Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் தோல்வியில் வருகிற வலியை விட.... முறுக்கு சாப்பிடும் போது நாக்கை கடிப்பதால் வரும் வலிக்கு வேதனை அதிகம்

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kalaignar Karunanidhi

கேள்வி :- அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே" கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில் :- நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அந்தப் பிரச்சினை அதிகமாகப் பேசப்பட்டு, இந்திய அரசு அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தது பற்றியெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆனால் அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது. தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் ஒன்றையும் கவனிக்கவில்லை  என்று எடுக்கமுடியாது

ஆனாலஇ;

தனக்கு தேவையான நேரம் தான் எடுத்துவிடும்

பழக்கதோசம்

60  வருட  அரசியல் வாழ்க்கை...... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் ஒன்றையும் கவனிக்கவில்லை  என்று எடுக்கமுடியாது

ஆனாலஇ;

தனக்கு தேவையான நேரம் தான் எடுத்துவிடும்

பழக்கதோசம்

60  வருட  அரசியல் வாழ்க்கை...... :(  :(  :(

 

அவ‌ர் ஈழத்திற்கு... செய்த துரோகத்தால்,

60 வருட, அரசியல் வாழ்க்கையில்.. பெருமைப் படும் விடயம் எதுவுமில்லை.

அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜீ.ஆர். வரிசையில்...

தமிழகத்தில்... இவரது பெயர் நிலைத்திருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்புகாட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த தினம் இன்று அனைவருக்கும் நத்தார் நல்வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் இந்த குளிருக்குள்ள இருந்து கஷ்டப்படுற கனடா காரர நினைச்சா பாவமா இருக்குப்பா...... என்ன தான் இருந்தாலும் Aussie பெஸ்ட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் ஜி : டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

நந்தன் ஜி: "சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"

டாக்டர் :

  • கருத்துக்கள உறவுகள்

இவரை, ஒரு மணி நேரத்துக்கு முன்னயே கொண்டு வந்திருந்தீங்கன்னா.... காப்பாத்தியிருக்கலாம்.
 

அதெல்லாம் ச‌ரி டாக்ட‌ர்....
ஆனா, இவ‌ருக்கு ஆக்ஸிட‌ண்ட் ஆகியே... அரை ம‌ணி நேர‌ம் தானே ஆகுது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் சோறு கிடைக்க

ஆண்கள் சொல்லவேண்டிய மந்திரம்

"நீ அவ்வளவு அழகு டீ"

மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விபச்சார விடுதியில் ஒரு கொலை நடந்துவிட்டது . ஒரு பெண்னை வக்கீல் குறுக்குக் கேள்வி கேட்கிறார்.

 

வக்கீல்; அன்று நீ எங்கிருந்தாய்!

பெண்; வீட்டில் இருந்தேன்.

வக்கீல்; ஏன் அன்று வேலைக்குப் போகவில்லை!

பெண்; நான்  பகலில் தான் போவது வழக்கம்.

நீதிபதி  குறுக்கிட்டு ; அதெப்படி உன் வாடிக்கையாளர்கள் இரவில்தானே வருவார்கள்!

பெண்; திருடர்களும் , பொறுக்கிகளும் தான் ஐயா இருவில் வருவார்கள், உங்களைப் போன்ற கௌரவமானவர்கள் பகலில்தான் வருகிறார்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேய் சுண்டல் "I don't Know" அப்படின்னா என்னடா?"

சுண்டு : "எனக்குத் தெரியாது" அண்ணே

நண்டு : "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத் தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?

  • கருத்துக்கள உறவுகள்

1525486_518644034909609_135352821_n.jpg

 

இணையத்தில்... மேய்ந்த போது, அழகிய முறையில் படமெடுக்கப் பட்ட மயில் இறகு ஒன்றை கண்டேன்.
எங்கு இணைப்பது என்று தெரியாமல் தடுமாறிய போது... "சுண்டலின் பார்த்தது,..." ஞாபகம் வந்தது, இணைத்து விட்டேன். :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wow nice

----------------

கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் திறக்க மாட்டாள் என்று தெரிந்ததால், ஒரு தந்திரம் செய்தான்.

