக்கு வேண்டப்பட்ட யாரோ மிகப்பெரிய முதலீடு செய்திருக்கின்றார்கள் போலும்......

  • கருத்துக்கள உறவுகள்

`தமிழர்’ என்றொரு இனம் உருவானபோது, `அவர்களிடம் எந்தவிதமான மதக்

கருத்துகளும் இல்லை’ என்று நீங்கள் சொல்வது நகைப்புக்கு இடமானது.

உலகில் எந்த இனம் பிறந்தபோதும், மதமும் கூடவே பிறந்ததில்லை.

பிற்காலத்தில், அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான், மதத்தின் வரலாறு.

அப்படித்தான் தமிழர்களும் இந்துக்கள் ஆனார்கள்.

சிந்துவெளி நாகரிகத்திலேயே தமிழர்களுக்கு இறை வழிபாடு இருந்திருக்கிறது.

இறைவழிபாடு உள்ளவர்களைத் தான் `மதம்’ என்ற சொல் ஒன்று சேர்க்கிறது.

`சைவர்கள்’ என்றும் `வைணவர்கள்’ என்றும் தனித் தனியாக அழைக்கப்பட்ட எல்லாரையும் ஒன்றாகச் சேர்த்துப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயரே `இந்து’ என்பது.

 

இங்கே நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம்! இல்லாதும் இருக்கலாம்! நீங்களோ, நானோ இதனை நேரில் கண்டு அறிந்ததில்லை என்பதுமட்டும் அறியமுடிந்த உண்மை. கேட்டதிலும், படித்ததிலும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே சரித்திரங்கள்பற்றியும் நாங்கள் பேசவும், எழுதவும் முயல்கிறோம். 'அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான் மதத்தின் வரலாறு. அப்படித்தான் தமிழர்களும் இந்துக்கள் ஆனார்கள்' என்றால்! தமிழ்மொழி எப்படி அவர்களுடைய இந்துமத இறைவழிபாட்டில் இல்லாதொழிந்தது?? தமிழினம்தவிர்ந்த வேறெந்த இனமும் இத்தகய இடர்ப்பாட்டினைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே...! என்வரையில் மனிதனால் அறியமுடியாத கடவுள் என்ற சக்திக்கு வடிவம்கொடுத்து, இந்துமதத்தை உருவாக்கியவர்கள், தங்களுடைய மேன்மையான வாழ்விற்காகத் தமிழர்களை ஏமாற்றியோ, பயம்காட்டியோ, இந்துமதம் திணிக்கப்பட்டதாகவே நம்பிக்கைகொள்ள வைக்கிறது. அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, தமிழர்கள் தாங்களாகவே ஒரு மதத்தை உருவாக்கியிருந்தால்! சூரியனை முழுமுதற் கடவுளாக் கொண்ட மதமே தமிழர்களுடைய மதமாக இருந்திருக்கும் என்பதாகவே பண்டையத் தமிழர்கள் சரித்திரம்பற்றி அறிந்தவரையில் எண்ணத்தோன்றுகிறது.  
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஊ என்றா உடனே அதையே தூக்கி பிடிங்க .... இந்து சமய கடவுள்களே வழிபட தமிழில் பல தேவாரங்கள் தொடக்கி மந்திரங்களும் இருக்கின்றது நாங்கள் கோயிலுக்கு போனாலும் சமஸ்கிரதத்திலா கடவுளை வேண்டுகின்றோம் தமிழில் தானே?

இந்து சமயம் என்பது பல்வேறு மொழிகளை உள்ளடக்கியதால் இறைவளிப்பாட்டின் பொது மொழியாக சமஸ்கிருதம் இருக்கின்றது அவ்வளவு தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.[1] சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[2] சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.

இந்து சமயப் பிரிவுகளான வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு நாயன்மார்களும், சமயக் குரவர்களும் பெரும் உதவி செய்தனர்.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். வேதங்களும், ஆகமங்கள் முதலானவையும் சிவபிரானின் சதாசிவக் கோலத்தினால் அருளப்பட்டவை என்பர். பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, நேபாளம், இலங்கை, தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.

