Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின் தத்தக்க பித்தக்க # 4442

எல்லா லவ் ஸ்டோரிலையும் காமடி பீஸ் நமக்கு அல்வா கொடுத்திட்டு போன பிகர கல்யாணம் கட்டிக்க போறவன் தான்.

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ நிழல் விலகுகிறாயுமில்லை பேசுகுறாயுமில்லை

#அடிப்போடி..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனடாவில் family day .....

உலக புலம் பெயர் தமிழர்களின் உதாரணமாக இருந்து உழைப்பின் உயர்வை உலகத்தமிழர்களுக்கு உணர்த்தி.... தங்கள் குடும்ப பொறுப்போடு உறவுகளையும் சுமந்து கரை சேர்த்த நான் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க கூடிய கனேடிய உறவுகள் இந்த நாளை உங்கள் குடும்பத்தோடு இனிய நாளாக ஆக்கி இன்புற வாழ்த்துக்கள்....

Happy family day tamil Canadians

  • கருத்துக்கள உறவுகள்

Happy family day tamil Canadians 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாப்பி பமிலி டே டூ  ஆல் கனடியன்ஸ்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனி சக்கரை சித்தப்பா .... ஏட்டில் எழுதி வைச்சு நக்கப்பா.....இது தான் ஸ்டான்லின்க்கு தலிவர் சொல்லிக்கொடுத்த இலக்கிய தமிழாம்...

என்னமா பேசுறார் பயப்புள்ள....

இன்று கனடாவில் family day .....

உலக புலம் பெயர் தமிழர்களின் உதாரணமாக இருந்து உழைப்பின் உயர்வை உலகத்தமிழர்களுக்கு உணர்த்தி.... தங்கள் குடும்ப பொறுப்போடு உறவுகளையும் சுமந்து கரை சேர்த்த நான் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க கூடிய கனேடிய உறவுகள் இந்த நாளை உங்கள் குடும்பத்தோடு இனிய நாளாக ஆக்கி இன்புற வாழ்த்துக்கள்....

Happy family day tamil Canadians

 

Family Day is only celebrated in Ontario! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thanks for info but still happy family day

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா அமர்வுகளை வைத்து தென்னிலங்கை தேர்தல்களில் பாரிய பிரச்சார நடவடிக்கையை அரசு எடுத்து வருகின்றது ..... இப்பிடியான சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி தேர்தல்களில் அமோக வெற்றியை அள்ளி குவிக்கும் வித்தை அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கு

இலங்கை அரசை பொறுத்த வரை இந்த ஜெனிவா கூட்டங்கள் எதையும் சீரியஸா எடுத்ததா தெரியவே இல்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வேம்படி , சுண்டுக்குளி பிகருங்கலா இருந்தாலும் சாதாரண தமிழ்க்கலவன் பாடசாலைகளில் படிக்கும் பிகருங்க மாதிரி வராது.....

ஒரு ஊரின் வனப்பும் செழிப்பும் அழகும் அங்க தான் இருக்கு

#அவதானிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரின் தூக்கு இரத்து

தமிழர்களின் வெற்றியின் ஆரம்பமாக இருக்கட்டும்...

நன்றி வைக்கோ நீ தமிழகத்தின் சுயநலம் இல்லா தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.....

ஏனோ தமிழகம் தான் உன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது....

நீயும் குடும்பமும் ஊழலும் சுயநலமும் என்று இருந்திருந்தால் முதலமைச்சர் ஆகி இருக்கலாமோ என்னவோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான இரவுப் பொழுதில் இயற்கையின் வியப்பை எண்ணி ..... எட்டிப்பாக்கும் நிலவு ஒளியில் நின்று நண்பர்களுடன் அன்று பார்த்த பிகருங்களை பற்றி பேசியவாறு கெபாப் சாப்பிடுவதும் ஒரு சுகம் தான் .....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை சன் சிங்கரில் அபிநயா பாடின "சின்ன சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி" பாடின விதம் சுண்டலுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....

#super abi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த

ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000

வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன்

ஒரே மகளான இளவரசியை... திருமணம் செய்வது,

இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர்

தேர்ந்தெடுக்கலா ம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால்

போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும்

யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று nandu Ji குளத்தில்

குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும்

துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன்

போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக

கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து,

பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம்

வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம்

செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக

அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம்

என்று சொல்லி விட்டாயே? ஆனாலும்

உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம்

வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள்,

கட்டாயம் அதை தருகிறேன்..."

Nandu Ji: "என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான்

என்று தெரியனும்...!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயம் என்பது எத்தனை அந்நிய படையெடுப்புகள் ...... மத மாற்றங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி , தாங்கி இன்றும் கம்பீரமாக நிமிந்து நிற்கின்றது இனியும் நிக்கும்...... சில வெத்து வேட்டுகள் மதம் மாறுகின்றார்கள்....இல்லை தூற்றுகின்றார்கள் ...இல்லை கல்லால் தூக்கி எறிகின்றார்கள் என்பதற்காக அழிந்து விடப்போவதில்லை..... எதையும் தாங்கி.... எல்லாவற்றையும் தாங்கி பழக்கப்பட்ட மதம் இந்து மதம்.....

