Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடத்தப்பட்ட தயானிடம் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dayan_Anthony-150seithy.gif

[size=4]புகலிடம் மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 48 வயதான தயான் அந்தோனி எனப்படும் அன்பு என்ற நபர் இன்று 26 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.[/size]

[size=4]இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்நபர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று புகலிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட தயான் அந்தோனி எனப்படும் "அன்பு" அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினார். 2010 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.[/size]

[size=4]இவர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு தனது சாட்சியினை வழங்கியிருந்தார். அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில், விசாரணை முடிவுறும் வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு, அவுஸ்திரேலிய அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும், அவுஸ்திரேலியா இவரை நாடு கடத்தியுள்ளது.[/size]

[size=4]2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த காலத்தில் வன்னியில் சேரன் வாணிபத்தின் கொள்வனவுப் பிரிவில் வேலைசெய்து வந்த தயான் என்ற குறித்த இளைஞன், முள்ளிவாய்க்கால் சமரின் பின்னர் இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மனநிலை குன்றிய அன்பு இராணுவ முகாமிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]விடுதலையாகிய பின்னர் அவர் இலங்கையில் தனது பாதுகாப்பிற்று அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச்சென்றார். இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் இவருக்கான பிடியாணையை இலங்கை அரசு வழங்கியுள்ளமையும், தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி இரகசிய பொலிஸாரால் கைது

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி (வயது 30), இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி, விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு எதிராக 2011 பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ் மிரர்

Fears for deported Tamil man

MMIGRATION officials have forcibly deported a Tamil man suffering mental health problems to Sri Lanka, despite revelations former asylum seekers have been beaten and tortured on being sent home.

In what threatens to be the first of as many as 150 cases of Tamils being involuntarily sent back to Sri Lanka on failing to win refugee protection in Australia, a man in his early 30s was taken from a detention centre to Tullamarine airport yesterday and put on a flight to Bangkok, bound for Colombo.

He is believed to be the first Tamil asylum seeker to be forced out of Australia since the latest spate of arrivals began in 2008 during the final months of Sri Lanka's brutal civil war.

Other Sri Lankan asylum seekers were either sent home from Indonesia after Australia asked for their boat to be intercepted or were from the Sinhalese ethnic community.

The Tamil man - who The Age has chosen not to identify - had failed in his bid for refugee status and was refused a visa by Immigration Minister Chris Bowen after appealing on the grounds of poor mental health.

He had arrived in Australia by plane in 2010 seeking asylum, having fled the northern city of Jaffna, a former stronghold of the Tamil Tiger group.

His family insist he faces grave danger at home after Sri Lankan media published a photograph of the man showing his face and what appears to be an arrest warrant in his name. ''If he goes there, they kill him,'' his tearful sister said after hearing he was taken to the airport. ''What sort of country do we live [in]? Please give him to me, I will look after him.''

Returned refugees are regularly stopped and interrogated by members of Sri Lankan police's Criminal Investigation Department upon their arrival.

The Age revealed this week some returned asylum seekers have been held for months without trial and face state-sanctioned torture.

The man is understood to be accompanied by security escorts, a medical escort, and an Immigration Department liaison officer, who will stay with him through customs checks at Colombo airport.

He had been living with his sister in Dandenong before being called into the Immigration Department in the CBD last Tuesday and given a letter that told him authorities had judged ''you are removable''.

He had failed to persuade the department or refugee review tribunal he was a refugee.

He appealed to the United Nations special rapporteur on torture to examine his case, with the Australian government responding in January this year. The Immigration Department said the UN had not sought any further details since February.

The man's brother-in-law and sister had asked authorities to grant the family a final visit with the man before he was deported, but this was refused.

The sudden news of his departure yesterday morning set off a panicked bid by refugee advocates to get a court injunction - with emails showing the man had tried for two days to send a fax from within the Maribyrnong Detention Centre authorising lawyers to act on his behalf, only to be told the fax machine was not working.

Advocates sought to join him with about 150 others in a High Court challenge to the rules governing the use of ministerial discretion in asylum cases.

Meanwhile, customs authorities intercepted a boat carrying a suspected 80 asylum seekers at Cocos (Keeling) Islands in the Indian Ocean last night. The passengers will be taken to Christmas Island.

http://www.theage.com.au/opinion/political-news/fears-for-deported-tamil-man-20120725-22r4g.html

  • கருத்துக்கள உறவுகள்

A Tamil man forcibly deported from Australia has been released in Sri Lanka after being held for around 16 hours of questioning on arrival in Colombo.

A last-minute plea from the United Nations to stop immigration authorities deporting the asylum seeker came too late to prevent him being sent to Sri Lanka, despite claims that he faces torture.

The man has been sent back to Sri Lanka despite official Australian advice warning people against travelling to the northern city of Jaffna where he lived.

