Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரின் பின்னர் செய்யும் அபிவிருத்திகளை தான் அரசு செய்கிறது. அது ஒன்று பெரிய அதிசயம் அல்ல. ஏன் போர் நடக்காவிட்டால் எங்கள் வீதிகள் நன்றாக தான் இருந்திருக்கும், வீடுகளும் நன்றாக இருந்திருக்கும். அனைத்து நாடுகளிலும் போரின் பின்னர் அபிவிருத்தி நடப்பது வழமை தான். அதற்காக நாம் அவர்களின் பின்னர் எல்லாம் செல்ல முடியாது.

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 178.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்# தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது: முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு

சுண்டல்# யாருமே தேவை இல்லை தாத்தா உங்க குடும்பமே போதுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவே பேஸ்புக் நியதி.....

"எது ஸ்டேடஸ் போடப்பட்டதோ,

அது நன்றாகவே போடப்பட்டது,

எது ஸ்டேடஸ் போடப்படுகிறதோ,

அது நன்றாகவே போடப்படுகிறது,

எது ஸ்டேடஸ் போடப்பட இருக்கிறதோ,

அது நன்றாகவே போடப்ப்படும்,

நீ என்ன புரட்சி செய்தாய்?

எதற்காக மற்றவனை வம்பிளுக்கிறாய்?

என்ன செய்து முடித்து விட்டாய்,

அதை நீ அப்டேட் செய்வதற்கு?

என்ன கிழித்து விட்டாய்,

மற்றவருக்கு அறிவுரை சொல்வதற்கு?

எதை நீ ஸ்டேடஸாய் பதிந்தாயோ,

அது லைக்கிற்கே பதியப்படுகிறது,

எதை நீ கமெண்ட்டாய் பதிந்தாயோ,

அதுவும் லைக்கிற்கே பதியப்படுகிறது,

இன்று எதை பெண் ஐடி என நினைக்கிறாயோ,

நாளை அது பேக் ஐ.டி ஆகிறது,

மற்றொருநாள் ப்ளாக் ஆகி விடுகிறது,

இதுவே பேஸ்புக் நியதியும்,

எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்"

சூப்பர் பாஸ்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே ! எல்லாம் அநியாயத்துக்கு நன்றாக இருக்குது !  லைக் எல்லாம் லாஸ்ட் ஆயிட்டுது! :D  :D

இன்று எதை பெண் ஐடி என நினைக்கிறாயோ, 

நாளை அது பேக் ஐ.டி ஆகிறது, 

மற்றொருநாள் ப்ளாக் ஆகி விடுகிறது,

 

சுண்டல் எங்கே போனாலும் இப்படி ஒரு வம்பு வந்து மாட்டாமால் போகுத்தில்லையே. பாவியர் போகிற இடம் பள்ளம் திட்டியுமாக இருக்கிறதே.

 

போகட்டும் இந்த பேஸ் புக். அதை விட்டிடுங்க. நாம நியச்சயமாக வேக் அவுட் ஆகத்தாக ஒன்று கண்டுபிடிக்கலாம்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் கோவில்களில், "வழுக்கு மரம்' ஏறும், திருவிழா நடைபெறும். வழுக்கு கம்பம் ஒன்றில், வழிய வழிய, எண்ணெய் தடவி இருப்பர். அதில், ஒருவர் ஏறி, கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும், பணமுடிப்பை எடுக்க வேண்டும். ஒருவராக ஏற முடியா விட்டால், மூன்று, நான்கு பேர் சேர்ந்த குழுவாக, இம்முயற்சியில் ஈடுபடலாம். மூன்று பேர், அந்த வழுக்கு கம்பத்தைக் கட்டிப்பிடித்து நின்று கொள்வர். ஒருவன், அவர்கள் மேல் ஏறி, அவர்கள் தோள் மீது காலை வைத்து, வழுக்கு கம்பத்தில் ஏறுவான். கீழே நிற்போர், வழுக்கு கம்பத்தின் மீது தண்ணீரை ஊற்றுவர். எண்ணெய்யும், தண்ணீரும் சேர்ந்தால், மேலும் வழுக்கும். ஏறுபவன் அதையும் மீறி, உச்சியை அடைய வேண்டும். முடியாவிட்டால், அடுத்த குழுவினர் வருவர். எப்படியோ, ஒரு குழுவைச் சேர்ந்தவன், ஏறி, பணமுடிப்பை எடுத்து விடுவான்.