- முனைவர் இரா.இராஜேஸ்வரன் -

முன்னுரை:

சமயம் என்பது மானிட சமுதாயத்தை நல்வழியில் வாழ வழிகாட்டும் தன்மை உடையதாகும். உலமெல்லாம் ஒரே சமயம் என்ற நிலை இல்லாமல், இந்து சமயம், கிறித்துவ சமயம், இசுலாம் சமயம், பௌத்த சமயம், சமண சமயம் என்று பலவாறாக உள்ளன. எல்லா சமயத்திற்கும் அடிப்படையானது இறை நம்பிக்கை. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்....' என்ற திருமூலரின் கருத்தின் மூலம் "அன்பே சிவம்' (Love is God) என்கிற தாரக மந்திரமே சைவ சமயத்தின் ஆணிவேர், இந்தச் சமயக் கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், போன்றவற்றை பரப்பும் மனிதனிடம் செல்லவும் மொழி என்கிற கருவி தேவைப்படுகிறது.

ஒரு மொழியை வளப்படுத்தும் திறமை, ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழி வளம் பெறும் போது சிந்தனையும், அறிவும் வளம் பெறும். பின்னர் அது வலுப்படும். பல்வேறு மொழிகள் இருப்பினும் தமிழ்மொழி எந்த வகையில் சைவ சமயத்திற்கு தொண்டாற்றியுள்ளது என்பதை மட்டுமே ஆய்வதே கட்டுரையாளரின் நோக்கமாகும்.

சைவ சமயத்தின் தொன்மை:

சமயம் ஒரு தத்துவம்; ஒரு மதக்கோட்பாடு; ஒரு வாழ்வியல் நெறி. சமயம் பற்றிக் காந்தியடிகள் குறிப்பிடுகையில் "சமயம் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது' என உறுதியுடன் மொழிகின்றார். அந்தளவுக்குச் சமயம் மானுட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சமயங்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும். சமயங்களிடையே சடங்குகள், வழிபாட்டு முறை போன்றவைகள் மாறுபட்டாலும், அடிப்படையில் சமயக்கொள்கை ஒன்றே எனக் கருதலாம். உலகில் இன்று கிறித்துவம், இசுலாம் சமயங்களுக்கு அடுத்ததாக இந்து சமயம் (சனாதன தர்மம்) உலகம் முழுவதும் பரவியுள்ளது.

சைவம், வைணவம் என இரு பிரிவுகளை கொண்ட இந்து சமயம் உலகில் தோன்றிய பழமையான சமயம் ஆகும். அதில் குறிப்பாக சைவ சமயம் தொன்மை வாய்ந்தது எனக் கூறலாம். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களில் சிவனைப் பற்றிய செய்திகள் பல உள்ளன. புறநானூற்றில்

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன்

எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்....' என சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

சைவ சமயம் சிவனோடு தொடர்புடையது. இச்சமயமே உலகில் தோன்றிய முதற்சமயம் ஆகும்.

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவளச் சடைமுடித் தாமரை யானே!

என்று திருமந்திரத்தின்படி சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவபெருமான் ஆவான்.

"சைவ சமயமே சமயம்' என்று தொடங்கும் தாயுமானவரின் தமிழ்ப்பாடல் சைவ சமயத்தின் மாண்பை உலகெங்கும் பறைசாற்றுவதாக அமைகிறது. "சைவத்தின்மேற் சமயம் வேறில்ø ல அதில் சார் சிமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் வேறில்லை' என்று சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளது சிந்திக்கத்தக்கது.

சிந்துவெளி நாகரிக காலத்தின்போதே சிவலிங்க வழிபாடு இருந்தமையை நிரூபிக்க சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்களில் சிவலிங்கமும் ஒன்றாகும். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின்போது பண்டைய காலத் தமிழ் எழுத்துகள் பல கிடைத்துள்ளன.

சிவலிங்க வழிபாடு என்பது நம் பாரத நாட்டில் மட்டுமேயன்றி எகிப்து, சிரியா, பாரசீகம், ஆப்பிரிக்கா, திபெத்து, அமெரிக்கா, சுமத்ரா, ஜாவா தீவுகள் போன்ற உலகின் பல பகுதிகளிலும் ஒரு கால கட்டத்தில் பரவியிருந்தது என்பதை மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் எச்.எம்.வெஸ்ட்ராப், இ.டி.டெய்லர் ஆகியோர் தங்களின் நூலில் விளக்கியுள்ளனர். அதே போன்று இலங்கைக்கும், சைவ சமயத்திற்கும் மிக நெடிய வரலாற்றுத் தொடர்பு உண்டு. இராமேசுவரம், திருக்கேதீசுவரம், கோணேசுவரம், முன்னேசுவரம், நகுலேசுவரம் போன்ற சிவாலயங்கள் புரதானப் பெருமையும், சிறப்பும் பெற்றவை. இவற்றில் இராமேஸ்வரம் தவிர்த்து மற்ற ஏனைய நான்கும் இலங்கையில் உள்ளன.

