Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடக்கின்றது வைக்கோவை எப்பிடியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முயற்சி நடகின்றது ஆனால் இந்தா சீ மான் கேனைத்தனமா வைக்கோவை பற்றி எழுதி இருக்கின்றார்....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘சீமான் காமடி.....,

கருணாநிதியை எதிர்த்தவர்களுக்கே எதிர்காலம்’ என்கிற வாய்ப்பு எப்படி மரியாதைக்குரிய எம்.ஜி.ஆருக்கு வாய்த்ததோ…! அதே வாய்ப்பைத்தான் வரலாறு உங்களுக்கும் வழங்கியது. ஆனால், அதனைத் தக்கபடி பயன்படுத்த நீங்கள் தவறிவிட்டீர்களே அண்ணா? உங்களுக்கு எதிரிகள் என்று எவருமே இல்லை. எதிரி யார் எனத் தேடிப் பார்த்தால் நிலைக் கண்ணாடியில் நிச்சயம் நீங்கள்தான் தெரிவீர்கள். ஆமாம், உங்களுக்கு எதிரி நீங்களேதான்!

சரியாகத்தான் சொல்லியுள்ளார்.. பாஜக அணியில் சேர்ந்தது தவறு. குறிப்பாக சுப்பிரமணியசாமியை சேர்த்துக்கொண்ட பாஜகவை நம்பியது தவறு. ஆனாலும் விருதுநகரில் வைகோ அவர்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யமாட்டார்கள் எனத் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அ தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனதும் தவறு

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அ தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனதும் தவறு

நீங்கள் மகம் இணைத்த காணொளிகளைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். அதில் தெளிவாகவே சொல்கிறார்கள்.

வேறு தெரிவில்லாத காரணத்தினாலேயே பல தொகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கவேண்டி உள்ளதென. அதுவும் இந்த ஒரு தேர்தலில் மட்டும் அதிமுகவை ஆதரிக்கும்படி கேட்கிறார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியே போட்டியிடும் என்பதால் 2016 இல் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

வைகோ உட்பட்ட தமிழ் ஆர்வலர்களின் கட்சிகள் தனித்து நின்றிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிராது என்கிறார்கள். இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் ஆதரவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டவர் சீமான். ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கண்டுவிட்டார் வைகோ. அதாவது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தனக்கு ஒரு விடயமல்ல என மறைமுகமாக உணர்த்திவிட்டார். அப்படி ஒரு நிலையை எடுத்தபிறகு சீமான் மட்டும் வைகோ அவர்களின் நிலைப்பாட்டை குறைகூறக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. வைகோ அவர்களுக்கு அவரே எதிரி என்பது இன்னுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. மற்றும்படி அவர் நல்ல ஒரு நேர்மையான அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அ தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனதும் தவறு

உண்மைதான்

சீமான் கல்யாணம்  செய்திருக்கக்கூடாது தான்........ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மகம் இணைத்த காணொளிகளைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். அதில் தெளிவாகவே சொல்கிறார்கள்.

வேறு தெரிவில்லாத காரணத்தினாலேயே பல தொகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கவேண்டி உள்ளதென. அதுவும் இந்த ஒரு தேர்தலில் மட்டும் அதிமுகவை ஆதரிக்கும்படி கேட்கிறார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியே போட்டியிடும் என்பதால் 2016 இல் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

வைகோ உட்பட்ட தமிழ் ஆர்வலர்களின் கட்சிகள் தனித்து நின்றிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிராது என்கிறார்கள். இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் ஆதரவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டவர் சீமான். ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கண்டுவிட்டார் வைகோ. அதாவது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தனக்கு ஒரு விடயமல்ல என மறைமுகமாக உணர்த்திவிட்டார். அப்படி ஒரு நிலையை எடுத்தபிறகு சீமான் மட்டும் வைகோ அவர்களின் நிலைப்பாட்டை குறைகூறக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. வைகோ அவர்களுக்கு அவரே எதிரி என்பது இன்னுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. மற்றும்படி அவர் நல்ல ஒரு நேர்மையான அரசியல்வாதி.

