Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் தீயில் ௭ரிந்து மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தென்மராட்சியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தீயில் ௭ரிந்து மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த அயந்தன் சுதர்சினி (வயது 19) ௭ன்ற குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பெண் மன்னாரைச் சேர்ந்தவர் ௭னவும் கடந்த மாதம் திருமணம் செய்து சாவகச்சேரியில் வசித்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பே இச்சம்பவத்திற்குக் காரணம் ௭னவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மனக்கசப்பு காரணமாக வீட்டின் சமையலறைக்குள் சென்ற இவர் கதவைப் பூட்டிவிட்டு மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீயிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மனைவி தீப்பற்றி ௭ரிவதை அறிந்த கணவர் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போதும் கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து அவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39799

[size=4]தற்கொலை என்பது கோழைத்தனம். [/size]

[size=4]எந்த தடைகள் வந்தாலும் வாழ்! வாழ்ந்து காட்டுவதே ஒரு இனிமையான வாழ்க்கை.[/size]

19 வயதில் திருமணம் என்பதே மிகக் கொடுமையான விடயம். அதுவும் வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் சரியாக மனம் பக்குவப்படாத 19 வயதில் திருமணம் என்பது முற்றாகத் தவிர்க்க வேண்டியது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் இள வயது திருமணங்கள் மிகவும் அதிகமாக நடப்பதும் அதனை பெற்றோர்கள் ஊக்குவிப்பதும் (அல்லது கண்டும் காணாமல் இருப்பதும்) வழக்கமாகி விட்டது.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது ஒன்றுவிட்ட தங்கை அண்மையில் 18 வயதில் திருமணம் முடித்து இருக்கின்றார். அவவின் கணவர், ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் உறவாடி பிள்ளையும் கொடுத்து அது நீதிமன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டும் இருக்கு, அதன் பின் தான் இவா காதலித்து கட்டி இருக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.