Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா பாறையில பூ முளைச்சத புலவர் பாக்கல போல :(

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே

ஆனால் உனக்காக தன்னை மாற்றிக்கொள்பவர் கிடைத்தால்

அவர்களை தொலைத்து விடாதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

: இந்தாண்டின் டிசம்பர் 2012-ல் உள்ள, ஐந்து வாரங்களும், சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகள் தொடர்ந்து வருவது, அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.நடப்பு, 2012ம் ஆண்டை நிறைவு செய்ய வருகை தரும், டிசம்பர் மாதத்தில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகள், மாதம் முழுவதும், ஐந்து வாரங்களும் தொடர்ந்து வருகிறது. 843 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று வரும் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானது என, உலக மக்கள் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் கவிபாடிய, சங்க காலப் பெண் புலவர்கள் பலர் உண்டு. காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார், பொன்முடியார், முடத்தாமக்கண்ணி இப்படி பலர். நவீன தமிழ் இலக்கியத்தில், முதல் பெண் எழுத்தாளர் யார் தெரியுமா? பாக்கியலட்சுமி!

யார் இவர் என்கிறீர்களா? தமிழில் முதல் சிறுகதையான, "குளத்தங்கரை அரசமரம்' கதையை எழுதியவர். அது, வ.வே.சு., ஐயர் எழுதியதாயிற்றே என்கிறீர்களா? உண்மைதான். ஆனால், அதை அவர் தன் பெயரில் எழுதவில்லை. "பாக்கியலட்சுமி' என்ற தன் மனைவியின் பெயரிலேயே அந்த கதையை எழுதி, வெளியிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாக வாழ வழிகள்

மிகவும் மதிப்பிற்குரியவர்கள் ----- தாய், தந்தை

மிக மிக நல்ல நாள்----- இன்று

மிகப்பெரிய வெகுமதி-----மன்னிப்பு

மிகவும் வேண்டியது ----- பணிவு

மிகவும் வேண்டாதது----- வெறுப்பு

மிகப்பெரிய தேவை ------நம்பிக்கை

மிகக்கொடிய நோய் ----- பேராசை

மிகவும் சுலபமானது----- குற்றம் காணல்

தரமற்ற குணம்----- பொறாமை

நம்பக்கூடாதது-----வதந்தி

ஆபத்தை விளைவிப்பது------அதிக பேச்சு

செய்யக்கூடாதது-----நம்பிக்கை துரோகம்

செய்யக்கூடியது-----உதவி

விலக்க வேண்டியது-----

சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி----- உழைப்பு

நழுவவிடக்கூடாதது----- வாய்ப்பு

பிரியக்கூடாதது----- நடப்பு

மறக்க கூடாதது ----- நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/iHjRQtSyyqk

இது எப்பிடி இருக்கு இவன் தான் சரியான ஆம்புள சிங்கம்

அது எப்பிடி எப்பிடி பஸ் ல போகும் போது பஸ் பிரேக் அடிச்சு பொண்ணுங்க மேல வந்து விழுந்த உடன கன்னத்தில அடிப்பிங்க இதுவே நீங்க செஞ்சா நாங்க பாத்திட்டு நிக்கனுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத்தேடுவதும்......

மனைவி வந்தபின் நிம்மதியைத்தேடுவதுமே

ஆண்களின் வாழ்கையின் தேடல்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் பண்ணி வைச்ச ஐயர் இறந்திட்டாராம்.....

கணவன்: பின்ன அவர் செஞ்ச பாவம் சும்மா விடுமா?

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் தெய்வத்தை காணுகின்றேன்!

ஆலையத்தில் சிலையாக அல்ல,

என் இல்லத்தில் அம்மாவாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் இலக்கணம்

வேகமாக பேருந்து ஓடிகொண்டிருந்தது.கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.இந்த பேருந்துல் தான் ஆர்த்தியும் பயணம் செய்தால்,சற்று முன்கோபியும் கூட,அடிக்கடி தன் கணவரோடு சண்டைபோடுவாள்.விவாகரத்து செய்வதற்காக வக்கீலை பார்க்கத்தான் அவள் சென்றுகொண்டிருந்தாள்.