தமிழ்க் கடவுளான முருகன் தமிழர் தம் தெய்வம் என்பதற்குக் கீழ்கண்ட சங்கநூல்களே சான்றாகும்.

"மணிமயில் உயரின மாறா வென்றிப்

பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும்' (புறநானூறு)

"முருகு ஒத்தியே முன்னியது முடிந்தலின்' (புறநானூறு)

"முருகன் அன்ன சீற்றத்து....' (அகநானூறு)

"முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்' (பெருநாராற்றுப்படை)

முருகப்பெருமானும் தமிழும் வேறில்லை. முருகனே தமிழ்; தமிழே முருகன்.

சங்க காலத்திலேயே தமிழகத்தில் இந்து சமயம், சமண சமயம், பௌத்த சமயம் போன்ற மூன்று சமயங்கள் தோன்றின. இந்த காலகட்டம் சைவ சமயத்திற்கு ஓர் இருண்ட காலம் என்றே கூறலாம். காரணம் சமண சமயத்தையே களப்பிரர்கள் ஆதரித்து வந்தனர். அதன் பின்னர், சமய குரவர்களின் வருகையால், சைவப்பயிர் செழுமையாக வளர்ந்தது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் போன்ற மன்னர்கள் சைவ நெறியைச் சிறப்பாக வளர்த்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் சைவ நெறிக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என கூறலாம். காரணம், இந்தக் காலத்தில்தான் இறைவனின் தூதர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நால்வர்கள் தோன்றிக் காலத்திற்கும் அழியாத அரிய செயல்களை செய்தனர். இவர்களால் சைவமும் வளர்ந்தது. தமிழும் வளர்ந்தது. பின்னர்த் தென்னிந்தியாவில் (கேரளா) தோன்றிய ஆதிசங்ககரரால் சைவ சமயம் தழைத்தோங்கியது. இந்து மத வழிபாட்டைக் காணபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரியன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சைவம் (சிவன் வழிபாடு) என ஆறு வகையாகப் பிரித்து இறையின்பம் பெற வழிகாட்டினார். "ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்....' என்கிற பெரிய புராணம் மற்றும் "அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வலர் பொருளாய்' என்கிற சிவஞான சித்தியார் பாடல் மூலம் நாம் அறியலாம். ஆதிசங்கரர் தமது வேதாந்தக் கொள்கையான அத்வைதத்தைப் போதித்து, அதைத் தொடர்ந்து நிலைநாட்டவும், இந்தியாவில் சிருங்கேரி, பூரி, பத்ரி, துவாரகை போன்ற புண்ணிய தலங்களில் திருமடங்களை நிறுவினார்.

பின்னர்ச் சைவ சமயம் சற்று நிலைகுன்றிய நிலையில் இருந்தபோது அருளாளர்கள் தோன்றி ஆதீனங்கள் (சைவத்திருமடம்) மூலம் சமயத்தை காத்தனர். புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெண்மர் போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு ஆகும். இவற்றைச் "சுத்த சைவ பதினெண் ஆதினங்கள்' என்றும் கூறுவர். இவற்றில் முதலில் தோன்றியது திருவாவடுதுறை ஆதீனம், அடுத்துத் தோன்றியது தருமபுர ஆதீனம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் இந்து மதத்திற்கு சுவாமி விவேகானந்தர் மூலம் இளம் ரத்தம் செலுத்தப்பட்டது எனக் கூறலாம்.

சைவ சித்தாந்த தத்துவத்தை விளக்கும் திருமந்திரம் பதி, பசு, பாசம் என்னும் மூன்றை வலியுறுத்துகிறது.

"பதிபசு எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்

பதி அணுகில் பசுபாசம் நிலாவே'

ஆன்மாவைப் பசுவாகவும், இறைவனைப் (சிவன்) பதியாகவும், அவனை அடைவதற்குப் பாசத்தை விடுவதுவும் இந்தத் தத்துவ விளக்கம், தமிழ்நாட்டில் சைவ சமயம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருத் தொண்டினால் புத்துயிர் பெற்று நன்கு வளர்ந்தது.

தமிழ் மொழியின் பங்களிப்பு:

தகவல் பரிமாற்றத்திற்கு மொழி அவசியம். மனிதன் தோன்றிய காலம் முதலே மொழி எனும் கருவி நடைமுறையில் இருந்தது. மனித உறவுக்கு ஒரு பாலமாக அமைவது மொழி ஆகும். ஒரு சமுதாயத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, இலக்கியம் போன்ற அனைத்தும் மொழியைச் சார்ந்தே அமைகிறது. உயிருக்கும், இறைவனுக்கும் உள்ள தொடர்பை அறிவதற்கு மொழி அவசியம் தேவைப்படுகிறது.

சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது தமிழ்மொழியும் சமற்கிருதமும் ஆகும். தமிழ் அறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி இதுபற்றிக் கூறுகையில், "தமிழும் சமற்கிருதமும் இந்திய பண்பாட்டின் இரு தூண்கள்' எனத் தனது ஆழ்ந்த அனுபவத்தின் முதிர்ச்சியால் தெரிவிக்கிறார். தமிழும், வடமொழியும் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தமிழாராய்ச்சி அறிஞர் க.வெள்ளைவாரணனார் தெரிவிக்கிறார்.

"மன்னுமா மலை மகேந்திர மதனிற்

சொன்ன வாகமந் தோற்று வித்தருளியும்'

எனும் திருவாசக வரிகள் மூலம் தமிழ்மொழியின் இலக்கணத்தைச் சிவபெருமான் முதன்முதலில் அகத்திய மாமுனிக்கு உபதேசித்தோர் என்பதை அறியலாம்.

மேலைநாட்டு மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீன மொழிகளுக்கு நிகரான பழமையும், சிறப்பும் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி....' என்கிற சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. சைவ சமயம் தழைக்க அரும்பாடுபட்ட சமய அருளாளர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், சேக்கிழார், அருணகிரிநாதர், குமரகுருபரர், இராமலிங்க அடிகளார் மற்றும் பல சிவனடியார்களின் வழிவழியாக வந்து இறைவன் மீது தெய்வத் தமிழால் பாடியருளினார்கள்.

சுந்தரர், "இறைவன் தமிழை ஒத்தவன்' என்றும், நாவுக்கரசர், "பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்' என்றும், "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்றும், சேக்கிழார் "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்' என்றும் இறைவனைத் தமிழாகவே போற்றியுள்ளார்கள்.

தமிழில் சைவ சமயத்தின் தோத்திரப் பாடல்களை அருளிச் செய்தவர்கள் திருஞான சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை உள்ள சமயக்குரவர்கள் ஆவர். அவை பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப் பெற்று தொகுக்கப் பெற்றன. இவற்றை "பன்னிரு திருமுறை' என அழைப்பார். இவை முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப் பெற்றன.

"தோடுடைய செவியன் விடையேறியோர்தூ வெண்மதிசூடிக்

காடுடைய கடலைந் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமா புரமேவிய பொம்மாள் இவனன்றே!

என்று தொடங்கும் முதலாம் திருமுறை (1469 பாடல்கள்), இரண்டாம் திருமுறை (1331 பாடல்கள்), மூன்றாம் திருமுறை (1358 பாடல்கள்), யாவும் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். நான்காம் திருமுறை (1070 பாடல்கள்), ஐந்தாம் திருமுறை (1015 பாடல்கள்) மற்றும் ஆறாம் திருமுறை (981 பாடல்கள்) அனைத்தும் திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல்கள் ஆகும்.

"பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூ ரருட்டுறையுள்

அத்தா உனக் காளாய்இனி அல்லேன் எனலாமே'

என்று தொடங்கும் ஏழாம் திருமுறை (1025 பாடல்கள்) சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருகோவையார் ஆகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை; பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம்; பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் போன்றோர் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிருவர் பாடிய திருப்பாடல்கள்; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் பெருமான் அருளிய "திருத்தொண்டர் புராணம்'; 12 திருமுறைகளில் சுமார் 18 ஆயிரம் பாடல்கள் உள்ளன. அவை இறைவனை அடையச் செய்யும் தோத்திரப் பாடல்கள் ஆகும்.

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, உண்மை நெறி விளக்கம் மற்றும் சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்கு சாத்திர நூல்கள் சைவ இறை நெறியை உணர்த்தும் நூல்கள் ஆகும்.

தமிழைப் போற்றி, தமிழ் வழியே சைவ சமயத்தைப் பரப்பச் செய்த தவச் சான்றோர்களால் செந்தமிழும் வளர்ந்தது; சிவநெறியும் வளர்ந்தது.

