Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுகதையின் தொன்மம்

Featured Replies

தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாத மிகப்பழமை வாய்ந்த சிறப்பினைக் கொண்டவை. நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் புலப்படுத்தும் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகும். நாட்டுப்புற இலக்கியங்களிலே நாட்டுப்புற மக்களின் உள்ளத்து எழும் உணர்வுகளையும் கற்பனை ஆற்றலைக் காணலாம். மக்களால் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுப் பாடப்பட்டு வந்த, வருகின்ற நாட்டுப்புற இலக்கியங்களுள் விடுகதையும் ஒரு கூறாகும். இது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வினாவிடைப் போக்குடையது. சிந்தனையைத் தூண்டும் சிறப்புடையது. அறிவுக்கு உரைகல்லாக விளங்குவது. புதிர்மைப் பண்பினைக் கொண்டிலங்குவதால் ''புதிர்'' என்று அழைக்கப்படுகின்றது. ''விடுகதையால் கூறுபவனின் உளப்பான்மை வளர்கிறது. ஆர்வத்தினின்றும் விடுகதை கிடைக்கிறது. சிறியோர்க்கும் பெரியோர்க்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது என ஜேம்ஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கனவு மனிதனது அடிமன உணர்வுகளுக்கு வெளியீடு தருவதுபோல் விடுகதைகளும் வெளியீட்டிற்கு உதவி வருகின்றன. என கர்லோசு கூறுகிறார் (நாட்டுப்புறவியல், ப.123) இதனால் இதன் பெருமையினை உணரலாம். இத்தகு சிறப்புடைய விடுகதைகளில் தொன்மம் பெறும் இடம் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

விடுகதையின் பழமை:-

உருவகத்தினை அடிப்படைப் பண்பாகக் கொண்ட விடுகதையினைத் தொல்காப்பியர்,

பாட்டு, உரை நூலே, வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்'' (தொல். செய்யுளியல் 79)

என யாப்பு முறையினைக் கூறுகின்றபோது ''பிசி'' என்று கூறுகின்றார்.

''ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவது கிளர்ந்த துணிவினாலும்

என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே'' (தொல்.செய்யுள் 165)

எனப் பிசி அமைகின்ற முறை பற்றியும் விளக்கம் தருகின்றார். விடுகதை என்ற சொற் பயன்பாடு பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் இல்லை என்றாலும், விடுகதை, புதிர், அழிப்பாங்கதை, வெடி, நொடி, எனப் பல சொற்களால் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் விடுகதை என்னும் சொல் புதிர்மைப் பண்புடைய புதிர்கள் அனைத்தையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. (நாட்டார் வழக்காற்றியல், ப.49) எழுத்திலக்கியம் அவை தோன்றிய காலச் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதுபோல எழுதா இலக்கியமாகிய விடுகதையும் அதனை விடுக்கின்ற மக்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அச்சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கருப்பொருளாகக் கொண்டிலங்குகின்றது.

தொன்மம்:-

தொன்மம் என்பது பழமை என்பதாகும். பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமைமேற்றே என்று சுட்டப்பட்டுள்ளது. Myth என்ற ஆங்கில சொல்லே தொன்மம் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. தொன்மம் என்பதற்கு புராணக்கதை, புராணம், புராண மரபுக்கதை, புனைகதை என்றும் தமிழறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இத் தொன்மங்கள் இலக்கியங்களின் ஆன்மா என அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது போல நாட்டுப்புற இலக்கியங்களிலும் தொன்மங்கள் ஆன்மாவாக விளங்குவதைக் காணமுடிகின்றது. ஏனெனில் வாய்மொழிக் கூறுகள் எப்பொழுது தனித்தன்மையுடையவனாக ஆக்கப்பட்டனவோ அன்றே தொன்மங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள், ப.176) நாட்டுப்புற மக்கள் விடுத்து மகிழும் விடுகதைகளில் தொன்மக்கதைகள் இல்லாவிடினும் தொன்மக்கதைகளில் இடம்பெறும் தெய்வத்தன்மை வாய்ந்த பாத்திரங்களும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

