Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்!

Featured Replies

ராசபக்ச லண்டன் வரும் செய்தியில் உண்மை உள்ளதா? தேடல் செய்து பார்த்தபோது சிறீ லங்கா ஊடகங்கள் இதுபற்றி மூச்சுவிட்டதாக தெரியவில்லை. நேற்று சிறீ லங்காவில் ஓர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். லண்டன் வருகை உண்மையானாலும் தகவல்கள் கசியாதவாறு எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கலாம்.

2012-07-27.jpg

ILC வானொலியில் ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். கேட்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று கேளுங்கள்.

http://tunein.com/tuner/?StationId=133204

ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற சென்ற யாரையும் தம்முடன் தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமைகளை கூறும்படி ILC வானொலி அறிவிப்பாளர்களில் ஒருவர் கேட்டுக்கொள்கிறார். இன்னும் எவரும் தொடர்பு கொள்ளவில்லை.

லண்டன் வாழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் லண்டன் வந்து அவமானப்பட்டும் திருந்தாத கொலை வெறியனுக்கு இந்த போராட்டத்தின் மூலம் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்.

சில தமிழ் பிரபலங்கள் மகிந்த இன்று வரமாட்டார் என்று கூறினார்களாம். ஆனால் அவ்வாறு எவரையும் கூறவேண்டாம் என்று அறிவிப்பாளர் கேட்டுக்கொள்கிறார். வரவில்லை என்று கூறிவிட்டு வரக்கூடியவர் மகிந்த என்றும் கூறினார்.

மகிந்த வருகிறாரோ இல்லையோ ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று கனடாவில் இருந்து மாதவன் என்ற நபர் கேட்டுக்கொள்கிறார். மகிந்தவுக்கு வெக்கம், மானம் எதுவும் இல்லையாம் என்றும் கூறினார். :D

பராகாந்தன் என்பவர் Billingsgate Fish Market க்கு முன்னர் இருந்து உரையாடுகிறார். மக்கள் வந்தவண்ணம் உள்ளார்களாம். பிரித்தானிய நாட்டு கொடிகளையும் ஏந்தியவாறு போற்குற்றவாளி மகிந்த என கோசமிட்டுக்கொண்டிருகிறார்களாம்.

சசிதரன் என்பவர் கூறுகிறார். poplar DLR station இலிருந்து வெளியேறி இடதுபக்கம் திரும்பினால் அங்கு வழிகாட்ட ஒருவர் நிற்கிறார் என்று அறிய தந்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச லண்டனுக்கு வந்து விட்டார் என்று தகவல் கிடைத்ததாக கூறுகிறார்கள். (உறுதிப்படுத்த முடியவில்லை.) ஆனால் ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறும் இடத்திற்கு வருவாரா இல்லையா என்று தெரியாது என்றும் குறிப்பிடுகின்றனர்.

Edited by துளசி

இனப்படுகொலையை சித்தரிக்கும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்படுகிறதாம். மகிந்தவை இந்த நாட்டுக்கு வரவழைக்க கூடாது என்று பதாகை தாங்கி வைத்திருக்கிறார்களாம். மக்கள் கையில் புலிக்கொடிகளை பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

நூற்றுக்கணக்கான மக்கள் தான் வந்திருக்கிறார்களாம். :( பார்க்கலாம்.. இனி வருவார்களா என்று.

ஒலிம்பிக் நுழைவாயிலில் 50 பேரை மட்டும் நிற்பதற்கு அனுமதியளித்துள்ளார்கள்.

ஒரு பேப்பரை சேர்ந்த கோபி என்பவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் உரையாடுகிறார். (சாத்திரி அண்ணா அவருக்கு நன்றி சொல்லி விடுங்கள் :) )

12 ஆம் இலக்க bus இலும் ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார்கள்.

Edited by துளசி

லண்டன் ஆரம்ப நிகழ்வு 9.00 க்கு ஆரம்பமாக இருக்கிறது. ஒலிம்பிக் கிராமத்திற்கு முன் லண்டனிலிருந்து சுவிஸுக்கு (ஜெனிவா) நடந்து சென்ற சிவந்தனின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

மக்கள் கூடியிருக்கும் வழியாக தான் அனைத்து நாட்டு மக்கள், பிரமுகர்கள் வரவேண்டும். எனவே ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என கூறுகிறார்கள்.

Edited by துளசி

இவ்வாறான நிகழ்ச்சியின் போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்தமைக்காக பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவிகிறார்கள்.