முடிவுரை:

இவ்வாறு உயர்தனிச் செம்மொழியாகிய தமிழும், சைவமும் சிறப்புடன் பொலிவு பெற சைவச் சான்றோர்கள் பலர் பாடுபட்டுள்ளனர். தமிழர்கள் சைவத்தையும், தமிழையும் இரு விழிகளாய்ப் போற்றிக் காத்து வருகிறார்கள். சனாதன தர்மம் எனும் இந்து மதத்தின் உயிர்நாடியாகச் சைவசமயம் விளங்குவது போலச் சைவசமயத்தின் உயிர்நாடியாகச் செந்தமிழ் விளங்குகிறது. கிறித்தவர்களுக்கு பைபிள் புனித நூல் (Holy Book) போல, இசுலாமியர்களுக்குத் திருக்குர் ஆன் புனிதநூல் போல, சைவர்களுக்குச் சமயக்குரவர் அருளிய தேவாரம் புனித நூல் என்றே கூறலாம்.

"தென்னாடுடைய சிவனே போற்றி;

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!'

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீர்த்தனைக்காரியும்... தெம்மாங்குகாரனும்.. அருமையான கலவை.. கேட்டுபாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம்! இல்லாதும் இருக்கலாம்! நீங்களோ, நானோ இதனை நேரில் கண்டு அறிந்ததில்லை என்பதுமட்டும் அறியமுடிந்த உண்மை. கேட்டதிலும், படித்ததிலும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே சரித்திரங்கள்பற்றியும் நாங்கள் பேசவும், எழுதவும் முயல்கிறோம். 'அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான் மதத்தின் வரலாறு. அப்படித்தான் தமிழர்களும் இந்துக்கள் ஆனார்கள்' என்றால்! தமிழ்மொழி எப்படி அவர்களுடைய இந்துமத இறைவழிபாட்டில் இல்லாதொழிந்தது?? தமிழினம்தவிர்ந்த வேறெந்த இனமும் இத்தகய இடர்ப்பாட்டினைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லையே...! என்வரையில் மனிதனால் அறியமுடியாத கடவுள் என்ற சக்திக்கு வடிவம்கொடுத்து, இந்துமதத்தை உருவாக்கியவர்கள், தங்களுடைய மேன்மையான வாழ்விற்காகத் தமிழர்களை ஏமாற்றியோ, பயம்காட்டியோ, இந்துமதம் திணிக்கப்பட்டதாகவே நம்பிக்கைகொள்ள வைக்கிறது. அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, தமிழர்கள் தாங்களாகவே ஒரு மதத்தை உருவாக்கியிருந்தால்! சூரியனை முழுமுதற் கடவுளாக் கொண்ட மதமே தமிழர்களுடைய மதமாக இருந்திருக்கும் என்பதாகவே பண்டையத் தமிழர்கள் சரித்திரம்பற்றி அறிந்தவரையில் எண்ணத்தோன்றுகிறது.

சமஸ்கிருதம் வேறு யாராலும் தோற்றம் பெறவில்லை . தமிழர்களின் சங்கீத எழுத்து தான் சமஸ்கிருதம் . ஏனைய மதங்கள் பிறந்த பின்பு ஓர் புத்தகம் அடிப்படையாக இருந்தது . ஆனால் சனாதன தர்மத்தின் எத்தனை நூல்களை ஆதாரமாக எடுப்பது . வேதங்கள் உபநிடதங்கள் முதன்மையாக கொள்ளலாம் ... தமிழர்களுக்கு சம்பந்தமில்லாத மொழி சமஸ்கிருதம். என்பது தவறான கூற்று

தமிழர்களுக்கு பேச்சு வழக்கில் இல்லாத மொழி தேவைப்பட்டது ... சமஸ்கிருதம் குருகுலத்தில் பயிற்றுவிக்கபட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.[1] சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[2] சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.

இந்து சமயப் பிரிவுகளான வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு நாயன்மார்களும், சமயக் குரவர்களும் பெரும் உதவி செய்தனர்.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். வேதங்களும், ஆகமங்கள் முதலானவையும் சிவபிரானின் சதாசிவக் கோலத்தினால் அருளப்பட்டவை என்பர். பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, நேபாளம், இலங்கை, தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.

 

ஏன் சேயோன் வழிபாட்டை .... சிவன் வழிபாடாக மாற்றினார்கள் ??
 
சிவன் வழிபாடுதான் நால்லது என்றால் முதலில் இருந்தே சிவன் வழிபாட்டில் இருந்து தொடங்கி இருக்கலாமே ?
சேயோன் நல்லவரா ? கெட்டவரா ? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பங்கள் இம்புட்டு தூரம் வளர்ந்து என்ன......ஒரு விமானம் விழுந்து பலமாதம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் மர்மமாகவே இருக்கின்றது.......இன்னுமொரு விமானம் விழுந்து 3 நாட்களும் ஆகிவிட்டது.....அதையும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள்........

