Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

0 தமிழர்களுக்கு சமஉரிமை வழங்காவிட்டால் மோதல் வெடிக்கும்-எரிக்.

Featured Replies

தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெம் எச்சரித்துள்ளார்.அவர்இ நார்வே நாட்டின் ‘ஆஃப்டன்போஸ்டன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்

இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. போர் முடிந்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும்.

நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பகமான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நோர்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாதுகாப்பு வழங்கியது. எனினும் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2000-வது ஆண்டில் நடைபெற்ற போர் ராணுவத்துக்கு மிக மோசமாக அமைந்தது. அப்போது யாழ்ப்பாணம் பகுதியில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களை பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பாக இந்தியாவிடம் நார்வே பேச்சு நடத்தியது. இவை அனைத்துக்கும் நார்வேதான் காரணம் என்று அப்போது பெரும்பான்மை சிங்களர்கள் கருதினர்.

அந்த ஆண்டு மே 24-ம் தேதி நான் கொழும்பை விட்டு நார்வே புறப்பட்டேன். அப்போது அங்குள்ள நார்வே தூதரகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டை வீசினர். அது குறி தவறி பக்கத்தில் இருந்த யாரும் குடியிருக்காத வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்தது. அந்த குண்டு என்னைக் குறிவைத்து வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை என்று எரிக் சோல்ஹீம் தெரிவித்தார்.

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/

[size=5]இதன் மூலம். அத்துடன் விவாதமும் நடக்கின்றது. [/size]

[size=5][size=6]Erik Solheim skulle drepes[/size]

Opplysningene om drapsplanene kaster nytt lys over den norske fredsinnsatsen i landet. Det er velkjent at både den norske tilstedeværelsen og Solheim selv tidvis var meget upopulær på Sri Lanka. I hovedstaden Colombo har man kunnet se westernlignende plakater av Solheim med påskriften «wanted». Men drapstruslene mot ham har aldri før vært omtalt.[/size]

http://www.aftenposten.no/nyheter/iriks/Erik-Solheim-skulle-drepes-6951860.html

afp000373405.jpg?updated=260720122123

இவரின் கருத்தைப்பார்த்தால் தற்போது இனமோதல் இல்லையென்று கூறுவது போல் உள்ளது................உண்மையில் இனமோதலை ஊதிப்பெரிப்பித்த ஒருவர் இப்படி கூறுவது ஆச்சரியம் மிக்கதொன்று.....இனியும் இவர் போன்றவர்களை நாம் நம்பினால்

பாதாள குழிக்குள் மீண்டும் எழமுடியாமல் வீழ்ந்துவிடுவோம்.............என்பதுதான் உண்மை.........

சம உரிமை வழங்காவிட்டால் என்று ஏன் இனி கருத்து வைப்பான்? இனியும் வழங்க மாட்டார்கள் என்பது தெரியாதோ?

நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பகமான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நோர்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாதுகாப்பு வழங்கியது. எனினும் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

இவருக்கே பாதுகாப்பில்லை தமிழர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? அனைத்தும் தெரிந்தும் தமிழர்கள் இறக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழர் அழிவதை வேடிக்கை பார்க்கவில்லை. ஆனால் அழிவதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார். இவருக்கு அமெரிக்கா - இந்தியக் கூட்டுச் சதியின் முக்கிய பாத்திரமான, "பேச்சுவார்த்தைக்கு அழை, பலவீனப்படுத்து, பின்னர் முற்றாக அழி" எனும் கதாப் பாத்திரம் கொடுக்கப்பட்டது. அதை அவர் கச்சிதமாக நிறைவேற்றி முடித்தார். இன்று அவர் செய்ய முற்படுவது நாடகத்தின் இரண்டாம் பாகம். தமிழர் அழிவிற்குப் பின்னரான இந்திய - மேற்குலகின் சீனச் சார்பு இலங்கை மீதான கசப்புணர்வுதான். இதில் தமிழரின் அழிவு பற்றியோ, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றியோ அல்லது அவர்களது அரசியல் உரிமை பற்றியோ எதுவுமே இருக்கப்போவதில்லை.

பிரச்சினைக்குட்பட்ட இரு இனங்களுக்கிடையே சமாதானம் பேச வந்த இவர், இறுதியில் ஒரு பக்கத்தின் அழிவிற்கு துணைபோனதோடு, அத்தரப்பையே அவர்களை அழித்துக்கொண்டு முன்னேறி வந்த எதிரிகளிடமே, "இனிப் போராடுவதில் அர்த்தமில்லை, பேசாமல் சரணடையுங்கள்" என்று அறிவுரை கூறியவர்.

இவர் செய்ததெல்லாம், பிரச்சினைக்குற்பட்ட ஒரு தரப்பினை முற்றாக அழிப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்று செயற்பட்டதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.