சாலையோர நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றது.அந்த வயதான தம்பதியனரும் ஏறினர்.அமர்வதற்கு யாரும் இடம் தரவில்லை.அந்த வயதான தம்பதியனர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்,இதை ஆர்த்தி கவனித்து கொண்டிருந்தாள்.நல்ல வேலை நாம் விவாகரத்து வாங்க போறோம் இல்லையென்றால் நானும் இப்படிதான் சண்டை போட்டுகொண்டிருப்போம் என்று நினைத்து கொண்டாள்.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆர்த்தியின் அருகே இடம் காலியானது,அந்த பாட்டியை அமருமாறு கூறினாள்.அந்த பாட்டி திரும்பி பார்த்து நீங்க வந்து உட்காருங்க என்று கூறினார், அந்த தாத்தாவும் நீயே உட்காரு எனக்கு ஒன்றும் தேவையில்லை என்று கோபமாக கூறினார்.பாட்டி ஏதும் கூறாமல் எழுந்து தர தரவென அந்த வயதான தாத்தாவை இழுத்து வந்து ஆர்த்தியின் அருகே அமர வைத்தாள்.ஏற்கனவே Hospittalukku நேரம் ஆச்சு,உனக்கு வேற BP ,சுகர் -னு வியாதி வேற இதுல்ல நின்னுகிட்டே வந்த மயக்கம் போட்டு விழுந்திடுவிங்க,சொன்னா கோபம் வருதா?? என்று தாத்தாவை முறைத்தார்,இப்போ தாத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் தந்தார்.

இதை கவனித்த ஆர்த்தி தன் கணவரும் இப்படி தானே என்று ஒருகணம் யோசித்தாள்,அவளை அறியாமலே கண்களில் நீர் எட்டி பார்த்தது.அந்த தம்பதியினர் இறங்கி மருத்தவமனைக்கு சென்றார்கள்.ஆர்த்தியின் விவாகரத்து வியாதி சரியானது.

-பரமகுரு.க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Figure பாத்தா லைப் போய்டும்

லைப் ah பாத்தா figure போய்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த சுண்டல் , ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..

சுண்டல் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.

பாப்ஸ் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!

சுண்டல் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?

பாப்ஸ் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!

சுண்டல் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?

பாப்ஸ் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!

சுண்டல் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..

பாப்ஸ் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?

சுண்டல் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?

பாப்ஸ் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!

சுண்டல் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?

பாப்ஸ் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!

சுண்டல் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?

பாப்ஸ் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!

சுண்டல் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?

பாப்ஸ் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!

சுண்டல் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..

பாப்ஸ் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!

சுண்டல் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..

பாப்ஸ் ; ஏன்.. கிளம்பப் போறியா..?

சுண்டல் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?

பாப்ஸ் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!

சுண்டல் ; உன் அழகு என் மனச கலக்குது..

பாப்ஸ் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!

சுண்டல் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?

பாப்ஸ் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!

சுண்டல் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..

பாப்ஸ் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!

hahaha..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sivavathani Prabaharan

வேர்களை விழி தேடி

விழுதுகள் மொழி இன்றி

உயிருருகி பாடும்

ஓராயிரம் பாடல்கள்...

கால நதிக்கரையில்

கரைத்தும் கரையாமல்

கரையொதுங்கிய முத்துக்களை

நித்தமும் உளம் நாடும்..

மீண்டும் ஒரு காலம்

எமதாகி நாளை

நாளைகளை எமதாக்கி..

விழியோர திவலைகளில்

மின்னிடும் நம்பிக்கையின்

இறுதித் துளியில்

இறக்காமல் உயிர்கள் ஊசலாடும்..

விழி உருகி நீர் வார்க்கும்

உயிர் உருகி தினம் பாடும்..

கண்மணிகளின் வருகைக்காய்..

உறங்காமல் காத்திருக்கும்

காலமெல்லாம் எம் விழிச் சுடர்கள்..

இது விழுதுகளும்

விருட்சமாகி வேரூன்றும்

மாவீரர் நாள்.!

அழுகைகளை துடைத்து விட்டு

எழுகைகளில் நிமிர்வு கொள்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிந்நும் அறியாத அறிவியல்

=============================

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

by.fb

  • கருத்துக்கள உறவுகள்

மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போம். ஒரு மனிதன் ஆணியை சுவரில் அடிக்க எவ்வளவு பலத்தைப் உபயோகிப்பானோ, அவ்வளவு பலத்தைப் மரங்கொத்திப் பறவைகள் உபயோகித்து மரத்தை துளையிடுகின்றது. மரங்கொத்திப் பறவையின் தலை, மரத்தைக் கொத்துவதேற்றாற் போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தை போல திசுக்கள் இருக்கின்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டு பாக அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக்கொள்கின்றன. மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள பலமான தசைகள் தாங்கிக்கொள்கின்றது. இரண்டு அல்லது மூன்று நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.