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரகங்கள் கடவுளா??

நாம் வணங்கும் விக்கிரகங்கள் கடவுளின் ரூபமாகும் ... அது மட்டுமே எங்கள் கடவுள் என்று நா கூறிக்கொள்ள மாட்டேன் .. இப்போது ஒருவர் ஈழத்துக்கு வெளியே இருக்கின்றார் . அவரது தாயாரால் அவரை காண இயலாது .. ஆனால் அவர் புகைப்படம் ஒன்றை வைத்து அந்த தாயார் அவரை நினைத்து கொள்கிறார் .

இப்போது அவர் அருகில் இல்லாவிட்டாலும் அந்த புகைப்படம் அவர் நினைவுகளை கொண்டு வரும் அது போலவே சிலைவழிபாடும் இறைவன் திருவருளை எம்மிடம் சேர்க்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் இரும்புக்கரம் கொண்டு சிங்களத்தால் ஆளப்படுகின்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் அங்கு நடைபெற்ற மாகான சபை தேர்தலில் தமிழ்

மக்கள் மிகவும் தெளிவாக உறுதியாக அச்சுறுத்தல்களுக்கும் அபிவிருத்திகளுக்கும் பிற சலுகைகளுக்கும் விலை போகாது பெருமளவில் விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே பெருமளவில் வாக்கை அள்ளி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள் அப்பிடி இருக்கயில் தந்தி டிவி என்ன சன் டிவி பேட்டி எடுத்துப்போட்டாலும் அது ஈழத்தமிழர்களின் மனதை மாற்றும் பிரச்சார யுத்தியாக என்றும் இருக்க போவதில்லை...... வேணும் என்றால் இந்த பேட்டியின் மூலம்

தந்தி டிவிக்கு கிடைத்த பணத்தையும் இன்னும் பல வியாபார சலுகைகளையும் , தொடர்புகளையும் நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டுகொள்ளல்லாம்......

ஈழத்தமிழர்கள் பலரே சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் விலை போகும் போது இந்திய வியாபார நிறுவனங்களை நொந்து என்னாக போகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒப்புக்கு , கணக்கு காட்ட் மூன்று மதங்களையும் கிண்டல் செய்வது போல காட்சிகள் இருந்தாலும் , இந்து மதத்தை , இந்து மதக் கடவுள்களை , இந்து மத கடவுள் நம்பிக்கைகளை நீள அகலமாக வகுந்து கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

இந்து மதத்தை மட்டுமே அப்படி கிண்டல் முடியும் என்பதால் , அந்த காட்சிகளை , இந்து மதம் ,கிண்டல் அடிக்க கொடுத்திருக்கும் சுதந்திரம் என பாஸிடிவாக எடுத்துகொண்டு நகர்ந்து விட வேண்டும்.

படத்தில் சிவன் வேடமிட்ட ஒருவர் வருகிறார். கிண்டல் அடிக்கிறேன் பேர்விழி என்று சிவன் டாய்லெட்டிற்குள் நுழைவதில் ஆரம்பிக்கிறது காட்சி .அதற்குப்பிறகு சிவன் அமீருக்கு , பயந்து கொண்டு ஓடுகிறார் , ஓடுகிறார் ....ஓடிக்கொண்டேயிருக்கிறார். அமீர் ஒன்றும் பயமுறுத்துபவர் போலவும் இல்லை. கீலா போல இருக்கிறார். ஏன் சிவன் இவ்வளவு பயந்து ஓடுகிறார் என்றும் புரியவில்லை.

பெரிய ஆடிட்டோரியத்திற்குள் சிவன் வேடமிட்டவரும் , அமீரும் நுழைந்து விடுகிறார்கள்.அதற்குப்பிறகு வரும் காட்சிகளில் , சிவன் வேடமிட்டவர் தேவையேயில்லை.ஆனால் கட் ஷாட்களில் சிவன் வேடமிட்டவர் முட்டிக்கால் போட்டுக்கொண்டு பம்மி பதுங்கி செல்வதாகவும் , முகத்தை அஷ்ட கோணலாக்கி பயந்து செல்வதாகவும் , வெட்டியாக அவரை காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.சிவன் வேடமிட்டவர் பலரின் கால்களுக்கு இடையில் நாய் போல முட்டிப்போட்டு ஊர்ந்து செல்கையில் கேமராவை பின்னால் வைத்து சிவன் வேடமிட்டவரின் உள்ளாடையை கேவலமாக காட்டும் காட்சிகள் எல்லாம் ....படத்துக்கு தேவையேயில்லை ....வெரி வெரி பேட் டேஸ்ட் அமீர்கான் ! ச்சீ த்தூ !