உண்மை  தான் இசை

நான் என்னை  வைத்துத்தான் பார்ப்பது வழமை

அந்தவகையில் எனது நிலைப்பாடும்

சீமானின் நிலைப்பாடும் பொருந்துகிறது

முடிவுகள் தமிழர்களின் பொதுநலன் சார்ந்தவையே

ஆனால் வை.கோ அவர்கள்

இந்தக்கூட்டணி

அவருடன் கூட்டணி  வைத்துக்கொண்ட  கட்சிகள்

சார்ந்து சறுக்கிறது தெரிகிறது

அதிலும்  வை.கோ  அவர்களின் ஒவ்வொரு கொள்கைக்கும்

இக்கூட்டணியிலுள்ள கட்சிகள் எதிரானவை

(மதசார்பின்மை,   சாதி,   ஒழுக்கம்.......)

என்னைப்பொறுத்தவரை

இருமுறை தேர்தல்  காலத்தில் அவர்

தி.மு.க வினாலும்

அ.தி.மு.க வினாலும் கடைசி நேரத்தில் ஏமாற்றப்பட்ட வலியும்

வேறு வழி  இல்லாததுமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோவை பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்த வித தகுதியும் இல்லை.... பொது எதிரிகள் நிறை பேர் இருக்கும் போது அண்ணன் வைகோவை பற்றி பிரபல வார இதழில் அதுவும் தேர்தல் நடக்கின்ற சமையத்தில் எழுதுவது சீமான் யாரிடமோ பெட்டி வாங்கிவிட்டு எழுதுகின்ற கேவலம்கெட்ட 3 ஆம் தர எழுத்தாளர் ஆகிவிட்டார்....

ஏனப்பா  இந்த வஞ்சகம்???

இல்லாத புலிகளை பிரித்து மேய்கின்றீர்கள்

அவர்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே  என்கிறீர்கள்

இருக்கும் வை.கோ. வை தொடப்படாது என்கிறீர்கள்

லொயிக்

இடிக்குதே................ :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு மட்டும் வேற வழி இல்லையாம் அதனால அ தி மு க வ ஆதரிகிறராம் பட் அதையே வைக்கோ செய்தா தப்பாம் ஹா ஹா ஹா காமடிப்பய ...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுண்டல்

காங்கிரசும்  வரக்கூடாது

திமுகவும் வரக்கூடாது

பாஐகயும் வரக்கூடாது என்றால்

நமக்கு விருப்பமில்லாவிட்டாலும்

அதிமுக தானே வரமுடியும்???

இதில் சீமானை  எதற்கு  பலியாக்கணும்??

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் அதைத்தான் சொல்கிறார்

அப்படியானால்

இவரும் அதிமுகவை ஆதரிக்கிறாரா???

தமிழ் இனத் துரோகிகளைத் தோற்கடியுங்கள்! தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு...
ஓவியர் வீர சந்தானம் வேண்டுகோள்!

அன்புமிக்க தமிழக மக்களே!

எதிர்வரும் 24.04.2014ஆம் நாள் இந்தியநாடு தனது 16-ஆம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் வாக்குவேட்டைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் இந்தத் தேர்தலில், நமது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரியிலும் யார் யாருக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு, அனுப்பப் போகிறோம் என்பதில் நாம் மிக மிக கவனமாக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. யார் யார் வெற்றிபெற வேண்டும் என்பதைக் காட்டிலும் யார் யார் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக மிக மிக எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டிய நேரம் இது. இந்தத் தேர்தலில் நமது தமிழ்நாட்டிலும் புதுவையிலும் பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்ட்க கட்சிகள், காங்கிரஸ் என்று ஐந்து பிரிவாக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்தும் உங்களைச் சந்தித்து வாக்குகளை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீங்கள் யார் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? உங்களது வாக்குகளைப் பெறுகிற தகுதி எந்தெந்த கட்சிகளுக்கு இருக்கின்றன? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

அப்படிச் சிந்தித்துப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி என்கிற தமிழினத்திற்கு எதிரான கட்சியின் கொடூர முகம் உங்கள் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.
2009-ஆம் ஆண்டு இலங்கையின் தமிழீழத்தில் தமிழ் இனத்தையே துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்து ஓர் இனப்படுகொலையை அரக்கேற்றிய கொடுங்கோலன் ராஜபட்சே கும்பலுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகம். எத்தனை யுகங்கள் ஆனாலும் மன்னிக்க முடியாது. மறக்க முடியாதது. இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்கின்றன.

