Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்: பசில் ராஜபக்ஷ

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணம் முழுவதற்கும் முழுமையான மின்சாரத்தினை வழங்குவதற்கு தேசிய மின் விநியோக திட்டத்தினை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் வடபகுதி முழுவதும் மிக விரைவில் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்குமென்று தான் நம்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

குடா நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதை நாங்கள் அறிவோம் இன்றும் இதற்கான வேலைத்திட்டங்கள் தற்பொது நடைபெற்று வருகின்றது வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கும் கிளிநொச்சியில் இருந்து சுன்னாகத்திற்குமான தேசிய மின்வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடபகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலோடு பனை வளம் பின்னிப் பிணைந்துள்ளதால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பனை மரங்களை நடுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற முதலாவது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு இணங்க பருவ மழைக்கு முன்னரான காலப்பகுதியில் பாரிய அளவில் பனை மரங்களை நடுகை பண்ணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கப்படடிருந்தது.

அத்துடன் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பனை மரத்தில் இருந்த உற்பத்தி செய்கின்ற பொருட்களை தரம் வாய்ந்த பொருட்களாக மாற்றுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பனை சார் உற்பத்தி பொருட்களுக்கான சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேவை ஏற்பட்டது என்றார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் புனரமைப்பக்காக திறைசேரியில் 44 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது இதற்கான மேலதிகமான நிதியினையும் பல்வேறு தொழில் நுட்ப உதவிகளையும் இந்திய வழங்கியுள்ளது அத்துடன் இலங்கையில் எங்கும் இல்லாத வகையில் புதிய ஆராய்ச்சி உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த உதவிகளுக்காக இலங்கை மக்கள் சார்பாகவும், குறிப்பாக வடபகுதி மக்கள் சார்பாகவும் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்திகளுக்கும் இந்திய அரசாங்கம வழங்கி வருகின்ற உதவிகளை எங்களால் மறக்க முடியாது.

யுத்தம் நடந்த காலப்பகுதியில் காயமடைந்த மக்களுக்கான மருத்துவ உதவிகளையும் யுத்தத்திற்கு பின்னரான மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றிற்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த பனை ஆராய்ச்சி நிறுவன்தைச் சார்ந்தவர்கள் இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/45084---24------.html

[size=5]தேர்தல் வரும் பின்னே பொய் வாக்குறுதிகள் வரும் முன்னே ![/size]

அப்பாடா, ஒருபடியாக தமிழரின் பிரச்சனைகள் தீரப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நிலச்சூறையாடல் அசுரகதியில் நடைபெறுவதை மறைக்க இப்படியான ஆசை வார்த்தைகளை மக்களுக்கு கூறி உலகத்தை ஏமாற்ற வேண்டியது தான். இதனை தானே காலம் காலமாக இனவாத அரசுகள் செய்கின்றன.

[size=5]இலங்கையில் இன்று மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வருகிறது.[/size]

main_12493.jpg

[size=4]இலங்கையில் இன்று முதல் மூன்று மணி நேர மின் வெட்டு நடைமுறைக்கு வருகிறது.

பகல் பொழுதில் இரண்டே கால் மணி நேரமும், இரவு வேளையில் 45 நிமிட நேரமும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

கரவலப்பிட்டி, மற்றும் நுரைச்சோலை ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அலகுகளில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக, மின் தடையை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையில் இலங்கை அரசு உள்ளது.

அவற்றின் காரணமாக 400 மெகாவாட் மின் உற்பத்தி இழக்கப்பட்டுள்ளது.

கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தவேலைகள் எதிர்வரும் 28 ஆந் திகதி நிறைவடையுமென இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளின் பின்னர், தற்போதுதான் இலங்கையில் மின் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.