நன்றி: அராத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சற்று நேரத்தில் Australia வில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது......புத்தம் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கும் இந்த நேரம் வழமை போல் ஈழத் தமிழர்களுடைய நிலையில் எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்தாத ஒரு ஆண்டாக 2014 உம் கடந்து போய்விட்டது புதிய எதிர்பார்ப்புகளுடன் 2015 ஆம் ஆண்டுக்குள் செல்ல இருக்கும் இந்த நேரம்......என்னுடைய மொக்கைகளுக்கு ஆதரவும் ஊக்கமும் யாழ் வாயிலாகவும் தனிப்பட்ட முறையிலும் அளித்த உறவுகள் அனைவருக்கும்......2014ஆம் ஆண்டில் புதிதாக யாழில் இணைந்து கொண்ட அனைவருக்கும்......மற்றும் ஆரம்பகாலம் முதல் என்னுடன் இங்கே பயணித்து கொண்டிருக்கும் நட்புக்கள்,உறவுகள்,சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகளோடு......நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நிறைவேறுகின்ற ஆண்டாக.....என்றும் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி வழங்கக்கூடிய ஆண்டாக....அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல எல்லோரும்கும் பொதுவான இறைவனை வேண்டிக்கொண்டு மீண்டும் புதிய ஆண்டில்....புதிய மொக்கைகளுடன் சந்திப்போம்.......

நன்றி

வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்கழே பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைப்பம்

தமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் அன்றா இல்லது சித்திரையிலா?

எவனாச்சும் மாட்டு பொங்கல் அன்னைக்குன்னு சொல்லி காமடி எல்லாம் பண்ண கூடா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....//////

இணக்க அரசியல் என்றாலே அது தான் என்று சொல்லி திரிபவர்களுக்கு வடக்கு முதலமைச்சரின் இந்த கருத்து சமர்ப்பணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் ல நம்ம தமிழ் பொண்ணுங்கள வைச்சு 2013 ஆம் ஆண்டு miss tamil switzerland செய்தாங்கள் நம்ம பெடியங்கள்......அதுக்கு பிறகு 2014 அந்த நிகழ்ச்சி நடந்ததா தெரியல்ல.....2015 ஆவது நடக்குமா....?

சும்மா தெரிஞ்சுக்க தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்கார நிறுவனத்திற்கு பணப் பாக்கி வைத்துள்ளதாக நடிகை அசின் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரது கொச்சி வீட்டை ஜப்தி செய்ய எர்ணாகுளம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது./////

மகிந்தா மகனிடமோ இல்லது சல்மான் கிட்டையோ போய் கேட்டா உதவி பண்ணுவாங்களே......

  • கருத்துக்கள உறவுகள்

சரி மக்கழே பஞ்சாயத்த ஆரம்பிச்சு வைப்பம்

தமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் அன்றா இல்லது சித்திரையிலா?

எவனாச்சும் மாட்டு பொங்கல் அன்னைக்குன்னு சொல்லி காமடி எல்லாம் பண்ண கூடா.....

 

உண்மைஇணையத்தில் வெளிவந்தது. உண்மைகளுக்கு ஆதாரமும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
 
தமிழ்ப் பெயரில்லா தமிழ்(?) புத்தாண்டு
 
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ....
 
கோவிலில் புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை ஓதுவது போல இருக்கிறதா?ஆமாம்,அந்தப் புரோகிதக் கூட்டம் ஓதிய கதையில்...இல்ல இல்ல ஆபாசக்கதையில் தோன்றிய பெயர்கள்தான் இந்தப் புரியாத சொற்கள். இந்த சமஸ்கிருதப் பெயர்கள் தாங்கிய ஆண்டுகளைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள் ஆரியக் கொடுக்குகள்.
 
நாரதன் ஒருமுறை ,'கடவுள்' கிருஷ்ணனிடம் "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டானாம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றானாம். இதற்கு நாரதன் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதன் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர்மீதே மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றான். கிருஷ்ணன் நாரதனை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதன் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினானாம். . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது பிள்ளைகளைப் பெற்றனர். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவைதான் பிரபவ முதல் அட்சய வரையான ஆண்டுகள் என்கிறது அவாள் சொல்லும் கதை.
 