வாழ்க்கையும், ஒரு வழுக்கு மரத்தைப் போன்றது தான். அன்றாடப் பொழுது, கஷ்ட மில்லாமல் போனால் போதும் என்று, நினைப்போரைப் பற்றி பேச எதுவும் இல்லை. ஆனால், சாதிக்கத் துடிப் போர், சந்திக்கும் பிரச்னை என்னவென்றால், வழுக்கு மரமெனும் வாழ்வில் ஏறும் போது, அவனை, வெற்றி அடைய விடாமல், செய்வதற்கு தண்ணீர் வாரி அடிக்க சிலர் உண்டு. அதையும் மீறி, அவன் கம்பத்தின் உச்சியை அடைய வேண்டும். ஆனால், அதை விடுத்து, தன் முயற்சிக்கு இடையூறாகத் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மேல் கோபம் கொண்டு, கம்பத்தை விட்டு இறங்கி வந்து, அவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பான் அல்லது தண்ணீர் வீசியடித்தவர்களைக் கண்டு, "சே! என்ன பொறாமைக்கார உலகம்' என்று, சமூகத்தை நிந்தித்து, தனிமை வாழ்வை நாடத் துவங்கி விடுவான்.

— "வாழ்க்கை வாழ்வதற்கே' நூலிலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனபே யாழில் இணைக்கப்பட்டு இருப்பதால் நீக்கபடுகின்றது

நன்றி

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தேன்...

"டேய் மச்சி ... நான் சைதாப்பேட்டை பக்கமாதான் போறேன் ... அங்கே உன்னை டிராப் பண்ணிடுறேன் ... என் கூட பைக்ல வர்றியா?"

வீட்டிற்கே வந்து அழைத்தான் என் நண்பன்.

நானும் நம்பி ஏறினேன்.

பாதி தூரம் வந்திருப்போம் ... வண்டி நின்று விட்டது.

"கொஞ்சம் இறங்கு"என்றவன், நான் இறங்கியதும் வேகவேகமாக இறங்கி, பின் சக்கரத்தின் காற்றை திறந்துவிட்டான்.

எனக்கு பகீரென்றது.

"டேய் ... என்னடா பண்ற?"

"ஒண்ணுமில்லை மச்சி ... வண்டியில பெட்ரோல் இல்லை"

அடுத்த பெட்ரோல் பங்க் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

"அதுக்கு ஏண்டா காற்றை திறந்து விட்ட? ... இப்போ வண்டிய தள்ளிட்டு போறதுக்குக்கூட கஷ்டமா இருக்குமே?"

"அது ஒண்ணுமில்ல மச்சி ... பெட்ரோல் இல்லாம ரோட்டுல வண்டிய தள்ளிட்டு போறத பார்க்குறவங்க கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க ... ஆனால், பஞ்சர் ஆன வண்டிய தள்ளிட்டு போனா அய்யோ பாவம்னு நம்ம மேல பரிதாபமாப்படுவாங்க ... அதான்"

"அடக் கடவுளே ... வண்டியில பெட்ரோல் இல்லைன்னா என்னை ஏண்டா கூட்டிட்டு வந்த ... நான் பஸ்ல போயிருப்பேன்ல ... எனக்கு அவசரமா ஆபிஸ் போகணும்"

நக்கலாக‌ என்னைப்பார்த்து சிரித்தபடி சொன்னான்,

"நான் தனியா வண்டிய தள்ளிட்டு போக முடியுமா? ... அதனாலதான் ... ப்ளீஸ் ... கோவிச்சிக்காம கொஞ்சம் பின்னாடியே தள்ளிட்டு வாயேன்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓராண்டு வரை பேச வேண்டிய எல்லாவற்றையும்

ஒரே இரவில் தொலைபேசியில் பேசி முடித்து விடுகிறார்கள்..

பின், "என்கிட்ட பேச ஒன்றுமே இல்லையா? " என்ற வார்த்தையில் சண்டையை ஆரம்பிக்கிறார்கள்.

அதை ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்த பின் பிரிந்து விடுகிறார்கள்.

இந்த பயபுள்ளைங்க இப்படி செய்யும்னு தெரிஞ்சி தான், நிச்சயம் ஆனா கூட பொண்ணு,பையன பேச விடாம பாத்துகிட்டாங்களோ?? அந்த காலத்துல.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு  மிஞ்சினால்

அமுதமும்   நஞ்சு ராசா :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு மாதங்களுக்கு முன்னால் நானும், மாவட்டச் செயலாளர் அண்ணன் கே .கே.எஸ்.எஸ்.ஆர் .அவர்களும் அறிவாலயம் போயிருந்தோம் .

இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அண்ணன். சுப .தங்கவேலன், அமைப்பு செயலாளர் அண்ணன் டி .கே .எஸ்.இளங்கோவன் போன்றோர் அங்கே இருந்தார்கள் .