படையெடுத்து வந்த வெள்ளைக்காரர்களின் பீரப்கிகாளாலே அழிக்க முடியவில்லையாம் சில வெற்றுக்கூக்குரல்கலால் மட்டும் அழிந்து விடுமா என்ன.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நண்டு ஜி தன்னோட மகன் கிட்ட

கோபத்தில்

"டேய்.. நீ நினைக்கற மாதிரியெல்லாம் வாழனும்னா ... நீ அம்பானி வீட்ல தான் பிறந்திருக்கனும்"

மகன் பொறுமையா பதில் சொன்னான்,

"அப்போ ... நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

News :மாடு வெட்டுவதற்கு இன்று தீர்வு கிடைக்காவிட்டால் பெளத்த பிக்குகள் தீக்குளிப்பர்: சிங்கள ராவய எச்சரிக்கை

Sundu: அடங் கொய்யாலே மாடு வெட்டுவதற்கு தடை போடுற கெடு முடிஞ்சிருச்சு.......

இவனுங்க தீ குளிப்பாங்களா? இல்லை சிங்கள் டீ யோட நிறுத்திடுவாங்களா?

We r waiting come on guys

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்பு மிக்க முடிவின் மூலம் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஆகி விட்டார் புரட்ச்சித்தலைவி அவர்கள்....

#நன்றி தாயே ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல நண்டு ஜி க்கு அன்னைக்கும் வீட்ல சரியான வேலை , ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அண்ணி கேட்டா :

நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?

அதுக்கு நண்டு ஜி மகன்

ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?

பதில கேட்ட நண்டு ஜி போட்ட பெயிண்ட் டின்ன இன்னுவரைக்கும் தொடவே இல்லையாம்

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்

உதாரணத்துக்கு

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா - உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லேட்டஸ்ட் தற்கொலை கடிதம்

————-

————-

————-

நான் விஜய் படத்துக்கு போகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nandu Ji முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதி ஒரு கனவு வந்தது” என்றார் nandu Ji .

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு nandu Ji , “என்னடி தொயாத மாதி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயசோ 62

பதவியோ இளைஞர் அணித்தலைவர்

அப்போ நாம எல்லாம் அரசியலுக்கு வந்தா சிறுவர் அணித்தலிவரா தான் இருக்கலாம் போல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் இத்தனை ஆண்டு அரசியல் வாழ்வில் மத்திய அரசுக்கு பயந்தவராக மாநிலத்தில் மத்திய அரசுக்கு எதிராக தன்னக்கு இருக்கும் அதிகாரங்களையே பயன்படுத்த திராணி அற்றவராக தான் இருந்து வந்துள்ளார்....குறிப்பா 2009 இல் உண்ணா விரதம் இருக்க போய் காங்கிரஸ் அரசின் கடும் எச்சரிக்கையை அடுத்து சில மணி நேரங்களிலே எழும்பி ஓடியவர்..... ஆனால் ஜெயலலிதா அப்பிடி அல்ல துணிவே துணையாக கொண்டவர் இல்லை என்றால் ஆணாதிக்கம் நிறைந்த இந்திய அரசியலில் தனித்து ஒரு பெண்ணாக இருந்து இவளவு தூரத்துக்கு வந்திருக்க மாட்டார்.....

இன்று அவர் மீது இருக்கும் வழக்குகளின் தீர்ப்பு காங்கிரசின் (கர்நாடகா காங்கிரஸ் ஆளும் மாநிலம்) கைகளில் இருந்தாலும் அதிரடியாக துணிச்சலாக முடிவு எடுத்து எப்பிடி அரசியல் செய்வது என்பதனை மூத்த அரசியல் வாதியாக இருந்தாலும் கருணாநிதி ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ளவேண்டும்

இந்த முறை தமிழகத்தில் நடைபெறும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியையும் கடந்த காலங்களை விட எந்த விதமான பெரிய குறைகளும் இன்றி சிறப்பாகவே நடைபெறுவதாக அரசியல் அவதானிகள் கூடுகின்றார்கள் எப்பிடியோ நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு க தான் பெரும் வெற்றியடைய போகின்றது.....

2016 ஆம் ஆண்டுக்குள் உள் கட்சி பூசல்களை செரி செய்து கொண்டும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு பதவிகளையும் வழங்கி கட்சிகளில் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவராவிட்டால் தி மு க என்ற கட்சி காணாமல் போய்விடும்.

சுண்டல்

20/02/14

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்கள் வெளிநாட்டிற்கு வந்தால் வெறும் உணர்ச்சி பொங்க தமிழர்களிடம் பேசிவிட்டு சென்று விடுவார்கள் ஆனால் இனி வெளிநாடுகளில் நடை பெரும் தாயகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு படித்த நல்ல ஆங்கிலப்புலமை உள்ள சிறப்பாக எதிர்த்து வாதாடக்கூடிய திருமுருகன் போன்றவர்களை வெளிநாடு நிகழ்வுகளுக்கு அழைத்து உற்ச்சாக படுத்த வேண்டும் அந்த நாட்டு முக்கிய பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்... சீமான் போன்றவர்களை தமிழகத்தில் எமக்கு ஆதரவாக அரசியல் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்

சிந்திக்குமா வெளிநாட்டு தமிழர் அமைப்புகள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.