The UN human rights commissioner in Geneva had sent the urgent request to the Australian embassy in Thailand early yesterday morning in the hope of getting the man off a plane in Bangkok while on the way back to Colombo.

But the man, who The Age has chosen not to name at his family’s request, was taken back to Sri Lanka, where supporters have been unable to contact him.

The Immigration Department said the UN request came while the man was on the plane from Bangkok, and did not raise any information not already considered in rejecting his refugee claim.

“In this instance, timing and practicalities clearly precluded such consideration,’’ a spokesman said.

Sri Lankan media have named the man, including his photograph, and published an apparent arrest warrant in his name, raising fears he will be the target of reprisals. He was deported from Melbourne on Wednesday after exhausting all appeals for a refugee visa, including a request for a review by Immigration Minister Chris Bowen.

But his supporters lodged a complaint with the UN Committee on Torture the day he was deported, leading the UN to ask that Australia “refrain’’ from returning the man to Sri Lanka while his complaint was under consideration.

A human rights lawyer, Phil Lynch, said it appeared to be the first time Australia had defied a UN request of this type, which are issued only rarely.

“It is the international equivalent of an urgent legal injunction,’’ he said.

Despite the UN bid, recriminations are rife among refugee advocates wondering why the man had not earlier been made a party to a High Court challenge that would have effectively blocked his deportation.

About 150 other asylum seekers who have failed in their bid for refugee status are party to

the case into the discretion of the minister to review visa claims.

Immigration authorities have promised not to deport anyone waiting for the court’s decision, expected before October.

Victorian Legal Aid had been advising the man, but his lawyer declined to comment yesterday, citing legal privilege.

An apparently faulty fax machine at the Maribyrnong detention centre, where the man had been held before his deportation, had stopped him sending a letter authorising his lawyers to act on Monday and Tuesday.

Meanwhile authorities have intercepted a boat carrying a suspected 52 asylum seekers off the West Australian coast, who will be taken to Christmas Island, where they will undergo checks.

http://www.smh.com.au/opinion/political-news/un-bid-for-tamil-to-stay-fails-20120726-22ve7.html

[size=4]ஆஸியில் புகலிடம் கோருவதற்காக எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினராக நடித்தேன்: தயான் அந்தனி[/size]

புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தயான் அந்தனி, கொழும்பிலுள்ள ஊடகங்களுடன் பேசியபோது, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர் அல்ல என்றும் அவுஸ்திரேலியாவில் புகழிடம் கேட்பதற்காக அவ்வாறு நடித்ததாகவும் கூறினார்.

'நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அல்ல. ஆனால் போலி விஸாவில் என்னை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய முகவர் என்னை விடுதலைப் புலி உறுப்பினர் போல் நடிக்கும்படியும் எல்லோரிடமும் அப்படியே கூறும்படியும் எனக்கு கூறியிருந்தார்' என தயான் அந்தனி கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ஊடகவியலாளர்களைச் சந்தித்து மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், இலங்கை வந்தடைந்ததும் பொலிஸார் இவரை சில மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிந்த பின்னர் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

'பொலிஸார் என்னை விசாரித்ததன் பின்னர் பூஸா முகாமுக்கு அனுப்புவர் என நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பொலிஸார் என்னை நல்ல முறையில் நடத்தினர். அவர்கள் என்னை விடுதலை செய்யப்போகின்றனர். நான் மீண்டும் சுதந்திர மனிதன் ஆவேன்' என்று தயான் அந்தனி குறிப்பிட்டார்.

தயான் அந்தனியின் வாக்குமூலத்தை பதிந்தபின் அவரை தாம் விடுதலை செய்தவிட்டதாக பொலிஸார் கூறினர்.

http://www.tamilmirr...7-06-56-13.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

178640507201.jpg[/size]

இலங்கையில் சித்திரவதை செய்யப்படுவேன் என கூறுமாறு வற்புறுத்தப்பட்டேன்! தயான்

[size=3]

புகலிடம் மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தயான் அந்தோனி எனப்படும் அன்பு என்ற நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். [/size][size=4]

இவர் நேற்று 26ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தாம் அங்கம் வகிக்கவில்லை என தயான் அந்தோனி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச் சந்தர்ப்பத்தில் மேலும் பேசிய அவர்,

போலி வீசாவைப் பயன்படுத்தி தம்மை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்த முகவர், விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர் என அடையாளப்படுத்துமாறு என்னிடம் தெரிவித்தனர்.

இலங்கை திரும்பியவுடன் விசாரணைகளின் பின்னர் பூசா தடுப்பு முகாமிற்கு தம்மைஅனுப்பி விடுவார்கள் என கருதினேன் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

பொலிஸார் என்னை மிகவும் கௌரவமாக நடத்தினர். சுதந்திர மனிதனாக செயற்பட முடியும் என நம்பிக்கை இப்போது எனக்கு வந்துள்ளது.

(அத தெரண - தமிழ்) . [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.