ஆனால் இந்தியா அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டது. இது நடந்தது கடந்த மார்ச் மாதம் அதாவது 27.3.2014ஆம் நாள். அதாவது நேற்று மட்டுமல்ல. என்றைக்குமே காங்கிரஸ் கட்சியும் அதன் அரசும் தமிழர்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்யும் என்று அந்தக் கட்சி மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் கூட இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு வந்துள்ளனர். அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருப்பது இலங்கை அரசுதான். இந்திய அரசல்ல. தமிழர்களின் கழுத்தை அறுக்கிற வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து ரகசியமாகச் செய்துவருகிறது. தமிழ் ஈழத்தில் லட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று

குவித்தனர். இந்திய அரசு கொடுத்த கொலைக் கருவிகளும், இந்திய ராணுவ மூளைகளும்தான். 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலிலேயே கொலை செய்து, இன்றைக்கும் நாள்தோறும் கைது செய்து கொண்டிருக்கின்ற இலங்கையின் கடற்படையின் அட்டூழியங்களை இன்றுவரை வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிற காங்கிரஸ் அரசு இந்தியத் துணைக்கண்டத்தின் பிற பகுதி மீனவர்கள் மற்ற நாடுகளால் என்றைக்கோ ஒரு நாள் பாதிக்கப்படும்போது துடிதுடித்துப் போகிறது. நதி நீர் உரிமைகள், தமிழக மீனவர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் படுகொலைகள் என்று அனைத்து நிலையிலும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்துவருகிறது காங்கிரஸ் கட்சி. ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு, தமிழகத் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்கு வேட்டுவைத்துக்கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்டு வரும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் எதைக்கொண்டு விரட்டுவிர்கள்?

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் கூட்டுச்சேராக் கட்சிகளே கிடைக்காத நிலையில் ஓர் அனாதைப் பிணம் போலத் தனித்தே போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுத்து ஒழித்து கட்டுகிற கடமை தமிழர்களாகப் நிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டா இல்லையா? சனிக்கிழமை செத்த பிணமாவது ஒரு கோழிக்குஞ்சை தன் பாடையில் கட்டிக்கொண்டு போகும். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதுபோன்ற ஒரு கோழிக்குஞ்சு கூட கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? இத்தகையக் கொடுங்கோல் காங்கிரஸ் கட்சியுடன் நேற்றுவரை கூடிக்குளவிக் கூட்டு வைத்துக்கொண்டு பதவி சுகத்தை அனுபவித்த சில தமிழகக் கட்சிகள் இன்றைக்கு அதைக் கழற்றிவிட்டுவிட்டு தனி அதி அமைத்துக்கொண்ட இழி செயலை எப்படிச் சகித்துக்கொள்ளப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி தமிழ் இனப்படுகொலை செய்தபோது அதனுடன் கூட்டணி, தேர்தல் வரும்போது தனி அணியா? துள்ளத்துடிக்க தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு தமிழ் இனத்துக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 25 தமிழ் தியாகிகளின் ஆன்மா மன்னிக்குமா? அல்லது நீங்கள்தான் மன்னிப்பீர்களா?

தமிழக மக்களே சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் வாங்கக்கூடாது என்று சபதமெடுத்து செயல்பட்டு அக்கட்சியை ஒழிப்பதில் வெற்றி காணுங்கள்.
ஏனெனில், காங்கிரஸ் வெற்றி அடைந்தால்
தமிழினமும் தமிழகமும் தோல்வியடையும்!
காங்கிரஸ் தோல்வி அடைந்தால்
தமிழினமும் தமிழகமும் வெற்றியடையும்!
மறவாதீர்கள்... மறந்தும் இருந்து விடாதீர்கள்!
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டிய நாள் - 24.4.2014.

காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்களுக்கு துணைபோன கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டிய நாள் 24.04.2014.
ஈழத் தமிழர் விடுதலைக்கும், தமிழகத் தமிழர் மேன்மைக்கும் எல்லாவகையிலும், களமிறங்கிச் செயலாற்றிய, இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளுக்கு மறவாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய நாள் 24.4.2014.
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்!

தமிழ்த் தேசிய ஊடகம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138648#entry1000790

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்களும் காமடி பண்ண கூடாது மத்தியில் இரண்டு பெரிய கட்சிகளை தவிர் மாநில கட்சிகள் வரவே முடியாது மற்றது நீங்கள் நினைக்கிற மாதிரி ஒண்டும் அ தி முக பெரிய வெற்றி ஆயா போறதில்ல இந்த தேர்தலில்....

இப்போ

பெட்டிக்கை  மாற்றம் பற்றியே  நான் பேசுகின்றேன் ராசா....... :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்களும் காமடி பண்ண கூடாது மத்தியில் இரண்டு பெரிய கட்சிகளை தவிர் மாநில கட்சிகள் வரவே முடியாது மற்றது நீங்கள் நினைக்கிற மாதிரி ஒண்டும் அ தி முக பெரிய வெற்றி ஆயா போறதில்ல இந்த தேர்தலில்....

விபி சிங், சந்திரசேகர், குஜரால், தேவகவுடா இவர்கள் எவரும் இந்தப் பெரிய கட்சிகளில் இருந்து வந்தவர்கள் அல்ல.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு பிறகு பதுங்கி இருந்த சீமான் இப்போ திடீர் என்று வைக்கோ மீது பாய வெளிக்கிட்டு இருப்பதன் மர்மம்

என்ன ? போக வேண்டிய இடத்தால பெட்டி போயிருக்கு....

சீமாம் எப்ப ஒரு அதி முக்கிய அரசியல் பிரமுகரின் மகளை கட்டினாரோ.... அப்பொழுதே அவர் மற்றைய கட்சியினரை விமர்சிக்கும் தகுதியை இழந்து விட்டார் ....

என்ன கொடுமை சார் இது??!! கல்யாணம் கட்டுறதிலும் கட்சி பார்க்க வேணுமா?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சார் இது??!! கல்யாணம் கட்டுறதிலும் கட்சி பார்க்க வேணுமா?? :rolleyes:

சுண்டலுக்கு

ஏதோ ஒன்று  கண்ணை  மறைக்குது.........

காலம் பதில் சொல்லட்டும்.... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ என்ற மனிதன் எங்களுக்காக இழந்தது கொஞ்ச நஞ்சம் அல்ல .... வருடக்கணக்கில் சிறை வாசம் வேறு அந்த மனிதனை விமர்சிக்க சீமானுக்கு என்ன தகுதி இருக்கு? பெட்டி வாங்கினால் எது வேணும் எண்டாலும் பேசலாமா இல்லை எழுதலாமா?

அதேபோல் சீமானும் எமக்கு ஒரு  துரும்பு

பெட்டி வாங்கினார் என்பது   ஓவர்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்புட்டு நாளும் பேசாமல் இருந்த மான் இப்பொழுது துள்ளி குதிப்பது பெட்டி செய்த மாயம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..முயற்சி என்றும் கடின உழைப்பு என்றும் அதிஷ்டம் என்றும் பலரால் பல விதமாக கூறினாலும் நமக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது தான் வந்து அமைகிறது

நன்றி

தனி மரம் நேசன் அண்ணா ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2011." இன்னைக்கு வேர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச். இந்தியா -இலங்கை விளையாடுது.இதுல இந்தியா தோற்கணும்.இந்தியா தோத்தா,உங்களை விட்டுருவோம்,ஜெயிச்சா --அவ்வளவுதான் இங்கயே கொன்றுவோம்." சொல்லிவிட்டது சிங்கள கடற்படை.