விடுகதைகளில் தொன்மம்:-

தமிழ் விடுகதைகள் கடவுளரின் பெயர்களைக் கொண்டிலங்குவதால் அவற்றை விடுத்து மகிழும் மக்கள் சமுதாயம் புராண இதிகாசப் பாத்திரங்களைப் பற்றிய அறிவுடையராய்த் திகழ்கின்றனர் என்பதை உணரமுடிகின்றது. ''மிகப் பழங்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சமயப் பனுவலாகிய வேதங்களில் உள்ள கடவுளர்கள் பற்றிய செய்திகள் மக்களால் மறக்கப்பட்டு, பழமொழிகளிலும் தொன்ம வாக்கியங்களிலும் எச்சங்களாக விளங்கின என்றும், மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இவை கடவுளர் பற்றிய தொன்மங்களாக உருவெடுத்தன'' (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் ப.180) என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுவதற்கேற்ப வேலையின் களைப்பைப் போக்கிக் கொள்ள வேலைப்பளு தெரியாமலிருக்க நாட்டுப்புற மக்கள் விடைப் பொருளாகவும் விடுகதைப் பொருளாகவும் கடவுளர் பெயரை அமைத்து விடுகதை விடுத்து மகிழ்கின்றனர்.

''மஞ்சள் குருவி ஊஞ்சலாடும்

மகாதேவனுக்குப் பூசைக்காகும்'' (எலுமிச்சம் பழம்)

''ஆதியும் அந்தமும்'' இல்லாதவன் என்றும் ''பிறவாயாக்கைப் பெரியோன்'' என்றும் சிறப்பித்துக் கூறப்படும் சிவபெருமான் பிற கடவுளரைவிடத் தலைமைத் தன்மை என்ற நிலையில் இவ்விடுகதையில் சிவனை மகாதேவன் என்று குறிக்கின்றனர். அந்த மகாதேவனுக்குப் பூசைக்குப் பயன்படும் பொருள் எது என்பதை உய்த்துணர்ந்து விடைப்பொருளைக் கண்டறிய இவ்விடுகதையில் முதன்மைக் கடவுளாம் சிவன் உதவுகின்றான்.

''செண்பகவல்லி அம்மனும்

பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து

தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்''

அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சீதனம் (தூக்கணாங்குருவிக் கூடு)

காடுகளிலும் கழனிகளிலும் வேலைசெய்யும் கிராமத்து மக்களுக்குத் தாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் காடுகளே விடுகதைக் களங்களாக அமையும். அக்களத்திலே காணும் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியப்படைகின்றனர். வியப்பினை விடுகதைக் கருப்பொருளாக்கி உடன் பணிபுரிகின்றவரையும் வியக்க வைக்கின்றான். மேற்காணும் விடுகதை இவ்வுண்மையினைப் புலப்படுவதைக் காணலாம்.

இயற்கை நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அறியாத புராதன மனிதன் மந்திரங்களால் அவற்றைப் கட்டுப்படுத்தலாம் என நம்பினான். வளர்ச்சியடைந்த மனிதன் உலகத் தோற்றம், படைப்பு, மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் சீற்றங்கள் கடவுளரின் செயல்கள் என்ற நம்பிக்கை கொண்டான். மரங்களில் பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வது இயற்கை. ஆனால் அதனை இறைவனின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்றாகக் கற்பனை செய்து விடுகதை விடுகின்ற பாங்கு இவ்விடுகதையில் அமைந்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் எழுந்தருளியுள்ள செண்பகவல்லி அம்மன் அவ்வட்டார மக்களின் வழிபடுகடவுளாக விளங்குகிறாள். அவ்வம்மனோடு உடன் உறையும் இறைவன் பூவண்ணநாதன் அம்மையும் அப்பனும், மனைவி கணவன் என்ற நிலையில் ஓய்ந்திருக்கும் வேளையில் சிரித்து மகிழ்ந்து பூத்தொடுத்த தாகக் கற்பனை செய்து விடுகதையின் விடைப்பொருளைக் கண்டுபிடிக்க வகைசெய்யும் வகையில் விடுகதை அமைத்துள்ளனர்.

''வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது

கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது (கண்)''

கோவில் அமைத்து அதில் இறைவனைக் குடியேற்றி வழிபட்ட மனித சமுதாயம் அக்கோவிலையும் அதிலே குடியிருப்பதாக நம்பும் இறைவனையும் விடுகதைப் பொருளாக்கியதை இவ்விடுகதை விளக்குகின்றது. கண்ணின் வெண்ணிறப் பகுதியினை வெள்ளப்பிள்ளையார் என்றும் கருவிழியினைக் கறுத்தப் பிள்ளையார் என்றும் பூடகமாகச் சொல்லி விடுகதையின் விடையினை கண்டறியச் செய்யும் பாங்கில் விடுகதை அமைத்துள்ளதைக் காணமுடிகிறது.

கோவிலுக்குள் சென்று விளக்கேற்றி வழிபட அனுமதி மறுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் வேதனைக்குரலின் பிரதிபலிப்பாக இவ்விடுகதையினைக் கொள்ளலாம். கிராமத்து மக்களின் அனுபவங்கள், இன்ப துன்பங்கள் போன்றவற்றின் வெளிப்பாடுகள் பல்வேறு நாட்டுப்புற இலக்கிய வடிவம் பெறுகின்ற போது தொன்மக் கதைகள் அவற்றில் இடம்பெறும் பாத்திரங்கள் துணைநின்றுள்ளதை அறியலாம்.

''அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு

அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி'' (மயில்)

வைணவர்கள் வழிபடுகடவுளாகிய திருமாலின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றாகிய கண்ணன் பெயர்தாங்கி இவ்விடுகதை அமைந்துள்ளது. இவ்விடுகதையின் விடையாகிய மயில் என்னும் பறவையின் தோற்றத்தைத் தங்கம் பதிக்கப்பட்ட அங்கம் கொண்ட கண்ணனாகக் கற்பனை செய்கிறது மனித மனம்.

அனிருந்தன் என்ற கண்ணனின் பேரன், அசுரரின் சூழ்ச்சியால் அசுரனின் மகளாகிய உஷை என்பவளை மணக்க நிர்பந்தம் செய்யப்படுகிறான். அசுரனிடமிருந்து தனது பேரனை மீட்க அவன் அன்று ஆடிய குடக்கூத்து நாட்டுப்புற மக்களின் மனதில் உறைந்து விடுகதையாக மலர்ந்து மணம் பரப்புகின்றது என்பதனை இவ்விடுகதை சுட்டக் காணலாம்.

''பெட்டியைத் திறந்தேன்

கிருஷ்ணன் பிறந்தான்'' (நிலக்கடலை)

இவ்விடுகதையில் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட கிருஷ்ணன் கதை காட்டப்படுகிறது. கம்சனின் சகோதரியாகிய தேவகியின் வயிற்றில் பிறக்கும் ஆண் குழந்தையால் தனக்கு அழிவு நேரிடும் என அஞ்சுகிறான். அதனால் தேவகியின் ஏழு குழந்தைகளையும் ஒவ்வொன்றாகக் கொன்று விடுகிறான். இதனைக் கண்ட தேவகி வேதனைப்பட்டு எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணனைத் தன் சகோதரனின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றக் கருதி, பெட்டிக்குள் வைத்து யமுனை நதியில் இடுகின்றாள். அப்பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கிருஷ்ணன் பின்னர் யசோதையால் எடுத்து வளர்க்கப்படுகிறான். இப்புராணக்கதையின் சுருக்கமாக இவ்விடுகதை அமைக்கப்பட்டுள்ளதை எவரும் மறுக்கவியலாது. இப்படிப் பல்வேறு விடுகதைகள் தொன்மைப் பாத்திரங்களாகவும், தொன்மக் கதைகளின் விளக்கங்களாகவும் விளங்குவதைக் காணமுடிகிறது.

1.தொன்மங்கள் பல உருவாவதற்கும் ஏட்டில் இடம் பெறுதற்கும் விடுகதைகள் உறுதுணை புரிந்துள்ளன.

2. மிகப்பழமையான இலக்கிய வடிவங்கள் ஏட்டில் இடம்பெறுவதற்கு விடுகதை என்னும் நாட்டுப்புற இலக்கியம் வழிவகுத்துள்ளது.

