Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய அழகு ராணியாக இலங்கை யுவதி தெரிவாம் யாழ் கள உறவுகள் இப்பிடியான செய்திகள பகிர்ந்துக்க மாட்டிங்களா?

படங்கள பாக்க

http://www.arivomaayiram.com/2013/10/Miss-Teen-Canada-Globe.html

 

கனடாவில் பல அழகிகள் கண்மண் தெரியாமல் அலைவதால் நாங்கள் இதையெல்லாம் பெரிசா எடுக்கிறேல்ல.. :D

  • Replies 3.2k
  • Views 178k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இளவல்களுக்கு உயரம், ஒகேயாகுமா? :D

23777.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?''

''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''

''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?''

''??????''

இதுக்கு உங்க யார்கிட்டயாவது பதில் இருக்கா...?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிடம் கேட்கலாம்

அப்பாவிடம் கேட்கலாம்

 

அப்பா என்னா யாருங்கா? அப்படு ஒருவர் இருந்தா...

 

அவரை  இப்போதைக்கு X ன்னு வைச்சுக்கவா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இளவல்களுக்கு உயரம், ஒகேயாகுமா? :D

23777.jpg

எதோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது தானே அண்ணே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குருவி பறந்து வரும்போது ஒரு கார் மேல மோதி மயங்கி விழுந்துருச்சு..... அந்த கார் டிரைவர் குருவிய ஒரு கூண்டுக்குள் வச்சு தண்ணீர் கொடுத்தார்,,,, மயக்கம் தெளிஞ்ச அந்த குருவி என்ன சொல்லுச்சு தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

" அச்சசோ நான் ஜெயில்ல இருக்கேனா? அப்டின்னா !! கார் டிரைவர் செத்துட்டாரா??????

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலை சொல்லவது எப்படி ..?

1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும்

2.என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா?

3.என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா?

4.லவ் பண்ணவேனாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?

5.என் மொபைல் பேலன்சே உனக்காக தான் காத்திருக்கு..

6.வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறாங்க , நான் உங்களைப் பார்க்க வந்தேன்

7.உங்க அப்பாக்கு நான் மருமகனா வர ஆசப்படுறேன்..

8.நாம ரெண்டு பெரும் சேர்ந்து அப்பா அம்மா வெளாட்டு வெளாடலாமா ?..அவ்வ்

9.த பாரு எனக்கு கன்வின்சிங்கா ப்ரபோஸ்லாம் பண்ணைத் தெரியாது, ஆனா என் உயிர் இருக்கும் வரை நல்லா அன்பா பார்த்துப்பேன்..

10.இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய ஊதுறியா எண்டு கேட்க்காத பொண்டாட்டியும் இல்லை.....

ஹேய் நீ கொஞ்சம் வாய மூடுறியா எண்டு சொல்லாத புருஷனும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் புதிய தொழில்நுட்பங்கள் புதிய கதை அம்சங்கள் புதிய நடிகர்கள் என்று இன்றைய புதிய திரைப்படங்கள் வந்தாலும் ராஜாவின் இசையுடன் கூடிய 1980 களில் வெளிவந்த திரைப்படங்களை பார்கின்ற பொழுது ஏற்படும் திருப்தி இன்றைய படங்களில் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.

அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.

கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று ஒருவர் கேட்டார்.

நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.

நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.

அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.

நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.

இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.”

- நபிகள் நாயகம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னைவிட உனக்கு சிறந்த காதலன் உனக்குக் கிடைத்தால் நீ அவனுடன் போ.

அவனும் விட்டு விலகிவிட்டால் திரும்பிப்பார் நான் இருப்பேன்

,

,

,

,

,

"உன் தங்கையோடு"

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஆணாதிக்க சமூகம் :

கேட் மில்லட் என்பவர் பெண்ணடிமைப் போக்கு வளர்ந்த வரலாற்றைப் பால் வகை அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண் பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஆணாதிக்க சமூகம் வகுத்ததுதான் பால் வகை என்பது ஆண் தனக்குரிய சமூகக் கனவாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்ற வற்றைத் தெரிந்து கொண்டான். பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளை ஆட்படுத்துகிறான். ஆதலால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுக, அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. ஆதலால் அவள் சுயசிந்தனை இல்லாதவளாக ஆடவன் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. ஆண், பெண் இடையே அதிகார உறவுகள் வளர்ந்து பெருக குடும்பம் என்ற அமைப்பும் காரணமாயிற்று.

- க.கவிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..

இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.

ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..

உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,

"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"

என்று கேட்டான்.

அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,

"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் புயலென தாக்கிட்டு இருந்த நஸ்ரியாவின் பிரச்சனை ஒரு மாதிரி முடிவுக்கு வந்து நையாண்டி படமும் வந்திடிச்சு......

இனி என்ன தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓட போகுது கர்நாடகாவில் இருந்து தண்ணி வர போகுது மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கூட கிடைக்க போகுது....

இப்பொழுதே நஸ்ரியாக்கு கோயில கட்ட தயாராகுங்கப்பா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Australia தொழில் கட்சி தலைவராக bill shorten தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் வாழ்த்துக்கள் பில் லிபரல் கட்சியை அடுத்த தேர்தலில் தோற்கடிக்கும் செயல்த்திட்டங்களுடன் கட்சியை தலைமையேற்று நடத்துவார் என்று எதிர் பாப்போம்

BILL Shorten has been elected as Labor's new leader, beating out former deputy prime minister Anthony Albanese.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரித்தானியா தமிழர் பேரவை சந்தித்துள்ளது சிலர் கூறுவது போல இங்கே இருப்பவர்கள் பொத்திக்கொண்டு இருந்தால் இதெல்லாம் நடக்காது வடக்கு தேர்தல் நடந்ததே புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் தான் இலங்கை அரசே ஒப்புக்கொண்ட விடையம் புலம் பெயர் தமிழர்களால் பெரிய தலையிடி என்று ஆக வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை உங்களை சுயநலம் மிக்கவராக மாற்றி இருக்கலாம் ஆனாலும் தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்னோட பணி தாயகம் நோக்கி தொடரும் நான் மட்டுமல்ல மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஒவொரு தமிழனும் செய்வான் விமர்சிக்க வேண்டியதை வெளிப்படையா விமர்சிப்பான் புலம் பெயர் சொகுசு வாழ்வு எங்களை மாற்றிவிடப்போவதில்லை

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜா ராணி படத்தில நயன்தாரா ஆரியாக்கு beer அடிக்கிறிங்களா எண்டு எடுத்து கெடுக்கிற சீ கொடுக்கிற அழகு இருக்கே ச்சாய் இப்பிடி எல்லாருக்கும் வாய்க்காதையா

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா ராணி படத்தில நயன்தாரா ஆரியாக்கு beer அடிக்கிறிங்களா எண்டு எடுத்து கெடுக்கிற சீ கொடுக்கிற அழகு இருக்கே ச்சாய் இப்பிடி எல்லாருக்கும் வாய்க்காதையா

 

சத்யராஜாவுக்கு  கொடுப்பதைத்தானே சொல்கிறீர்கள் :D 

நானும் அதைத்தான்  எதிர்பார்திருக்கின்றேன் :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடச்ச் ச்சீ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவள்ஒ ருத்திதான் பெண்ணா? -- மீதி இருப்பவள் எல்லாம் மண்ணா? கவலையை விடுவாய் மனமே! -- பொய்க் காதலெல் லம்சில தினமே! வளர்க்கும் விதத்திலே தவறு! -- சிலர் வாலிபத் தில்குட்டிச் சுவரு! கொளுத்தும் வெயிலிலும் கனவு! --பல குமரிப் பெண்களின் நினைவு! பெரியவர் கண்டிப்பில் வளர்ந்தான்! -- அவன் பெண்வாடை இன்றியே திரிந்தான்! உரிய பருவத்தில் வியந்தான்! -- அவனை ஒருபெண் பார்த்தாலே பயந்தான்! கிடைத்தது ஒருபெண்ணின் நெருக்கம்! -- அவனுள் கிடுகிடு கிடுவென நடுக்கம்! படைத்தவன் முகத்தினில் சிரிப்பு! --உடன் பற்றியெ ரிந்தது நெருப்பு! பார்த்ததைக் காதலாய் நினைத்தான்! --அவள் பழக்கத்தில் ஜீவனைக் கொடுத்தான்! சேர்த்திடச் சேர்த்திடத் துடித்தான்! -- அவள் சிரிப்பினில் சொர்க்கத்தைப் படைத்தான்! வாழ்வே அவளென நினைத்தான்! -- தினம் வரிசையாய்க் கவிதைகள் தொடுத்தான்! ஊழ்வே றானதும் அதிர்ந்தான்! --தன் உயிர்போ னதுபோல் விழுந்தான்! பார்த்ததும் சிரித்ததும் சும்மா! --அவள் பழகிய பழக்கமும் சும்மா! வேர்த்திட அலைந்ததும் சும்மா! -- அவன் வெட்டியாய்ப் போயினான் அம்மா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....

பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...

டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!

பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

:( :( :D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா : நீ எங்க தங்கி இருக்க ?

சுண்டல் : எங்க அப்பா அம்மா கூட.