பீட்டர் இராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் செய்யும் மிகச் சாதாரண மீனவர்.பரம ஏழை.உடனே தன் மனைவியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ,"அம்மாடி ,இன்னைக்கு மேட்சுல இந்தியா தோற்கனும்னு, மாதாட்ட ஜெபம் பண்ணிக்கோமா.இந்தியா தோத்தா நாங்க திரும்பி வருவோம்" என்கிறார். வார்த்தைகள் உடைந்து சிதறுகிறது.அலறித் துடித்து முழு இரவும் ஜெபம் செய்கிறார் அவரின் மனைவி.இறுதியில் பிரார்த்தனை தோற்கிறது.கடவுள் தோற்கிறார்.

தினசரிகளில் மற்றுமொரு நாள் செய்தியாகிறது அம்மீனவர்கள் படுகொலை.நம்மில் பலர் ஒருகையில் பில்டர் காப்பியோடு அந்தச் செய்தியை கடந்து போயிருப்போம்.ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.அம்மீனவர் குடும்பத்தைச் சந்திக்கிறார்.விக்கித்து ,நிலைகுலைந்து எதிர்காலமே இருளாய்த் தெரியும் ஒரு நிலையில்,கையில் சிறு குழந்தையோடு இருக்கும் அவரின் மனைவியிடம் ஆறுதலாய் பேசுகிறார்.

" இழந்த உன்வாழ்க்கையை ,உன் அருமைக் கணவனை, என்னால் திருப்பி தர முடியாது.ஆனால் உன்னைப் படிக்க வைக்கிறேன்.பணியும் வாங்கித் தருகிறேன். முழு செலவும் என்னுடையது " என்கிறார்.சொன்னதோடு மட்டுமின்றி செய்தும் காட்டுகிறார்.மூன்றாண்டுகள் ஓடிவிட்டன.அந்தப் பெண் ஆசிரியர் படிப்பு முடித்து ,பணியிலும் சேர்ந்து விட்டார்.இதோ இன்று அந்தக் குடும்பம் மீண்டு வந்து விட்டது.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இதை விளம்பரபடுத்தியதில்லை

அதனாலென்ன " முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்களில் இறை என்றே " வைக்கப்படும் என்ற வள்ளுவன் வாக்கு பலிக்கட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் தேர்தல் என்றால் தி மு க வின் பிரச்சார கூட்டங்கள் களை கட்டும் காரணம் அதனுடைய பிரச்சார பீரங்கிகளுக்கு இருந்த தனி ரசிகர் வட்டம்..... தீப்பொறி ஆறுமுகம்.....வெற்றி கொண்டான் போன்றவர்கள் மேடையில் ஏறிவிட்டால் காணும்...... எதிர்கட்சிகளை அந்த மாதிரி அழகிய தமிழில் மக்களை கவருகின்ற மாதிரி வெளுத்து வாங்குவார்கள் அவ்வபோது ஆபாசமும் வரும்.....எனினும் மக்கள் அதையும் ரசிப்பது உண்டு.....மிக சிறந்த பேச்சாளர்களை உருவாக்கி வைத்திருந்தது தி மு க..... அவர்களுடைய பல வெற்றிகளுக்கு இவர்களும் காரணம் என்று சொல்லப்படுவது உண்டு ஆனால் இப்பொழுது அப்பிடியான பேச்சாளர்கள் தி மு க வில் காண்பதே அரிதாக இருக்கின்றது இருந்தவர்கள் பலரையும் முதுமை ஆட்க்கொண்டு விட்டது.....ஏனோ பல இளம் பேச்சாளர்களை உருவாக்க தவறிவிட்டது தி மு க.....

அறிஞர் அண்ணா

கலைஞர் கருணாநிதி என்று தங்கள் பேச்சு திறமையாலே வளர்ந்தவர்கள்.....கட்சியையும் வளர்த்தவர்கள் .....

என்று ஏனோ இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொல்ல கூடியவர்களும் அடுத்த தலைமையும்.... சிறந்த பேச்சாற்றல் அற்று ஒரு தேக்க நிலையுடன் நிற்கின்றது...... தி மு க வின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆக போகின்றது

சுண்டல்

13/04/14

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிநயம், கலைநயம், காதல் காவியம்

நான் சிவப்பு மனிதன் படத்தை பற்றிய விமர்சனம் இப்பிடி இருக்கிறதால படத்த பாக்க தான் இருக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.