3. நாட்டுப்புற மக்களின் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறனும் விடுகதைகளில் வெளிப்படுகின்றன.

4. நாட்டுப்புற மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக விடுகதைகள் திகழ்கின்றன.

நன்றி:- வேர்களைத்தேடி

http://www.thoguppuk...abel/விடுகதைகள்

Edited by சொப்னா

அருமை சொப்னா!

விடுகதைகயை ரசிக்க பருவம் வேண்டும். 5ம் வகுப்புக்கு கீழ்த்தான் என்று நினக்கிறேன். அந்தவயதில் தான் உண்மையான ரசனை. சிலேடை பாடப்புத்தகங்களில் 8ம் வகுப்புவரை வந்தது.

Edited by மல்லையூரான்

வணக்கம்

உங்கள் விடுகதைகள் நன்றாக இருக்கிறது .

நட்புடன்

ஏழுமலை

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், சொப்னா!

நீங்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்தீர்களா?

''செண்பகவல்லி அம்மனும்

பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து

தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்''

அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சீதனம் (தூக்கணாங்குருவிக் கூடு)

கிராமத்துத் தமிழ், பூந்து விளையாடுகின்றது! :D

வகுப்பில் படித்த பாடல்களாக இருந்த

1.முன்னொரு ஊரின் பேராம்; முதல் எழுத்து இல்லாவிட்டால்

நன்நகர் மன்னர் பேராம்; நடு எழுத்து இல்லாவிட்டால்

கன்னமா மிருகத்தின் பேர்; கடை எழுத்து இல்லாவிட்டால்

உன்னிய தேனின் பேராம்; ஊரின்பேர் விளம்புவீரே!

போன்றவற்ரோடு நண்பர்கள் சிலர் வகுப்புக்கு கொண்டுவந்தவற்றில் பிடித்த சில

2.வெள்ளைப்பாம்பு கல்லைத்தூக்குது

3.ஏறு ஏறு சங்கிலி, இறங்கு இறங்கு சங்கிலி

எட்டாத கொப்பெல்லாம் எட்டி எட்டி பாயுது.

1.(துரை,மரை,மது) மதுரை

2.புடலங்காய்

3.அணில்

Edited by மல்லையூரான்

முத்து கிட்டுணனை பிடிச்சு, முதுகுத் தோலை உரிச்சு,

பச்சை வெண்ணை தடவி, பாழாங்கிணத்துக்குள் தள்ளி

முப்பத்திரண்டு பேர் மிதிக்க இரண்டுபேர்.....?(ஆகா மறந்திடிச்சு)

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு,வாய், பல்லு, இரண்டு விரல்களை வாயில் வைத்து துப்புவது

  • தொடங்கியவர்

ஐய்யோ ................. இவ்வளவு பேரு கமெண்ட் செஞ்சிருக்கீங்களா :o ?? நம்ப முடியலீங்க :lol::D . மல்லையூரான் அண்ணனு , ஏழுமலை அண்ணனு , புங்கையூரான் அண்ணனு எல்லாருக்கும் ரெம்பவே தாங்கஸ் சொல்லறேங்க :):) .

  • தொடங்கியவர்

சரி ........ அண்ணனுங்களா , அக்காளுங்களா இப்போ ஒரு கேம் விளையாடலாமா :lol: ?? நா விடுகதை சொல்றேன் நீங்க கண்டுபிடிக்கணும் :D:D . ஓக்கேயா :icon_idea: ??

பிடி இல்லா குடை; பிரமிக்க வைக்கும் குடை மடிக்கமுடியா

குடை; மக்கள் செய்யா குடை. அது என்ன?

மாலையில் பூத்து காலையில் மறையும் பூவல்ல;

உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும். விளக்கல்ல. அது என்ன?

மாரியில்லை மழையுமில்லை – பச்சையானது.

பூவுமில்லை காயுமில்லை – பழம் பழுக்குது. அது என்ன?

மறைந்திருந்தே பேசுவான்; அவன் பேச மறந்தால்

நாம் இல்லை. அவன் யார்?