- (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்)
 
ஆணும் ஆணும் கூடி பெற்ற பிள்ளைகள் தான் இந்த 60 பிள்ளைகள்.இதைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள். சரி,இந்த 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா ? தமிழில் பெயரே இல்லை;பிறகு எப்படி அது தமிழ்ப் புத்தாண்டு என்று பகுத்தறிவு கேள்வி எழுப்பினால் அதற்கு ஆரியத்தரப்பிலும் பதில் இல்லை,ஆத்திகப் தரப்பிலும் பதில் இல்லை.
 
இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள்.தொடர் ஆண்டுகள் அல்ல.அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும்.எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிடமுடியாது.தமிழர்களின் தொன்மையை,வரலாற்றைத் திட்டமிட்டு மறைக்கவே இந்த ஆண்டு முறையைப் பார்ப்பனர்கள் புகுத்தினார்கள் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று சொனால்,அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்துவிடுகிறதல்லவா?எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது.
 
இயற்கையை வழிபட்ட தமிழன் தனது ஆண்டுத் தொடக்கத்தையும் அப்படியே வகுத்துக் கொண்டான். ஒரு நாள் என்பது, சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
 
ஒருமாதம் என்பது,
 
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
 
அதேபோல் ஆண்டு என்பது,
 
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.
 
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
 
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
 
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
 
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
 
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
 
இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
 
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.
 
தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.
 
ஆனால்,கட்டுக்கதைகளைக் கூறி மக்கள் மனதில் கடவுள் அச்சத்தைப் புகுத்திய ஆரியர்கள் தம்முடைய பிழைப்புக்காக உருவாக்கிய கதையே நாரதன் கிருஷ்னன் கூடிய  ஆபாசக் கதை.
 
இந்த ஏப்ரல் 13 அன்று தொடங்கும் சித்திரை மாதம் ஆரியம் புகுத்திய ஆண்டின் பெயர் நந்தன. இது மட்டுமல்ல,இந்த வரிசையில் உள்ள ஆண்டுகளின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.செம்மொழித்தமிழில் பெயர்கள் அமையாத ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகள் ஆகும்? கிறிஸ்துவுக்கும் பின் எனக் கணக்கிட்டு 2012 என்று கூறிவிட முடியும். கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் மூத்தவர் வள்ளுவர்,(அதாவது கி.மு.31) என்று தமிழ் அறிஞர்கள் வகுத்தபடி 2012 உடன் 31 அய் கூட்டி 2048 அய் திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி விட முடியும். ஆனால், இந்த நந்தன எத்தனையாவது நந்தன ஆண்டு என்று சொல்லமுடியுமா?
 
பெயரில் தமிழ் இல்லை;கணக்கிலும் ஒழுங்கில்லை,அப்புறம் என்ன தமிழ் ஆண்டு? தமிழர்களே இன்னும் எத்தனைக் காலம் இந்தப் புரட்டுகளை நம்பி மானத்தையும்,அறிவையும் இழப்பது?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலித் வாலிபருடன் காதல்: மகளை கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்த இஸ்லாமியர்////

யாருப்பா சொன்னது இஸ்லாமியர்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று ?

என்னமோ இந்து சமயத்தில் இருக்கின்ற ஜாதி கொடுமைகளால் தான் மதம் மாறுகின்றார்கள் என்று சொன்னவங்க எல்லாம் வரிசையா வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தந்தையான நந்திமித்ர ஏக்க நாயக்க அரசைவிட்டு விலகி எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் நந்திமித்ர ஏக்கநாயக்கவின் புதல்வரும் மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினருமான சிந்தக ஏக்கநாயக்க தெரிவித்தார்////////

நல்லா இருந்த குடும்பத்தை இப்பிடி ஆக்கிட்டியே பரட்டை........

  • கருத்துக்கள உறவுகள்

தலித் வாலிபருடன் காதல்: மகளை கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்த இஸ்லாமியர்////

யாருப்பா சொன்னது இஸ்லாமியர்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று ?

என்னமோ இந்து சமயத்தில் இருக்கின்ற ஜாதி கொடுமைகளால் தான் மதம் மாறுகின்றார்கள் என்று சொன்னவங்க எல்லாம் வரிசையா வா

இவளவு காலம் கழிச்சுதான் இது தெரிஞ்சிச்சா ?
பெரிய வெட்டு கொத்து செய்திகளே நாளாந்தம் வருகின்றதே ...
 
யாழ்பாணத்தில் கிறிஸ்தவர்கள் ஜாதி பார்பதில்லையா ?
 
பண்டமாற்று மாதிரி நாம் அவர்களுக்கு கொடுக்கும் விடயம் அது. எம்மாலும் இருப்பதை தானே கொடுக்க முடியும்.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.