வழக்கம் போல தலைவர் கலைஞர், கழக முன்னோடிகளுடன் வந்தார்; வெளியே எங்களைப் பார்த்தவர், " என்ன,எப்போ வந்தீங்க ?" என்று கேட்டுவிட்டு அறைக்குள் அழைத்து மாவட்ட நிலவரங்களை விசாரித்துக் கொண்டிருந்தார் . அப்போது உள்ளே வந்த அவரது தனி உதவியாளர் திரு.நித்தியா ஒரு டப்பாவைத் தலைவர் அருகில் உள்ள டீப்பாயில் வைத்து விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் பேசிக்கொண்டே தலைவர் அவர்கள் அதன் மூடியைத் திறக்க முயற்சித்தார். அழுத்தமாக மூடி இருந்ததால் உடனே திறக்க வரவில்லை . சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த நான் இதை கவனித்து விட்டு அவர் அருகே சென்று டப்பாவின் மூடியைத் திறந்து, தலைவர் பக்கத்தில் வைத்தேன் . உள்ளே சில ஆப்பிள் துண்டுகள் இருந்தது . திரும்பி இரண்டடி நடந்திருப்பேன் ...

" தென்னரசு .."

தலைவர் கலைஞரின் குரல் பின்னால் கேட்டது.

" ஐயா "

"இந்தாயா ...அங்கேருந்து வந்து மூடியத் திறந்து உதவி பண்ணிருக்கே இல்லே " என்று சொல்லி விட்டு சில ஆப்பிள் துண்டுகளைக் கையில் அளித்தார் ...நான் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றிருக்க , சட்டென்று சிரித்துக் கொண்டே சொன்னார் ,

" 'பழம் பெரும் ' தலைவரிடம் இருந்து ' பழம் பெறும் ' தொண்டன்யா நீ "

தலைவர் கலைஞரின் சொல்லாடல் நயமும் ,சிரிப்பும் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள அறை முழுக்க சிரிப்பலை பரவியது ...

தங்கம் தென்னரசு

முன்னாள் அமைச்சர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைனா என்ன?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

பாத்திங்களா ஒன்னுமே இல்ல ...

ஆன எதையோ தேடுறோம் ... இதாங்க வாழ்க்கை...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட கிறிஸ்த்துவிர்க்கு முன்பு நம்ம நந்தன் அண்ணா எல்லாம் பள்ளிக்கூடம் போய் படிச்சிட்டு இருந்த காலம் அது

ஒரு நாள் அந்த கிளாஸ் ல

sir : பத்து விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும்

நந்தன் அண்ணா: ரத்தம் வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டீச்சர் : ரஜினி 3 x 4 எவ்வளோ...??

ரஜினி : 12 டீச்சர்...

டீச்சர் : சரி, உக்காரு...

டீச்சர் : கேப்டன் நீ சொல்லு 4 x 3 எவ்வளவு..??

கேப்டன் : ஏ புள்ள ! கேள்விய மாத்தி கேட்டா தெரியாதுன்னு நினைச்சியா..... 21

டீச்சர் : !!!!!!!????

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . .

மனநல ஆசிரியர் : "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."

மாணவன் : "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."

--------------

நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?

நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் வெளிநாட்டில லைட் மில்க் எண்டு விக்குறதையா யாழ்ப்பாணத்தில தண்ணி பால் எண்டு சொல்லுறது? ரெண்டு டேஸ்ட்டும் ஒண்டா இருக்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

மனம்விட்டு சிரித்தேன்.. :D


உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 

பாலை ஊத்திறதாலதான் அப்ப நாக தோசம் வருதா? :D

 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

 

 

எனக்கும் இப்படி ஏதும்  இருந்தால் பாருங்கப்பா....

:lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய அழகு ராணியாக இலங்கை யுவதி தெரிவாம் யாழ் கள உறவுகள் இப்பிடியான செய்திகள பகிர்ந்துக்க மாட்டிங்களா?

படங்கள பாக்க

http://www.arivomaayiram.com/2013/10/Miss-Teen-Canada-Globe.html

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை அழகாய்த்தான் இருக்கின்றா , அத்துடன் ஊரில் சமுக சேவையும் செய்திருக்கிறா ,

அதுதான் மகுடம் சூட்டியுள்ளார்கள்.

வாழ்த்துக்கள்.

அழகைத் தேடி இணைத்த சுண்டலுக்கும்!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்டப் போட்டி 2013 (all Island School Games 2010 athletic meet) கொழும்பு சுகததாச அரங்கில் பெற்ற போட்டியில் மகாஜனவுக்கு 2 தங்கம் , 2 வெள்ளி , 2 வர்ண விருது

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சுண்டல் என்ன சொல்கிறார்.

 

http://youtu.be/o_7hfTS5RKU

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.