கதவைத் தட்டிவிட்டு, "அழகான பொண்ணுக்கு அழகான பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

மனைவி கதவைத் திறந்துவிட்டு, "அழகான பரிசு எங்கே?" என்று கேட்டாள்.

கணவன் கேட்டான், "அழகான பொண்ணு எங்கே?"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: "நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!

நந்தன் அண்ணா:.... போடாங் ..நான் துண்ட கையில எடுத்தா ஒரே ஒரு அர்த்தம் .....துண்ட கட்டி தொங்க போறேன்னு அர்த்தம்டா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அவர்களை வழிமொழிந்து நான் அப்போது பேசியது -

"வாழ்வு மூன்று எழுத்து; வாழ்விற்குத் தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; வீரர் செல்லும் களம் மூன்று எழுத்து; களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் "அண்ணா" மூன்று எழுத்து, அந்த அண்ணனைத் தலைமையேற்க வழிமொழிகிறேன்" -

கலைஞர் கருணாநிதி 1951 இல் தி மு க மாநில மாநாட்டில் பேசியது

  • கருத்துக்கள உறவுகள்

அட கஸ்டகாலமே !  ஊழல்  கூட மூன்றெழுத்தில்தான் வந்து தொலைக்குது ...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட கஸ்டகாலமே !  ஊழல்  கூட மூன்றெழுத்தில்தான் வந்து தொலைக்குது ...! :lol:

 

தமிழ்  கூட மூன்று எழுத்துத்தான்..

அதை வைத்து  ஊழல் செய்ததைத்தான் மன்னிக்கமுடியாது..... :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

News :விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என்கிறது நாஸா நிறுவனம்

ஆகா அமெரிக்கா ஆப்பு வைக்க ரெடி ஆகிடாண்டோய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை கனடாவில் நிறைய தமிழர்கள் விழுந்தெழும்ப தயாராகின்றார்கள் இதனால் சாதுவான பூமி அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பிருபதாக செவ்வாய் கிரகத்தில் இருந்து வானிலை ஆராய்ச்சி அதிகாரி நந்தன் அண்ணா தகவல் அனுப்பி இருக்காரு.....:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா வேலைக்கு புறப்பட்டு போய் கொண்டு இருக்கின்றார்.......அளவுக்கு அதிகமான கனடிய பனியில் சறுக்கி விழுந்து இடுப்பில் கையைவைத்த படி....

கண்டறியாத நாடும் குளிரும்....பேசாமல் ஊருல இருந்து குப்பை கொட்டி இருக்கலாம் என்று புறுபுறுத்து கொண்டு இருக்கும் போது ...அந்த வழியால் வல்வை சகாரா அக்கா வருகின்றார்........

வல்வை அக்கா: என்ன அர்ஜுன் அண்ணா விழுந்து போனிங்களே...? பாத்து வர தெரியாதே...சரி கைய தாங்க தூக்கி விட.......

அர்ஜுன் அண்ணா மனசுக்குள் இவள் ஒருத்தி என்று பேசியபடி........

சீ இல்லை சகாரா நான் போய் விழுவனே இந்த குளிர் பனி எல்லாம் எனக்கு ஜுஜுபி.....

ஜஸ்ட்டு சும்மா......சறுக்கி விளாடிட்டு இருக்கன் நீங்க போயிட்டு வாங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நமது இலட்சியத்தை நோக்கி, அமைதிப் பாதையிலே நடந்து செல்கின்றோம். அந்தப் பயணத் தின் இடையிலே வரும் பிரச்சினைகள், பாதையிலே வரும் நண்பர்களைப் போல; பேசிக் கொண்டே செல்வோம், பிரிவோம் - ஆனால் பாதையை விட மாட்டோம், மழை பெய்தால் ஒதுங்கி நிற்போம், சிறிது நேரம் - ஓய்ந்து விடமாட்டோம். தொடர்ந்து நடப்போம். பனி, மழை, வெய்யில், குளிர், இரவு, பகல் என்ற எதுவும் பயணத்தை நிறுத்தாது - பாதையை மாற்றாது. பாதையில் பிணங்கள் கிடக்கலாம். எலும்புக் கூடுகள் இருக்கக்கூடும். அவைகளைச் சுற்றி கழுகுகள் வட்டமிடலாம். -