உண்ணா நோன்பு நடத்த அனுமதி தந்தமை.

அரசியல் பிரமுகர்கள் செல்லும் வழியில் மக்கள் நிற்க அனுமதி தந்தமை.

ஒலிம்பிக் நடக்குமிட நுழைவாயிலில் 50 பேர் நிற்க அனுமதி தந்தமை. ஆகியவற்றிற்காக.

our nation - thamileelam

our leader - prapakaran என்ற கோசங்களை எழுப்புகிறார்கள். :)

கைகளில் குழந்தையை ஏந்தியபடியும் மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள். முதியவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

போர்க்குற்றவாளி மகிந்தவை அழைக்காதீர்கள் என்ற பதாகையை மக்கள் தாங்கி வைத்திருக்கிறார்கள்.

Edited by துளசி

ஈழத்தமிழர்களுக்கு 3 இடத்தில் ஆர்ப்பாட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு நாட்டு குழுவினரும் ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறியுள்ளனர். எந்த நாடு என்று தெரியவில்லை. :unsure:

கனடாவின் CTR வானொலியிலும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது.

மகிந்தவின் முகத்தில் கரிபூச வேண்டும் என்று ஒருநபர் கேட்டிருந்தார். மீன் marcket க்கு அருகில் இருப்பதால் கரிக்கு பதிலாக கறி பூசுமாறு அறிவிப்பாளர் கூறினார். :D

ஒலிம்பிக் விளையாட்டு திடலில் நுழைவாயிலில் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஆரம்பத்தில் பாதுகாப்பு காரணத்திற்காக மக்களை அனுமதிக்கவில்லை, பின்னர் முதல் கூறிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி அவர்களை அனுமதித்திருந்தார்கள் என ரூபி குமார் என்பவர் கூறியிருந்தார்.

ராஜபக்சவை இரு தடவை விரட்டியடித்த மக்கள் இம்முறையும் விரட்டியடிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுகிறார்கள்.

லண்டன் நேரம் இரவு 9.00 வரை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதால் மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.

Edited by துளசி

gtv யின் ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஓ நன்றி. நான் ILC வானொலியில் ஒலிபரப்புவதை இங்கு தருகிறேன்.

திருமதி ராமநாதன் என்ற உறவுகளை இழந்த ஒரு பெண் ஒப்பிரேசன் நடந்து 5 நாளாம். :( ஆனாலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் தான் தவற விட்டதில்லையாம். கதைக்க முடியாமல் கதைக்கிறார். கதைக்கும் போது மூக்காலும் வாயாலும் ரத்தம் வருகிறது என்று குறிப்பிட்டார். :( அந்த அம்மாவுக்கு நாம் அனைவரும் சேர்ந்து சிரம் தாழ்த்துவோம்.

ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி பேருந்துகளில் பாதுகாப்பு அணியுடன் பிரமுகர்கள் செல்வதாக கூறப்படுகிறது.

ஆறாவது நாளாக சிவந்தனின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதால் அவரை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் ஆர்ப்பாட்டம் முடிய சிவந்தனை மக்கள் சந்திக்கவிருப்பதாக கூறுகிறார்கள்.

ஆண்கள், பெண்கள், இளையவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பங்குபற்றுகிறார்கள்.

Edited by துளசி

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு குறுகிய இடம் தரப்பட்டாலும் அந்த இடம் நிரம்பியுள்ளதாக கூறுகிறார்கள்,

இம்முறை அவ்வளவாக எவரும் தகவல் தரவில்லை. :( இப்பொழுது விளம்பரமும் அதை தொடர்ந்து செய்தியும் இடம்பெற போகிறது.

சிவந்தனுடன் உரையாடுகிறார்கள். அவர் மெதுவாக களைப்பாக தான் கதைக்கிறார். 6 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் கதைக்க முடியாமல் இருக்கோ தெரியவில்லை. :( போராட்டம் நடத்தும் மக்களை நினைத்து தனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் அவரை நினைத்து உலக தமிழர்களுக்கு பெருமை என அறிவிப்பாளர் கூறியுள்ளார்.