நந்தன் அண்ணா : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?

சுண்டல் : என் கூட தங்கி இருக்காங்க.

நந்தன் அண்ணா : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?

சுண்டல் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.

நந்தன் அண்ணா : உங்க வீடு எங்க இருக்கு ?

சுண்டல் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.

நந்தன் அண்ணா : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?

சுண்டல் : சொன்னா நம்ப மாட்டீங்க.

நந்தன் அண்ணா : பரவால , சொல்லு .

சுண்டல் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு

நந்தன் அண்ணா சுண்டல் மேல எட்டி பாய சுண்டல் அலறி அடிச்சிட்டு ஒரே ஓட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை என்பது யோசிப்பது! காதல் என்பது நேசிப்பது! நட்பு என்பது சுவாசிப்பது! யோசிக்காமல் இருக்கலாம்... நேசிக்காமல் இருக்கலாம்... ஆனால் சுவாசிக்காமல் இருக்க முடியுமா? இதுதான் நட்பு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கண்டி வீதியால் வாகனங்கள் நாளாந்தம் ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றன.

1990 யூன் மாதம் 15ம் திகதி ஆரம்பித்த யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திற்கும்

நாட்டின் ஏனைய பகுதிகளுக்குமான தரைவழிப் பாதை மூடப்பட்ட காலத்தில் பல

மாற்றுப்பாதைகள் போக்குவரத்திற்கு பயன்பட்டன.

அதில் ஒன்று தான் கிளாலி பயணப்பாதை. யாழ். குடாநாட்டின் பச்சிலைப்பள்ளி

பிரதேசத்தில் கடற்கரையோரக் கிராமம் தான் கிளாலி. இப் பிரதேசம் கிளிநெபச்சி நிர்வாக

மாவட்டத்தினுள் வருகின்றது. இங்கிருந்து தான் வள்ளமேறி ஏறத்தாழ

15 கடல் மைல் தூரம் பயணம் செய்து பூநகரிப் பிரதேசத்தின் மட்டுவில் நாடு,

நல்லூர் போன்ற கிராமங்களில் எம்மவர்கள் இறங்கினார்கள். அங்கிருந்து

வன்னிப் பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும்

பயணங்களை அவர்கள் மேற்காண்டார்கள்

மாதா கோயில் காரணமாக மட்டும் அறியப்பட்ட கிளாலிப் பிரதேசம் யுத்தகாலத்தில்

முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துப் பாதையாக மாறியதால் உலகப் பிரபலம்

பெற்ற இடமாக மாறியது.

எரிபொருள் தட்டுப்பாடு உச்சமாக இருந்த அக்காலத்தில் ஒரு வள்ளத்துடன் பல வள்ளங்கள்

சேர்ந்து தொடுவையாக கடலில் சென்றன. அச்சம் காரணமாக இரவில் மட்டும்

பயணம் நிகழ்ந்த இப்பாதை சில காலத்தின் பின்பாக பகலிலும் செல்லக்கூடியதான

நிலை வந்தது.

ஆட்கள் மட்டுமல்லாமல் சைக்கிள், மோ.சைக்கிள் போன்ற வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

பரல்களை கட்டி பாரிய பாதை ஒன்று ஏற்படுத்தப்பட்டு கார், லொறி போன்ற வாகனங்களும் எடுத்துச்

செல்லப்பட்டன.

1993 மே மாதம் ஆரம்பித்த இக் கடற்பயணங்கள் 1996 மே மாதம் யாழ். குடாநாடு அரச படையினரின்

முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இடம்பெற்றன. பின்னர் இப் பாதை மூடப்பட்டது.

தற்போது யாழ். குடாநாட்டு மக்கள் தரை வழி தவிர்த்து கப்பல், விமானம் மூலம் வெளிமாவட்டங்களுக்கு

பயணம் செய்கிறார்கள்.

ஆனால் யுத்த காலங்களில் யாழ்.குடாநாட்டு மக்கள் கண்டி வீதி, பூநகரி - சங்குப்பிட்டி பாதை,

கொம்படி - ஊரியான் பாதை ஆகிய ஆபத்தான பயணப் பாதைகளுடன்

காங்கேசன்துறை கப்பல் பயணம், பலாலி விமானப் பயணம் என பல பயணங்களை

மேற்கொண்டாலும் யாழ்.மக்களின் பயண வரலாற்றில் கிளாலி பயண பாதையும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

தரைவழிப் பாதை மூடுவதற்கு இனி இடமில்லாது விட்டாலும் எமது வரலாற்று

பெட்டகத்தில் கிளாலி கடற்பாதையையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்பது

குறிப்பிடத்தக்கது.

Jaffna Today

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே….

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.