நரிகளின் ஊளை கேட்கலாம். ஆனால் நாம் பாதையைத் தவறவிடோம். பிணமும், பிறவும் நமக்கு முன்னால் வீரர்கள் சென் றிருக்கிறார்கள் என்பதின் சின்னங்கள் என்றே கருதி நடப்போம். இடையிலே வரும் பிரச்சினைகளுக்காக நாம் எதற்காக உருவாகி, உழைத்து வருகின்றோமோ அந்த அடிப்படை இலட்சியத்தை இழந்துவிட மாட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

"நமது இலட்சியத்தை நோக்கி, அமைதிப் பாதையிலே நடந்து செல்கின்றோம். அந்தப் பயணத் தின் இடையிலே வரும் பிரச்சினைகள், பாதையிலே வரும் நண்பர்களைப் போல; பேசிக் கொண்டே செல்வோம், பிரிவோம் - ஆனால் பாதையை விட மாட்டோம், மழை பெய்தால் ஒதுங்கி நிற்போம், சிறிது நேரம் - ஓய்ந்து விடமாட்டோம். தொடர்ந்து நடப்போம். பனி, மழை, வெய்யில், குளிர், இரவு, பகல் என்ற எதுவும் பயணத்தை நிறுத்தாது - பாதையை மாற்றாது. பாதையில் பிணங்கள் கிடக்கலாம். எலும்புக் கூடுகள் இருக்கக்கூடும். அவைகளைச் சுற்றி கழுகுகள் வட்டமிடலாம். -

நரிகளின் ஊளை கேட்கலாம். ஆனால் நாம் பாதையைத் தவறவிடோம். பிணமும், பிறவும் நமக்கு முன்னால் வீரர்கள் சென் றிருக்கிறார்கள் என்பதின் சின்னங்கள் என்றே கருதி நடப்போம். இடையிலே வரும் பிரச்சினைகளுக்காக நாம் எதற்காக உருவாகி, உழைத்து வருகின்றோமோ அந்த அடிப்படை இலட்சியத்தை இழந்துவிட மாட்டோம்

 

 

வெற்றி  மட்டுமே  கண்டவனுக்கு மட்டுமே  கூட்டம் இருக்கும்

அவன் சொல்வழி  நடக்கும்

இல்லையென்றால்

துரும்பை அசைக்காதவன் கூட  பாடமெடுப்பான்.......... :(

இன்றைய  தமிழரின் நிலை  இதற்கு நல்ல  உதாரணம். :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நாங்கள் எல்லாம் பெரிதும் மதிக்க கூடிய அறிஞர் அண்ணா அவர்கள் 1952 ஆம் ஆண்டு தி மு க வின் திருச்சி மாநாட்டில் ஆற்றிய உரையில் பிரித்து எடுத்தது ஏனென்றால் அதில் கூறப்பட்ட விடையம் இன்றைய கால கட்ட ஈழத்தமிழனுக்கு பொருந்தும் என்பதால்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம்

ஒரு ஆண்

நீங்கள் போட்டுருக்கும் perfume அதிக வாசனையாக உள்ளது . perfume பெயர் சொல்ல முடியுமா ?

இல்ல என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுப்பேன் அதற்கு தான் கேட்கிறேன் என்றான் ....

அந்த பெண் அமைதியாக சொன்னால் ......

நீ அந்த perfume வாங்கி கொடுத்தால் உன் தங்கையுடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள்

பரவைல்லையா என்று .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனிப்புயலில் சிக்கி வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு அடுத்த Winter க்கு இதை விட குளிருமா என்று விவாதித்து கொண்டு இருக்கும் கனேடிய தமிழர்கள் Australia க்கு புலம்பெயர விரும்பினால் தேவையான உதவிகள் வழங்கப்படும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.