Edited by துளசி

மகிந்த ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லையாம். :unsure: ஆனாலும் தமது ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்கிறார்களாம். சிவந்தன் அண்ணா உள்ள இடத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் மகிந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றி செய்திகளை தந்துகொண்டிருக்கும் அன்புச்சகோதரி காதலுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஒலிம்பிக்கில் மகிந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றி செய்திகளை தந்துகொண்டிருக்கும் அன்புச்சகோதரி காதலுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஆர்ப்பாட்டம் முடிந்து விட்டது அண்ணா. அது ILC வானொலியில் கூறியதை நானும் கூறினேன். ஆனால் இம்முறை கதைத்தவர்கள் தமக்குள் கதைத்துக்கொண்டிருந்தார்களே தவிர அவ்வளவாக தகவல்களை தரவில்லை.

ஆனால் உண்ணாவிரதம் தொடர்கிறது.

ராசபக்ச லண்டன் வரும் செய்தியில் உண்மை உள்ளதா? தேடல் செய்து பார்த்தபோது சிறீ லங்கா ஊடகங்கள் இதுபற்றி மூச்சுவிட்டதாக தெரியவில்லை. நேற்று சிறீ லங்காவில் ஓர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். லண்டன் வருகை உண்மையானாலும் தகவல்கள் கசியாதவாறு எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கலாம்.

[size=4]

[size=5]ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்லவில்லையென தெரியவருகிறது[/size]

[/size]

[size=4]

[size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கு ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லையென தெரியவருகிறது.

ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட இல்ஙகை ஜனாதிபதி லண்டன் செல்வதாகவும், ஆரம்ப நிகழ்வில் சிலவேளை அவர் கலந்து கொள்ளக்கூடுமெனவும் பிரித்தானிய ஏடொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சையும், ஸ்கொட்லண்ட்யார்ட் காவல்துறையையும் தாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இலங்கை ஜனாதிபதி லண்டன் வரவில்லையென அவர்கள் கூறியதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சீஎம்ஆர் தமிழ் எஃப் எம் மிடம் தெரிவித்தார்.

தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதி லண்டன் செல்லவுள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர கூறியிருக்கலாமென அவர் கருத்து வெளியிட்டர்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் செல்லவில்லையென கொழும்பில் உள்ள எமது செய்தியாளரும் தெரிவிக்கிறார்.[/size]

[/size]

[size=4]

[/size]

[size=4][size=4]பிரித்தானிய வெளியுறவு அமைச்சையும், ஸ்கொட்லண்ட்யார்ட் காவல்துறையையும் தாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இலங்கை ஜனாதிபதி லண்டன் வரவில்லையென அவர்கள் கூறியதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சீஎம்ஆர் தமிழ் எஃப் எம் மிடம் தெரிவித்தார்.[/size][/size]

இந்த செய்தியை கூறி மகிந்த வர மாட்டார் என்று இவர் பொய் சொன்னார் என்று என்று ILC வானொலியில் ஒருவர் கூறினார். அப்ப எது உண்மை? :unsure:

Edited by துளசி

இந்த செய்தியை கூறி மகிந்த வர மாட்டார் என்று இவர் பொய் சொன்னார் என்று என்று ILC வானொலியில் ஒருவர் கூறினார். அப்ப எது உண்மை? :unsure:

[size=4]எட்டு மணித்தியாலங்களுக்கு முன்னராக வந்த இந்த செய்திகளின் படி போர்குற்றவாளி சிங்கள நாட்டில் தான் உள்ளான் போலுள்ளது :[/size]

http://www.colombopage.com/archive_12A/Jul27_1343404893CH.php

http://www.colombopage.com/archive_12A/Jul27_1343408020CH.php

[size=4]எட்டு மணித்தியாலங்களுக்கு முன்னராக வந்த இந்த செய்திகளின் படி போர்குற்றவாளி சிங்கள நாட்டில் தான் உள்ளான் போலுள்ளது :[/size]

http://www.colombopa...343404893CH.php

http://www.colombopa...343408020CH.php

ஓ நன்றி. மகிந்த வருவாரா இல்லையா என்ற சந்தேக நிலையால் தான் இம்முறை பல மக்கள் கலந்து கொள்ளவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தீமை இல்லை என்று நினைக்கிறேன். பல நாட்டவர்கள் பார்த்திருப்பார்கள்

ஆனால் அங்குள்ள ஒருவர் மகிந்த லண்டன் வந்து இறங்கியதாக தகவல் கிடைத்ததாக கூறினார். ஆனால் ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு வருவாரா என்று தெரியாது என்று கூறினார். ஒருவேளை அவர் பிழையாக கூறியிருக்கலாம்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.