மரங்கொத்திகள் துளையிடுவதற்கு பெரும்பாலும் பைன்(Pine) மரத்தையே தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் மரத்திற்கு 100 வயதிற்கு மேற்பட்டதாக இருக்கும். ஏனெனில் 100 வயதிற்கு மேற்பட்ட பைன் மரங்களுக்கு ஒரு வியாதி ஏற்படுவதினால் அவற்றின் தடிப்பான மரப்பட்டை மிருதுவாகி விடுகின்றன. விஞ்ஞானிகளால் இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

பைன் மரத்தைப் மரக்கொத்திகள் தெர்ந்தெடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. தங்கள் கூட்டை மரங்கொத்திகல் சிறு சிறு துவாரமிடுகின்றன. பைன் மரத்திலிருந்து வடியும் பிசின் அவற்றில் நிரம்பி சிறுகுளம் போலாகி விடுகின்றன. இந்தப் பிசின் குளங்கள் மரங்கொத்திப் பறவைகளின் மாபெரும் எதிரியான பாம்புகளிடமிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது.

படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்கிறேன் சுண்டு பேச மாட்டீங்க தானே...http://kklogan.blogspot.ca

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Superb cont plz

  • கருத்துக்கள உறவுகள்

<p>பைன் மரங்கள்.

உலகில் உள்ள மரங்களிலேயே, அதிகளவு ஆக்சிஜனை வெளியிடும் மரம், பைன் மரமாகும். பைன் மரங்கள் ஊசியிலைக் காடுகள் வகையைச் சேர்ந்ததாகும். பைன் மரங்கள், மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. இவை வெளியிடும் அதிக அளவிலான ஆக்சிஜன் காரணமாகத் தான், மலை வாழிடங்கள் நல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உள்ளன. பைன் மரங்களின் தாயகம் குளிர் மண்டல பகுதியே ஆகும். இந்தியாவில் இமயமலைச் சாரல்களில், கடல்மட்டத்திற்கு ஆயிரம் மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில், பைன் மரங்கள் உள்ளன. வெப்ப மண்டலப் பகுதியான தென் மாநிலங் களில், பைன் மரங்கள் வளர வாய்ப்பில்லை. தற்போது மென்மையான கட்டைகள், காகிதக் கூழ், ரோசணம், எண்ணெய், ரெசின் ஆகிய வற்றுக்காக பைன் மரங்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. பைன் மரங்களுக்குப் பதிலாக, இமய மலைப்பகுதிகளில் ஓக் மரங்கள் நடப்படுகின்றன.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

<p>உலகிலேயே மிக உயரமான இடத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள "சல்ரோ ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியாகும். ரியோ கறோனி ஆற்றிலிருந்து பிரிந்து டெவில் மலையிலிருந்து பாயும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரம் 3212அடி (979மீற்றர்). அமெரிக்க விமானி ஜேம்ஸ் ஜிம்மி ஏஞ்சல் என்பவர்தான் இந்த நீர்வீழ்ச்சியினை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகறியச் செய்தார். ஏஞ்சல் அவர்களால் கண்டறிப்பட்டதனால் அவர் பெயரினால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகின்றது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றவாளி ?

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக்

கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.

1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.

2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.

3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.

4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.

5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி???

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்காரன் தான்... குற்றவாளி.

ஞாயிற்றுக்கிழமை, தபால்காரன் வரமாட்டானே.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Super super :D

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

:( :( :(:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை தீக்கோழி ஆகும்.

 பறவைகளில் தன் உடலமைப்புடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய முட்டையிடும் பறவை கிவி பறவை. கிவி பறவையின் முட்டையானது அதனது உடம்புடன் ஒப்பிடும்போது 1/3 பங்காகும்.

 பறவைகளின் முட்டைகளில், தீக்கோழியின் முட்டையானது மிகக் கெட்டியான ஓட்டினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இதனை அவிப்பதற்கு 2 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றதாம்.

 பறவைகளில் மிகச்சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங்பேர்ட் பறவை. இதன் முட்டையின் நீளம் 0.39 அங்குலம் & நிறை 0.0132 oz

 Royal Albatross' பறவைகள் அடைகாத்து அதன் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாவதற்கு 79 நாட்கள் தேவைப்படுகின்றது.

 Albatross பறவைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைதான் முட்டையிடுகின்றதாம்.

 பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துபோன மடகாஸ்கரின் யானைப் பறவையானது 27பவுண்டுகளுக்கும் அதிகமான நிறையில் முட்டையிட்டதாம்.

 முட்டையிடும் ஒரு சராசரி பெட்டைக்கோழியானது வருடாந்தம் 257 முட்டைகளினை இடுகின்றதாம்.

 சாதாரணமாக ஒரு முட்டையின் நிறையில் 12சதவீத வகிபாகத்தினை முட்டையின் மேல் ஓடானது பெறுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.