உருவமில்லா கல்; உனக்குள் எனக்குள் உண்டாகும் கல் அதிர்ச்சியில்

மறையும் கல்; அந்தக் கல் என்ன கல்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி ........ அண்ணனுங்களா , அக்காளுங்களா இப்போ ஒரு கேம் விளையாடலாமா :lol: ?? நா விடுகதை சொல்றேன் நீங்க கண்டுபிடிக்கணும் :D:D . ஓக்கேயா :icon_idea: ??

பிடி இல்லா குடை; பிரமிக்க வைக்கும் குடை மடிக்கமுடியா

குடை; மக்கள் செய்யா குடை. அது என்ன?

வானம்!

மாலையில் பூத்து காலையில் மறையும் பூவல்ல;

உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும். விளக்கல்ல. அது என்ன?

சந்திரன்!

மாரியில்லை மழையுமில்லை – பச்சையானது.

பூவுமில்லை காயுமில்லை – பழம் பழுக்குது. அது என்ன?

ஐஸ் பழம்!

மறைந்திருந்தே பேசுவான்; அவன் பேச மறந்தால்

நாம் இல்லை. அவன் யார்?

நாக்கு!

உருவமில்லா கல்; உனக்குள் எனக்குள் உண்டாகும் கல் அதிர்ச்சியில்

மறையும் கல்; அந்தக் கல் என்ன கல்?

விக்கல்!

  • தொடங்கியவர்

ரெம்ப தாங்சுங்க புங்கையூரான் அண்ணன் :) ஆனா ரெண்ணு இடத்தில கோட்ட விட்டுரீங்க :lol::D .

[size=4]மாரியில்லை மழையுமில்லை – பச்சையானது.[/size]

[size=4]பூவுமில்லை காயுமில்லை – பழம் பழுக்குது. அது என்ன?[/size]

ஐஸ்பழமில்லீங்க பச்சைகிளிங்க .

[size=4]மறைந்திருந்தே பேசுவான்; அவன் பேச மறந்தால்[/size]

[size=4]நாம் இல்லை. அவன் யார்?[/size]

நாக்கு இல்லீங்க இதயம் .

  • தொடங்கியவர்

ஒட்டுத் திண்ணையில் தடுக்குப் போட்டேன், திருப்பி

எடுக்கத்தான் முடியவில்லை – அது என்ன?

இதோட விடை : கோலம்

ஒருவரை ஒருவர் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்,

ஆனாலும் தகராறே கிடையாது, அவ்வளவு

நெருங்கியவர்கள் – இவர்கள் யார்?

இதோட விடை: கண்இமைகள்

ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டைகள், ஒன்று

குறைந்தாலும் அவளுக்கு துன்பம்தான் – இது என்ன?

இதோட விடை: அடுப்பு

ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – இது என்ன?

இதோட விடை: உள்ளி

பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,

வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்

அவன் யார்?

இதோட விடை: நகம்

செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல

சிங்காரிக்க உதவும் சீப்புமல்ல – அது என்ன?

இதோட விடை: கண்ணாடி

மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை

போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

இதோட விடை: அணில்

Edited by சொப்னா

மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை

போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யாரணின் -அணில்?

பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,

[size=4]வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்

அவன் யார்? -மயிர்?[/size]

  • தொடங்கியவர்

மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை

போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யாரணின் -அணில்?

பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,

[size=4]வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்

அவன் யார்? -மயிர்?[/size]

ரெம்ப நன்றீங்க மல்லையூரான் அண்ணன் உங்க பதிலுக்கு :) :) . மத்தவங்களுக்கு விடுகதைன்னா வேப்பங்காயுங்களா :lol: :lol: :D ?

  • தொடங்கியவர்

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

வச்சுக்கொண்டு வஞ்சகமா செய்யிறோம் சொப்னா...

பதில் தெரியாது அதுதான் பார்த்திட்டிருக்கிறோம். :icon_mrgreen:

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? - எறும்பு?

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? - சுவாமி ஊர்வலம்(பல்லக்கு)?

இவை இரண்டும் வலையில் தண்டியவை:

எனவே பதில்கள் நிச்சயமானவை:

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

தராசு என்றிருக்கிறது.

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

வாணவேடிக்கை

  • தொடங்கியவர்

மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை

போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யாரணின் -அணில்?

பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,

[size=4]வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்

அவன் யார்? -மயிர்?[/size]

மல்லையூரான் அண்ணனுக்கு ஒரு ஓ.......... போடுறேங்க . ரெண்ணாவது விடுகதைல நகம்ன்னும் சொல்ல முடியுங்க அண்ணன் :) :) .

  • தொடங்கியவர்

வச்சுக்கொண்டு வஞ்சகமா செய்யிறோம் சொப்னா...

பதில் தெரியாது அதுதான் பார்த்திட்டிருக்கிறோம். :icon_mrgreen:

நீங்க எங்கூட பேசுறதே ரொம்ப விசயம்ங்க சகாரா அக்கா . நீங்க டறை பண்ணுங்க .விடுகதைக்கு ஆன்ஸ்சர் வரும் . ஓக்கேயா :) :) :) ?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அண்ணனுங்களா , அக்காவுங்களா புதிர் ஒன்னு போடுறேன் கண்டுபுடியுங்க :) . ஆட்டத்துக்கு றெடியா :lol::D ?

மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்

வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?

சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு

நல்ல காவல்காரனாம் – அவன் யார்?

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா

மயங்கிக் கிடக்குது – அது என்ன?

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி

வரும் பந்தும் அல்ல – அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுங்களா , அக்காவுங்களா புதிர் ஒன்னு போடுறேன் கண்டுபுடியுங்க :) . ஆட்டத்துக்கு றெடியா :lol::D ?

மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்

வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?

தெருவிளக்கு.. :rolleyes:

சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு

நல்ல காவல்காரனாம் – அவன் யார்?

Alarmforce, ADT :lol:

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

பூந்தி லட்டு.. :D

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

அப்ப வெறும் லட்டு? :D

காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா

மயங்கிக் கிடக்குது – அது என்ன?

வோசிங் மெஷினில் கலைஞரின் மஞ்சள் துண்டு.. :icon_idea:

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி

வரும் பந்தும் அல்ல – அது என்ன?

:unsure:

காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா

மயங்கிக் கிடக்குது – அது என்ன?

1. வோசிங் மெஷினில் கலைஞரின் மஞ்சள் துண்டு.. :icon_idea:

எந்த மஞ்சள் துண்டு என்று கூறிப்பிடாததால் வேறு பதில்களும் சேர்க்க வேண்டி இருக்கிறது.

:D :D :D :D

2. முட்டை

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி

வரும் பந்தும் அல்ல – அது என்ன?

நதி

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

அண்ணனுங்களா , அக்காவுங்களா புதிர் ஒன்னு போடுறேன் கண்டுபுடியுங்க :) . ஆட்டத்துக்கு றெடியா :lol::D ?

மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்

வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?

தெரு விளக்கு

சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு

நல்ல காவல்காரனாம் – அவன் யார்?

கேடயம்

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

லட்டு

பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்

இட்டால் தேன்பந்து – அது என்ன?

:lol: :lol: :lol: என்னோட தப்புங்க

காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா

மயங்கிக் கிடக்குது – அது என்ன?

முட்டை

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி

வரும் பந்தும் அல்ல – அது என்ன?

கடல்

விடுகதைக்கு ஜாலியா லொள்ளு பண்ணி :lol::D விடை சொன்ன இசைகலைஞனுக்கும், மல்லையூரான் அண்ணனுக்கும் தாங்ஸ்சுங்க :) :) .

  • தொடங்கியவர்

இப்ப பாக்கலாம் ........... :D :D .

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்

அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்

கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்

கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்

அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்

அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்?

சதுரங்கம்

கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌

சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்?

சேவல்

பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.

அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்

வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?

தேங்காய்

பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த்

தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?

தேயிலை தூள்

அண்ணனின் தயவால்

ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

சந்திரன்

Edited by சொப்னா

பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.

அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்

வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன? - தேங்காய்

கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌

சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்? - குரக்கன்

அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்

அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்

கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்

கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்

அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்

அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்

-வாழை

அண்ணனின் தயவால்

[size=4]ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?[/size][size=4] - சந்திரன்[/size]

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.