Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.ராஜேந்தரின் இசையில் வந்த பாடல்கள்

Featured Replies

இன்று விஜய் ரீவியில் நீயா நானாவில் 80 களின் திரைப்படப் பாடல்கள் பற்றிய கலந்துரையாடல் போகும் போது அதில் டி.ராஜேந்தரின் பாடல்கள் பற்றியும் அலசினர்.

பருவ வயதில் அவரது பாடல்கள் காதல் பாடம் நடத்தின எமக்கு. இளையராஜா, எம்.எஸ்,வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை இசையில் பதித்த இசையமைப்பாளர் டி.ராஜேந்தர்.

அவரது இசை மட்டுமல்ல பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் அவை.

அவரது பாடல்களில் எனக்குப் பிடித்தவை இங்கே தருகின்றேன்.

-----------------

பாட்டு: என் பாடல்களின் நீயோர் நீலாம்பரி

படம்: உறவைக் காத்த கிளி (?)

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே

நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து

மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...

நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு

சொல்லுதடி வைர சிலையே...

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

பபா பாபா பபா பாபா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

பொய்கை தாமரையில்

புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....

போதை ஏற்றி கொள்ள

தாளம் போடுதடி அம்மம்மா....

பொய்கை தாமரையில்

புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....

போதை ஏற்றி கொள்ள

தாளம் போடுதடி அம்மம்மா....

பொய்கை வண்டாய் உன் கை மாற

மங்கை நான சேவை செய்தாய்

வைகை போல் நானத்தில் வளைகின்றேனே

வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி

தீம்தன தீம்தன தீம்தன

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

தீம்தன தீம்தன தீம்தனா

பச்சை அரிசி என்னும்

பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு

நெஞ்ச பானையிலே நித்தம்

வேகிறது உன் நினைப்பு

பச்சை அரிசி என்னும்

பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு

நெஞ்ச பானையிலே நித்தம்

வேகிறது உன் நினைப்பு

வார்த்தை தென்றல் நீ வீசும்போது

ஆடும் பூவாய் ஆனேன் மாது

இதழோரம் சில்லென்று நனைகின்றது

சிந்தும் தேன் கூட சிந்தோன்று புனைகின்றது

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து

மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...

நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு

சொல்லுதடி வைர சிலையே...

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

வசந்தம் என்னும் ஒரு பாவை

நீ அசைந்து வந்த ஒரு சோலை

வரிகள்: http://asokarajanand...og-post_02.html

  • தொடங்கியவர்

"இடையின் பின்னழலில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்புறாவை மீட்டிச் சென்றாள்"

காமமும் கவிதையும் இணையும் புள்ளிகள் !!

படம்: மைதிலி என்னை காதலி

ஆக்கம்: டி. ராஜேந்தர்

உணர்வு: வியப்பு

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி

தாமாரை பூமீது விழுந்தனவோ

இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிறு

கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்

ஜாதி எனும் மழையினிலே ரதி

இவள் நனைந்திடேவே

அதில் பரதம் தான் துளிர் விட்டு பூப்போல கூத்தாட

மனம் எங்கும் மனம் வீசுது எந்தன்

மனம் எங்கும் மனம் வீசுது

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்

அரங்கேற அதுதானே உன் கன்னம்

மேகத்தை மனதிட வானத்தில் சுயம்வரம்

நடத்திடும் வானவில் உன் வண்ணம்

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட

புதிய தம்புராவை மீட்டி சென்றாய்

கலைநிலா மேனியிலே

சுளை பலா சுவையை கண்டேன்

அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி

மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன்

மதிதன்னில் கவி சேர்க்குது

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

http://sudhakar-janardhanan.blogspot.ca/2011/10/oru-ponmaanai.html

நல்ல இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார். திறமையான கலைஞன். 'மைதிலி என்னைக் காதலி' வரை வந்த பல பாடல்களைப் பிடிக்கும். நடிக்கத் தொடங்கி அரசியலை நோக்கி நகர்ந்த பின் வந்த பாடல்கள் பிடிக்கவில்லை.

80 களில், காதலின் வெற்றி தோல்வி அறியாமல் காதல் உணர்வுகளில் சிக்கி வெம்பித் தவித்த இளைஞர்களின் மனதிற்கு ஒத்தடம் கொடுத்தவர்.

  • தொடங்கியவர்

இந்தப் பாடலின் கவிதை வரிகளை கவனியுங்கள். வார்த்தைகளே போதை ஏறி தம்மை தானே புகழ்ந்து கொள்ளும்

பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி

பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி

ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்

செவ்வந்தி ஆடையிலே ஹேய்

ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய்

செவ்வந்தி ஆடையிலே ஹேய்

நீரில் தாளம் அலை போடுது

நீரில் தாளம் அலை போடுது

ரபா...பாபாபா...

பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி ஹா.... என் காதலி.....ஹா

தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்

திராட்சைபழ ரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்..ஹாஆ

தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்

திராட்சைபழ ரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்..ஹாஆ

எனை நோக்கி தூவும் ஹோய்

உன் வார்த்தை பூக்கள்..ஹா

எனை நோக்கி தூவும்..ஹஹஹ ஹா

உன் வார்த்தை பூக்கள்...ஆஹா

நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ...ஹேய்

நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ.....

ஜிலு ஜிலு ஓடையிலே....... ஹேய்... ஹேய்... ஹேய்

செவ்வந்தி ஆடையிலே ஹேய்,... ஹேய்... ஹேய்

நீரில் தாளம் அலை போடுது...ஹொஒஒஒஒ

தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி ஜதிகள் சொல்லுகின்ற தென்றல்

பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி ஜாலம் செய்கின்ற ஆண்கள்..ஹா

தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி ஜதிகள் சொல்லுகின்ற தென்றல்

பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி ஜாலம் செய்கின்ற ஆண்கள்...லலலலல

வேல்போன்ற விழிகள்

என் நெஞ்சில் பாய

வேல்போன்ற விழிகள்

என் நெஞ்சில் பாய

காயம் வரவில்லை மோகம் பிறக்குது மாயம்தான் என்ன

காயம் வரவில்லை மோகம் பிறக்குது மாயம்தான் என்ன

ஜிலு ஜிலு ஓடையிலே....... ஹேய்... ... ஹேய்

செவ்வந்தி ஆடையிலே ஹேய்,.. ஹேய்

நீரில் தாளம் அலை போடுது...

ரபா...பாபாபா...பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி

நீ பௌர்ணமி என் காதலி..... என் காதலி

நீ பௌர்ணமி என் காதலி..... என் காதலி ஹோ...

  • தொடங்கியவர்

இந்தப் பாடல் பாடாத 80 களின் தமிழ் இளைஞர்கள் இருந்திருப்பார்களா?

அப்ப, எங்கள் பருவத்துக்கு இளமைக் கனவுகளில் காதல் தோரணம் கட்டிய பாடல். தினம் தினம் பார்த்த முகத்துக்கு காதல் விலாசம் எழுதும் பாடல். இதன் இசை இப்பவும் புதுசு தான்

  • தொடங்கியவர்

பாவை இதழது சிவப்பெனும் போது

பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

http://www.youtube.com/watch?v=pFBdGmKtUOE&feature=fvwrel

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?

மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?

மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ

ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா?

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?

மோகினி போல் வந்து காளை என் உயிரினை பருகியும் சென்றாளோ

தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ? ம்ம்ம்

மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ? ம்ம்ம்

கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்

மின்னும் விழியை மெல்ல வைரம் கண்டது

நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது

கருவிழி உருளுது கவிதைகள் மலருது

பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது

எழில் நிலா ஆடும் விழா நடக்குது

தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு

பொன்னுருகும் கன்னம் குழிய

ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்

இந்த மானிடனும் மயங்கிவிட்டான்

இந்த மானிடமே மனதை விட்டான்

அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு

அவனியில் அவளே ஆதாரம்

பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு

முத்துச் சரங்கள் இதழோரம் ஹாஆஆஆஆ

பாவை இதழது சிவப்பெனும் போது ஹ

பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

பாவை இதழது சிவப்பெனும் போது ஹ

பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ?

மோகினி போல் வந்து காளை உன் உயிரினை பருகியும் சென்றேனோ?

ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா?

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?

மோகினி போல் வந்து காளை என் உயிரினை பருகியே சென்றாளோ?

ரொம்பப் பாதிச்ச பாடல்

உதிர் விட்ட நட்சத்திரம் நானே

உன் வானம் அழைப்பது வீணே

திரும்ப அந்தக்காலத்துக்கு போக முடியுமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ராஜேந்தரின்ரை பழைய பாட்டுக்கள் எல்லாம் பிடிக்கும்.அதிலையும் "நானொரு ராசியில்லா ராசா" எண்ட பாட்டை கேட்டால் சிரிப்புத்தான் வரும்.காரணம் தங்கடை தகுதிக்கு மீறின பெட்டையளுக்கு பின்னாலை திரிஞ்சு போட்டு....அது சரிவரேல்லையெண்டவுடனை ஒரு ஆட்டுத்தாடியும் வைச்சுக்கொண்டு........இந்த பாட்டையும் முணுமுணுத்துக்கொண்டு திரிவினம் :lol::icon_idea:

  • 3 months later...

நல்ல துள்ளல் பாடல்களும் உண்டு.

'ட்ரம்ஸ்' வாத்தியத்திற்கு அதிகம் முன்னிலை கொடுப்பார். ஆரம்ப காலத்தில் நிறைய வாய்ப்புத் தந்ததாக சிவமணி கூறி இருந்தார்.

'நெஞ்சில் ஒரு ராகம்' படத்திலிருந்து எஸ்பிபி, ஜானகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.